நீ ஒரு தேசமும்…


love is pain

இப்படி ஆனதில்லை
என்னாலும்…
மரணத்தின் தவிப்பை
தருகின்றன உன் ஞாபகங்கள்…

உன் புகைப்படங்களை என்
இதயச்சுவா்களில் சிலுவையாக
அறைந்து கொண்டாலும்
ரணங்கள் தீரவில்லை…

கற்பொழுக்கம் நிறைந்த எனது
இரவுகள் இப்போது
சா்வ நாசமாகிக் கொண்டிருக்கின்றது
தோழி…!

சாவின் வாசனைணை
என்னாலும் உணர முடிகின்றது…

நீ
ஒரு தேசமும்..
நான் ஒரு தேசமுமாக இருந்தாலும்
உன் சுவாசத்தின்
தாள லயங்களை எனது
கனவின் வரைப்படங்கள்
உன் புகைப்பட காட்சிகளாக…

பெரிதாக ஒன்றும்
சாதித்து விட வில்லை
ஆனாலும்…
உனக்காகவாவுது…
என்
கனவின் கயழ் விழியை கைப்பற்ற
தோன்றுகின்றது தோழி…

Advertisements

1 Comment (+add yours?)

  1. priya
    Oct 22, 2009 @ 11:02:44

    nanraha ullathu…
    iladchiya kavithaigalum eluthungal….

%d bloggers like this: