அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்


 திரைப்படம் குறித்த மனப்பதிவு 


                                                                   பிரசன்ன விதானகே

ஒரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. ‘ஆகாயப் பூக்கள்’ திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.

கொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கியம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் – தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.

அதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க ‘ஆகாயப் பூக்களின்’ திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன்.

நண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம். எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை(RETROSPECTIVE) என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தான். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது.

அவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோபாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முகத:தை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.
மற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவாகவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது.

வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது. மற்ற திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே. நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.

     நானொரு பெண்ணிய இயக்குநரா என்று மற்றவர்கள்   என்னிடம் கேட்கும்பொழுது: ‘நான் ஒரு பெண். நான்  சினிமாக்களும் எடுக்கிறேன்;                                                                                    சாந்தால் அகர்மான்-

எனறு சாந்தால் அகர்மானின் மேற் கோடு கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள். ‘உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கி;றவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது.

மனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது. மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் ‘பெண்’ என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் ‘பெண்’ என்ற வஸ்துவை குறித்த ஆண்மையின் பார்வை என்பது ‘வேசித்தனம் பண்ணுபவள்’ தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு.

நிம்மி ஹரஸ்கமhttp://nimmiharasgama.blogspot.com/  என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் august sun திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று.

நல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.

நிம்மி ஹரஸ்கம

ஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..

வெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா 2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா
சிறந்த நடிகை – மாலினி பொன்சேகா 2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா – இத்தாலி
ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது 2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா – ஸ்பெயின்

ஜூரியின் கௌரவிப்பு 2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா
—————————————————————————————-

LINK –http://www.akasakusum.com/story.html

http://akasakusum.blogspot.com/

http://www.vithanage.com

———————————————————————————

Advertisements

ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!


 

மக்கள் திரைப்படக் கலைஞன் ஜோன் ஆபிரஹாம் பற்றிய ஒரு குறிப்பு

மாரி மகேந்திரன்

01

ஜோன் ஆபிரஹாமை பற்றி எழுதுவதென்பது அரூபமான ஒரு நவீன ஓவியத்தை தரிசிப்பது போல உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அவரின் வாழ்வு எனும் கடினமான இருப்பு நமக்குள் ஒரே நேர்கோட்டில் இரு வேறு உணர்வுகளை தரும் ரகசியமான ஒரு அவஸ்தை என்றுதான் எனக்கு எழுத தோன்றுகின்றது.


ஜோன்  ஆபிரஹாம் என்ற இந்த பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது “சலனம்’ என்ற திரைப்பட இதழின் வாயிலாகத்தான். 1993 ஆம் ஆண்டளவில் அப்போது அட்டனில் இருந்த கேசவன் புத்தக நிலையத்தில்  “சலனம்’ என்ற இரு மாத சினிமா சஞ்சிகையை  பார்த்து  ஆச்சரியத்துடன் வாங்கி படித்தபோது அதில் ஜோன் ஆபிரஹாம்  பற்றிய நு}லின் விளம்பரத்தை பார்த்து மனதில் இவர் யாராக இருக்கக் கூடும் என்பதை புரியாமல் இது புனை கதையாக இருக்குமோ என்று எண்ணி கொண்டாலும் அதன் பின்பு தமிழகத்திலும் கேரளாவிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் ஜோன் ஆபிரஹாமை பற்றியும் அவரின் ஒடேஸா (o மக்கள்  திரைப்பட இயக்கம் பற்றியும் கேள்விப்பட்டதோடு, ஓடேஸா தோழர்கள் மதுரையில்  திரைப்பட திரையிடங்கள் செய்யும்போது  பேசியதோடு அதன் பின்பு திருவனந்தபுரத்தில் நிகழும் பன்னாட்டு திரைப்பட விழாவில் சி.வி.  சத்தியன் மூலமாக ஜோன் ஆபிரஹாமை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டதுண்டு. சி.வி.  சத்தியன்தான் தற்சமயம் ஒடேஸாவை  தொடர்ந்து கொண்டு  செல்கிறார்.
ழுனநளளய தூழn யுடிசயாயஅ வுசரளவ  என்ற அமைப்பின் மூலமாக கேரளத்தில் திரைப்பட பணிகளை ஆற்றி வருகிறார்கள். இப்படியாக ஜோன் ஆபிரஹாம் எனக்குள் உள்வாங்கப்பட்டதோடு, கால போக்கில்  காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தொகுத்த மிக அற்புதமான நு}லான “ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை என்ற நு}லை 2000 வருடத்தில் நிழல் நடமாடும் திரைப்பட இயக்கமும் தாமரைச் செல்வி பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட போது என்னளவில் 5 பிரதிகளை விற்பனை செய்து கொடுத்ததோடு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு தமிழ ;இனி மாநாடு கருத்தரங்கில் வைத்து அன்பளிப்பாக வழங்கிய போது அவர் சந்தோசம் கொண்டதை  மறக்க முடியாது. அந்தனி ஜீவா ஜோன் ஆபிரஹாமை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டதுண்டு.


ஜோன் ஆபிரஹாம் என்ற மகத்தான கலைஞன் பற்றி எனக்குள் கடவுளை போல எண்ணி வந்திருக்கின்றேன். இன்னும் அவரின்  நினைவுகளில் இருந்து எனது மன பிரக்ஞை வெளியே வர முடியாத படிக்கு அவரின் மகத்துவம் மேல் இதயம் இறுக்கமாக கட்டுண்டு  கிடக்கின்றது. கேரள சர்வதேச திரைப்பட  விழாக்களில் மலையாள திரைப்பட இயக்குனர்களான
aravindan_c

aravindan_c

 

ஜி. அரவிந்தன், சாஜி கைலாஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், ரி.வி. சந்திரன், எம்.டி. வாசுதேவநாயர், கே.ஜி. ஜோர்ஜ் இப்படியான மலையாள திரைப்பட உலகத்தின் சிறந்த திரைப்பட மேதைகளுக்கு இல்லாத அருகதையும் மக்கள் சினிமா மேல் தன் கடைசி உயிர் பிரியும் வரையும் நம்பிக்கை கொண்டு போராடிய கலைஞன் ஜோன் ஆபிரஹாம். ஜோனின் வாழ்வும், சினிமா கலையும் ஒன்றை ஒன்று நேர்மையும் நேர்த்தியும் கொண்டது. அவருடன் படைப்பு சார்ந்து ஒப்பிடக் கூடிய மற்றொரு மøலயாள திரைப்பட மேதைஃ அபூபக்கரையும் (“”நிறம்” திரைப்பட இதழில் இவர் பற்றி படிக்கலாம்)
ஆடுர்

ஆடுர்

சொல்ல முடியும். அபூபக்கரின் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தனது கால மனசாட்சியோடு தேடிய போது ஜோன் சமூகத்தின் அரசியலையும் மனித வாழ்வில் குற்றவுணர்வின் தவிர்க்க முடியாத தீராத முரண்களையும் அவிழ்த்து பார்க்கும் முயற்சியோடு அன்பின் மொழியை தனது படைப்புணர்வின் அசலாக கண்டறிய முற்பட்ட கலைஞன் ஜோன் ஆபிரஹாம் அதனால்தான் ஸக்கரியா “ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!’ என்று எழுதியுள்ளார். More

க்ளோஸ் அப் சினமாவில் ஸென் மொழி


    

  
   The Sea That Thinks  

அங்கே ஒரு கடல் இருந்தது


நெதர்லாந்து http://www.dezeediedenkt.nl/htm/dezeediedenkt.htmதிரைப்படம் குறித்த எண்ணங்கள்


 
முழுவதும் நீராலும் அற்புதமான

அலைகளாலும் நிரம்பி ,ருந்த அந்த கடல்

அந்நிலையிலிருந்து விடுபடுவதாய் நினைக்கத்

தொடங்கிய நாளில் அனைத்து பிரச்சினைகளும்

துயரங்களும் துவங்கிவிட்டன

திரைப்படத்திலிருந்து ஒரு குறிப்பு

உலக சினமா வரலாற்றின் பக்கங்களில் சினமா கலை மொழியின் தீவிரமும், ஆழ்ந்த படைப்பாக்கத்தன்மையும் மிகவும் வேகமான காட்சி ரூபத்தின் நவீன கதையாடல்களையும் புதிய திரை மொழி ஆக்கங்களையும் ஆழ்ந்த பிரக்ஞையுடன் திரை மேதைகள் தன் சட்டக வெளிகளில் நிகழ்த்தியிருக்கிறார்கள். காட்சி ஊடகங்களின் அதி நவீன தொழில் நுணுக்க வரவினால் சினமா கலை அதனுடைய உயர்ந்த ,டத்திற்கு சென்ற படியே ,ருக்கின்றது. ,வ்வுலகில் தவிர்க்க முடியாத நோயாக தொழில் நுட்பங்கள் வளர்கின்றது. அந்த நோயை உள்வாங்கும் தளமாக ஹாலிவுட் சினமாக் கூடாரங்கள் ,ருக்கின்றன. ஆனால் தொழில்நுட்ப பயன்பாட்டை ஆழ்ந்த புரிதலுடனும். தேவை கருதியும் பிரக்ஞையுடனும் பயன்படுத்தும் போக்குகளை நாம் உலக சினமாவில் ,ருந்தே கண்டறிய முடியும். தொழில்நுட்ப ஜாலங்களை நம்பி ஏமாற்றப்படும் பாசிச ஏகாதிபத்திய சினமாக்களுக்கு மத்தியில் வாழ்வின் மொழியாக சினமாவை காணும் திரைப்பட மேதைகள் தன்னுடைய சுய வெளிப்பாட்டின் போதாமையாகவே தொழில்நுட்பத்தை ,னம் காண்கிறார்கள். ஒரு பக்கம் தொழில் நுட்பம் பார்வையாளனை சுரண்டுவதற்கும், மயக்மான ஒரு வெளியை உண்டாகுவதற்கும் திட்டமிட்டு பயன்படுத்தினாலும் சினமாவை வாழ்வை சொல்லும் சாதனமாக காணும் கலைஞன் தொழில்நுட்பத்தின் தேவையே தனது பிரக்ஞையை வெளிப்படுத்த போதாமையோடு உணர்கிறான். கணனி உறவுடான தொழில் நுட்பத்தினால் வெறும் பாசாங்கான அசட்டுதனமான சினமாவை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். நல்ல சினமா என்பது பிரமாண்டமான ஹாலிவுட் தொழில்நுட்ப மோசடி வேலைகளில் ,ல்லை. எளிமையாக உருவாக்கப்படும் சினமாவில் ,ருக்கும் ஆன்மா பிரமாண்டமான பொருட் செலவுகளால் உற்பத்தி செய்யப்படும். சினமாவில் ,ருப்பதில்லை.

கலை எப்போதுமே மிக எளிமையாலும், அனுபவத்தினாலும், வலியினாலும் மக்களின் ஞாபக வெளிகளில் தங்கி போகின்றது.

“”விஞ்ஞானம் என்பது அறிவின் எல்லையை விஸ்தரிக்கச் செய்கிறது முயற்சி, தொழில்நுட்பம் அந்த அறிவினை செயல்படுத்தும் முறையாகும்” ஐரோப்பிய, ஹாலிவுட் தொழில்நுட்ப ஜாலங்கள் மனிதமூளையை திசை திருப்பவும், மன அமைப்பை நுகர் சக்கையாக பிழியவும் மனிதனை வன்முறை உருவமாக வடிவமைக்கவும், ஏகாதிபத்திய பிரதியாக உருசெய்யவும் மட்டுமே ,வ்வகையான பாசாங்கு சினமாக்களின் வேலை ஆனால் சினமõவை சுய மருத்துவமாக கருதும் படைப்பு கலைஞன் மனிதனை ஏமாற்றுவதற்காக அல்லாமல் வாழ்வை தீர்க்கமாக சொல்லவும் மனித வாழ்வின் துயர கதையை தன்னுடைய சினமா மொழியின் மூலமாக ,னம் கண்டு தீர்க்கவும், மானுட விடுதலைக்காகவும், அன்பை விதைக்கும் ஊடகமாகவுமே எல்லாவிதமான நவீனத்துவ சினமா உத்திகளும் உலக சினமாக கலைஞனுக்கு உதவுகின்றது.; கலையும், தொழில்நுட்பமும் ,ணையும் போது சினமாவின் படைப்பாளுமை நுட்பமாக அமைந்துவிடுகின்றது. மனிதனுக்குள் ,யக்குநர் நினைக்கும் உணர்வை வெளிக்கொண்டு வர உதவுகின்றது.

 
   தொழில் நுட்பம் என்பது கலைக்கும் கலை படைப்புக்கும் நுட்பமானதொரு ,ருப்பை தருகின்றது. தொழில் நுட்பத்தை தன் கருத்தியலுக்கு தகுந்தபடி சரியாக பயன்படுத்த தெரிந்த சினமா கலைஞனால் மாஸ்டர் படைப்பை தரமுடிகின்றது.

தொழில் நுட்பங்களை எடிட்டிங், கோணம் ஒலி, ஒளி சிறப்பு சப்தங்கள், ,சை, களம், காலம், உணர்வு, சு10ழல், பின்னணி, தோற்றம் போன்றவைகளை கலை ரீதியாக பயன்படுத்தும் போது சினமா கலை சாதனமாக பரிணமிக்கின்றது. அந்த வகையில் நவீன சினமா மொழியுடன் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்டிருந்த தெநர்லாந்து திரைப்படமான கூடழூ குழூச் கூடச்வ கூடடிணடுண் என்ற திரைப்படம் கடந்த கேரள உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ,த்திரைப்படம் காட்சி கலையின் அதி நவீன உத்திகளை கையாண்டிருப்பதன் வழியாகவே மனித பிரக்ஞையை தொடவும், மனித உணர்வை தட்டி எழுப்பவும் என்றும் மறக்க முடியாத நல்ல சினமா அனுபவத்தை பார்வையாளர்களின் நினைவுகளில் தேங்கி நிற்கின்றது.

“நல்ல க்ளோஸ் அப்புகள் கவிதை போன்றவை

அவைகளை கண்களால் உணர முடியாது

,தயத்தால் தான் உணர முடியும்’

சினமா கலையின் ,டூணிதண்ழூ க்ணீ என்கிற மிக அண்மை காட்சி துண்டுகளில் தத்துவத்தையும், அதன் அழகியலையும் அதன் தொழில்நுட்ப கலைப்பயன் பாட்டையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ,ச் ஸென் சினிமாவை வாழ்நாளில் நிச்சயம் ஒரு தரம் பார்த்து விட்டு வரவேண்டும். ஸென் வாழ்விற்கும் குளோஸ் அப் என்கிற சினமாவின் ஒரு துண்டு ஷாட்டுக்கும் என்ன உறவு? ஸென் தன்மையை ஒரு துண்டு ஷாட்டுகள் எப்படி திரை பிம்பங்களில் வெளிப்படுத்துகின்றது. ஒரு தத்துவத்தை சொல்ல ஒரு சாதாரண ,டூணிதண்ழூ தணீ ஷாட் மட்டும் போதுமானதாக ,ருந்த சாத்தியம் எப்படி?

“சில சமயங்களில் க்ளோஸ் அப் என்பது ,யற்கையான ஒரு விளக்கத்தை நமக்கு தருவது போலத் தோன்றலாம் ஆனால் ஒரு நல்லக்ளோஸ் அப் நமக்கு தெரியாத விஷயங்களைப் பற்றியும் நம்முடைய அழகிய சிந்தனையை ,தமான அக்கறையை வாழ்க்கை பற்றி நெருக்கமான உணர்வை மற்றும் விரும்பக் கூடிய உணர்வை அது நமக்கு காட்டுகிறது. நல்ல க்ளோஸ் அப்புகள் கவிதை போன்றவை.

,த்திரைப்படமும் மனதின் ஆழ்வெளிகளுக்கு சென்று மூடுண்டு கிடந்த உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை நமக்கே உணரச் செய்து உள் உலகத்திற்கு கொண்டு சென்று விட்டு விடுகின்றது. உயிருருவின் ,சையை ,ருப்பின் ஓசையை ,ப்படம் தன் சலன சித்திரம் வழியாக ஞபாகப்படுத்தி சென்று விடுகின்றது ,ப்படத்தை பார்த்த பின் என்னுள் எங்கே படித்த ஸெயின்ட் திரேசாவின் “நீ செய்ய வேண்டிய தெல்லாம் பார்க்க வேண்டியதுதான்’ என்ற எளிமையான வாசகமே நினைவுக்கு வந்தது.

“வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களை நாம் ரொம்பவும் மேம் போக்காக எடுத்துக் கொள்கிறோம்.

மிகப் பெரிய விஷயங்களுக்கு காரணமாக விளங்கும் முக்கியமான பிரச்சினைகளின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் காமிராவானது வெளிக்காட்டியது. பல்வேறு மண் துகள்களின் சரிவுகள்தான் ஒரு பெரிய நிலச்சரிவாக மாறுகிறது. பல்வேறு க்ளோஸ்அப்கள் ஒரு பொதுவான விஷயத்தை ஒரு நொடியில் ஒரு குறிப்பிட்ட விஷயமாக மாற்றக்கூடியது. க்ளோஸ்அப்பானது வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை அகலப்படுத்த மட்டும் ,ல்லை ஆழப்படுத்தவும் செய்தது.

,த்திரைப்படமும் நம் மனவெளிகளின் ஆழ்ந்து போய்விட்ட வாழ்வின் மேல் எவ்விதமான அக்கறையும் அற்று பிடிப்பு தழுவிய விரக்தி அப்பிய வாழ்வின் கணங்களில், சின்னச் சின்ன சலனங்களை, நம்முள்ளேயே அமிழ்ந்திருந்த தன்னுணர்வற்ற நினைவலைகளை கிளறி விடும் போது நமக்குள் எழும் கலா உணர்வை பற்றியே ,ப்படம் தன் திரை மொழியில் விபரிக்கின்றது. “கலை மனிதனின் பகுத்தறிவை பாதிப்பதில்லை

அவன் உணர்வுகளை பாதிக்கிறது

அவன் ஆன்மாவை கலக்குகிறது

நல்ல விஷயங்களை நோக்கி அவனை திருப்புகிறது’

ஒரு திரைப்படம் நம் வாழ்வின் போக்கை விசாரணைக்குட்படுத்தும், அக்கறையற்ற வாழ்வின் பிரச்சினையின் நெருப்பு நிமிஷங்களில் நாம் கவனிக்க மறந்த நம்முடைய நிழலில் ஒளிபிம்பத்தை நம் கண்ணுக்குதெரியாத தியான சிதறல்களை மெல்லிய உணர்வுகளை, வாழ்க்கை அதன் தனித்தன்மையை புதிரை, காதலை, நிர்வாணத்தை, கிழிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் பக்கங்களை, தொலைக்காட்சியை,

 (தொடரும்)