ö ö
இருப்பதற்கான கனங்கள் மறுக்கப்படும்
நாளில் உன் தேநீரின் உதட்டில்
என் கைரேகையின் சுவடுகள்
அட்டைக் கடித்த குருதியின்
வாசனையை பருகும் நினைவுகள்
மறுபடியும் ஒழுகி தீர்த்த காம்ராவின்
வெய்யில் பொழுதொன்றில் மஞ்சல் நிற
பாப்பாத்தியின் ஈரகசிவின் சுமையுடன்
நீ ஒத்த லயத்தில் தனியாக
சுதந்திரம் ஏதுமற்று வெள்ளைக்காரன்
கட்டிய லயத்தை அன்னாந்த படி
நீளும் அனலான ராத்திரியில்
பாடிப்பறந்து திரியும் வினாகளற்ற
வேலைகள் எல்லாம் கரைந்து உருகி
தேசத்தின் பிரசைகளாக மறுபடியும்
அந்நியமாக்கப்படும் சுயங்களை
தினம் தேடும் வானத்தின் சாரளத்தை
மடுவத்தை நினைத்து பிள்ளையின்
கண்ணீரின் கனம் மலையில்
பரிக்கும் கொழுந்தின் பனிஈரம்
இன்னும் உன் பீங்கான் கிண்ணத்தில்
தெரிக்கும் துளிகளுடன்
மனசு கனத்ததுதான் கிடக்கின்றது..!
ö ö
(03.07.2012 ஓர் மாலைப் பொழுதில் ரா.வைஷ்ணவிக்கு)
தேநீரில் கரைந்த கனவுகள்…!
05 Jul 2012 Comments Off on தேநீரில் கரைந்த கனவுகள்…!
in கவிதைகள்
நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…
05 May 2011 1 Comment
in கவிதைகள் Tags: kiss, life, love, poem, sex, Tamil poem
முத்ததின் வாசனைகளை உன்
எச்சில் மட்டுமல்ல உன்
இரவுகளும் மழையை போல்
கனமான நினைவுப்படுத்துகின்றது…
நீ
தருவதாக கூறிய அந்த
பத்து முத்தங்களுக்கா தினம்
வரும்வரை காத்திருப்பபை பற்றிய
கவலைகள்தான் தற்சமயம் முத்தங்களை
எல்லாம் சபித்து விட தோன்றுகின்றது…
காதலின் முத்தங்கள்
தேவதைகள் கதைளில் வருகின்ற
இராஜகுமாரியின் கூந்தலை போல
இன்னும் புரியாத மனோநிலையை
சமன்படுத்திதான் செல்கின்றது…
பருவத்தின் கதைகளில்
கடக்கும் இரவுகளில் எத்தனை
முத்தங்கள்…
வஞ்சத்தின் முகத்தை மறைத்த
முத்தங்கள்…
அம்மாவுக்கு கொடுக்கவே முடியாது போன
வெட்கத்தின் முத்தங்கள்…
தெருவில் கண்ட சிவப்பு பெண்ணின்
உதட்ரோரம் வரும் கறுப்பு முத்தங்கள்…
கனவில் முத்தத்தோடு திரையை
கிழக்கும் மாயக்கரத்தின் ஸ்கலித முத்தங்கள்…
ஆசிரியருக்கு தரமுடியாது தவித்த
முத்தங்கள்…
பயணத்தின் நெளியும்
ஆயிரம் முத்தங்கள்…
பிரிவில் கண்ணீரை சுவைக்கும்
கருணை முத்தங்கள்..
எல்லா முத்தங்களும் சரிதான்
ஆனால் இன்று நீ
எனக்கு தருவதாக சொன்ன
அந்த பத்து முத்தங்கள்
மட்டும் பாக்கியாக
காத்துக்கிடக்கின்றது….
உன் ஏக்கத்தில்…..
00
05.05.2011.
ஞபகங்களின் ஈரம் …
22 Apr 2011 Comments Off on ஞபகங்களின் ஈரம் …
in கவிதைகள் Tags: கவிதைகள், life, love, Marie Mahendran, poem
நீளும்
நிழலின் வரைபடம்
ஞபகங்களின் ஈரம்
ஆழ்ந்து செல்லும் போதும்
வாரணங்கள் விண்ணில்
நீலப்பதித்த
தாரகைகள் கைகளில்
மிதக்கும் தருணத்துடன்
முறிந்து
விழும் நிகழ் நிமிடங்கள்…
ஒரு கணம் சிரிப்பை
அடர்ந்த பொழுதின்
முன்பு தந்துவிட்ட
அன்றாடம் தரும்
சுமைகளுடன் தொடரும்
பயணங்கள்…
ஆனாலும்
கலை சொல்லி செல்லும்
வாழ்வின் முன்பு …
துறல் நின்ற
கோடை மணல் போல்
முணுமுணுக்கும்
ஆழ்ந்த ஞாபகத்தின்
மழை கோடுகள்….
ஞாபகங்களே
இத்தனை சுகமானதென்றால்
வாழவே
மாயம் தரும்
புன்னகையும்
விழிகளில் தேங்கியிருக்கும்
உன்
புரியாத மொழியின்
வனாந்தரங்களில்
தவற விடப்பட்ட
ஒற்றைப்பாதையில்
இருளின் வெளிகள் எனை
விழுங்கி விழுங்கி
தாயின் கர்ப்ப புனிதம்
தரும்
வாசனையுடன்
தினமும் காத்திருந்தேன்….
அவள்
அப்படியே அரவணைக்க
வருவாள் என்ற
எதிர்பார்க்காத
நிகழ்காலங்களும்
அவளே….அவளுடனான அவளுடன்….
இரண்டு ஆப்பிள் பழங்களும் உனது நினைவுகளும்…
19 Apr 2011 2 Comments
in கவிதைகள் Tags: life, love, poem, sex
மோகித்த இரவுகளில்
காமக்னி தெரிக்கும்
நினைவுகள் உடலில்
இருந்து நீக்கியவள் நீ …
மறுபடி மறுபடியும்
நீ
இறுதியாக அன்பளித்த
அந்த
இரண்டு
ஆப்பிள் பழங்களையும்
தின்று முடிக்க முடியாமல்
நினைவுகளில் துக்கம்
தொண்டையை அடைக்கின்றது….
வாசலில்
நின்று சிரித்துவிட்டு
பிரிந்து போன அந்த
இறுதி நிமிட புன்னகை மட்டும்
மழைக்காக காத்திருப்பவன் போல்
நீ அன்பு
மொழி பேசும்
தொலைபேசியிலிருந்தும்
உனது இலக்கத்திற்கும் இனி
நான் எப்போது
மிஸ் கோல் பண்ணுவது….?
உன்
எதிர்வீட்டு மொட்டை
மாடி
ஜன்னல்களும்
கதவுகளும்
இனி திறப்பது ஏனோ?
குறைந்து போகலாம்
நீ
டுபாய் மண்ணில்
புதிதாக சுவர்களுக்குள்
உனது ஒரே மகளையும்
தாய் தந்தையையும்
ரகசியமாக என்னையும்
நினைத்து கவலைப்படுவதை
நினைக்கதான்
வாழ்க்கை மேல
அப்படி ஒரு வெறுப்பு…
02
உன்னைப்பற்றிய
எனது நினைவுகள் ஓர்
சூறாவளி காற்றைப் போல
தாக்குகின்றது.
உன்
ஞாபகங்களின்
நெடும் வழிப்பயணம்
எனக்கு எப்படி
சாத்தியமாகும் என்று
தெரியவில்லை.
குருவிகளுக்கு
கூடுகட்ட உனது
இருப்பில் ஓர்
இடம் தர முடிந்த உன்னால்
கடைசியில்
எனது கண்ணீரை மட்டும்
சுமந்து
நீ வாழ்ந்த அறையெங்கும்
அன்பு பரவும் உனது
வாசனை எனது
ஆத்மாவை ஓர்
மௌனமான காயத்துடன் தைக்கின்றது…..!
இதயத்தில் தீக்கொழுந்துகள்
பிரகாசிப்பதற்கு முன்
முதலில் வெறும்
புகைதான் மண்டிக்
கொண்டிருக்கும்…
…………………………………………..
ஆதி அன்பு…
11 Apr 2011 Comments Off on ஆதி அன்பு…
in கவிதைகள்
இந்த ஜாதிப்பிசாசு ஜெபத்தினாலும்
உபவாசத்தினாலுமேயன்றி
மற்றெவ்வித்தினாலும் புறப்பட்டுப்போகாது
– மத்தேயு 17:21
துர் சொர்ப்பணங்களின் விழித்தெழும்
இரவுகளின் கரங்கள் சயனித்த ஆடைகளில்
நழுவும் சதை துண்டுடன் போராட்டம்….
ஈவு இரக்கமற்று தொடரும்…
புpடி தளர்ந்து ஆழம்சூழும்
புள்ளங்களின் இடுக்கில் உயிர்
ஆடுகளின் புற்களாய் மாமிச வயிற்றில்
தினபடி போராட்டம்…
விலகி செல்லும் இயேசுவின் பாதபடிகளுடன்
பின்தொடரும் சாத்தானின் தந்திரங்கள்..
கணிபடபொறிகளிலும்..
துண்டு சதையின் மிரட்டலுக்கு நடுங்கி
இருதயம் தன் உட்சுவர்களின் அபத்த
இசையுடன் சதாகாலத்திற்குமான
வேளியை விட்டு தூர விலகிசடசெல்லும்..
தாயின் பரிவு புரியாத மார்புகாம்புகளை போல….
பயணம் முன் தொடர்வதற்கு முன்பாக
தீர்மானித்த ஆமெனின் கரங்கள்
என் திட்டங்கள் ஏதும்
என்னானதல்ல என்பதுடன்
வருகையின் நாட்கள் மரணத்தின் சுவை
சொல்லும் என் வீட்டின் கிருபை
வார்த்தைகள் எல்லாம் தீர்ந்து சென்றிருக்கும்
என் தோழனே..
ஆமென்…
11.04.2011
மதியம்
இடம் பெயர்வு..
15 Dec 2009 8 Comments
in கவிதைகள்
காற்றின் தேடல்
முற்றுப் பெற்றதன் போது
நகரத்தில் தேடிய
அவனிடம் அடையாளமற்ற
உடல் ஒன்று ஒப்படைக்கப்பட்டது…
கோடுகளும் வண்ணங்களும்
உடலில் இருப்பதை அவன்
கண்டுகொண்டான்…
காதலியின் யோனியையும்
உடலில் இருந்து அவன் மீட்டெடுத்தான்….
குறைந்தபட்ச மகிழ்ச்சியை அது அவனுள்
தந்தது…
மிருகங்களின் வகையினை தன்
உடலில் தேடிபோது
தெருநாய்களின் ரேகைகள் மட்டும்
சுயங்களை கேலி பேசி சிரித்தது…
நடக்கும் போதும்…
சிரிக்கும் போதும்…
புணரும் போதும்…
உட்காரும் போதும்..
அனைக்கும் போதும்..
அவனுக்குள் இருந்து
ஒவ்வொரு உடலாக வெளிப்பட்டது…
அந்த இறுதி நாளில்
அவன் தன் உடலைத்தேடி
தெருவெங்கும் திரிவதாக
நண்பர்கள் கூறினர்..
எந்த உடலை என்பதான
கேள்விகள் என் மனதில்
எழுந்தது…
கையெழுத்து…
12 Nov 2009 1 Comment
in கவிதைகள்
எல்லா கனவுகளையும்
இழுத்துப்போய்
சுக்கு நூறாக்கி
சிதைந்து கிடக்கிறான் இவன்
இனி
மீட்சி பெற
வழியேதும் இல்லை…
வாழ்வின் எல்லா கதவுகளும்
சிறையாகிப்போனது…
வீரியமற்ற சோம்பேரியான
மலட்டு மனிதன் இவன்
இந்த உலகத்தில்
வாழ்வதற்கு இனி ஒன்றுமில்லை
ஒரு பெண் கூட
நேசிக்கவில்லை
பணக்காரனுக்குத்தான்
பெண்களின் சிநேகம்…
இவன் போன்ற
பைத்தியத்தை எந்தப்பெண்
தீண்டுவாள்!
வாழத்தெரியாத
பைத்தியம்
சோம்பேறி… கழுதை…மக்கு….
ஆசைகளை மட்டும்
சுமந்து திரியும்
தெரு நாய் இவன்…
மரித்த அழுகிய பிணம் இவன்!
வாழ்வை விட
சாவு தேவலை போல்…
சாவதற்கும்
தைரியமற்ற கோழை…
வாழத்தெரியாதவன்
சகித்துக்கொள்ள முடியாதவன்…
வெறும் பிணம் தான் இவன்!…
Recent Comments