ஞபகங்களின் ஈரம் …


நீளும்
நிழலின் வரைபடம்
ஞபகங்களின் ஈரம்
ஆழ்ந்து செல்லும் போதும்
வாரணங்கள் விண்ணில்
நீலப்பதித்த
தாரகைகள் கைகளில்
மிதக்கும் தருணத்துடன்
முறிந்து
விழும் நிகழ் நிமிடங்கள்…

ஒரு கணம் சிரிப்பை
அடர்ந்த பொழுதின்
முன்பு தந்துவிட்ட
அன்றாடம் தரும்
சுமைகளுடன் தொடரும்
பயணங்கள்…

ஆனாலும்
கலை சொல்லி செல்லும்
வாழ்வின் முன்பு …
துறல் நின்ற
கோடை மணல் போல்
முணுமுணுக்கும்
ஆழ்ந்த ஞாபகத்தின்
மழை கோடுகள்….

ஞாபகங்களே
இத்தனை சுகமானதென்றால்
வாழவே
மாயம் தரும்
புன்னகையும்
விழிகளில் தேங்கியிருக்கும்
உன்
புரியாத மொழியின்
வனாந்தரங்களில்
தவற விடப்பட்ட
ஒற்றைப்பாதையில்
இருளின் வெளிகள் எனை
விழுங்கி விழுங்கி
தாயின் கர்ப்ப புனிதம்
தரும்
வாசனையுடன்
தினமும் காத்திருந்தேன்….

அவள்
அப்படியே அரவணைக்க
வருவாள் என்ற
எதிர்பார்க்காத
நிகழ்காலங்களும்
அவளே….அவளுடனான அவளுடன்….

Advertisements

Comments are closed.

%d bloggers like this: