நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…


முத்ததின் வாசனைகளை உன் 

எச்சில் மட்டுமல்ல உன்

இரவுகளும் மழையை போல்

கனமான நினைவுப்படுத்துகின்றது…

நீ

தருவதாக கூறிய அந்த

பத்து முத்தங்களுக்கா தினம்

வரும்வரை காத்திருப்பபை பற்றிய

கவலைகள்தான் தற்சமயம் முத்தங்களை

எல்லாம் சபித்து விட தோன்றுகின்றது…

காதலின் முத்தங்கள்

தேவதைகள் கதைளில் வருகின்ற

இராஜகுமாரியின் கூந்தலை போல

இன்னும் புரியாத மனோநிலையை

சமன்படுத்திதான் செல்கின்றது…

பருவத்தின் கதைகளில்

கடக்கும் இரவுகளில் எத்தனை

முத்தங்கள்…

வஞ்சத்தின் முகத்தை மறைத்த

முத்தங்கள்…

அம்மாவுக்கு கொடுக்கவே முடியாது போன

வெட்கத்தின் முத்தங்கள்…

தெருவில் கண்ட சிவப்பு பெண்ணின்

உதட்ரோரம் வரும் கறுப்பு முத்தங்கள்…

கனவில் முத்தத்தோடு திரையை

கிழக்கும் மாயக்கரத்தின் ஸ்கலித முத்தங்கள்…

ஆசிரியருக்கு தரமுடியாது தவித்த

முத்தங்கள்…

பயணத்தின் நெளியும்

ஆயிரம் முத்தங்கள்…

பிரிவில் கண்ணீரை சுவைக்கும்

கருணை முத்தங்கள்..

எல்லா முத்தங்களும் சரிதான்

ஆனால் இன்று நீ

எனக்கு தருவதாக சொன்ன

அந்த பத்து முத்தங்கள்

மட்டும் பாக்கியாக

காத்துக்கிடக்கின்றது….

உன் ஏக்கத்தில்…..

00

05.05.2011.

Advertisements

ஞபகங்களின் ஈரம் …


நீளும்
நிழலின் வரைபடம்
ஞபகங்களின் ஈரம்
ஆழ்ந்து செல்லும் போதும்
வாரணங்கள் விண்ணில்
நீலப்பதித்த
தாரகைகள் கைகளில்
மிதக்கும் தருணத்துடன்
முறிந்து
விழும் நிகழ் நிமிடங்கள்…

ஒரு கணம் சிரிப்பை
அடர்ந்த பொழுதின்
முன்பு தந்துவிட்ட
அன்றாடம் தரும்
சுமைகளுடன் தொடரும்
பயணங்கள்…

ஆனாலும்
கலை சொல்லி செல்லும்
வாழ்வின் முன்பு …
துறல் நின்ற
கோடை மணல் போல்
முணுமுணுக்கும்
ஆழ்ந்த ஞாபகத்தின்
மழை கோடுகள்….

ஞாபகங்களே
இத்தனை சுகமானதென்றால்
வாழவே
மாயம் தரும்
புன்னகையும்
விழிகளில் தேங்கியிருக்கும்
உன்
புரியாத மொழியின்
வனாந்தரங்களில்
தவற விடப்பட்ட
ஒற்றைப்பாதையில்
இருளின் வெளிகள் எனை
விழுங்கி விழுங்கி
தாயின் கர்ப்ப புனிதம்
தரும்
வாசனையுடன்
தினமும் காத்திருந்தேன்….

அவள்
அப்படியே அரவணைக்க
வருவாள் என்ற
எதிர்பார்க்காத
நிகழ்காலங்களும்
அவளே….அவளுடனான அவளுடன்….

இரண்டு ஆப்பிள் பழங்களும் உனது நினைவுகளும்…மோகித்த இரவுகளில்
காமக்னி தெரிக்கும்
நினைவுகள் உடலில்
இருந்து நீக்கியவள் நீ …

மறுபடி மறுபடியும்
நீ
இறுதியாக அன்பளித்த
அந்த
இரண்டு
ஆப்பிள் பழங்களையும்
தின்று முடிக்க முடியாமல்
நினைவுகளில் துக்கம்
தொண்டையை அடைக்கின்றது….

வாசலில்
நின்று சிரித்துவிட்டு
பிரிந்து போன அந்த
இறுதி நிமிட புன்னகை மட்டும்
மழைக்காக காத்திருப்பவன் போல்
நீ அன்பு
மொழி பேசும்
தொலைபேசியிலிருந்தும்
உனது இலக்கத்திற்கும் இனி
நான் எப்போது
மிஸ் கோல் பண்ணுவது….?
உன்
எதிர்வீட்டு மொட்டை
மாடி
ஜன்னல்களும்
கதவுகளும்
இனி திறப்பது ஏனோ?

