பாவத்தின் சம்பளம் மரணம்…


 “There are no rules in filmmaking.

Only sins. And the cardinal sin is dullness.”

Frank Capra
abstract-face-painting-11

ஓரு வருடத்தில் 51 மில்லியன் மக்கள் மடிகின்றார்கள், ஒரு நாளில் ஏறத்தாழ 140,000 பேர்கள் இறக்கிறார்கள். அதில் 35,000 பேர் ஒரு போதும் ஒரு முறை கூட இயேசுவை, இயேசுவின் விடுதலை சுவிசேஷத்தை அதாவது அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டதை, இயேசுகிறிஸ்து அவர்களுக்கு அளித்திருக்கும் விடுதலையை, இளைப்பாறுதலை, சுப செய்தியை கேட்காமலேயே இறந்து போவது என்பது உலகின் கொடுமையானதொன்று.
நமக்கான நம் பாவத்திற்காக தன்னையே பலியாக்கி என் பாவத்தை எல்லாம் சுமந்து இயேசு சிலுவையில் பாவ பலியாக தன்னையே பரிகாரியாக மாற்றிவிட்டார் இனி நான் பாவி அல்ல என்று மனிதன் அறியாமலேயே மரணிப்பது என்பது கட்டி வைத்த வீட்டிற்கு குடிபோகாமலேயே போவதற்கு ஒத்தது.
நமக்கு இருக்கும் ஆத்துமாவின் பிரச்சினைக்கு மூலக்காரணம் பாவம்தான். பாவத்திற்கு இந்த உலகத்தில் மருந்து இல்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுவது வெறும் உடல் ரீதியான சாவை அல்ல இது மனுசனின் ஆத்மா, ஆவியின் மரணத்தையே சொல்கின்றது. இந்த நிலையிலருந்து பாவத்தின் கட்டிலிருந்து நித்தியமான சமாதானத்தையும் சந்தோசத்தையும் இயேசுவால் மட்டுமமே தர முடியும் என்பதற்கு நிச்சயம் உண்டு.
மனுசன் உலகத்தையே ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? என்று வேதம் நம்மை பார்த்து கேட்பதும் இதனால்தான், அதன் படி பார்த்தால், ஒரு மனிதனுக்கு உலகம் தரும் அனைத்து சொத்து சுகம் சம்பூரணமாக இருக்கும் போதும் அவன் உள்ளம் மட்டும் ஏன் ஏதோ ஒன்று இல்லாதது போல் துடிக்கின்றது என்பதே என் கேள்வி…?
எல்லாம் இருக்கு ஆனால் ஏதோ ஒன்று இல்லாதவனாக வெறுமையில் ஜீவனை கசப்பாக்கி கொள்வது ஏன்? பாவம்தான் இந்த பரிதாபமான நிலைக்கு மூலக்காரணம். இது போல உலகம் தரும் சொத்து சுகம் எதுவும் இல்லாத ஒரு பிச்சைக்காரனின் நிலையும் இதேதான். அவன் இருந்தும் நிம்மதி இல்லாதவனாக இருக்கின்றான், இவன் இல்லாமலும் நிம்மதி இல்லாதவனாக இருக்கின்றான் இருவரின் நிலையும் ஒன்றுதான். பிரச்சினை பாவம்தான், பாவம்தான் மனிதனின் எல்லாவிதமான குற்றவுணர்வுக்கும், சாபத்திற்கும்,நோய்களுக்கும், கடைசியில் மரணத்திற்கும் காரணமாக இருக்கின்றது.
பாவத்தை நீக்க நம்முடைய எந்தவொரு விஞ்ஞானமும், மருத்துவமும், மதமும், மார்க்கங்களும், உளவியல் ஆலோசனைகளும், பக்தி வழிபாடுகளும், தியான, யோகா முறைகளும், கலை கலாசார காரியங்களும், அரசியல் சித்தாந்தங்களும் இப்படியான மனிதனும் உலகமும் கண்டுபிடித்திருக்கும் எந்தவொரு முறைகளும் (ளுலளவநஅ) உதவி புரிந்திட முடியாது. ஏனென்றால் பாவத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் மனிதன் கண்டுப்பிடித்த மதமும், மதம் சார்ந்த கடவுளும்தான்.
இயேசுவின் இரத்தம் மாத்திரமே சகல பாவங்களையும் சுத்திகரித்து நம்மை எல்லா கட்டுகளிலிருந்தும் விடுதலை தர வல்லது. இயேசுவின் இரத்தம் மட்டும் ஒருவனுக்கு மெய்யான சமாதானத்தை தந்து ஆத்மாவின் வெளிச்சத்தை பாச்சி ஆவியை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்டது.

Advertisements

Quote

அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்


 திரைப்படம் குறித்த மனப்பதிவு 


                                                                   பிரசன்ன விதானகே

ஒரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. ‘ஆகாயப் பூக்கள்’ திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.

கொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கியம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் – தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.

அதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க ‘ஆகாயப் பூக்களின்’ திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன்.

நண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம். எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை(RETROSPECTIVE) என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தான். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது.

அவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோபாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முகத:தை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.
மற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவாகவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது.

வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது. மற்ற திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே. நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.

     நானொரு பெண்ணிய இயக்குநரா என்று மற்றவர்கள்   என்னிடம் கேட்கும்பொழுது: ‘நான் ஒரு பெண். நான்  சினிமாக்களும் எடுக்கிறேன்;                                                                                    சாந்தால் அகர்மான்-

எனறு சாந்தால் அகர்மானின் மேற் கோடு கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள். ‘உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கி;றவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது.

மனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது. மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் ‘பெண்’ என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் ‘பெண்’ என்ற வஸ்துவை குறித்த ஆண்மையின் பார்வை என்பது ‘வேசித்தனம் பண்ணுபவள்’ தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு.

நிம்மி ஹரஸ்கமhttp://nimmiharasgama.blogspot.com/  என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் august sun திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று.

நல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.

நிம்மி ஹரஸ்கம

ஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..

வெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா 2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா
சிறந்த நடிகை – மாலினி பொன்சேகா 2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா – இத்தாலி
ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது 2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா – ஸ்பெயின்

ஜூரியின் கௌரவிப்பு 2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா
—————————————————————————————-

LINK –http://www.akasakusum.com/story.html

http://akasakusum.blogspot.com/

http://www.vithanage.com

———————————————————————————

இயேசுவின் பரம அன்பு…


ஒரு சாட்சி

மாரி மகேந்திரன்

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்இ தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மாற்கு 8:36இ37 (ஆயசம 8:36இ37)

சினிமா என்ற ஓர் வஸ்து எனக்குள் எப்படி வேர்கொண்டது என்பதைப் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. என்னை சினிமாவுக்குள் இழுத்து சென்றது எது? ஏன் சினிமாவை, கலையை வாழ்வாக ஆக்கிக்கொள்ள துணிவு ஏற்பட்டது. சினிமாவை வாழ்வாக ஆக்கிக் கொண்டதனால் இழந்தவைகள் அனேகம் ஆனாலும்.

சுpனிமா என்கிற வசீகரிக்கும் ஆயுதம் என் இருதயத்தை பிடித்து இழுத்து சென்றது ஏன்? எது?. எல்லோரிடமும் ஒரு பெலவீனம் உண்டு. அது போல் என்னிடத்திலும் சினிமா ஒரு பெலவீனமாகத்தான் குடிகொண்டுள்ளது. சினிமாவில் நான் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. (அது கூட நல்லதற்குத்தான் என்பது வேறு விடயம்) ஆனால் இந்த சினிமாவின் மீது எனக்குள்ள ஆசை வர காரணமாக இருந்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை நான் கண்டடைய சுமார் ஒரு 20 வருடத்தையும் தாண்டி செலவளித்து விட்டேன். இதற்கான பதிலை நான் கண்ட போதுதான். எனக்குள் ஒரு ஒளி உட்புகுந்து என்னை பெலப்படுத்தியது. அந்த பதில் இதுதான்.

நசரேத்தூர் இயேசு ((JESUS OF NAZARETH) ) இந்த திரைப்படம் தான் என் வாழ்க்கையை திரைப்படத்துறை நோக்கி அழைத்து சென்றது. திரைப்படத்தை கண்ணும் கருத்துமாக நேசிக்க வைத்தது. இப்படம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப் படத்தை ஃவிறாங்கோ ஸெவிஹெல்வி என்ற இயக்குநர் உருவாக்கியிருந்தார். இதில் இயேசு நாதராக ஹொபேட் போவேல் நடித்திருந்தார். 397 நிமிடங்கள் கொண்ட இத்திரைக் காவியம் பார்ப்பவர்களின் இதய கிடங்கை வலுவாக தாக்க கூடியது. இத் திரைப்படம் இன்று வரை இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகம் வரை வெளிவந்துவிட்டது. ஆனால் நான் எனது பள்ளிக்காலத்தில் பார்த்த முதல் திரைக்காவியம் இப்படம் தான். இத்திரைப்படம் என்றும் என் வாழ் நாளில் மறக்கவே முடியாத படிக்கு மானசீகமானதொரு வலியை என் விபரம் புரியாத வயதில் ஏற்படுத்தியிருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. திரைப்படம் என்ற போது பொதுவாக மக்களின் மனதை தாக்க கூடியதுதான். ஆனால் ‘திரைப்படம்’ என்ற அளவில் இப்படம் என் மனதை தாக்கவில்லை. இயேசுவின் சிலுவைப்பாடுகள், அதைக் காட்சிப்படுத்தும் விதம், அவரின் சுவிஷேசம், யூதாசின் காட்டிக்கொடுப்பு என்று இன்றும் என் மன கண்ணிலிருந்து பிரிக்க முடியாத படிக்கு இப்படம் என்னுள் என் மனசாட்சிகளை விழிக்க வைக்கிறது. இயேசுவின் கல்வாரியின் இரத்தம் பாவிகளின் இருதயத்தையே ஒரு கணம் ஸ்தம்பிதம்படுத்தும். நான் இப்படத்தை பார்க்கும் போது ஆண்டு 2 அல்லது 3இல் தான் கல்வி கற்றிருப்பேன். இப்படத்தை யுழுபு சபையினால் தான் பாடசாலையில் திரையிட்டிருந்தார்கள். அன்றைய நாளில் மழை பெய்து இருந்தது. படத்தை பார்த்துவிட்டு நான் வீட்டிற்கு சென்ற போது அம்மா ஏன் தம்பி இப்படி மழையில் நனைந்துகொண்டு வருகிறாய். என்று கேட்டுவிட்டு எங்கே குடை என்ற போதுதான் எனக்கு நான் மழையில் நனைந்தது தெரிய வந்தது. அந்த வயதில் நான் கொண்டு போயிருந்த அந்த கருப்பு குடை தொலைந்து போய்விட்டது. பசுமையும், இளமையும் மாறாத என் பால்ய வயதில் இளம் பிராயத்தில் தொலைக்க முடியாத இயேசுவின் அன்பு மழையை சுவைக்க தெரிந்திருந்ததே என்பதை நினைக்கும் போது, இன்றும் மறக்க முடியாது. இந்த திரைப்படத்திற்கு பின்பு தான் நான் சினிமாவின் மீது மோகம் கொண்டேன். இதன் தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களை தேடிப்பார்க்க தொடங்கிய காலங்கள் இதுவரை சினிமாவுக்கான புள்ளியை எண்ணில் விதைத்தவர் இயேசுவே.

ஆனால் அதற்கு பின்பு நான் சினிமா மீது கொண்ட காதலினால் தமிழ் சினிமாவில் எப்படியாவது நுழைந்து ஒரு நடிகனாக வர நினைத்தேன். ஆனாலும் நடிகனாக அழகு வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் இயக்குனராக வரலாம் என்பதற்கான முயற்சியுடன் இந்தியாவிற்கு சென்று திரைப்படத் துறையில் முயற்சி செய்யலாம் என்பதற்கான உத்வேகத்துடன் தமிழ் நாட்டிற்கு 1996 ஆம் ஆண்டு பயணமானேன். நல்ல சினிமா மீது எனக்கிருந்த ஈடுபாடு அங்கு சென்ற பின்பு சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தது. இந்த உடைவு என்பது வெறுமனே நோக்கத்தை மட்டுமல்ல வாழ்வின் மீதும் வெறுமையை சூழச் செய்தது. அண்மையில் எனது நண்பர் அசினுடன் ஓர் நேர்காணலில் தமிழ் சினிமாவை உருவாக்குவது இலகுவானது….. ஆனால் தமிழ் சினிமாவின் மீது கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிறுவன நிலைபாடு தான் நல்ல சினிமாவையோ, சாதாரண சினிமாவையோ உருவாக்க கால தாமதத்தை தருகின்றது. அத்தோடு ஒரு Manager Ak;> ManagementIம் தெரிந்து கொள்ளத்தான் பல வருடங்கள் கடந்து விடுகின்றது என்கிற உண்மை சத்தியமானது என்பதை விட அது தான் உண்மையும் கூட. தமிழ் சினிமாவில் இயங்குவதற்கு ஒவ்வொருவருக்கும், பாரத்தை தருவதும் இந்த மனோபாவம் தான். அதனால்தான் இந்த மனிதர்கள் போலவே அவர்களின் சினிமாவும் பாவத்தை உருவாக்கும் ஊற்றாக இருக்கின்றது. தமிழ் சினிமா பெரும் பாவ சாபத்தை சாதாரண மனிதனின் வாழ்வில் வைத்து சென்று விடுவதோடு சாத்தானின் ஆயுதமாகவும் உள்ளதை நாம் எப்போதும் அறிவோம். பாவத்தை தேடும் பாவிகளாக மாற்றும் இயக்குனர்களுக்கும்;, தயாரிப்பாளர்களுக்கும் தாம் செய்வது பாவம் என்பதை எப்போது தான் அறிவார்களோ.

தமிழ் நாட்டிலிருந்த அந்த காலங்களில் தமிழ் சினிமாவில் ஒரு உதவியாளனாக இயங்கினாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஏதோ ஒரு தவறை செய்வதாக எனக்குள் ஏதோவொன்று பேசினாலும், பயணம் தொடர்ந்தது. சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் சென்று வேலை செய்தாலும் மனதில் சந்தோஷம் என்பதோ, சமாதானம் என்பதோ கொஞ்சமும் இல்லாமல் இருப்பதை உணர முடிந்தது. ஆசையோடும், இலட்சியத்தோடும், சினிமாவை விருப்பதோடும் ஏற்றுக்கொண்டாலும் மனதில் அமைதி இழந்தவனாக, பைத்தியக்காரனாக, பரதேசியாக ஏமாற்றப்பட்டவனாக உதாசீனப்படுத்தப்பட்;ட ஒரு பாண் துண்டாக, ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாதவனாக எல்லா இடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட மனதுடன் ஆத்மாவை தொலைத்து நிம்மதி இழந்தவனாக அலைந்த நாட்கள் அதிகம். வேலையேதும் செய்ய முடியாத படிக்கு என் சோம்பலும், அதீதமான கருத்துக்களும் மாயை தந்து திருப்தி படுத்த பார்த்தது. கோயில், அத்வைதம், ஞானமடைதல், ஓஷோ, மெய்யுணர்வு, யோகாசனம், தியானம் என்று பல்வேறு வழிகளிலும் புத்தியை செலுத்தினாலும் அமைதிக்கான இடம் எங்குமே புலப்படவில்லை. விரக்தி, வேதனை, தனிமை, அன்புக்காக ஏங்கும் மனத்தோடு சொல்ல முடியாத துயரத்தோடு அலைந்தேன். வேதாகமத்தில் பிரசங்கியின் வார்த்தைகள் பேசுவது போல்

ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும்
மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்
மனதை பிரயோகம் பண்ணினேன். இதுவும்
மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறது என்று கண்டேன்.
(பிரசங்கி : 1-17)

மனதை திருப்திபடுத்தும் முயற்சியில் அலைந்த அலைச்சலில் உடலும் மனதும் தன் நிலையை இழந்து, வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் விரக்தியும், வெறுப்புணர்வும், தோல்வி மனோபாவமும் என்னை தற்கொலையை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது தான் மீண்டும் நான் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. மீண்டும் 8 வருட காலத்திற்கு பின்பு வீட்டிற்கு திரும்பினேன். வீடு கொஞ்சம் மன பாரத்தையும், வலியையும் தீர்த்தாலும். மறுபடியும் ஏதோ ஒரு துயரம் வருமோ என்பதற்கான நிலையுடன் திருமணம் இன்னுமொரு துயரத்தை தரும் என்பது தெரியாமலேயே அதனுள் விழுந்தேன். பசி, பட்டினி, என்ற வேதனையோடு அலைந்த நாட்களில் ஏதோவொரு தைரியம் இருந்தது. ஆனால் திருமணம் மனதின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் சுக்குநூறாக உடைத்தெரிந்தது. எல்லாம் தகர்ந்து நிர்க்கதியான நிலையில் ‘வெறுமை’ சூனியம் சூழ நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் முன் வந்து நினறேன்.

‘பதவி ஆசைக்காக உழைத்தவர் உச்சம் கண்டதில்லை!
பணத்திற்காக உழைத்தவர் வரவும் கண்டதில்லை!
மனிதனுக்காக உழைத்தவர் மகிழ்ச்சி கண்டதில்லை!
ஸ்தாபனங்களுக்காக உழைத்தவர் சமாதானம் பெற்றதில்லை!
கொள்கைக்காக உழைத்தவர் பலன் கண்டதில்லை!
இம்மையில் நன்மை தேடி உழைத்தவர் பரிசுகள் பார்த்ததில்லை!
கிறிஸ்துவின் நாமத்திற்காக உழைத்தவர் பயம் அறிந்ததில்லை!
நி;த்திய பாக்கியத்திற்காக உழைத்தவர் வெட்கம் அடைந்ததில்லை!
(நன்றி: விஷ்வவாணி சஞ்சிகை)

வாழ்க்கையை தொடர்ந்தும் நரகமாக்கிக்கொண்டதன் முடிவாகத்தான் திருமண உறவு அமைந்தது. உணர்வுகளையெல்லாம் அது தாக்கி தன்மையை நோக்கி என்னை அழைத்து சென்ற போது இயேசுவின் அன்பு மாத்திரம் தான் என்னுள் இருந்த பாரத்தை இறக்கி வைக்க உறுதுணையாக கிடைத்த இறுதி சரணாகதி. கிட்டத்தட்ட இயேசுவோடு என் உறவு பல வருடங்களாக தொடர்ந்து வந்திருந்த உணர்வை ஆண்டவர் என்னை தொட்ட போது உணர்த்தினார். இதுவரை கண்டிராத சமாதானம் உலகின் பெயரால் ஏற்படவில்லை. தேவனின் பெயரால் ஏற்பட்;டது. தேடி வந்து அன்பு செய்த தேவன் எனக்குள் இரட்சிப்பை தந்தார்.

இதனால் நான் சந்தித்திராத பெரிய பலத்த சந்தோஷம், நிம்மதி, சமாதானம் எனக்குள் பற்றிப் படர்வதையும் என் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாக மாறுவதையும் என் இருதயம் சந்தோஷத்தின் வாசலில் நின்றும் என் தகப்பனின் என்றும் மாறாத அன்பின் தழும்பில் மூடிக்கொள்வதையும், இரட்சிப்பின் மகிமையையும் என்னால் எப்படி வார்த்தைகளில் சொல்லி விட முடியும். இயேசுவின் பரிசுத்த அன்புக்கு முன்பு மனித வார்த்தைகளும், மொழிகளும், அருகதையற்று போவதை நான் பல்வேறு தருணங்களில் அடைக்கப்பட்ட ஸ்தம்பிதமான மனோநிலையுடனும், கண்ணீர் பெருக்கெடுக்கும் அந்த தேவ அன்புக்கு முன்பு என் எல்லா நியாயங்களும் தேவனிடம் சரணாகதி அடைகின்றது.

‘ உனக்குண்டான எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுங்கையனாக என்னிடம் வா. நான் எனது விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த அந்த இரட்சிப்பை உனக்கு இலவசமாக தருகிறேன்!’ என்ற இயேசுவின் வார்;த்தைகள் சத்தியத்தின் ஒளி. இருளின் குழந்தைகளாக வாழும் பாவிகளின் மீட்பர் இயேசு.

தொடரும்……

குற்றத்தின் சம கால முகம் கிம் கி டுக் என்றொரு விளிம்பு நிலை கலைஞன்ஹவி

நமது சமூக மறதியில் தோய்ந்துவிட்ட பல்வேறு அடுக்குகளாலான மனித வன்முறையை சில சமயம் நாம் தினசரி எதிர் கொள்ள நேர்கையில் அது நம்முள் எந்த பேரதிர்வையும் நிகழ்த்த விடாமல், வழமையான உணர்ச்சியற்ற தன்மைக்குள் தள்ளி விடுவதற்கான பெரும் ஊடக வணிக சூழல் காலங்களில் வாழ நேர்ந்துவிட்ட நமக்கு அவ்வாழ்தலின் ஊடாக கலைப் படைப்பு கட்டி எழுப்பப்பட்டு நம்முன் திறந்து வைக்கப்படும் பொழுது கலையோடு மட்டுமல்லாமல் அது விரித்துக் காட்டும் யதார்த்த வன் உலகமும் நமது உணர்வுக்குள் விழிப்புப் பெறுகையில் மறதியுற்ற நமது தினசரி வாழ்வை குறித்த அனைத்து கண்ணோட்டங்களும் மாறி விடுவதுடன், நமது நிலைப்படுத்தப்பட்ட வாழ்வியல் திட்டங்களும் சிதறடிக்கப்பட்டு, ஒரு பெரும் பாதுகாப்பற்ற சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற இரக்கமற்ற உண்மை சாவின் வன்பார்வையுடன் நம் மேல் பாய்கிறது.

அப்பொழுது நாம் செய்யத் தகுந்தவைகளும் தகாதவைகளும் கலந்து மறைந்து வாழ்வின் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும் பொழுது செயலின் இயல்பு தன்மை என்பது குற்றம், வன்முறை, கொடுஞ்செயல் எனப் பிரித்தறியா வண்ணம் நிறம் கொள்கின்றன. ஒரு குழந்தைமையின் தட்டாம் பூச்சியின் வால் நூலென பட்டமிடப் படுகையில் வன்முறையின் காலடித் தடமெனத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்லும் மனிதப் பரிமாணம் பின் அறத்தின் கிள்ளலில் விழிப்புற்று விடை பிரிகையில் மேலேழும் கவிதையென செயல் மாற்றம் பெறுகிறது. ஆன போதிலும் இவற்றின் அடி நீரூற்றின் மென் கசிவாய் மனித இருப்பில் சலனமுறும் அன்பின், கருணையின் பேருவகை நம்மை எல்லா அநீதிகளிலிருந்தும் மீட்டு சென்று விடுவதான ‘கலை நம்பிக்கையில்’ வாழ்வை திரும்ப கையளிக்கிறோம்.

இப்படியான படைப்புக் கனவுகள் மிளிர நாம் கிம் கி டுக்ஐ அணுகினால் நாம் அடைவது ஏமாற்றம், வெறுப்பு, கசப்பு, வன்முறை,. அப்படியும் நாம் அறுதியிட்டுச் செல்ல முடியாது. ஒரு சமயம் அப்படைப்புக் கோரும் அம்மனநிலையே அதுவாக இருக்கும் பொழுது, அது நம்முள் கிளர்ந்தெழுகையில் மிகுந்த அச்சத்தோடும், அவநம்பிக்கையோடும் நம் அகத்தையே நாம் மீண்டும் பரிசீலித்துப் பார்க்க வேண்டியவர்களாக ஆகிவிடுகிறோம்.

‘மோசமான ஆள்’ (Bad Guy) திரைப்படம் நம் அகத்துள் புதைந்துள்ள வன்முறையை காட்சிப்படுத்துகின்ற அதே வேளையில், மனித மனத்தின் உள் ஆழங்களில், குற்றத் தன்மைகளைத் தாண்டி பயணித்து பெருக்கெடுக்கும் காதலின் அற்புதத்தை, ஒரு மனித குல பரவசமென மௌன சலனமாய் நம்முள் ஊற்றுகிறது. இப்படி மனித அகத்தின் கசடின் அடி ஆழம் வரை இறங்கிச் சென்று யாதொரு அழகியல் வாத சமரசங்களும் இன்றி தன்னைத் தானே தோண்டியெடுத்து நம் முன் பச்சை ரத்த வாசனையுடன் நமக்கு கையளிக்கிறார்.

இப்படி வகைப்படுத்த இயலாத பிரச்னை என்று இப்பொழுது மட்டுமல்ல கிம் தான் துவக்கிய முதல் படைப்பிலிருந்தே அவருக்கு விமர்சகர்களால் தொல்லை ஏற்பட்டுவிட்டது. மேற்கத்திய தொழில் நுட்ப பிரமாண்டங்களை தனது படைப்பு பிரமாண்டத்தால் கேள்விக்கு உட்படுத்திய அகிரா குரொசவா மாதிரி மேற்கத்திய வன்முறை சுகிப்புத் திரைப்படங்களை தனது கச்சாவான வாழ்வை பிரதி செய்யும் படைப்பு ஆக்கத்தின் மூலம் கிம் எழுப்பிய கேள்வி மேற்கத்திய விமர்சகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆனது. மாபெரும் ராணுவ கிட்டங்கி போல் காட்சியளிக்கும் மேற்கத்திய சினிமாத்தனங்களை தனது உருட்டுக் கட்டைகளால் எதிர் கொண்ட காட்டான் போன்ற ஒரு தோற்றத்தை ஆரம்ப கால விமர்சகர்கள் அவர் மேல் ஏற்ற முனைந்தார்கள்.

அவரின் அந்த யதேச்சையான கலைத் துணிச்சல் தான் மனித மனதின் ஆழம் வரை இறங்கிச் செல்லும் உத்வேகத்தையும், எவரைப் பற்றிய கவலையுமின்றி தன் படைப்பை உருவாக்கும் திறனையும் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. அவரது தீராத படைப்பின் உள்ளார்ந்த தீவிரம் அனைத்தையும் நொறுக்கி மேல் எழுந்தது, மேற்கத்திய மனதின் அகத்தை தனது முடிவற்ற காலத்தை கையகப்படுத்திய காட்சிக் கவிதையான ‘வசந்தம், கோடை, இளவேனில், மீண்டும் வசந்தம்…’ (Spring, Summer, Fall, Winter and Spring) என்கிற திரைப்படத்தின் மூலமாக வசியப்படுத்தினார். தனது பௌத்த மந்திர வாத சக்தியின் மூலமாக அவர் எழுப்பிய மனித மனத்தின் அறத்தினூடான அப்படைப்பின் திறந்த மன நிலை மேற்கத்திய வாசகர்களையும், விமர்சகர்களையும், ஏன் உலகம் முழுவதும் உள்ள திரை ஆர்வலர்கள் அனைவரையும் அவருடைய படைப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.

கிம் மை கொண்டாடத் துவங்கினர். கவித்துவத்தின் ஆழமான செறிவும், மனித மனதின் தத்துவார்த்த தேடலுமாய் காட்சிகளின் அபூர்வ வண்ணங்களாய் மேல் எழும்பியதும் கிம் மின் படைப்பு. மேலும் “வசந்தம்…” படத்தில் அவரே கதாபாத்திரமாய் தோன்றி மனித குலத்திற்கான தீராத சாபமான வன்முறையின் குற்றவுணர்வின் பாறாங்கல்லை சுமந்து செல்லும் காட்சி உலகப் படங்களின் முடிவற்ற பயண சாட்சியாய் நம்முள் ஒளிர்கிறது. வன்முறையின் குரூர அழகியலை காட்சிப்படுத்த முயன்ற மேற்கத்திய படைப்பு மனங்களான பெசோலினி போன்றவர்களை தனது ஆழமான கிழக்கின் தேட்டமான பௌத்தத்தால் மிக எளிதாக தாண்டிச் சென்று, அனைவரையும் தனது வசியத்திற்கு ஆட்படுத்தினார் கிம். அப்படம் உலகின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

மழைக்காக பள்ளிக் கூடம் பக்கமாக ஒதுங்காத வாழ்வியலைக் கொண்ட கிம் முறையாகவோ, முறையற்றோ தனது பள்ளிக் கல்வியை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிட்டு வாழ்க்கைக்குள் கற்றுக் கொள்வதற்காக நேரடியாக நுழைந்தவர். தொழிற்சாலைகளில் அடிநிலை பணியாளராக பணிபுரிந்தார். கப்பல் தளங்களில் சுமைத் தொழிலாளியாக இருந்து, வாழ்வின் பல்வேறு பக்கங்களின் வழியாக நடந்து வந்து திரைத்துறைச் சேர்ந்தார். அவர் படிக்கும் பொழுதோ, பணிபுரியும் பொழுதோ அவர் ஒரு திரைக்கலைஞனாக மாறுவார் என்று அவர் கூட கனவில் கண்டதில்லை. அவருக்குள் இருக்கும் தீராத கலை ஆவேசம் அவரை ஓய்வுநேர ஓவியனாக அவர் வாழ்க்கையில் இருத்தியிருந்தது. அந்த வண்ணம் கூட்டி வந்த பாதைதான் திரைப் படைப்பென்னும் மாபெரும் விகாச வெளி.


பிரான்சில் ஓவியத்திற்கு சிறந்த சந்தை இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட அவர் தனது ஓவியங்களுடன் பிரான்சிற்கு வந்திறங்கினார். அங்கே மோண்ட்பில்லியர் கடற்பகுதியில் தங்கியிருந்தபடி இரண்டு ஆண்டுகள் பிரான்சின் தெருக்களில் தனது ஓவியங்களை விற்றபடி இருந்தவருக்கு, அங்கிருந்த அரங்குகள் தான் சிறந்த சினிமாக்களை அறிமுகப்படுத்தின. கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் ஆரம்பப் பகுதிகளில் நடந்த இவ்வனுபவம் அவரைத் திரைப்படம் எடுக்க வேண்டுமென்ற தீராத ஆவலை உண்டாக்கியது. 1996ல் அவர் கொரியாவுக்கு திரும்பி எடுத்த முதல் படம்தான் ‘முதலை’ (Crocodile). அப்படம் ஹான் நதியில் தற்கொலை செய்து கொள்ளும் மனிதப் பிணங்களை அகற்றும் ஒரு மனிதனைப் பற்றிய படமாகும். அதன் படைப்பாக்க சமரசமற்றத் தன்மையும், உருவாக்க முறைகளும் அனைவரின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பினாலும் அது குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.

பிறகு தொடர்ச்சியாக ‘காட்டு விலங்குகள்’ (Wild Animals – 1997), மற்றும் ‘பேர்ட்கேஜ் இன்’ (Birdcage Inn 1998) எடுத்தபோதிலும் 2000மாவது ஆண்டு ‘தி ஐஸில்’ (The Isle) வெளியாகும் வரை அவை வெளிவரவில்லை. தி ஐஸில் வெளிவந்து உலகளாவிய வெற்றியை அவருக்கு ஈட்டித் தந்தது. பார்வையாளர்கள் அதன் காட்சி ரீதியான அழகியலைக் கண்டு திகைத்துப் போயினர். உலகப்படங்களில் அது ஒரு புதிய வழியை திறந்து விட்டதாகவே கருதினர். அந்த எண்ணம் வீண் போகவில்லை என்பதை அவரது தொடர்ந்த படைப்புகள் உறுதிப்படுத்தின. அப்படத்தின் தனித்துவமான கதைக் களம் ஆண் மற்றும் பெண் இருப்பின் உள்ளார்ந்த சிக்கல்களை அலசியது. தனது மனைவியையும், அவளது காதலனையும் கொன்ற ஒரு கொலையாளி, ஒரு சிசார்டின் சொந்தக்காரியான வாய் பேச முடியாத பெண்ணுடனான அவனது உறவு, அவளது வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகள், தவிர்க்க இயலாத இருவரின் இருப்பு, அவனின் சிக்கலுற்ற அகம் என்று பயணிக்கிற படைப்பானது பார்வையாளர்களை பெரிதும் சலனத்தை ஏற்படுத்தி தன் பக்கம் அவர்களை ஈர்த்தது. ஹிரோஷி தெஷிகாராவின் தலைசிறந்த படைப்பான ‘தி விமன் ஆப் த டியூன்ஸ்’ என்ற திரைக் காவியத்தை மீண்டும் நம்முள் எழுப்பிச் சென்றது.

கிம் மின் பெரும்பாலான படங்கள் குறிப்பாக மோசமான ஆள், தெரியாத முகவரி, சமாரிட்டன் கேர்ள் போன்ற படங்கள் பெண்ணிய விமர்சகர்களால் கடுமையாக எதிர் கொள்ளப்பட்டன. எதிர்மறையான விமர்சனங்களையே அவருக்கு அது ஈட்டித் தந்தது. ஒரு படைப்பாளி என்ற முறையில் திறந்த முறையில் தனது நம்பிக்கைகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்துகிற பொழுது அது ஏற்கனவே தரப்பட்ட மதிப்பீடுகளை அப்படியே முன் தருவதில்லை. எனவே அதன் தன்மையானது வேறு விதமானது என்றார் கிம். மிகவும் தீவிரமான படைப்பு எல்லைக்குள் சென்று கதாபாத்திரங்களை உருவாக்கும் பொழுது அதன் செயல் முடிவுகளும் வழக்கமான விமர்சக கண்ணோட்டங்களால் மதிப்பிடவும் முடியாததாக மாறிவிடுகிறது.

ஆன போதிலும், ஒரு படைப்பாளியின் பாத்திர தேர்வும், கதைக் களமும் அது கோரி நிற்கும் படைப்பு வெளியும், வாசக வெளிப்பாடும் விவாதத்திற்குரியது தான். ஆனால் மிகவும் பின் தங்கிய மக்கள் திரளில் இருந்து தனது கதாபாத்திரத்தை தேர்வு செய்கிற ஒரு படைப்பாளி அல்ல தான் நோக்கும் ஆழமான பிரச்னைகளை ஏற்கனவே செயல்தளங்களில் கோரி நிற்கின்ற அரசியல் பிரதிநிதித்துவத்தை அது நேரடியாக பிரதிபலிக்காது போனாலும் கூட அதன் வாழ்தளங்களில் இருந்து அது வெளிப்படுத்த விரும்பும் விமர்சன உணர்வானது அனைத்து மனித மனங்களோடும் உரையாட விரும்புகின்ற ஒரு படைப்பாளியின் தீராத வேட்கை என்றே நாம் காண வேண்டியிருக்கிறது. அவ்வாறு எழுந்த அறிவுணர்வின் வெளிப்பாடாகவே கிம் படைப்புகள் நம் முன் காட்சிப்படுத்தப்படுகின்றன என நாம் உறுதியாக சொல்லலாம்.

‘மோசமான ஆள்’ படம் விபச்சாரிகளை விற்பனைக்குக் கொண்டு தள்ளும், சிக்கலான மனநிலையை உடைய ஒரு ‘மாமா’ இளைஞனைப் பற்றிய படம். யதார்த்தமான காதலர்களை கொடூரமாக தாக்கி அப்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்று பின் அவளையே முதலீடாகக் கொண்டு வாழும் அவனது முடிவற்ற வாழ்வைப் பற்றிய அப்படம் வன்முறை மற்றும் மனித இருப்பு பற்றிய யாதொரும் கேள்வியற்ற திறந்த படம். ஏனெனில் எல்லா தத்துவங்களும் கையற்றுப் போன ஒரு வாழ்தலில் இருந்து உருவாகும் கதாபாத்திரம் தான் வாழ நேர்ந்த சமூக வெளியை மௌனமாக கடந்து செல்வதை காட்சிப்படுத்துவதன் வாயிலாக அவ்வாறான வாழ்வை கையளித்த சமூக வெளியின் மீது தனது படைப்புக் கேள்வியை முன்வைக்கிறான் படைப்பாளி என்றே நாம் கருதலாம். எங்காவது ரட்சிப்போ, விடுவிப்போ நேர்ந்துவிடும் என்ற பார்வையாளனின் தவிப்பை உடைத்து நொறுக்கி, அவலமாக காட்சிப்படுத்தி விடுகிற படைப்பே அதன் கலைத் தன்மையாக மாற்றம் அடைகிறது.

‘மோசமான ஆள்’ இவ்வாறான உணர்வை நம்முள் கிளர்த்துகிறது என்றால் ‘3 அயர்ன்’ படமோ ஒரு மொழியற்ற காதல் உணர்வின் உள்ளார்ந்த பரவசத்தை கிளர்த்தி விடுகிறது. படத்தின் எந்தப் பகுதியிலும் பேசிவிடாத அந்த மைய ஜோடிகளின் மௌனக் கிளர்ச்சி இறுதிக் காட்சியில் இருவரும் இணைகிற போது நம்முள் கிளர்த்துவது தனி மனித உணர்வில் உருவாகிற எளிய காதல் என்பது விரிந்து மனித இருப்பையே கவர்ந்து கொள்கிற இயற்கையின் பெருங்காதலாய் நம்முள் விரிகிறது. அவ்வாறான புனிதக் காதலை தனது காட்சிகளின் நேர்த்தியான தொகுத்தலின் வழியாகவே பிடித்து விடுகிற புதிர் முடிச்சு தான் கிம் படைப்பாளுமையின் தனித்திறனாகும். யாதொரு பகுதியிலும் படைப்பாளியின் நேரடியான தலையீடும் இல்லாமல் படைப்பின் பேரவகையில் தன்னைத் தானே கரைத்துக் கொள்கிற மந்திர வித்தைகாரனாய் படைப்பை அதன் உச்ச சாத்தியம் வரை நடத்திச் செல்கிற தன்மையுடையது கிம்மின் படைப்புகள்.

‘மோசமான ஆள்’ படம் நேரடிப் பார்வையில் அது வன்முறை மற்றும் பாலியலைப் பேசுவதாகக் காணப்பட்டாலும் அது அடி ஆழத்தில் மனித மனதின் உணர்வுகளையே பேச முயல்கிறது. மேலும் ஆஸ்தரிய ஓவியக் கலைஞனான யுகான் சீலேயின் பால் உணர்வு ஓவியங்களையும், அதன் வண்ணங்களின் தாக்கத்தினாலும் தான் அப்படத்தை உருவாக்குவதற்கான உந்துதலைப் பெற்றதாக கூறுகிறார் கிம். மேலும் உண்மை பற்றிய தேடல் என்பது மனித மனத்தின் அழுக்கடைந்த உணர்வுகளின் வாயிலாகவும், பாவங்களின் வாயிலாகவும் கண்டறிய முயலும் ஒரு முயற்சி என்கிறார் கிம்.

2002ல் உருவாக்கிய அவரது அடுத்த படம் ‘கடற் படை’ (The Coast Guard). இதுவும் வன்முறையின் கொடூர அழகியலை அதன் அறியாமையிலிருந்தும், பைத்தியகாரத்தனத்திலும் பெற முயல்கிற அதே வேளையில், ராணுவத்தின் ஆயுத வன்முறையின் மூடுண்ட தன்மைகளையும், குடிமை வாழ்வில் அதன் தாக்குதல்களையும், மனித பாத்திரத்தின் வன்முறை செயல்பாடுகளையும், பொது வாழ்வின் மறதியுற்ற பொய்மைகளையும் அதன் நேரடியானத் தன்மையுடன் வெளிப்படுத்தியது. இவ்வாறான யதேச்சையான வெளிப்பாட்டுத் தன்மையும், வன்மமும் ஒரு படைப்பாளியின் தேக்க நிலையை சுட்டிக்காட்டுகிறது என்பதான விமர்சனங்கள் எழத் துவங்கின வேளையில் அதனை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார்.

தொடர்ந்து 2003ல் “தான் தனது வசந்தம், கோடை…” படத்தை வெளியிட்டதும் விமர்சகர்களின் அனைத்து அளவுகோல்களும் தகர்ந்தது. கவித்துவத்துடன் முழு முற்றான ‘நிர்வாணா’வை நோக்கிய நகர்வாகத்தான் படைப்புகள் எழுச்சிப் பெற்றன என்பதை படைப்புலகம் கண்டுகொண்டது. ஒரு முதிய துறவியிடம் யாருமற்ற இடத்தில் வளர நேர்கிற ஒரு மனிதனின் வாழ்வியல் முழு நிர்வாணாவை நோக்கிய பயணத்தில் மனித தடத்தில் சந்திக்க நேர்கிற வன்முறையை அதன் அறத் தளத்தில் நிறுத்தி உள்ளார்ந்த விசாரணையைத் தொடங்கிய படைப்பாக மிளிர்ந்தது.

தனது ‘சமாரிட்டன் கேர்ள்’ படைப்புக்காக 2004ம் ஆண்டில் சிறந்த இயக்குநருக்கான விருதை பெர்லின் திரை விழாவில் வென்றார் கிம். தொடர்ச்சியாக அதே ஆண்டில் ‘3 அயர்ன்’ என்கிற கவித்துவ படைப்புக்காக சிறந்த இயக்குநர் விருது வெனிசில் அவருக்கு வழங்கப்பட்டது. அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட ‘3 அயர்ன்’ இழக்கப்பட்ட ஆன்மாக்களின் கண்டுகொள்ளப்படாத மனதின், ஆழமான ரகசியங்களை கொண்டியங்கும் மனித இருப்பின் காதலை கவித்துவமாக பேசிய படம் என்று அனைவராலும் பாராட்டப் பெற்றது. அவரது ‘வசந்தம், கோடை’ படம் மேற்கத்திய மனதின் கவித்துவ மௌனமாக அனைவரையும் ஈர்த்துக் கொண்ட படைப்பாகும்.

2005 வெளிவந்த ‘தி போவ்’ (The Bow) என்ற படம் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு அனைவரது கவனைத்தையும் ஈர்த்த படைப்பாகும். இந்தப் படத்தைக் குறித்து நாம் அவதானிக்கும் போது அவர் தனது படைப்பாக்க செயல்பாடு வழியாக தனது சமூகம் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த, மனித வாழ்வு சார்ந்த சுயேச்சையான சிந்தனாமுறையைக் கண்டு கொண்டதன் வாயிலாக புதிய தளத்திற்கு தனது படைப்பாக்க மனத்தை நகர்த்தியிருப்பதையும் நாம் காண முடியும். அவரது ஆரம்பகால படங்களான மோசமான ஆள், கடற்படை போன்ற படைப்புகள் வாழ்வின் இருத்தலை அப்பட்டமாக கச்சாவாக காட்ட முயன்ற நேரடி வெளிப்பாட்டு முறையிலிருந்து ‘வசந்தம், வில்’ படம் வாயிலாக ஒரு குறியீட்டுத்தளத்தை வந்தடைந்திருப்பதையும் கடந்த பத்தாண்டுகளாக அவரது படைப்பு மனத்தின் பயணத்தையும் உணர முடிகிறது.

‘வில்’ படம் பாலியல், மத ஜாதீகம், சமூக ஆண்வெளி குறித்த முழுமையான குறியீட்டுத் தளத்தில் தனது சமூகம் சார்ந்த பௌத்த மத பெருவெளியின் வழியாக உருவான ஆண் மன இருப்பையும் வேட்கையையும் அதன் குறியீட்டுத் தளத்திற்கு உயர்த்தி தனக்கே உரித்தான தனித்துவமான படைப்பு வெளிப்பாட்டு முறையினூடாக பேச முயன்ற படமாக திகழ்கிறது.

அவரது படைப்பு மட்டுமின்றி அவரது வாழ்வும் ஒரு தீராத மனித அலைவின் சமரசமற்ற தேடலின் விசாரணைக் களமாகவும், அறவுணர்வின் முழு நிர்வாணாவை நோக்கிய பயணமாகவும், கிழக்கத்திய ஆன்மீக மனதின் அழுக்குகளிலிருந்தும், விலக்கப்பட்ட தீமைகளில் இருந்து உண்மையை தேடிய ஒரு கலை உபாசனையாகவும் விளங்குகிறது. மேலும் அவரது படைப்புகள் நம்முன் வைக்கும் தரிசனங்களாய் அனைத்து விலக்கப்பட்ட மனதின் குப்பைகளையும், தீமைகளையும், வன்முறைகளையும் தனது பிராந்திய வடிவத்தின் வழியாக யாதொரு கலை சமரசமும் இன்றி உண்மையை அதன் ரத்தப் பிசுக்கோடு பேச வேண்டும் என்பதாகும்.

கலையின் வாயிலாக வாழ்வின் முடிவற்ற உண்மையை கண்டடைவதற்கான ஒரு சிறிய முயற்சியாக அதுவே அமையும். ஒரு சிறிய முயற்சியாக மட்டுமே. ஏனெனில் உண்மை அதன் சாரத்திலிருந்தும், இருப்பிலிருந்தும் பிரம்மாண்டமானதும் அதே நேரத்தில் எளிமையானதுமாகும். அதைக் கண்டடைவதே ஒரு கலைஞனின் தீராத வேட்கையாகவும் இருக்கக் கூடும். முடிவில் கிம்மின் படைப்புகள் நமக்கு தருவது அப்படைப்புகளின் மீதான ஒரு வெறுப்பை அல்ல முடிவற்ற ஒரு நேசத்தை. ஆனால் ஒரு போதும் புறக்கணிக்க முடியாத ஒரு உறவை.

LINK – http://www.koreanfilm.org/kimkiduk.html

Filmography

Dream (2008)
Breath (2007)
Time (2006)
The Bow (2005)
3-Iron (2004)
Samaritan Girl (2004)
Spring, Summer, Fall, Winter… and Spring (2003)
The Coast Guard (2002)
Bad Guy (2002)
Address Unknown (2001)
Real Fiction (2000)
The Isle (2000)
Birdcage Inn (1998)
Wild Animals (1997)
Crocodile (1996)

இலங்கை சிங்கள சினிமாவின் வரலாறு


 

 
fullpicture10

 1901ம் ஆண்டில் போயர் சிறைச்சாலையில் போர்க் கைதிகளுக்குத் திரையிடப்பட்ட ஒரு மௌன செய்திச் சுருளே இலங்கையில் (1972 வரை சிலோன் என்றழைக்கப்பட்ட) திரையிடப்பட்ட முதல் திரைப்படமாகும். 1903ல் கொழும்பில் முதல் திரையரங்கம் திறக்கப்பட்டது. 1945ல் ஆசியாவின் முதல் திரைப்படச் சங்கமாகக் கருதப்படும் கொழும்பு திரைப்படச் சங்கம் தொடங்கப்பட்டது. இலங்கை திரைப்படத்
தயாரிப்பின் வரலாற்றில் மௌனப் படக்காலம் என்ற ஒன்று இல்லை.

1947ல் சிங்கள மொழி உரையாடலோடு தயாரிக்கப்பட்ட கடவுனு பொறன்துவ (உடைந்த நம்பிக்கை) இலங்கையின் முதல் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது தென்னிந்தியாவின் சித்ரகலா மூவிடோன் என்ற திரைநிறுவனத்திற்காக எஸ்.எம். நாயகம் என்ற ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட நடிகர்-நடிகையரைக் கொண்டு ஏராளமான சிங்கள மொழி திரைப்படங்கள் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இத்திரைப்படங்கள் இந்திய இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டதால் இப்படங்களின் மனோநிலை, உருவாக்கம்
மற்றும் வெளிப்பாட்டில் தென்னிந்தியாவின் பாதிப்புகளைக் கொண்டிருந்தன. கதை அமைப்பு மற்றும் நடிப்பு வெளிப்பாட்டு முகைள் இரண்டிலும் தென்னிந்தியத் திரைப்படங்களின்
நேரடியான மறுபிரதிகளாகவே பல திரைப்படங்கள் இருந்தன. 1940களின் பிற்பகுதியில்தான் திரைப்பட வர்த்தக தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்ட மூன்று பிரதான நிறுவனங்கள், இலங்கை திரையரங்குகள், இலங்கை படப்பிடிப்பு நிலையங்கள் மற்றும் இலங்கையின் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுயமான இலங்கை திரைப்படத் தொழிற்சாலை உருவானது. இதன் பின் இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களின் ரசிகர்களாக இருந்தவர்கள் சிங்களத் திரைப்படங்களின் ரசிகர்களாக மாறத் துவங்கினர்.

1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததும் அதையட்டி
ஏற்பட்ட தேசிய எழுச்சியும் இந்தியர்களின் ஆளுமையிலிருந்து சிங்களத் திரைப்படஙகள் உருவாக வழிகோலின. 1951ல் சிறீசேனா விமலவீரா என்பவரால் தொடங்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) தயாரிக்கப்பட்ட பொடி புத்தா (இளையமகன்) என்ற திரைப்படம் இலங்கையின் சுயமான சினிமா பிறப்பதற்கு அடித்தளமிட்டது.

இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்து இருந்தன.

திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும் பங்குபற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன.

சிறீசேனா விமலவீரா 1951இல் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்தை உருவாக்கினார். சிறீசேனா விமலவீராவின் தயாரிப்பில் 25.11.1955இல் வெளியான பொடிபுத்தா (இளையமகன்) என்ற சிங்களத் திரைப்படம் அவரால் உருவாக்கப்பட்ட நவஜீவன் படப்பிடிப்பு கலையகத்திலேயே வைத்து தயாரிக்கப் பட்டது. இலங்கையில் வெளியான 32வது சிங்களத் திரைப்படமான பொடிபுத்தா என்ற இந்தத் திரைப்படமே
பின்னாளில் இலங்கையின் பராம்பரியங்களைக் கூறவல்ல திரைப்படங்கள் உருவாக ஆதாரமாக
இருந்திருக்கிறது.

சிறீசேனா விமலவீரா கலையகத்தை உருவாக்கி சுயமான சிங்களத்
திரைப்படங்களை உருவாக வழி சமைத்துத் தர இன்னும் ஒரு படி மேலே போய் வெளிப்புறங்களில் படம்பிடித்து இயற்கையான காட்சிகள; ஒளிகளுடன் யதார்த்தமான சிங்களப் படங்கள் உருவாக காரணமாக இருந்தவர் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள்.
இவ்வாறு வெளிப்புறப் படப்பிடிப்புக்களுடன் டொக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரீஸ் அவர்கள் உருவாக்கிய ரேகாவா (விதியின் கோடு) 28.12. 1956இல் வெளியானது.

2307160383_d1ea4ec413

தங்களது சுற்றாடல்களையும் பாரம்பரியம் பண்பாடுகளையும் திரையில் பார்க்க முடிந்ததால் இந்தத் திரைப்படம் சிங்களவர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. மேலும் கேன்ஸ்
திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் உலகலாவிய அளவில் பலரது பாராட்டுக்களைப் பெற்றதுடன் சிங்களத் திரைப்படத்துறைக்கு சினிமா உலகில் ஒரு நல்ல
இடத்தையும் பெற்றுத் தந்தது. இவையெல்லாம் சேர்ந்து இலங்கையில் சிங்களத் திரைப்படத் துறை வளர பெரிதும் காரணங்களாகின.

முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் 21.01.1947இல் திரையிடப் பட்டிருக்கிறது. கடவுணு பொரன்டுவ (உடைந்த
வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் மேற் குறிப்பிட்டதன்படி தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இங்கு முத்துக்குமாரசாமி என்ற இந்த இசைமேதையைப் பற்றிக்
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவர் பின்னாளில் இலங்கையில் இசைத்துறையில் பெரும் கடமையாற்றியிருக்கின்றார். இசைத்துறை வட்டத்தில் முத்துக்குமாரசாமி மாஸ்ரர் என்றே
இவர் அழைக்கப்பட்டார். திரைப்படத்துறை மட்டுமல்லாது இலங்கை வானொலியிலும் இவரது பணி நிறைந்திருக்கிறது.

கடவுணு பொரன்டுவ திரைப்படத்தை சித்திர கலா மூவிரோன்
என்ற நிறுவனத்தின் பெயரில் தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த்
திரைப்படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந்தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்கு பணியாற்றி
இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம். சுதந்திரம் பெற்ற புதிதில்
மக்களுக்கு அதைப் பற்றி அறிவுறுத்த செய்திப் படங்களையும் ஆவணப் படங்களையும் தயாரிப்பதற்கென 1948ல் அரசு திரைப்படக் குழு நிறுவப்பட்டது. குறிப்பிடத் தகுந்த அவற்றின் உண்மையான படைப்பாக்கத் திறனுக்காகவும், உயர்ந்த திரைப்பட உருவாக்கத்
தரத்திற்காகவும் பல அரசுப் படங்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றன.

எதிர்காலத்தில் இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர்கள் பலர் உருவாகி வளர்ந்த நாற்றங்காலாக புகுரு இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அரசு திரைப்படக்குழு அரசின் நிரந்தர பிரச்சாரக் கருவியாக சுருக்கிய காரணத்தினால் பிற்காலங்களில் அதன் கலைத்தரம் தாழ்ந்து போனது.

அரசு திரைப்படக் குழுவின் வழிவந்த பிரபல திரைப்பட இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பெரீஸின் முதல் திரைப்படமான
‘ரேகாவா’ (விதியின் கோடுஃ1956) சிங்கள சினிமாவின் முகத்தை நிரந்தரமாக மாற்றியது. தொழில்முறை அல்லாத தேர்ச்சியற்ற கலைஞர்களையும் ஸ்டூடியோ அல்லாத வெளிப்புறக்களையும்
படப்பிடிப்பில் இயற்கை ஒளியையும் அவர் பயன்படுத்தினார்.

முதல்முறையாக மக்களும் அவர்களின் பண்பாடு மற்றும் சுற்றுச்சு10ழல் ஆகியவையும் யதார்த்தமாகத் திரையில் சித்தரிக்கப்பட்டது. இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில்
திரையிடப்பட்டு அதன் கவித்து மற்றும் நேர்மையான கதையாடலுக்காக சர்வதேச விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

லெஸ்டரின் அடுத்த படமான ‘கம்பெரலிய’ (கிராம பிறழ்வு,1963) என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் வர்த்தக ரீதியாகவும்
விமர்சன ரிதீயாகவும் உலக அளவில் வெற்றி பெற்றது. வியாபார சினிமாவின் ஒரு மைல்கல்லாகப் பரிசீலிக்கப்பட்ட இத்திரைப்படம் இலங்கை சிங்கள சினிமா தெளிவான பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகோலியது. 1965ல் புதுதில்லியில் நடைபெற்ற 3வது சர்வதேச
திரைப்பட விழாவில் இத்திரைப்படம் தங்கமயில் விருது பெற்றது.

1960களில் ‘கம்பெரலிய’ குறிப்பிடத்தகுந்த படங்களைத் தயாரிக்க ஏனைய திரைப்படக் கர்த்தாக்களுக்கான புதிய பாதையையும் தரத்தையும் நிர்ணயம் செய்தது. அதற்கான சில உதாரணங்கள்… தசக் சிதுவிலி (பு.னு.டு.பெரோ 1965) பரசுது மல் (காமினி பொன்சேகா
1966) சத் சமுதுரா (ஸ்ரீ குணசிங்கே 1966) மற்றும் ஹண்டே கதாவா ( (சுகந்தபால செனரத் யாப்பா 1969) இப்படியான சினிமா போக்குகளை கம்பெரலிய திரைப்படம் உருவாக்கியது.

1970ல் யைமப்படுத்தப்பட்ட திட்டத்தை முன்மொழிந்த சோசலிசக் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய இலங்கை சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது தேசிய திரைப்படக் கழகம் என்று அழைக்கப்படும் அரசு திரைப்படக் கழகத்தின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் திரைப்படத்துறை கொண்டுவரப்பட்டு தேசியமயமாக்கப்பட்டது. ஓர் சுயமான இலங்கை திரைப்படத் துறையாக ஒழுங்கமைப்பதும்இ பாதுகாப்பதும் வளர்ப்பதுமே
ஆரம்ப கால லட்சியமாக இருந்த அதன் மூலம் பதினைந்து வருடங்களில் தரமான திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிகளிலும்இ படைப்பாக்கத் திறன்களை வளர்ப்பதிலும் தனது இலக்கை எட்டியது. ஆனால் 1980களின் இறுதியில் அதன் பரந்தஇ நீண்டகால விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் முழுமையடையவில்லை. திரைப்பட விநியோகத்தில் வரைமுறையற்று ஈடுபட்டது போன்ற சில காரணங்களினால் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் ஒட்டுமொத்த ஏகபோகமாக இருந்த சிங்கள திரைப்படத்துறை இலங்கை சினிமாவின் அழிவை துரிதப்படுத்தியது.

80களின் உள்நாட்டு இனவன்முறைகள் அழிவினால் சிங்கள திரைப்படத்துறை அழிவை நோக்கி நகர்ந்த அதே தருணத்தில் 83ல் வெடித்த ஜூலை இனகலவரத்தினால் முகிழ்ந்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் திரைப்படத் துறையும் முற்றாக அழிந்து போனது. தமிழ் -சிங்கள உறவின் பின்னலைப் போலவே இலங்கை தமிழ் திரைப்படத்துறையும் சிங்கள-தமிழ் கலைஞர்களின் ஒன்றிணைவோடு செயல்பட்டதை இங்கே நினைவு படுத்தவேண்டும்.

இப்படியான உள்நாட்டு அரசியல் முரண்களில் நசுவுற்ற திரைப்படத்துறை பின் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் வழி தன்னை நிலை நிறுத்த போராடியது.ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய முன்னணிப் படங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் காலமாகவும்இ அழகியல் வடிவமாகவும் தொழிலாகவும் சினிமாவைப் பற்றிய விவாதம் தீவிரமாக எழுத்து, சோதனை முயற்சி ஆகியன நிகழ்ந்த ஓர் முக்கியமான காலகட்டமாகவும் 19709களின் பத்தாண்டுகள்
இருந்தன.

இக்கால சு10ழலில் புதிய போக்குகள் (பாணிகள்) உருவாயின. வளர்ந்து வந்த சினிமா மொழியின் படைப்பாக்க சாத்தியப்பாடுகளையும், நடைமுறையையும்
புரிந்துக்கொண்ட பல எழுத்தாளர்களும்இ இலக்கியவாதிகளும் குறிப்பிடத் தகுந்த திரைப்படங்களைத் தயாரித்தனர்.

மஹாகாம சேகர, ரஞ்சித் லால், னு.டீ.
நிஹல்சிங்கே, மற்றும் தர்மசேன பதிராஜா ஆகியோர் இத்தகைய இயக்குனர்களில் சிலர்.

மூன்றாம் சினிமா என்ற கருத்தாக்கம், சமூக யதார்த்தவாதம் என்ற பாணி இரண்டையும் உள்ளடக்கிய மாற்று திரைப்படத் தயாரிப்பு தொழில்நுட்பத்தை இலங்கை திரைப்பட ரசிகர்களுக்கு அஹாஸ் கவ்வா (1974) பேம்பரு அவித் (1978) போன்ற
திரைப்படங்கள் ஒருசேர அறிமுகப்படுத்தின.

மேலும் 1970களின் விவாதத்திற்குரிய திரைப்பட கர்த்தாக்களாக இலங்கை சினிமாவின் இன்றைய பெரும்பாலான இயக்குனர்களால்
பரிசீலிக்கப்படுபவர்கள் ர்.னு. பிரேமரத்னே (சிகுருலியா 1975) வசந்த ஒபயசேகர (வெஸ்கத்தோ 1970) மற்றும் சுமித்ரா பீரீஸ் (கேஹீனு லமாய் 1978) ஆகியோரே.

பெண்களை வலிமையான கதாபாத்திரங்களாகவும்இ நேர்மையாகவும்இ சித்தரித்தற்காக சுமித்ரா பீரீஸ் என்ற பெண் இயக்குனரின் திரைப்படங்கள் முன்னோடியாகக்
கருதப்படுகின்றன.

1980களில் பிரபலமான இயக்குனர்கள் தங்களின் படைப்புப்
பாணியில் நிலை நிறுத்திக் கொண்டிருந்தபொழுதுஇ இப்பத்தாண்டுகளில் தரமான இரு இயக்குனர்களாக தர்மசிறி பண்டாரநாயகேயும்இ திஸ்ஸா அபேசேகராவும் உருவாகி வளர்ந்தனர்.

லேட்டரின் விற்காயா (1987) இப்பத்தாண்டுகளின் விவாதத்திற்குரிய திரைப்படம் எனலாம். 1980களின் இறுதியிலும் 1990களிலும் தேசிய திரைப்படக் கழகத்தின் கட்டுப்பாடான விநியோகக் கொள்கைகளாலும் ஏராளமான தரம் தாழ்ந்த திரைப்படங்களைத
தயாரித்தாலும் இலங்கை திரைப்படத்துறை அழிவை சந்திக்க நேர்ந்தது. திரைப்படத் தயாரிப்பில் முதலீடு செய்வது குறைந்து போனது. தொழில்நுட்பக் கலைஞர்களும்,
நடிகர்களும் மிகவும் லாபகரமான தொழில் கூடாரமாக இருந்த தொலைக்காட்சி நாடகங்களில் பணியாற்ற நுழைந்தனர். சிங்கள தொலைக்காட்சி தொடர்களும் நல்ல தரமானதொரு படைப்பாக்கமாக
இக்கால கட்டங்களில் வளர்ந்ததை குறிப்பிட வேண்டும்.

இருந்த போதும் 1990களில் பிரசன்ன விதானகே, சுதத்த தேவப்ரியா, பூதி கீர்த்திசேனா, ஜேக்கன் அந்தோனி, மோகன்
நியாஸ்இ லிண்டன் சோமகே, அசோகா ஹண்டகாமா, உதயகாந்தா வர்ணசு10ர்யா மற்றும் சோமரத்னே டிஸ்ஸநாயகே போன்ற சில சிறந்த இளைய தலைமுறை இயக்குனர்கள் சிங்கள திரைப்பட துறையில் உருவாகினார்கள்.

இவர்களில் ‘பிரசன்ன விதானகே’ தனது விருது பெற்ற
திரைப்படங்களான பவரு வால்லலு (சுவருக்குள் 1977) மற்றும் புரகண்ட கலுவர (ஒரு புவர்ணமியின் மரணம் 1997) போன்றவற்றிக்காக சர்வதேச அளவில் மிகுந்த பாராட்டுக்களைப்
பெற்றுள்ளனர். இதே போல் அசோகா ஹதகாமா தனது வுர்ஐளு ஐளு ஆலு ஆழுழுN என்கிற சிங்கள
சினிமாவிற்காக உள்நாட்டில் சர்சைக்குரிய இயக்குனராகவும், பௌத்த பேரினவாத போக்கை எதிர்க்கும் இயக்குனராக இலங்கை சிங்கள சினிமாவில் கருதப்படும் சிறப்பானதொரு
இயக்குனராக கருதப்படுகிறார்.

தேசிய திரைப்படக் கழகத்தின் ஏகபோகக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு ஜனவரி 2000ல் திரைப்படத்துறை
தாராளமயமாக்கப்பட்டது. இருந்த போதும் தேசிய திரைப்படக் கழகம் அதன் வழக்கமான செயல்பாட்டில் இயங்கி வருகிறது. திரைப்பட தயாரிப்பாளர்களுக்காக பல்வேறு வரி
சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டு திரைப்படங்களை இறக்குமதி மற்றும் விநியோகம் செய்து கொள்ள தனியார் துறைக்கும் திறந்த அனுமதி வழங்கப்பட்டது.

ஏனைய திரைப்படத்துறை தயாரிப்பாளர்களின் மத்தியில் ஒரு கூடுதல் முன் முயற்சி மற்றும் போட்டி மனப்பான்மையில் இயங்கும் தேசிய திரைப்படக்கழகம் இலங்கை சிங்கள
சினிமாவுக்கான ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்தாலும் இலங்கை திரை வரலாற்றில் தனி இணையாக வளர்ந்த இலங்கை தமிழ் சினிமா வளர்வதற்கு தேசிய திரைப்பட கழகம் எவ்விதமான முயற்சியும் செய்யாதது வருந்த செய்கின்றது.

சிங்கள சினிமாவுக்கு இணையாக தனி தன்மையோடு வளர்த்தெடுக்க பட வேண்டிய ஈழ சினிமாவுக்கு இலங்கை அரச எவ்விதமான அக்கறையும் காட்டாதது இன முரண்பாட்டின் வெளிப்பாடாகவே கருத வேண்டியிருக்கின்றது.

இன்றைய புதிய இலங்கை அரசியலில் சிங்கள சினிமாவுக்கான
அத்தனை வேர் தன்மையோடும் தமிழ் சினிமாவும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதே இலங்கை கலைஞர்களின் ஒட்டுமொத்த அபிலாசையாகும். அது மலர இருக்கும் புதிய ஈழ
அரசியலின் கவன மையத்தில் ஒரு அனுசரணையாக கருதப்பட்டாலே இலங்கையின் சினிமா இன்னும்
பல அரிய சாதனைகளை நிகழ்த்தும் களமாக மலரும்.

தமிழ் சினிமாக் குப்பைக்கு மாற்றீடு:திரைப்பட சங்களின் இயக்கம்


திரைப்பட சங்களின் இயக்கம்                       

நல்ல சினிமா பற்றிய பார்வை நம் தமிழ் பார்வையாளனுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளது. அதற்கான முழுமையான காரணம், குப்பைக்கூளமாக- தமிழ் சிந்தனைப் பரப்பில் குவிக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான வருகையும், நல்ல சினிமாவைத் திட்டமிட்டுப் பொதுவான வெளிகளில் மறுப்பதற்கான சூழ்ச்சியைகளை தமிழ் சினிமாவின் வியாபாரிகள் செய்து வருவதாகும். தமிழ்நாட்டின் சூழலை விட்டுவிட்டு நம்மவர்களின் சினிமாபற்றிய புரிதலைப்  பேச முனைந்தாலும் ப10ஜ்யம்தான் மிஞ்சுகின்றது. தமிழ் நாட்டில் கல்வியறிவு, எழுத்தறிவு மிகவும் குறைவு: ஆனால் நம் நாட்டின் கல்வியறிவு, எழுத்தறிவு 90 சதவீதமாக கணிக்கப்பட்டாலும், நல்ல சினிமா அறிவின் சராசரி வீதம் மிகவும் குறைவுதான், நம்மவர்களின் மனது, இந்தத் தமிழ்க் கழிசடை சினிமாதான் சினிமா என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் நல்ல சினிமா கலாச்சாரத்தை நோக்கி இன்னும் நகராமல், இந்தத் தமிழக சினிமாவின் மாயைக்குள் அகப்பட்டு நம் கலாசார அடையாள வேர்களை இழக்கின்றோம்.

உலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களை நாம் ஏன் நம் தமிழ்ச் சமூகத்திற்கு முன் கொண்டுசெல்லக்கூடாது? பொதுவாக நம்மவர்களின் சினிமா நினைவு என்பது, தமிழக சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் நிலையிலிருந்து இன்னும் வளர்ச்சியடையாமலேயே இருக்கின்றது. தமிழ் சினிமா என்பது சினிமாவே அல்ல: அது களியாட்ட விருந்தின் ஒரு கேளிக்கைப்பொருள் மட்டும் தான். அது முழுக்க முழுக்க வியாபாரச் சூத்திரம் கொண்ட  அபட்டமான பாசாங்குகள் நிரம்பிய  படம் பிடிக்கப்பட்ட நாடகம்தான். உள்ளடக்கம், உருவச் சிறப்புமற்ற வெறும் சக்கையான வடிவம்தான் தமிழ் சினிமா. நாம் உள்ளுணர்வுகளையோ படைப்புணர்வின் ஆற்றுகையையோ, நினைவுப்படுத்தவும் படைப்புணர்வின் ஆனுபவத்திற்கான அந்தரங்க உரையாடலை நிகழ்த்தவும் தகுதிகள் ஏதுமற்ற வெறும் சக்கையான குப்பைகள்தான. வியாபார சூதாடிகளின் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கதையாடல்களினால் நாம் நம்மைத்தான் இழந்து கொண்டிருக்கின்றோம். More

தமிழ்த் திரைப்பட விமர்சனம் -தொடர்வதற்கான ஒரு உரையாடல்:


 

“எல்லா சினிமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது”              
 ஜான் ஆபிரகாம்

தலித் சினிமா உருவாக்கம் என்ற அடிப்படையில் தலித் விமர்சன அனுகுமுறையை  தமிழ் சினிமாவின் மேல் நிகழ்த்தப்பட வேண்டியதன் தேவை தற்சமயம் உணரப் பட்டுள்ளது. இந்த சமூக அமைப்பு செறித்து உற்கிரகிக்க முடியாதவையும் அதன் தேவைகளுக்கு அந்நியமானவை யும்மான திரைப்படங்களை தயாரித்தல் அல்லது இந்த அமைப்பை நேரடியாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்து சண்டை போடும் திரைப்படங்களை தயாரித்தல். இந்த இரண்டில் ஒரு தேவையை கட்டாயம் நிறைவேற்றினால் மட்டுமே. இந்த சமூக அமைப்பால் வழங்கப்படுகின்ற வைகளிலிருந்து வேறுபடுகின்ற மெய்யான மாற்றுத் திரைப்படங்கள் சாத்தியமாகும். இதுரை நிகழ்த்தப்பட்ட விமர்சனங்களால் தமிழ் சினிமா உலகம் எவ்வித சலணமும் இல்லாமல் பிரமாண்ட டினோஸர் தனமான தன் சினிமா பற்றியதொரு கேள்வியோ பொருட்படுத்துதலோ இல்லாமல் மனநசிவான வியாபார குப்பைகளை உற்பத்தி செய்த படிதான் இருக்கின்றது. இதுவரை எழுதப்பட்ட விமர்சனங்களால் சாதீய விடுதலைக்கான முன்னகர்வில் ஒரு பயணம் இல்லை. விமர்சனங்கள் இச்சமூகத்தில் பிரதான பிரச்சினையின் “சாதீயம்” பற்றிய அரசியல் சமூக அடிப்படை இல்லாததனால் தான் இப்பிரமாண்ட தமிழ் சினிமா நிறுவனங்கள் றுவுஊ வைப்போல் சிதறடிக்கப்படாமல் இன்னும் இருக்கின்றன. வணிக சினிமாவிற்கு விளம்பரமும், காசும் வாங்கி கொண்டு ஆனந்த விகடன் – குமுதம் போன்ற உள்ள10ர் வியாபார பத்திரிகைகள் எழுதும் விமர்சனங்கள் பகட்டு விளம்பரங்களாகவே இருக்கின்றது. இருந்தும் வருகின்றது. பார்பனிய – உயர்சாதிய கருத்தியல் உள்ளடக்கங்களை ஆதரமாக கொண்ட சில பத்திரிகைகளின் அறிவு ஜீவிதமான விமர்சனங்களோ பேசுகின்ற அறைகளை தாண்டி பொது மக்களிடமும் போகவில்லை இந்நிறுவன குண்டிகளில் தார் குச்சிகளாக குற்றவுமில்லை. அதற்கு மாறாக பார்ப்பன – உயர்சாதிய அறிவு ஜீவிகளாக கருதப்பட்டவர்களோ இந்நிறுவனங்களில் ஜோல் ஒழுக தங்கை அடகு வைத்துக்கொண்டு மேலும் புதிய தொழிநுட்ப வழிகளை கையாண்டு, பார்பனிய நாட்டாமை தனம் வளர தண்டனிட்டார்கள். ஓரளவு பொது மக்களின் மீதான கருணையோடு பல்வேறு இடதுசாரிய இதழ்களில் எழுதப்பட்ட விமர்சனங்கள் மரபு ரீதியான மார்க்சீய பார்வையை தாண்ட முடியாமல், நமது சூழலில் பிரதான பதற்றமான பிரச்சினையான சாதிய அடிப்படையில் அணுகாததால் அவை சாதிய அடுக்குகளின் கிளைநிறுவனமான சினிமாவை வழிமையாக விமர்சன ப10ர்வமாக தாக்குவதற்கான பலமற்று உதிர்ந்து விழுந்தன. அதைபோலவே ஐரோப்பிய அறிவு ஜீவிதனமான விமர்சன அனுகுமுறையோ அல்லது உள்நாட்டு முதலாளிய ஊடகங்கள் செய்வதுபோன்ற பார்பனிய முதலாளியதனமான விமர்சன அனுகுமுறைகள் மக்கள் சினிமா உருவாகவோ புரட்சிகர சமூக – சாதிய விடுதலைக்கான சினிமாவை உருவாக்வோ மயிரழகுகூட உதவாது.

இவ்வகை விமர்சனங்கள் பார்பனிய தன்னிலை ஆளுமைகள் படைபாளி சினிமா, சீர்திருத்தவாத சினிமா, திராவிட இயக்கங்கள் (கைகொண்ட சினிமா மாதிரி) போன்றவைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மக்களின் விடுதலைக்கான புரட்சிகர தன்மையை மழுங்கடித்து போலி அழகியால் ரீதியான அதீத உணர்ச்சி பிடித்தவர்களாக மாற்றும் வேலையை செய்கின்றன. எனவே தலித்திய திரைப்பட அணுகுமுறை ஊடாக விமர்சனங்கள் மீதான சமூக புணைவுகளை வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும். இன்றைய சிறு பத்திரிக்கைகள் பார்ப்பார அறிவு ஜீவி கமலின் சூத்துதான் கலை சூத்து என்பதாகவும் அதன்மீதான எதிர்விமர்சன போக்குகளை கையாண்டன் வழியாக கமலின் (மணிரத்தினம் போன்ற) நாயக விம்பங்களை தக்கவைக்க உதவியதோடு வாசக தன்னிலைகளை பார்பனீய சினிமா மதிப்பீட்டு புதைக்குழிக்குள் தள்ளிவிட்டனர். இந்தவிமர்சன மடையர்கள் சினிமாவையும் புரிந்துகொள்ள வில்லை. மக்களையும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களது உண்மையான பிரச்சினைகளின் மீதும் அக்கறையில்லை.  நிறுவனமான சினிமாவை வழிமையாக விமர்சன ப10ர்வமாக தாக்குவதற்கான பலமற்று உதிர்ந்து விழுந்தன. அதைபோலவே ஐரோப்பிய அறிவு ஜீவிதனமான விமர்சன அனுகுமுறையோ அல்லது உள்நாட்டு முதலாளிய ஊடகங்கள் செய்வதுபோன்ற பார்பனிய முதலாளியதனமான விமர்சன அனுகுமுறைகள் மக்கள் சினிமா உருவாகவோ புரட்சிகர சமூக – சாதிய விடுதலைக்கான சினிமாவை உருவாக்வோ மயிரழகுகூட உதவாது.

