இடம் பெயர்வு..காற்றின் தேடல்
முற்றுப் பெற்றதன் போது
நகரத்தில் தேடிய
அவனிடம் அடையாளமற்ற
உடல் ஒன்று ஒப்படைக்கப்பட்டது…

கோடுகளும் வண்ணங்களும்
உடலில் இருப்பதை அவன்
கண்டுகொண்டான்…
காதலியின் யோனியையும்
உடலில் இருந்து அவன் மீட்டெடுத்தான்….
குறைந்தபட்ச மகிழ்ச்சியை அது அவனுள்
தந்தது…

மிருகங்களின் வகையினை தன்
உடலில் தேடிபோது
தெருநாய்களின் ரேகைகள் மட்டும்
சுயங்களை கேலி பேசி சிரித்தது…
நடக்கும் போதும்…
சிரிக்கும் போதும்…
புணரும் போதும்…
உட்காரும் போதும்..
அனைக்கும் போதும்..
அவனுக்குள் இருந்து
ஒவ்வொரு உடலாக வெளிப்பட்டது…

அந்த இறுதி நாளில்
அவன் தன் உடலைத்தேடி
தெருவெங்கும் திரிவதாக
நண்பர்கள் கூறினர்..
எந்த உடலை என்பதான
கேள்விகள் என் மனதில்
எழுந்தது…

Advertisements