குறைந்து போகலாம்
நீ
டுபாய் மண்ணில்
புதிதாக சுவர்களுக்குள்
உனது ஒரே மகளையும்
தாய் தந்தையையும்
ரகசியமாக என்னையும்
நினைத்து கவலைப்படுவதை
நினைக்கதான்
வாழ்க்கை மேல
அப்படி ஒரு வெறுப்பு…

02

உன்னைப்பற்றிய
எனது நினைவுகள் ஓர்
சூறாவளி காற்றைப் போல
தாக்குகின்றது.
உன்
ஞாபகங்களின்
நெடும் வழிப்பயணம்
எனக்கு எப்படி
சாத்தியமாகும் என்று
தெரியவில்லை.

குருவிகளுக்கு
கூடுகட்ட உனது
இருப்பில் ஓர்
இடம் தர முடிந்த உன்னால்
கடைசியில்
எனது கண்ணீரை மட்டும்
சுமந்து
நீ வாழ்ந்த அறையெங்கும்
அன்பு பரவும் உனது
வாசனை எனது
ஆத்மாவை ஓர்
மௌனமான காயத்துடன் தைக்கின்றது…..!

இதயத்தில் தீக்கொழுந்துகள்
பிரகாசிப்பதற்கு முன்
முதலில் வெறும்
புகைதான் மண்டிக்
கொண்டிருக்கும்…
…………………………………………..

கடவுள் எனது நண்பன்


அது ஒரு
மலையில்தான் நிகழ்ந்தது…

நீரோடைகளில்
ஊற்று நீரின்
வற்றிய நாளில்
அது நடந்தது…

எனக்கு நடக்கும்
என்று நான்
நினைவிலும் எண்ணவில்லை…

அம்மாவுக்கும்
அம்மாவுக்கும் தெரியாத
வகையில்
புதிதாக எனது
பிறப்புடன் நிகழ்ந்ததது…

இருளின்
கறுமையின் படர்ந்த
ஓர்
நாளில்
அனைத்தும் நிகழ்ந்தன…

நண்பனிடம் ஓடினேன்
அவனிடம்
சொல்லியவைகளுக்கு
பின்பும்
என்னிடம் சொல்லாமல்
போனவைகளை
எங்கும் சென்று
சொல்ல முடியாதவனாய்

ஒரு நாளில்
ஆங்கில வகுப்பறையில்
எனது மொழிகளில் துர்வாறப்படும்
நேரத்தில்
ஆசிரியையின்
அக்கறையில் மெதுவாக
ஒரு குருனைப் போல்
தடவி
மழையில் நனைந்தபடி
நகரத்தில் திறக்காத
அறையொன்றில் அவருக்கும்
எனக்குமான சம்பாசனையில்
அவரை கண்டேன்…

சிலுவையும்
முற்களும் சுமந்த
நாளில்
தத்துவங்களும்
அறிவிக் காயங்களும் பிடிபட்ட
எனது காதலின் மரணத்தோடு
அது நிகழ்ந்தது…
கடவுள் எனது நண்பன்
நண்பர்கள் விலகி
சென்ற ஒரு துயர நாளில்
கடவுள் எனது நண்பன்…

02

நண்பனாக
கடவுள் எனது வரைப்படத்தில்
என்றும் சந்தேக கோடுகளின் போது
உங்களைத்தான் நினைத்துக்கொள்கிறேன்
ஆசிரியரே…
நீங்கள்தான் அந்த சந்தோசத்தின்
மைய புள்ளி.

எல்லோரிடமும் ஒரு
கடவுள் இருந்தது….
கடவுள் புதிரா
விhவா
கேட்கப்படும்
கேள்விகளில் எல்லாம் கடவுளின்
தரிசனத்தை
உணர்ந்தேன….
கடவுளின்
பெயரால்
நிகழ்த்தப்படும்
வன்முறையை மட்டும்
எப்படி அனுமதியது…..

 
லய காம்ரா

பிரித்தானிய வன்முறை
கரங்களில் அடிப்பட்டு
தாத்தா செத்தது….

நான்
அழுகையோட
அவதரித்தது….

பாட்டியின்
அழுகை ஓலம்
அரங்கேறியது!

அப்பா அம்மா
வெளியேறிப்
போனபின்
அக்காவும் மச்சானும்
கூடிக் கிடந்தது…

தங்கச்சி
வயசுக்கு வந்தது!

தம்பிப் பயல்
அடிக்கடி நிறுநீர்
கழித்தது!

குமுறல்களின்
விம்மல்
இருண்ட நிலவில்
சோகத்துடன் முடிந்த
கதை….

ஒரு நாள்
சரசா அக்கா
து}க்கு போட்டுக்
கொண்டது….!
ஈர சுவரில்
அரச மரக் கன்று
ஒன்று துளிர் விட்டது!
ஊர்ந்து செல்லும்
சீனி எரும்புகளின்
சினேகத்தை கற்றது….

இப்படி
நிகழ்வுகள்
ஒவ்வொன்றும்
இந்த எட்டடி
பிரித்தானிய காலத்து
லய காம்ராவில்தான்
முடிகின்றது!

நு}ற்றாண்டு
கடந்தும்
வானம் தெரியும் கூரையும்
மழை கசியும் பக்க
சுவர்களும்…

இன்னும்
இடிந்து விழுந்து
விடாமலே கிடக்கும்
வாழ்க்கையும்
இப்படியாக
அவலங்கள் எல்லாம்
வாழ்க்கையாகி
நகர்கின்றது…..

ஞானம் – ஜுன் 2005

 
இரவு
நெருங்கிய கொண்டிருந்தது!

அவர்கள்
கை செய்யப்பட்டு
அழைத்து செல்லப்பட்டார்கள்!

எங்கோ இருந்தது
சிலர்
அவர்களுடன்
இணைந்து கொண்டார்கள்

மது போதையின்
தார் சாலைகள்
ஒரு போர்களத்திறகான
முனைப்புடன்
காட்சியளித்தபடி…
மீண்டும் பஸ் வராத என்ற
பயம் படரும்
இறைவனின் அழைப்புகள்

ஒரு ட்ரக் வண்டியிலிருந்து
நாளைந்து பிணங்கள்
இறக்கப்பட்டன

தலைகள் துண்டிக்கப்பட்டிருந்தன
அடையாள
அட்டையுடன்
நான்
மெதுவாக

இருளில்
மறைய
தொடங்கினேன்

தெரு
நிசாப்தம்
மெல்ல
அச்சத்தை
வருட்டியது…..

நாய்களின்
புணரும் சப்தம்
ஓரிரு
அறிமுகமற்ற
மனிதர்கள்
நான்
முகவரியை
தொலைத்தவனாய்
நடு வீதியில்
பாதுகாப்பற்று
எப்போதும்
கொல்லப்படலாம்
என்ற நிலையில்….

விருட்டென்று
ஒரு
சைக்கிள்
நண்பனா
பகைவனா
ஏரிக்கொள்கிறேன்
இப்போது
வரையும் எனக்கு
என்ன நடந்தது……
நான் யார்
எங்கே
யாரை
தேடுகிறேன்….

எனது முடிவு
தான்
என்ன?

 

ஈர இருக்கைகளில் வழிகின்ற வன்முறைகள்
தமிழ் சினிமாவில் நீள வெளி
பள்ளத்தாக்குகளில்
ஆவேசம் தீராத
பார்ப்பன திரைப்பட வெளிகள்
தமிழ் சமூகத்தின் நீரிலான
தன்னிச்சைகளை அழித்து எழுநது
நிற்கின்றது
பொழுது போக்கின்
வாசல்களில் கசியும்
கலாச்சார ரத்த சீல்களில்
ஆன்மாவின் மொழிகள்
புதைக்கப்படுகின்றது…..

வெற்று இருக்கைகளில
ஓய்ந்திருக்கும் திரைப்பட
கொடடகை இருளில்
நம் பெண்கள் கழிவுகளை அகற்றி
தினம் வெளியேற்றினார்கள்….
பொருதத தீராத ஆதங்கங்களுடன்
திரைச்சுருளில் பால் வனமுறைகளை
நியாயப்படுததி
நம் கதாநாயகர்கள்
நடிகையின் தொப்புளில் பம்பரத்தையும்
ஓம்லட் முட்டை தாச்சிகளையும்
கண்டு பிடிக்கும் குரூர மனதின்
வேலைப்பர்டுகளின் முன்
சமூகங்கள் இன்னும் பின்னகர்ந்து
புதிய அலைகளில (நேற றுயஎந)
சாவுகளை
தினம் தினம் அறிவிக்கின்றன

மீட்சி பெறவே முடியாதா?
தமிழ் சினிமாவுக்கு சாவு
நிகழாதா…?
குஸ்புவுக்கு கோயில் கட்டிய அதே
மண்ணில்
இன்று செறுப்பினால்
சங்காபிசேகம் செய்யும்
நம் வீரத் தமிழினத்தின்
கலாச்சாரப் புரட்சியின் பிம்பத்தை
அழித்தொழிக்கும்
பெரும் மாவோவின் நீள் பயண விழிகளில்
முன்னுரையை எழுதுவோம்….
இனி
தீர்மானிக்கப்படும் திரைகக்தையின்
சுயத்தில்
மீரா ஜாஸ்மின் சொல்வதுபோல்
“தமிழினத்தின் அடையாளத்துடன்
தமிழ் சினிமா இனியாவது எழட்டும்”

16.11.2005

நிறம் என்ன பெண்ணே:


அவள்
போய்விட்டாள
அரையெங்கும்
அவளின் வாசனை
பரவிக்கொண்டிருந்தது…..
ஒரு வேலை
அவள் இருந்து சென்ற
இடத்தில
எனது தொலைந்த
இருப்பின் மறுமுகம
தென்பட கூடும்…..
என்னால்
நம்பமுடியவில்லை
மற்றொரு முறையும்
மற்றொரு முறையும்
காதலின சந்திப்புகள்
கவிதைகளுடன்
அரங்கேறுகின்றது…..

பச்சை நிறத்திலிருந்த
எனது
இருட்டறையில்
தற்சமயம்
வெள்ளை ப10ச்சிகள்
ப10ரி பார்த்தேன்..
அப்போதாவது
ஏதேனும்
வன தேவைகளாவது
வராதா என்ற
ஏக்கத்தில்….
உன் அiறியின்
நிறம் என்ன பெண்ணே: