உன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…!


Image

அவசரமாக ஏற்படுகின்ற காதலுக்கு
அளவேதும் இல்லை என்றுதான்
நினைக்கின்றேன்…!
யாருமற்று இருக்கின்ற என்
அறையில் அவ்வப்போது அவசரமாக
எழுந்து வரும் மிருகத்தை போல்
கனத்தில் கண்ட அழகியுடன்
கைகோர்த்து முறுக்கும் மன
நினைவுகள் எழுதினால் என்னைப்பற்றி
என்ன நினைப்பார்கள் என்ற
பயத்துடன் அனேக கவிதைகள்
கட்டிலில் புணர்ந்து தீர்த்த
சுயமைத்துனங்களாக முடிந்துவிடுகின்றன…!

பாடல் முடிந்தும் லயத்தின்
நளினங்கள் லேசான சினுங்களாக
பாறை இடுக்கில் தொலைந்த மூக்குத்தியை
போல் சதா காலமும் பரவசமாக
பொழுதை சாடாத நினைவுகள்
பற்றி எரியும் தீயின் சுவையான
உன் கூந்தல் வருடும் நினைவுகள்!

காதலை சுருக்கும் வாழ்வின்
சொற்பமான நிமிசங்கள் எல்லாம்
என் ஞாப அடுக்கில் கரைந்து
மரிக்கும் நகரத்தை புணர்ந்து
கடக்கும் ஆகாய வெளியெங்கும்
நீ பதித்த கூந்தலின் கதைகள்
மட்டும் என்னோடும்….
சதையின் மனம் பருகி தீராத
உன் பள்ளதாக்கின் குடிக்கும்
கொக்குகளின் மீன் குஞ்சுகளுடன்
அப்பா எனக்கு முதல் வாங்கி
தந்த உள்ளாடையில் எழுதிய
எழுதாத கவிதையில் இருக்கின்றது
என் காதல் வரைந்த ஓவியங்கள்..
00
‘நீண்ட இரவும் நிறையக் கனவும்”’ தந்த உன் கவிதை வாசிப்பு
தந்த ஏகாந்த மனநிலைக்காக

Advertisements

Comments are closed.

%d bloggers like this: