ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!


 

மக்கள் திரைப்படக் கலைஞன் ஜோன் ஆபிரஹாம் பற்றிய ஒரு குறிப்பு

மாரி மகேந்திரன்

01

ஜோன் ஆபிரஹாமை பற்றி எழுதுவதென்பது அரூபமான ஒரு நவீன ஓவியத்தை தரிசிப்பது போல உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அவரின் வாழ்வு எனும் கடினமான இருப்பு நமக்குள் ஒரே நேர்கோட்டில் இரு வேறு உணர்வுகளை தரும் ரகசியமான ஒரு அவஸ்தை என்றுதான் எனக்கு எழுத தோன்றுகின்றது.


ஜோன்  ஆபிரஹாம் என்ற இந்த பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது “சலனம்’ என்ற திரைப்பட இதழின் வாயிலாகத்தான். 1993 ஆம் ஆண்டளவில் அப்போது அட்டனில் இருந்த கேசவன் புத்தக நிலையத்தில்  “சலனம்’ என்ற இரு மாத சினிமா சஞ்சிகையை  பார்த்து  ஆச்சரியத்துடன் வாங்கி படித்தபோது அதில் ஜோன் ஆபிரஹாம்  பற்றிய நு}லின் விளம்பரத்தை பார்த்து மனதில் இவர் யாராக இருக்கக் கூடும் என்பதை புரியாமல் இது புனை கதையாக இருக்குமோ என்று எண்ணி கொண்டாலும் அதன் பின்பு தமிழகத்திலும் கேரளாவிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் ஜோன் ஆபிரஹாமை பற்றியும் அவரின் ஒடேஸா (o மக்கள்  திரைப்பட இயக்கம் பற்றியும் கேள்விப்பட்டதோடு, ஓடேஸா தோழர்கள் மதுரையில்  திரைப்பட திரையிடங்கள் செய்யும்போது  பேசியதோடு அதன் பின்பு திருவனந்தபுரத்தில் நிகழும் பன்னாட்டு திரைப்பட விழாவில் சி.வி.  சத்தியன் மூலமாக ஜோன் ஆபிரஹாமை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டதுண்டு. சி.வி.  சத்தியன்தான் தற்சமயம் ஒடேஸாவை  தொடர்ந்து கொண்டு  செல்கிறார்.
ழுனநளளய தூழn யுடிசயாயஅ வுசரளவ  என்ற அமைப்பின் மூலமாக கேரளத்தில் திரைப்பட பணிகளை ஆற்றி வருகிறார்கள். இப்படியாக ஜோன் ஆபிரஹாம் எனக்குள் உள்வாங்கப்பட்டதோடு, கால போக்கில்  காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தொகுத்த மிக அற்புதமான நு}லான “ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை என்ற நு}லை 2000 வருடத்தில் நிழல் நடமாடும் திரைப்பட இயக்கமும் தாமரைச் செல்வி பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட போது என்னளவில் 5 பிரதிகளை விற்பனை செய்து கொடுத்ததோடு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு தமிழ ;இனி மாநாடு கருத்தரங்கில் வைத்து அன்பளிப்பாக வழங்கிய போது அவர் சந்தோசம் கொண்டதை  மறக்க முடியாது. அந்தனி ஜீவா ஜோன் ஆபிரஹாமை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டதுண்டு.


ஜோன் ஆபிரஹாம் என்ற மகத்தான கலைஞன் பற்றி எனக்குள் கடவுளை போல எண்ணி வந்திருக்கின்றேன். இன்னும் அவரின்  நினைவுகளில் இருந்து எனது மன பிரக்ஞை வெளியே வர முடியாத படிக்கு அவரின் மகத்துவம் மேல் இதயம் இறுக்கமாக கட்டுண்டு  கிடக்கின்றது. கேரள சர்வதேச திரைப்பட  விழாக்களில் மலையாள திரைப்பட இயக்குனர்களான
aravindan_c

aravindan_c

 

ஜி. அரவிந்தன், சாஜி கைலாஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், ரி.வி. சந்திரன், எம்.டி. வாசுதேவநாயர், கே.ஜி. ஜோர்ஜ் இப்படியான மலையாள திரைப்பட உலகத்தின் சிறந்த திரைப்பட மேதைகளுக்கு இல்லாத அருகதையும் மக்கள் சினிமா மேல் தன் கடைசி உயிர் பிரியும் வரையும் நம்பிக்கை கொண்டு போராடிய கலைஞன் ஜோன் ஆபிரஹாம். ஜோனின் வாழ்வும், சினிமா கலையும் ஒன்றை ஒன்று நேர்மையும் நேர்த்தியும் கொண்டது. அவருடன் படைப்பு சார்ந்து ஒப்பிடக் கூடிய மற்றொரு மøலயாள திரைப்பட மேதைஃ அபூபக்கரையும் (“”நிறம்” திரைப்பட இதழில் இவர் பற்றி படிக்கலாம்)
ஆடுர்

ஆடுர்

சொல்ல முடியும். அபூபக்கரின் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தனது கால மனசாட்சியோடு தேடிய போது ஜோன் சமூகத்தின் அரசியலையும் மனித வாழ்வில் குற்றவுணர்வின் தவிர்க்க முடியாத தீராத முரண்களையும் அவிழ்த்து பார்க்கும் முயற்சியோடு அன்பின் மொழியை தனது படைப்புணர்வின் அசலாக கண்டறிய முற்பட்ட கலைஞன் ஜோன் ஆபிரஹாம் அதனால்தான் ஸக்கரியா “ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!’ என்று எழுதியுள்ளார். More

Advertisements