Red Wednesday (Chaharshanbeh Suri)


…………………………………………………………………………………………………………………………….

The Third Farhang Foundation Short Film Festival winners were announced on
March 13, 2011 during the award ceremony at the Los Angeles
County Museum of Art and online at FarhangFilmFest.org.

LINK -http://www.farhangfilmfest.org/viewvideo/101/drama/red-wednesday-chaharshanbeh-suri.html

Advertisements

உள் குளத்தில் விழுந்த கல் “அறையின் தனிமை” பற்றின சில குறிப்புகள்


அறையின் தனிமை...குறும்படம் -மாரி மகேந்திரன்

– பாரதி நிவேதன்

அவள் மிக அழகான பெயர்ப்
பலகைகளைச் செய்யக்
கூடியவளாய் இருந்தாள்.

உணர்வுகளை எழுத்துகளாக்கும் வாதையினை விடவும் ஒளியாக்கும் ஆக்கம் நல பரிசளிப்பின் திரையைச் சார்ந்த அங்கமாகிறது. திரையின் பெரும்பான்மை, வடிகாலின் மீப் பெரும் பகுதியாகும்போது உள் அலையின் வீச்சை புலப்பிக்கக் கூடிய குறும்படங்களின் வினை மீச்சிறு பகுதியாகவே கவனப்படுத்தலின் அவசியத்திற்கு இடமாகிறது. “அறையின் தனிமை” 18 நிமிடங்களின் மனித வாதையின் வீச்சு.

மனிதவாதை இக்காலம் வரையிலும் பல அவதிகளின் பாற் பிரிந்துணரப்பட வேண்டியது. இங்கு “அறையின் தனிமை” எனும் பெயரடைவிற்குள்ளாகவே ஒரு குளத்தில் விழப்போகும் கல்லினை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இங்கு, விருந்தினன் அறையின் தனிமைக்குள் அகப்பட்டுப் போகிறான். (நமது அறையின் தனிமைகள் எவ்வாறு நிகழ்ந்திருக்கின்றன?)

விருந்தாளியைப் போன்றே நம்முள் யாரோ ஒருவர் வீட்டின் கடவுளாக மாறுவதென்பது நகர வாழ்க்கையின் பரிசு. குருவிகள் திரும்பும் வரை கூடு விருந்தாளிக்குச் சொந்தமானது. விருந்தாளி மனிதன் எனும் பட்சத்தில் நடக்கிற கதையே வேறு. அவர் இவ்வீட்டிற்குள் அடைக்கலமாகவோ, ஏதும் வழியற்றவராகவோ நுழைந்திருக்கலாம். அறையின் தனிமை வெளிச்சம் வீசும் சில நொடிகளுக்கு முன் இதைப் போன்ற அவதானிப்புகள் இருக்கலாம். இதனை வெகு சாமர்த்தியமாக நகர்த்தி வைத்து விட்டு விருந்தாளி ஒருவன் நம் வீட்டிற்குள் என்னென்ன செய்கிறான் பார்ப்போம் எனும் அற்பத்தையும் துடைத்துவிட்டு தொடர்கிறது நாம் சொல்ல கூச்சப்படும் கோணம். இடைச்செருகல்:: நாம் விருந்தினராய் சென்ற வீட்டில் அவர்கள் இல்லாத போது என்னென்ன செய்வோம்?

நகரச் சூழல் வீடு. விருந்தினன் மட்டும் வீட்டில். இரும்புக் கேட்டின் முன் நின்று எவரோ வருகையின் தேவையினை அவசியத்தினை உணர்த்தும் விதமாக பின்னர் கேட்டினை தாழிட்டு, பின் திரும்பி பார்த்து (பாதங்களின் அலைவு மட்டும்) பின்னர் கதவினைச் சாத்தி உள்ளே விழுந்துவிடும் விருந்தினன் உண்மையில் மனதின் அறையைத் திறந்து விழுந்தவனாகிறான்.

வீட்டிற்குள் அனாதையாக அடைபட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தின் முன் பார்வையாளரை மிக அருகே தனக்குள் கடத்திக் கொள்கிறது. இப்போது திரைப்படத்திற்குள் நாம் ஏதோ செய்து கொண்டிருக்கிறோம். நம்மை யாரும் கவனிக்கவில்லை என்பது தாழிடங்கள் மூலமாக நாம் பெற்றது.

அதையும் துருவிப் பார்க்காத, எல்லாவற்றையும் ரகசியம் என்று அர்த்தப்படுத்தி எச்சில் கூட்டி விழுங்கி ஒவ்வொன்றையும் உடைத்துப் பார்த்து, ஆடைகளை, ஆடைகளின் நெடிகளை, பத்திரப்படுத்தப்பட புகைப்படங்களை, வீசியெறியப்பட்ட காகித எழுத்துக்களை, கையெழுத்து வரிகளின் அர்த்தங்களை, புதிதான வாசமிக்க பொருட்களை இப்படி இன்னும், இன்னும் ஏராளமான உளவியலின் அபரிமித தித்திப்போடு இல்லாமல் தனிமையினை செரிக்க முடியாமல் தொலைக்காட்சிப் பார்ப்பது மின் விசிறியைப் பார்ப்பது, காலாட்டிப் படுப்பது, சிறிது அயர்வது, எழுவது, இணையத்தை முடுக்குவது, சிறுநீர் கழித்து விடுவது, ஜன்னல்களில் பார்வையை ஓட விடுவது, ஒவ்வொரு அறையாக காலத்தைச் சபித்து நடப்பது, மின்விசிறியின் கீழ் படுப்பது மின் விசிறி சுழல்வது கண்ணாடி பார்ப்பது முகத்தை முறுக்கி வாயை உப்பி கண்களை முழித்து சேஷ்டைகளை செய்து பின்னர் சட்டையை கழற்றி பனியனை கழற்றி பின்னர் கைலியை கழற்றி…

இவற்றுக்குள் ஓடவிட்ட எல்லா நொடிகளுக்குள் சிலந்தியும் எறும்பும் இருக்கலாம். நகர இரைச்சலை வடித்தெடுத்த வீட்டிற்குள் இசை கூட மனித தனிமையை கலைத்துப் போடவில்லை. வீடுகூட புறமாகிவிட்டது. ஆனால் இவை மட்டுமா, மீண்டும் ஓடவிடலாம். அப்போது,

இங்கு, பேசப்படாத படத்தைப் பொறுத்தவரை காண்பிக்கப்படாத பகுதிகளும் காண்பிக்கப்பட்ட பகுதியாவதன் தோற்றம் திரைக்கதையின் வலுவினால் ஆனது.

poster

‘நவ’த்தில் ‘நான்’ எனும் தனிமையை உணர்வதற்கு அத்தியாவசியமில்லாத இயந்திர பெருவெளியானாலும் அதனுள் ‘நான்’ எனும் அங்கத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது முகப்புகளுக்கு பின்னால் எனும் நிகழ்வு அரிதான சந்தர்ப்பத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும் போல.

அந்நிகழ்வு, பல வேளைகளில் அறிந்துணர வேண்டிய பக்கங்களை கடிகாரத்து முட்களுக்கிடையே இழித்தூற்றிய பின்பு, அறிந்தும் அறியாமலான அங்கலாய்ப்பும் அமைதியுமாக கடிகாரத்துடனேயே ஒன்றாக வேண்டிய கட்டளைக்குள் வந்தாக வேண்டியிருக்கும்.

கட்டளையை யாருக்கும் தெரியாமல் அனுப்பி நமக்கான சிறகைப் பொருத்தி தந்து விடுவதும் ஒரு பக்கம் நிகழ்ந்தேறுதல் உண்டு. அறையின் தனிமை நம் வாழ்நாளில் ஒரு புள்ளியாய் நடந்துவிட்டிருக்கக் கூடியதானாலும், நடக்கப் போவதான புள்ளியை ரசிக்க விரும்பும் படியாய் அமைவதில்லை.

அறிவு வேலை செய்ய ஆரம்பித்த கணத்தை அதன் மனசாட்சியின் மீது கை வைத்துக் கேட்டால் பலமா பலவீனமா என்பது ஒருபக்கம். கற்பித்த அறிவுக்கும் இயல்பான மனதின் இயங்கு தளத்திற்கும் நிரம்ப வித்தியாசப் புள்ளிகள் இருக்கும். இரண்டுக்குமான போர்களத்தின் வாதனைப்பாடுகளாக கடைத்தனங்கள் எனப்படும் கிறுக்குத்தனங்களை சொல்லப்படுகிற முன் வைப்புகளையும் சொல்லிக் கொள்ளலாம். இதன் வெளிப்பாடாக வாசிப்பும் எழுத்தும் எனவும் விருந்தினனின் வினை அமைகிறது.

இது உளவியல் சார்ந்த ஒன்றாக குறுகிப் போகும் அபாயத்தின் முன் ஒன்றை சொல்லிக்கொள்ளலாம். மனித இயல்பினன் அதிர்வுகள், குடி கொண்டிருக்கிற மனதின் இயங்கியலில் தவிப்புகள் சார்ந்த ஆளுமைகள் வேரறுத்து வீழ்வது நலம். இது குறும்படத்திற்கான துருப்புச் சீட்டாகவும் பயன்படலாம்.

இலையின் பச்சைய செழுமைகளை இன்று ரசாயனத்தில் பெற்றுக்கொள்கிற சூழ்நிலையில் (அதாவது கலைப்படைப்பு உள்பட) இயல்பான வித்துவின் செழுமையைக் கண்டடைய “அறையின் தனிமை”யும் உதவக்கூடும்.

(படத்தொகுப்பு : இளம்பரிதி – ஒளிப்பதிவு : ஹவி – இயக்கம் : மாரி மகேந்திரன்)

thanks: Kanavu
பிப்ரவரி 2008

அறையின் தனிமை–குறும்படம் பற்றிய சில குறிப்புகள்


 

 

வாழ்ககைக்கும் கனவுக்கும் இடையில் செயல்படுகின்றது கலை
-மிசெல்க்ளெபி-

  

“சினமாவை நீங்கள் சினமாப் பள்ளிகள், கல்லு}ரிகளுக்குச் சென்று கற்கத் தேவையில்லை ஒரு நல்ல கலைஞன் சினமாவை கல்லு}ரிகளில் கற்றுக்கொள்ளவும் முடியாது இன்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்ட நாடுகளிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சினமாவை வேறெங்கும் சென்று கற்றுக்கொள்ளவது அவ்வளவு சுலபமில்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே சினமாவை உருவாக்க முயலுங்கள். நண்பர்களோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள். தோள் போட்டுக்கொள்ளுங்கள். உனது பாட்டி மற்றவர்களின் தாய் மற்றொருவரின் மகன், இன்னொருவரின் மாமா இவர்கள் தான் பாத்திரங்கள். இவர்களின் வாழ்வைத் தேடிப்போங்கள் இவர்கள் வாழ்வில் காதல் இருக்கின்றது, துக்கம் இருக்கிறது, கோபம் இருக்கிறது, அடிமைத்தனம் இருக்கின்றது, எதிர்ப்புணர்வு, சாவு, இசை நடனம், பாடல், பறவைகள், மரம், செடி, கொடி, பிராணிகள், இயற்கை எல்லாம் இருக்கின்றன. வாழ்ந்ததை வாழ்விருந்த கனவை சொல்லுங்கள். சினமா ஒரு கருவி, ஒரு சாதனம், ஒரு ஆயுதம் உங்கள் சிந்தனையின் நீட்சி. உங்கள் செயலின் நீட்சி. நீங்கள் நினைப்பதை தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சினமா அப்போது தோன்றும்.”

என்று ஆப்பிரிக்க திரை கலைஞன் ஹெய்லே  கொPமா கூறியதற்க்கு இணங்க எனக்குள் ஏதாவது செய்து பார்க்கவேண்டும் என்கின்ற மனநிலை துடித்தப்படியே இருந்தது. தமிழ் வியாபார திரைப்பட வெளிகளில் உதவி இயக்குனராக வேலை செய்த முன் அனுபவம், பயிற்சிகள் இந்த பாடத்தை எடுக்கும் போது கை கொடுக்கவில்லை, ஏனென்றால் இப்படத்தின் தன்மையுடன் அதன் திரைப்பட உணர்வும் வேறு வேறானவை. பொதுவாக தமிழ் சினமாவை பார்த்து பார்த்து சினமா குறித்த ஒரு பொது புத்தியுடன் இருக்கும் பார்வையாளனுக்கு இந்த குறுந்திரைப்படம் வெறும் மன அயர்வையும் சோர்வையும் தான் கொடுக்கும். இந்த படத்தை உருவாக்கியமைக்கு வேறு எந்த காரணமுமில்லை என் தனிப்பட்ட ஈகோவை தவிர வேறு முக்கியமான காரணம் ஏதுமில்லை.

தமிழ் சினமா என் மண்டைக்குள் தன் வசீகரங்களை தடவியிருந்த காலம் அது, என் சென்னை வரவும் சினமாவோடு தொடர்பு கொண்டதுதான். பின்னர் வந்த காலத்தின் பக்கங்களில் சினமா குறித்த பார்வை மாற்றமடைந்தபோது தமிழ் சினமா பிம்பங்கள் உடைந்து வடிந்து போனது. சினமாவுடனான உறவு கூட எழுத்தின் வழியே வளர்ந்தது. இலங்கை தொலைக்காட்சியில் நான் பார்த்திருந்த சில நல்ல சினமாவும், சினமா ரசனை குறித்து படித்த புத்தகங்களும் என்னுள் கவிதை, சிறுகதைகள் என்று வளர்ந்து அதன் தொடர்;ச்சியாக இலங்கை வெகுசன இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் நிறைய வார்த்தை விளையாட்டு கவிதைகளை எழுதினேன். பின்னர் அவைகளை தொகுக்கலாம் என்ற நோக்கத்துடன் – விபரிதமாக புத்தகம் போடும் நோக்கமாக அது போயிருந்தது பின் ஒரு நாள் வாழ்வின் அந்தரங்மான அறைகளில் வசித்த என் கவிதைகளின் மேல் குற்றவுணர்வும் மன அழுக்கும் தடவப்பட்டு கிழித்து எரியப்பட்ட போது நான் மிகவும் அக நெருக்கடியுடன் தனிமையில் உழன்றபடி இருந்தேன்.

புதியதோர் நகரத்தில் வாழ நேர்ந்த மன அழுத்தமும், கவிதை எழுதுவதன் மேல், வாசிப்பதன் மேல், வாழ்வின் மேல், கலைகளின் மேல் எவ்விதமான பிடிப்புமற்று மனவிரக்தியில்; இருந்தபோது கவிதையும், சினமாவும் எனக்குள் இப்போது என் இருப்பை அர்த்தபடுத்துவதாக முனைந்தது. புதிய மொழியுடனும் உயிர்பின் ஜன்னல் கதவுகளையும் திறந்துக்கொண்டு இப்போது என் ஒற்றை அறையில் ஒளியுடன்; புகுந்தது. நண்பன் ஹவியுடனான உரையாடலின் மூலமாக எனக்குள் இந்த அந்தரங்க கோடு விலகி போன பின் நான் மீண்டும் கவிதைகளையும், எழுத்தையும் உயிர்புடன் படிக்க தொடங்கினேன். படிப்பதை விட நண்பர்களின் விடாத உரையாடலின் வழி எனக்குள் வளர்ந்த உணர்வு அலாதியானது. அதை எழுதி கரைப்பதை விட பேச்சு  வளர்ப்பதே தேவையாக கருதுகிறேன். இடையில் என் அறைகளில் சூழ்ந்த ஆன்மீக இருட்டில் மன கசப்புடனும் முரண்பாடுகளுடனும், வறுமையின் வலியுடனும் சென்னையின் தனிமை எனக்குள் இருந்த நிற குடுவையை பல முறை உடைத்தப்படி இருந்தது.

ஒவ்வொரு வருடமும் கேரள சர்வதேச திரைப்பட விழாக் களுக்கு போய் வரும்போதெல்லாம் மனதில் திரைப்படம் குறித்த எண்ணங்கள் ஓடிக்கொணடிருக்கும். ஆனால் சென்னை வாழ்வின் பொருளாதர சூழலில் ஒரு ஒளி நாடாவை வாங்குவதற்கு கூட அருகதையற்று இருந்தது அதுவும் தமிழ் சினமாவில் உதவி இயக்குனராக பணி புரிபவனின் சாபத்தை என்னவென்று எழுதுவது. பசியும். பஞ்சமும் ஒரு சோற்று பருக்கைக்காக வாழ்வை வருத்தும் தமிழ் சினமா சூழலின் உள் இருப்பில் உதவி இயக்குனர்களை வருத்தும் காரணிகள் தமிழ் சினமாவை வியாபார சூத்திரத்திலிருந்து தப்பிக்க விடாமல் திட்டமிடப்படும் போலியான வறுமை சூழல் தான் அது. வறுமையை கஷ்டத்தை பெரிய திரைப்பட இயக்குனராக உயர்ந்த பின்பு (பாலா, பாரதிராஜா) பெருமைபடவும்,வியப்புடனும் விகடனில் குமுதத்தில் தொடர் எழுதி பொதுசன மனதில் இரக்க உணர்வை வாங்கும் தமிழ் சினமாவின் அரசியல் நடவடிக்கையில் ஒரு பகுதியாகவே இதை பார்க்க வேண்டும். தமிழ் சினமா நிர்ப்பந்திக்கும். இந்த “சினமாபாடுகளை” வெறும் திரைப்பட இயக்குனர் ஆர்வத்தின் வெற்றிக்கான போராட்டமாக மட்டும் பார்த்துவிடக்கூடாது. அது தமிழ் சினமாவின் தந்திரங்களில் ஒன்று. இப்படியான கடினமான வழிமுறைகளை நிர்ப்பந்திக்கும் இந்த வியாபார உலகத்தின் நலன்களை எந்தவொரு படைப்பாளியும் கெடுத்து விடக்கூடாது என்பதற்கான உத்திதான் இது. இந்த கடினமான சினமாபாடுகளின் வழியாக சினமாப்பற்றி நினைவில் வாய்ப்பு தேடும் ஒரு புதியவனின் மனதில் படைப்புணர்வு அவனை அறியாமலேயே சிதறடிக்கப்படுவதோடு சினமாவின் மூலமாக பொருளாதார தேவைகளை தன் சுயநல தேவைகளுக்காக  நிறைவேற்றுவதற்கான மனநிலையை அவனுள் இவ்வுலகம் ஏற்படுத்துவதோடு, தன் வியாபாரம் சுதந்திரங்களுக்கேற்ற “கதை பிடிக்கும்” மன நிலைமையோடு அவனை தன் அதிகார மையத்துக்கேற்ப தயாரித்து விடுகின்றது, தமிழ் சினமாவின் வியாபார உலகம். இது இன்றுவரையும் மாறாது நடைபெறும் தமிழ் சினமாவின் மிகமோசமான நடைமுறையாகும். ஒவ்வொரு திரைப்பட கலைஞனும் சினமா பற்றிய புதிய மனதுடன் வருவான். ஆனால் சென்னை என்ற கோடம்பாக்கம் அவனுள் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அவனை வேறொன்றாக மாற்றுவதற்கான சூழலை நிர்ப்பந்திக்கும். அத்தோடு அவனுடைய ஆன்மாவை அங்கேயே தொலைத்துவிட்டு தேடி திரிவான்.

இப்படியான மனநிலைகளிலிருந்து என் சுயத்தை காப்பாற்றி யது இந்த உலக சினமாதான். உலக சினமா என்னும் கண்ணாடி வழியாக சுயத்தை காப்பாற்றிக்கொள்வதோடு, தமிழ் சினமா பற்றிய மாயவலை பின்னலின் சு10ட்சமத்தையும் கடந்து போகவும், படைப்புணர்வுடன் தன்னிச்சையாக செயல்படவும் உந்துதலை ஏற்படுத்தி கொடுத்தது இவ்வுலக சினமா. சினமாவை பார்ப்பதோடு நின்று விடாமல் அதைப் பற்றி உரையாடலுடன் நம் சு10ழலில் ஏதேனும் செய்து பார்க்கலாம் என்கின்ற உந்துதல் அடிக்கடி ஏற்பட்ட படி இருந்தது. அப்போது இருந்த சு10ழ்நிலைகளில் பல்வேறு சிறுகதைகள் , நாவல்களை படமாக்கலாம் என்று நினைத்து பேசுவோம். ஆனால் பொருளாதார கட்டமைப்பு அவற்றை யெல்லாம் தவிடு பொடியாக்கி விடும். ஆனாலும் உள்ளே இருந்த சினமா வேட்கை எப்படியாவது ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது.    

“குறைந்தபட்சம் ஒரு பொய்யாவது சொல்லிகொண்டிரு” என்ற விவேகானந்தரின் வாக்குறுதியை போல் ஆனாலும் முயல்வோம் என்று நினைத்து இருக்கின்ற சூழலையும் கிடைத்த சாத்தியங்களையும் பயன்படுத்தி ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

அப்போது தான் திரைப்பட விழாவில் என்னை மிகவும் பாதித்த பிரெஞ்சு பெண் திரைப்பட மேதை chantral akerman இன்

 திரைப்படங்களை பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது அவரின் திரைப்படம் எளிமையான படைப் பாக்கத்தின் தன்மையுடன் இருந்ததோடு, திரைப்படத்தை எப்படி எளிமையாக எடுக்கலாம் என்பதை பற்றிய பார்வையை எனக்குள் ஏற்படுத்தியது. அவரின் முதல் 13 நிமிட படத்திற்கு எப்படியாக பணி புரிந்தார் என்பதை பற்றிய விபரம் கண்டு நான் அதிர்ந்தேன்.

அதன் மூலமாக நண்பர் ஒருவரிடம் இருந்த ர்யுNனுஊயுஆ உல்லாச பயண கேமராவை இரவல் வாங்கி உறவினர் வீட்டிற்கு விருந்தினராக சென்று அங்கேயே இப்படத்தை தயாரித்தேன். இப்படத்திற்கான ஒளி நாடாவை வேறு ஒரு நண்பனின் மூலமாக இரவல் வாங்கி எனக்கென்று சொந்த வாழ்வின் அனுபவ பகுதியை உண்மை வாழ்வின் பகுதியை இருப்பது போலவே படம் பிடித்தேன். ஒளிப்பதிவு கருவியும் நானும் மிகவும் அந்தரங்கமான வகையில் படமாக்கலை பதிவு செய்தோம். படம் பிடிக்கப்பட்ட சூழலில் கூட தனிமையின் உணர்வை அடைந்தேன். மூன்று தினங்கள் தான் படப்பிடிப்பு நடந்தது ஆனால் 2;0 நாட்கள் வரை அந்த 3 நாட்களுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னையில் எனது நண்பன் திண்டுக்கல் சரவணனின் பழைய கணினியின் மூலமாக படத்தொகுப்பை (நுனுஐவுஐNபு) செய்து முடித்தோம். படத்தொகுப்புக்காக ஊனு க்கு படம் பிடிக்கப்பட்ட 3 மணி நேர காட்சிகளை மாற்றிக்கொண்டு படத்தொகுப்பு செய்ததனால் படத்தின் ஒளிப்பதிவு தரம் கொஞ்சம் தன்மையை இழந்தது இங்கேயும் பொருளாதரம் முன்நின்ற போதும் ஒரு வகையான மரபை மீறிய வகையில் எல்லா வேலைகளையும் எளிமையாக தன்னிச்சையாக செய்து முடித்தேன்.

இக்குறும்படத்தை குறித்து எழுவதற்கு நிறைய அனுபவங்கள் உண்டு. ஆனால் இங்கே இப்படம் தன்னிச்சையான புரிதலிலிருந்தே உருவானது. படத்திற்கான தயாரிப்பு நிறுவனமோ நிதியை தேடி அலைந்த பாடுகளோ எதுவும் இல்லை இப்படத்தை உருவாக்க என்னுடைய தனிப்பட்ட மன வேட்கையும், எனக்கு முன்பு நிலவிய பொருளாதார சூழ்நிலையுமே மூலக்காரணம்.

 நல்ல சினமாவை உருவாக்க பொருளாதார கட்டமைப்புகள் தேவையில்லை, ஏனென்றால் நல்ல சினமா அனுபவம் என்பது படைப்பாளியின் ஆன்மாவில் இருக்கிறது இந்த திரைப்படத்தை நல்ல சினமா என்று வாதிட வரவில்லை, என்னளவில் இந்தப்படத்தை எனக்கு எடுப்பதற்கான உந்துதல் கொடுத்த சூழலையும், திரைப்படத்தை எளிமையாக எடுக்க நினைப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். ஏனென்றால் திரைப்படம் பெரிய பொருளாதார கட்டமைப்புடன் மட்டும் தான் அணுகப் படுகின்றது, ஆனால் பொருளாதாரத்தை விடவும் திரைப்படத்தின் உள்ளடக்கம் அதன் படைப்புணர்வு, திரைக் கதை செயல்பாடு, வடிவம், அது முன் வைக்கும் கருத்தியல் தளமே முக்கியமானது. ஆனால் திரைப்படம் எடுக்க  நினைப்பவர்கள் முதலில் கதையின் ஆன்மாவை பற்றிய தெளிவுக்கு பின்பு திரைப்பட முயற்சியில் இறங்குங்கள். இலங்கையில் சினமா பெருமளவிலான திரைப்படங்கள் தென்னிந்திய வியாபார சூத்திரத்தின் தாக்கத்துடன் வெளிவருகின்றது. இதை மீறி நமக்கானதொரு தனித்துவம் வாய்ந்த திரைப்பட மொழியுடன் நாம் நம்முடைய புகலிட, ஈழத்தமிழ், மலையக சினமா முயற்சிகளில் கவனத்துடன் அணுக வேண்டும் அப்போதுதான் நம்மிலிருந்து சுயமான சினமா மொழி ஒன்று புலப்பட தொடங்கும்.

பொதுவாக திரைப்படம் பற்றிய பொது புத்தி கொண்டவர்களுக்கு “அறையின் தனிமை” எதுவுமே இல்லாதது போல் இருக்கலாம், அவர்களின் காலத்தை, மனத்தை அது தொந்தரவு செய்யலாம், அல்லது பொறுப்புடன் திரைப்பட அரங்கினை விட்டு வெளியேறி செல்லலாம். அது அப்படிதான் நிகழும், தீவிர பார்வையாளனுக்கு இப்படம் அதன் உள்ளர்ந்த முகத்தை வெளிகாட்டும்.

 இப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் காலம், மற்றும் தனிமையை நினைவுபடுத்துவதற்கே, காலத்தையும், தனிமையையும் ஏன் நினைவுபடுத்த வேண்டும்? மன அயர்வை பற்றிய நினைவுகளை மனிதன் நினைத்து பார்க்க தயங்குகிறான் சோர்வு, விரக்தி, அயர்வு, இவைகள் மனிதனுக்கு பயத்தை தருகின்ற விடயங்கள் அதுவும் காலமும் தனிமையும் மனிதனை அசைத்து போட்டுவிடும், யாரும் சோர்வை அயர்வை விரும்புவதில்லை. ஏனென்றால் அது மனிதனின் நினைவுகளை காயப்படுத்திகின்றது. சந்தோசத்தை தடுமாற செய்கின்றது. இப்படியான பல்வேறு மனவுணர்வுகளை இப்படம் அதன் 20 – நிமிட காலத்துக்குள் ஒரு நாள் ஒரு மனிதன் தனிமையில் கழித்த காலங்களை துயரத்துடன் நினைவுபடுத்தி விடுவதனால் தான் அப்படத்தை பற்றிய சொல்லப்படாத சினமா என்ற குறும்பட தொகுப்பும் நு}லில் குருசாமி மயில்வாகனன் பல்வேறு கேள்விகளை அடுக்குகிறார்.
 ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஒரு அக உணர்வு சார்ந்து எழுதப்படும் நவீன கவிதை எழுதுவது போல்தான் இப்படத்தை உருவாக்கினேன்;. இது எனது சொந்த மனநிலையில் இருந்தும் தனிமை மற்றும் காலம் குறித்து பிரக்ஞையின் ஊடாக செய்யப்பட்ட சுய மருத்துவ குறிப்புகள் தான் இப்படம். தனிமை பாலியல் பற்றிய சமூகம் தரும் தீட்டுபட்ட மனோவியலின் வடிவமும் மனிதன் தனிமையில் இருந்தாலும் அவனிடம் பாலியல் பற்றிய குற்ற உணர்வும், அது ஏற்படுத்தும் அந்தரங்க புதை மன கருத்தியல்களும் ஒருவனின் தனிமையை அது ஏற்படுத்தும். சமுக வலை பின்னலையும், பாலுணர்வு பற்றிய குற்றவுணர்வின் அறையின் வரைப்படம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அமையும், அது எனக்குள்ளும், என் தனிமையில் ஏற்படுத்தும் திரைப்பட வடிவத்தை கலாச்சார தணிக்கைக்கும் உட்ப்பட்டு எடுக்க வேண்டியதாகிவிட்டது. உண்மைகள் மிகவும் ஆபத்தானவைகள் தான் ஆனால் எப்படிதான் உண்மைகள் எடுக்கத்துணிந்தாலும் புனைவின் வலை பின்னலுக்குள் கலை வெளிப்பாடு அகப்பட்டு கொள்வதை தவிர்க்க முடியவில்லை. “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்று தன் கவிதை தொகுப்புக்கு தலைப்பிட்ட கவிஞர் மனுஷயபுத்திரனின் கவிதையின் உள்ளடக்கத்தை போல் தான் இக்கதையின் உணர்வை தேடுகின்றேன். நண்பன் ஹவி “தீட்டு” என்ற பெயரில் காலச்சுவடு இதழில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தார். அக் கதையின் சாரம்சத்தை பின்பற்றிதான் அறையின் தனிமையை உருவாக்கினோம்.

வீட்டில் தனிமையில் இருக்கும் ஒருவனின் காலம் குறித்த நினைவும் தனிமையும் பார்வையாளனுக்குள் செல்லும் போதே படம் தன் நோக்கத்தை நிறைவேற்றும். பார்வையாளனுக்குள் தன் மனதில் இருக்கும் தனிமை உணர்வையும் கலத்தையும் ஞாபகப்படுத்தி பார்ப்பதே இந்த குறும்படத்தின் நோக்கம் – அதை மிக சரியாகவே இப் படம் நிறைவேற்றும், இதை நிறைவேற்றும் போது பார்வையாளனுக்கு அயர்வும், சோர்வும் ஏற்படும். இது பார்வையாளனின் மனநிலையை பொறுத்து விடயம் மாற்றமடையும்.

 இப்படத்தில் பின்னணி இசை என்பது எல்லாம் சேர்க்க வில்லை, கதாப்பாத்திரமாக தோன்றும் ஒருவனின் தனிமை யான மனநிலைக்கு ஏற்ப ஒலிநாடாவை கேட்பதே படத்தின் இசையாகவும் அந்த கதாப்பாத்திரத்தின் செவிக்கும் மனதிற்கும் தூரத்தின் அடிப்படையில் ஒலிக்கும் அளவீடு களின் வழியாகவே படத்தின் இசை இருக்கும். குறிப்பாக வாழ்க்கையில் இசை இருப்பதில்லை வெறுமைதான் இருக்கின்றது. அது போலவே படத்தின் தோன்றும் கதாப் பாத்திரமும் இசையை கேட்பவனாகவே இருக்கிறான். இயல்பு வாழ்விலிருந்தே இதை செய்தேன். அசல் வாழ்வை எவ்வித மான புனைவும் இல்லாமல் அப்பட்டமாக திரைப்படமாக எடுத்து பார்க்க வேண்டும் என்பது கூட என் அக மனதில் தேவையாக இருக்குமோ தெரியவில்லை.

 ஆனால் வாழ்வில் கதை இருக்கின்றது சம்பவங்கள் இருக்கின்றது அதே நேரம் சுய தணிக்கையும் இருக்கின்றது. இந்த சுய தணிக்கை தான் வாழ்வை ஒரு சினமாவாக பதிவு செய்ய விடாமல் தடுத்துவிடுகின்றது. உற்றுப்பார்த்தால் வாழ்வு வெறும் ஆவண படமற்றுமல்ல அது புனைவும் புதிரும் இன்னும் பல்வேறு பரிமாணங்களுடனும் தன்னிச்சையாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தைப் போல வாழ்வை அப்பட்டமாக பதிவு செய்து பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு.

வுhந டுழநெடiநௌள    அறையின் தனிமை                                Pநசளழயெட ஊiநெஅய            தன்னிச்சையான சினமா
2004ஃளூழசவ கடைஅஃர்யனெஉயஅஃ20ஆinஃவுயஅடை   

நன்றி: நிறம்