இவ்வகை விமர்சனங்கள் பார்பனிய தன்னிலை ஆளுமைகள் படைபாளி சினிமா, சீர்திருத்தவாத சினிமா, திராவிட இயக்கங்கள் (கைகொண்ட சினிமா மாதிரி) போன்றவைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மக்களின் விடுதலைக்கான புரட்சிகர தன்மையை மழுங்கடித்து போலி அழகியால் ரீதியான அதீத உணர்ச்சி பிடித்தவர்களாக மாற்றும் வேலையை செய்கின்றன. எனவே தலித்திய திரைப்பட அணுகுமுறை ஊடாக விமர்சனங்கள் மீதான சமூக புணைவுகளை வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும். இன்றைய சிறு பத்திரிக்கைகள் பார்ப்பார அறிவு ஜீவி கமலின் சூத்துதான் கலை சூத்து என்பதாகவும் அதன்மீதான எதிர்விமர்சன போக்குகளை கையாண்டன் வழியாக கமலின் (மணிரத்தினம் போன்ற) நாயக விம்பங்களை தக்கவைக்க உதவியதோடு வாசக தன்னிலைகளை பார்பனீய சினிமா மதிப்பீட்டு புதைக்குழிக்குள் தள்ளிவிட்டனர். இந்தவிமர்சன மடையர்கள் சினிமாவையும் புரிந்துகொள்ள வில்லை. மக்களையும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களது உண்மையான பிரச்சினைகளின் மீதும் அக்கறையில்லை. இவர்களது நோக்கம் பார்கனீய “ஒளிவட்டத்தை” விமர்சனம் செய்வதன் வாயிலாக தங்களை மேலநாட்டு ஐரோப்பிய அறிவு ஜீவிகளாக பிரச்சாரபடுத்திக் கொள்ளுவதுதான். அதன் வழியாகவே மக்களிடமிருந்தும் அந்நியபட்டும் போனார்கள். இவ்விதம் விமர்சனம் செய்த விமர்சனர்கள் யாரும் பிரந்திய தன்மையுடன் கூடிய பிரச்சினைகளின் வழியாக இயங்காத சொகுசான

நடுத்தர மேட்டுக்குடி அறிவு ஜீவிகளாகவே இருகிப் போனார்கள் இவ் இடைவெளியை கரைத்து மக்கள் அரங்குளை நிர்மனிப்பதன் வழியாக மட்டுமே தலித்திய அழகியலோடு கூடிய மக்கள் சினிமாவை உருவாக்குவது சாத்தியம். அதனால் தான் தீவிர தன்மையுடன் கூடிய தலித்திய விமர்சனம் ஒன்றை எழுதப்பட வேண்டியதன் சமூக பின்னணியில் நாம் இருக்கின்றோம். திரைப்படத்தின் அத்தனை ஆதிக்க கூறுகளையும் போட்டுடைப்பதற்கு தலித் விமர்சன பார்வையுடன் கூடிய மாற்று கலாச்சார சிந்தனையுடனேயே நாம் முன்னேற வேண்டி இருக்கிறது.

தலித் திரைப்பட விமர்சன அனுகுமுறை திரைப்பட ஊடகத்தின் எளிய மக்கள் மீதான காட்சி வன்முறை களுக்கெதிரான ஒரு போரியல் ஆகும். பொதுசன புத்தியை புணைவதற்காகவும் புணையப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட ஆதிக்க சினிமா வடிவங்களில் இருக்கும் தலித் மக்கள் பற்றிய மோசனமான சித்தரிப்புகளையும் மேலாதிக்க வடிவங்களையும் நாம் போட்டுடைப்பதோடு, மட்டுமல்லாது பல்வேறுவகையான பிரசாரங்களின் வழியாகவும், உத்திகளின் வழியாகவும், அரங்குகளின் வழியாகவும் மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லவும் வேண்டும்.

இன்று வெகுசன திரைப்படம் பற்றிய தலித் விமர்சன அணுகுமுறை ஒன்றை மக்கள் மத்தியில் நிகழ்த்தும் போது அது தலித் சினிமாவுக்கான குறிப்பிட்ட பொருளாதார திரட்டலையும் கலாச்சார போராட்டத்தையும். கவனத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட முடியாது.
 
பாரப்பனிய ஊடகங்களின் உதவியுடன் வெளிவரும் மனித சினிமாவின்  திட்டமிட்டு ஏற்படுத்தும் தலித்திய கூறுகளை இனங்காணவும், கதாநாயக விம்பங்களின் அரசியலை தலித்திய பார்வையுடன் கட்டவில்க்கவும் அத்தனை வகையான சினிமாவுக்குள்ளும் இருக்கும் புனிதங்களை போட்டுடைக்க முனைய வேண்டும் எவ்விதமான “அறிவுஜீவிகளின்” வழிகாட்டுதலுமின்றி சினிமாக்களை நேரடியாக ரசிக்கும் உழைக்கும் மக்களிடம் சினிமாக்களை பற்றிய தலித்திய சினிமா விமர்சன சொல்லாடல்களை நேரடியாக கொண்டு செல்வதன் மூலம் சமூக விடுதலை க்கான சிந்தனையை து}ண்டமுடியும். தொடர்ந்து தமது மக்களிடம் இவ்விமர்சனங்களை கொண்டு சென்றால் தான் தமிழ் சூழலில் தலித் சினிமாக்களுக்கான சாத்தியங்களை ப்பற்றி நம்பிக்கை கொள்ள முடியும். தலித் சினிமாவை ஆதரவான கருத்து வாக்குவதில் மக்கள் விரோத போக்குகளை, புனித நாயகவிம்ப புணைவுகளை தோலுறிக்க வேண்டும். அதனையும் வெகுசன கருதாக்கத்தின் வழியாகவே நிகழ்த்தப்பட வேண்டும். தமிழில் நமக்கு இருப்பதெல்லாம். வெகுசன வணிக சினிமா மட்டுமே இது தான் மக்களிடம் நேரடியாக தன் ஆதிக்கத்தை தக்க வைத்தப்படி இருக்கின்றது. மாற்று சினிமாவோ, மக்களுக்கான சினிமாவோ உருவாக விடாமலும் தடுத்தப்படி இருப்பதும் இவ்வாதிக்க சினிமாதான் இதுதன் ஆதிக்க வேர்களை பொதுசன ரசனை மட்டத்திலே தக்க வைத்திருக்கின்றது. தன் ஆதிக்க வி-யாபார தந்திரங்களை தக்க வைப்பதும் தொடர்ந்து அதற்கான திட்டமிட்டப்படி காரியங்களை செய்வதும், “இந்தியன், குடிமகன், பொதுசன மற்றும் கற்பு, கடமை, விதி” என்பது போன்ற கருத்துலுவாக்கங்களினாலயே. மேலும் இந்த பார்பனிய உயர் சாதிய கருத்தியல் நிலவும் ஆளும் அரசு அதிகாரத்திற்கு துணைபோக கூடியது அவை விரும்பும் சாதிய ஆதிக்க அடக்குமுறைகளை இவ்வகை கருத்தியல் நியாயப்படுத்துவதால் அரசு அவைகள் அனுமதிப்பதோடு  அவைகளை பிதற்றுகிற இப்படங்களுக்கு விருதுகளை தந்து வளக்கவும் செய்கிறது. அதனால் தான் தலித் சினிமா என்கிற கருத்துவாக்கத்தின் வழியே வணிக சினிமாவை கட்டுடைக்கும் போது இது போன்ற பொது உத்தி கருத்தியல்களையும் அது போட்டுடைக்கின்றது. ஏனெனில் இப்படியான விமர்சன அணுகுமுறை பல்வேறு வடிவங்களில் பொது புத்தியை அசைக்கும் போக்கினால்தான் கழலக, போராட்ட, திரைப்பட வடிவங்களின் வழியாக பொது புத்தியின் மேல் பெரிய சலனத்தை ஏற்படுத்த முடியும் அதே நேரத்தில் “நம்மை நாமே தணிக்கை செய்து கொள்வதும் படைப்பின் உள்ளடக்கத்தை உரியீட்டு ரீதியாக மறைத்து வைப்பது எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் தன்னுடன் நேருக்கு நேர் மோதாத விசயங்களை அணுகூலமாய் எப்படி மாற்றிக் கொள்வது என்பதை துள்ளியமாய் அறிந்த எதிரிக்கு உதவும் அபாயமும் உண்டு.

இலக்கிய போக்குகளைப்போல் விமர்சன பாரம்பரியம், சிறு உற்பத்தி (சிற்றிதழ்கள் போல) பாரம்பரியமும் சினிமாவில் இல்லை இருப்பதெல்லாம் ஒரே சினிமாதான் தனிப்பட்டவர்களின் குறும் படங்களோ வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் கைப்பாவையான “சேவையாற்றிக் கொண்டிருக்கும் அரசு சரா (?) தன்னார்வ நிறுவனங்களின் படங்களோ, மக்கள் பார்வைக்கே  வராமல் குளிரூட்டப்பட்ட அறைகளின் உலா வந்து அற்பகாலத்தில் அலமாரிக்குள் உயிரை விடும். ஈசல் ப10ச்சிகள் அதே சமயம் அப்படங்களின் தன்மை குறித்து ஆ. மார்க்ஸ்: நான் சுவீஸிலிருக்கும் போது தொலைகாட்சில் ஒரு அறைமணிநேர படம் இந்தியாவில் தமிழ் நாடு உட்பட எல்லா இடங்களிலும் பெண்கள் மீதான வன்முறைப்பற்றி இங்கே நமது மக்கள் பற்றி இந்தப்படம் போடபடுமே ஆனால் அதன் விளைவு வேறு. பெண்ணிய நோக்கிலான படமாக அது அமைந்திருக்கும் ஆனால் சுவிஸில் அது ஓளிபரப்பப்படும் நோக்கம் வேறும். ஒரு சுவீஸ் பார்வையாளனுக்கு அது ஏற்படுத்தும் விளைவு வேறு அங்கெல்லாம் நிலைமைகளை பார்த்தீர்களா என கேட்பதுதான் தொலைகாட்சியின் நோக்கம்.

எனவே இது போன்ற “திரைக்காவியங்களை” தயாரித்தளிப்பது இங்குள்ள Nபுழு எனப்படுகின்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான். இவைகள் ஏகபத்தியத்தின் கைகூலிகள். இவை பார்வையாளர் தன்னிலையை நுண்ணிய திசையில் சிதறடிப்பதோடு மட்டுமல்லாமல், இதனால் கவறப்பட்டு இந்நிறுவனங்களை நோக்கி வருகிற, கொஞ்ச நஞ்ச சமூக அக்கறையுள்ள படைபாளியையும் இது உள்ளிழுத்துதான் வீசியெறியும் காசுக்காக கையடிக்கும் “கலைக்குமாரஸ்” தாவாக உருமாற்றி துப்பிவிடுகிறது. ஆகவே தமிழில் தனிநபர் முயற்சிகளாகவும். தன்னார்வ நிறுவனங்களின் ஆவண குறும்பட முயற்சிகளும் ஆதிக்க கரைப்படிந்த நிலையே நிழவுகின்றது. சினிமாவின் நுகர்வு தன்மைக்குள் இருக்கும் ஆபத்தை முழுதும் அறியாத வர்களாக மக்கள் தொடர்ந்து சினிமாவை ரசித்து கொக்கா கோலாவை போல் பருகி கொண்டிருக்கிறார்கள். சினிமா மக்களின் மனதை மிக ஆழமாக பாதிக்க கூடியாது மற்ற எந்த கலைக்கு சினிமாவை போன்றதொரு சக்தி கிடையாது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று அரசு பிரதநிதிகள் தங்களை கலாச்சார பாதுகாவலர்களாக பாவிக்கிறார்கள் ஆனால் மேலே சொன்ன இந்த கருத்தை ஏற்று கொள்வதில் அவர்களுக்கு  தயக்கம் தான் இந்த கருத்தை ஏற்றுகொள்வதில் இதனால் ஏற்படக் கூடிய ஆபத்தை உணர்பவர்கள் நம்மில் ஒரு சிலரே.

ஆகவே நாம் தலித் சினிமாவிற்கான அடிப்படையை உருவாக்கும் போது இருக்கும் ஆதிக்க சினிமாவின் வடிவங்களில் தங்கியிருக்கும் வன்முறைகளை கேள்விக்குட் படுத்தவேண்டும். மேல்சாதி பெரும் கதையாடல்களை எல்லோருக்குமான பொதுவான காட்சிகளாக மேலாதிக்கம் செய்யும் போது காட்சிரீதியான ஆதிக்க வன்முறையாகும். பெரும் கதையடலின், உயர்சாதியினரின் இந்துத்துவ ஆதிக்க கருத்தியல் கூறுகளை பிற மத சிறுபான்மையினர் இனக்குழுவினர் பெரும்மத சாராதோhர் உள்ளிட்ட மக்களுக் கான கருத்தாக திணிப்பதில் வணிக சினிமாவின் வன்முறையாக முகத்தை கிழிக்கவேண்டும். இவ்விடத்தில் மேலும் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அது “தமிழ் படங்களுக்குமுதலீடு செய்பவர்கள் தமிழக ஸ்டூடியோ முதலாளிகள், படதயாரிப்பாளர்கள், இயக்கு னர்கள், விநியோகஸ்த்தர்கள், பிரதான நடிகர்கள் ஆகியோர் களே எடுத்துக் கொண்டால் பிராமனர்கள், பிராமனர்கள் அல்லாத மேல் சாதியினர் சமூகபகுதிக்குள் இவர்களை நாம் அடக்கிவிடலாம். குறிப்பாக தேவர், செட்டியார், கவுண்டர், நாயிடு பிராமனர் தொடர்பான சமயபற்றிய படங்களை ஊன்றிப்பார்ப்பவர்களுக்கு இது புலப்படும் இது தாழ்த்தப்பட்ட ஓதுக்கப்பட்ட சாதி மக்களுக்கு முற்றிலும் புறம்பான உலகம். இவர்களை புறக்கணித்த உலகம். இவர்கள் மீதான வன்முறை யை சினிமா மொழிமூலம் நியாயப்படுத்தும் உலகம்.

வணிக சினிமா நேரடியாக தலித் மக்களிடம் நெருக்கிய உறவை பிணைத்துக்கொண்டு தன் பெறும் கதையாடல ;களையும், பன்பாட்டு மேலாதிக்கத்தையும் காட்சி ஊடகங் களின் வழியாக மக்களின் மனதில் துப்புகிறது. இதனால் நனவிழி மனம்சார்ந்து ஒரு குற்றவுணர்வு உள்ள தன்னிலை யை கட்டமைக்கின்றது. இந்துத்துவம் இன்று தன்னுடைய மேலாதிக்கத்தை

பொது புத்தியை கட்டமைப்பதற்கு விஜயகாந், ரஜினிகாந், கமலஹாசன் போன்ற நாயக விம்பங்களை உருவாக்கி புனிதங்களாக தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றது. இந்த மாய புனிதர்கள் மக்களின் இலட்சிய நாயக விம்பங்கள்,இவர்கள் நடத்தும் ரசிகர்களின் மனங்களிலும் திரையரங்குகளிலும் வசிய கனவுகளின் வழியே சாதிய உளவியலாள் திரட்டப்பட்டு தன் விளம்பரத்திற்கான சேவகர்களாக்கும் நாயகர்கள், கூடவே அவ்வாறு திரண்ட  மக்களையே தனது முதலீட்டுக்கான மறு மூலதனமாக சுரண்டுவதனை கவனித்தால் இவர்களின் வியாபார தந்திரம் புரியும். இது எல்லா ரசிகர் மன்றங்களும் சாதிய உளவியலோடே இயங்குகின்றன. என்பதை அந்நடிகர்களுக்கு வாழ்த்தும் சுவரொட்டிகள் பகிரங்க படுத்துகின்றன. தன் சாதிக்கான நாயகனை உருவாக்குவதே இவ்வழிபாட்டுச் சாதிய சமூகத்தின் மறைமுக பணித்திட்டம் அதன்வழியே இச்சமூகம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறையை கட்டவிலத்து விடுகின்றது. மோதிக்கொள்ளாத ரசிகர் மன்றங்களை காண முடியுமா? தலித் உளவியலையும் தலித் கலை கலாச்சார வாழ்வை குற்றத்தன்மையுடன் தன் காட்சிகளில் காட்டும் வணிக சினிமாதன் மேல் சாதிய உளவியல்களை, தீண்டாமையே, அதுவழியிலான ஆதிக்க வர்க்க நலன்களை நியாயப்படுத்தியப்படியே தான் தன் தொழிலை நடத்துகிறது. பார்பனிய வணிக சினிமா தலித் மக்களை கெவளமானவர்களாகவும், தீண்டதக்காதவர் களாகவும், குற்றவளிகளாகவும், அலுக்கானவர்களாகவும், திருடர்களாகவும், நாகரிமற்றவர்களாகவும் காட்டுகிறது. பெண்களை போகத்திற்கான சதைப்பிண்டங்களாகவும், ஆணாதிக்க சமூக அடிமைகளாகவும் சித்தரிக்கின்றது. அதேநேரம் பெண் நடிகைகளை “இறக்குமதி” செய்கின்றன. சிவப்பான ஒல்லியான பகட்டு ஒப்பனைகளையும் சதை மடிப்புகளை மட்டுமே அழகென கூவுகிறது சாதிய அடையாளத்திலிருந்து பெண்களை புறந்தள்ளி வெறும் உடலாகவும், உருகும் பொம்மைகளாகவும் குறுக்கி விடுகிறது. உழைக்கும் கருப்பு நிறத்தை இவ்மண்ணின் அடிப்படை நிறங்களை மறுதலித்து ஐரோப்பிய – பார்ப்பனிய அழகியலை கொண்டாடுகிறது. ஒரு பக்கத் பொது புத்;தியை கட்டமைக்கவும், சாதிய, தீண்டாமை உணர்வை வளர்க்கவும், உளவியல் கருவியாக செயற்படும் இவ்வாதிக்க சினிமா மறுப்பக்கம் அதே ஏழை மக்களின் காசுகளை பிடுங்கி தின்று தன் பெறுந்தீனி கலாச்சாரத்தை காட்டிக் காக்கின்றது.

புரட்சிகாரர்களை என்பது மக்களின் வாழ்க்கை காட்டுவதற்கும் கூட பொதுவான கலாச்சாரத்திற்கு இடையில் உள்ள வேறுபாட்டை காட்டும் வெகுசன கலாச்சாரம் என்பது. அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, அவர்களின் சிந்தனையோடு உண்மை பற்றிய உணர்வோடு மற்றும் அன்பான வாழ்வோடு இந்த கலையின் தேர்வு என்னவென்றால், இது அழகின் மூலம் உண்மையை சாத்திய படுத்துகிறது. ஆனால் ப10ர்ஸ்வா கலையோ பொய்களின் மூலம் உண்மையை சாத்தியப்படுத்துகின்றது. ஆனால் ப10ர்ஸ்வா கலையோ பொய்களின் மூலம் கூட அழகை கட்டமைக்க விரும்புகின்றது. வெகுசன கலாச்சாரத்தை உணர்ந்து பயன்படுத்தி கொண்டேமானால் சுதந்திரமான கலையின் மொழியை நாம் உருவாக்கு முடியும் . ஆகவே தலித் சினிமா மொழி பற்றி சிந்திக்கும் போது ஆதிக்க சாதியின் சினிமா மொழி வடிவங்களை பற்றிய விழிப்புடன் செயல்பட வேண்டும்.

கதை, திரைக்கதை. வசனம், ஒளிப்பதிவு, கோணம் என எதன்வழியாக ஆதிக்க கருத்தாடல் கட்டமைக்கப்படுகிறதென்ற அடிப்படையை சரியாக புரிந்துக் கொண்டு தொழிநுட்பம் சார்ந்த பகுதிகளில் நிறுவனம் நிலைகளிலிருக்கும் ஆதிக்க மொழிகளை வெளிக்கொண்டு வந்து சிதைக்கவேண்டும். தமிழ் சினிமாக்களில் நமது மக்களை காட்டும் கெமரா மேல் கோணம் (டொப்சொட்), ஆதிக்க வர்க்கங்களின் நிலையிலிருந்து நோக்கும் கெமரா கோணங்களும், தலித் பெண்களையும், சேறிகளையும், இடங்களையும், வியாபார வசதிக்காக போலி அழகுடன் காட்டும் போக்குகளையும், சினிமா மொழியிலிருக்கும் ஆதிக்க வன்முறை குறித்த விழிப்புணர்வு விமர்சன ப10ர்வமாக சினிமாவில் எழும் போது சரியான தலித் அழகியலுக்கான கூறுகளை அதன் உள்ளிருந்தே பெறப்படலாம். புரட்சிகர சினிமாவின் வடிவ உள்ளடக்க பிரச்சனைகள் குறித்த சிந்தை வரலாற்று நோக்கி யோசித்து புரிந்து கொள்ள வேண்டியதொன்றாகும் தினசரி வரலாற்றை நேரடி நிகழ்வாக மாற்றியமைப்பதற்காக யதார்த்தத்தோடும் உண்மையோடும் உழைக்க வேண்டியது எப்படி அதி முக்கியமோ அதே காரணங்களுக்காக உள்ளடக்கத்தை குறைத்து மதிப்பிடவோ ஏமாற்றவோ செய்யாத வடிவங்களை கண்டுபிடிக்க வேண்டியதும் முக்கியமாகும்.

 இதுபோன்ற மூன்றாம் உலக திரைப்போராளிகளின் சினிமா குறித்த சிந்தனைகள் மீதான நமது வாசிப்பு தலித் சினிமா மொழி பற்றிய நமது பார்வையை மேலும் கூர்மைபடுத்தும் இன்றைய சினிமாக்களோடு முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்கு அரசியல் பிரச்சார கருவியான காட்சி ஊடகங்களும், விளம்பர படங்களும், அதே அளவு தீமையை மக்களுக்கு செய்கின்றன. (வளர்ப்பு மகன் திருமணம், கருணாநிதி கைது போன்ற பல்வேறு சம்பவங்களை சன் – ஜெயா தொலை காட்சி போன்றவற்றை சித்தரித்த விதங்களை இதனுடன் இணைத்து யோசித்து பார்க்கலாம்) ஆகவே தலித் சினிமா விமர்சனம் மற்றும் உருவாக்கும் ஒருவகையில் மக்களுடைய பண்பாட்டு விடுதலைக்கான வழிமுறையாகும். இவ்வழிமுறையின் வழியாக மக்களோடு இணைந்து பேச பின்வரும் படைப்பாளிகளிடம் இருந்தே மக்களுக்கான தலித் சினிமாவும் மாற்று சினிமாவும் உருவாகி வரும். தமிழ் சினிமாவின் வரலாற்றில் தலித் மக்கள் மேல் ஆதிக்க சாதிகள் ஏற்படுத்திருக்கும் வன்முறை கருத்தாடல்களை தோலுறிக்க வேண்டிய தருணம் இதுவே. தலித் இலக்கியம், கலை,  பண்பாடு, அரசியலில் ஏற்பட்டுவரும் புதிய எழுச்சி நிறைந்த சமகால பின்னணியில் தலித் – பெண்ணிய விமர்சன அணுகுமுறை ஒன்றை இச்சினமா அமைப்பின் மேல் நிகழ்த்துவது தலித் சினிமா கருத்தாக்கங்களுக்கும் தலித் சினிமா உருவாக்கதிற்குமான சாதகமான சூழலை ஏற்படுத்தி தரும். தலித் சினிமா பற்றிய அக்கறை அற்று இருக்கும். விமர்சகர்களிடமும் படைப்பாளிகளிடமும் தலித்திய விமர்சன அணுகல்கள் அனுகூலமான புதிய வழித்தடங்களை அமைத்துக் கொடுக்கும் என்று நாம் நம்பலாம். இறுதியாக. ஒன்றை கூறி இவ்வுரையடலை தற்சமயம் நிருத்தலாம்.

“ஒரு அகன்ற தலத்தில் வைத்து பார்க்கும் போது எல்லா படங்களுமே, எல்லா கலைகளுமே கலைஞர்களும் கூட அவர்கள் அறிந்தே அறியாமலே ஒரு அரசியலுக்குள் இயங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வர்க்கத்தை சார்ந்து இயக்குகிறார்கள். சினிமா பல வடிவங்களில் பல்வேறு வகைகளில் தனக்கே உறித்தான ஒரு அரசியலை எப்போதுமே கொண்டுள்ளது.

நன்றி: புதிய தடம்

Previous Older Entries