உன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…!


Image

அவசரமாக ஏற்படுகின்ற காதலுக்கு
அளவேதும் இல்லை என்றுதான்
நினைக்கின்றேன்…!
யாருமற்று இருக்கின்ற என்
அறையில் அவ்வப்போது அவசரமாக
எழுந்து வரும் மிருகத்தை போல்
கனத்தில் கண்ட அழகியுடன்
கைகோர்த்து முறுக்கும் மன
நினைவுகள் எழுதினால் என்னைப்பற்றி
என்ன நினைப்பார்கள் என்ற
பயத்துடன் அனேக கவிதைகள்
கட்டிலில் புணர்ந்து தீர்த்த
சுயமைத்துனங்களாக முடிந்துவிடுகின்றன…!

பாடல் முடிந்தும் லயத்தின்
நளினங்கள் லேசான சினுங்களாக
பாறை இடுக்கில் தொலைந்த மூக்குத்தியை
போல் சதா காலமும் பரவசமாக
பொழுதை சாடாத நினைவுகள்
பற்றி எரியும் தீயின் சுவையான
உன் கூந்தல் வருடும் நினைவுகள்!

காதலை சுருக்கும் வாழ்வின்
சொற்பமான நிமிசங்கள் எல்லாம்
என் ஞாப அடுக்கில் கரைந்து
மரிக்கும் நகரத்தை புணர்ந்து
கடக்கும் ஆகாய வெளியெங்கும்
நீ பதித்த கூந்தலின் கதைகள்
மட்டும் என்னோடும்….
சதையின் மனம் பருகி தீராத
உன் பள்ளதாக்கின் குடிக்கும்
கொக்குகளின் மீன் குஞ்சுகளுடன்
அப்பா எனக்கு முதல் வாங்கி
தந்த உள்ளாடையில் எழுதிய
எழுதாத கவிதையில் இருக்கின்றது
என் காதல் வரைந்த ஓவியங்கள்..
00
‘நீண்ட இரவும் நிறையக் கனவும்”’ தந்த உன் கவிதை வாசிப்பு
தந்த ஏகாந்த மனநிலைக்காக

Advertisements

தேநீரில் கரைந்த கனவுகள்…!


ö ö
இருப்பதற்கான கனங்கள் மறுக்கப்படும்
நாளில் உன் தேநீரின் உதட்டில்
என் கைரேகையின் சுவடுகள்
அட்டைக் கடித்த குருதியின்
வாசனையை பருகும் நினைவுகள்
மறுபடியும் ஒழுகி தீர்த்த காம்ராவின்
வெய்யில் பொழுதொன்றில் மஞ்சல் நிற
பாப்பாத்தியின் ஈரகசிவின் சுமையுடன்
நீ ஒத்த லயத்தில் தனியாக
சுதந்திரம் ஏதுமற்று வெள்ளைக்காரன்
கட்டிய லயத்தை அன்னாந்த படி
நீளும் அனலான ராத்திரியில்
பாடிப்பறந்து திரியும் வினாகளற்ற
வேலைகள் எல்லாம் கரைந்து உருகி
தேசத்தின் பிரசைகளாக மறுபடியும்
அந்நியமாக்கப்படும் சுயங்களை
தினம் தேடும் வானத்தின் சாரளத்தை
மடுவத்தை நினைத்து பிள்ளையின்
கண்ணீரின் கனம் மலையில்
பரிக்கும் கொழுந்தின் பனிஈரம்
இன்னும் உன் பீங்கான் கிண்ணத்தில்
தெரிக்கும் துளிகளுடன்
மனசு கனத்ததுதான் கிடக்கின்றது..!
ö ö
(03.07.2012 ஓர் மாலைப் பொழுதில்  ரா.வைஷ்ணவிக்கு)