ஃபிலிம் சொசைடிகளின் தேவை


ஃபிலிம் சொசைடிகளின் தேவை

bitmap-in-mahen
உலக சினிமா வரலாற்றில் நல்ல சினிமாவை உருவாக்குவதற்கும் நல்ல சினிமா  பேரெழுச்சியாக வளர்ந்ததற்கும், திரைப்பட சங்கங்களின் பங்களிப்பை மறந்து விட முடியாது. ஓவ்வொரு தேசத்திலும நல்ல சினிமா வளர்வதற்கு  பெரிதும் திரைப்பட சங்க இயக்கங்கள் கைகொடுத்திருக்கின்றது. ஆந்த வகையில் திரைப்படக் கழகம் என்பது என்ன? ஏன் நமக்கும் திரைப்பட கழகம் தேவை என்பதையும், ஒரு திரைப்பட சங்கத்தை எப்படி அமைப்பது? எப்படியான திரைப்படங்களை திரையிடுவது? மக்களிடம் திரைப்பட சங்கங்களின் நடவடிக்கைகளை எப்படி விரிவுப்படுத்துவது? இப்படியான பின்னணியுடன நாம் அதுபற்றி பின்நோக்கி பார்ப்பது நல்லது என்று நம்புகின்றோம். பணச்செலவு மிகு அதிகமாகும் கலையாகச் சினிமா இருக்கிற காரணத்தால், பணம் வைத்திருப்போர், இக்கலையைத்தங்கள் கைக்குள் எடுத்துக்கொள்ள முடிகிறது. கலை உணர்வு இல்லாத பணக்காரர்கள், சினிமாவை ஒரு வெறும் வியாபாரமாகக் கருதி “ பத்துப் போட்டால் இருபது வர வேண்டும்” என்கிற நோக்கத்தில் படம் எடுத்து சினிமாவை  கெடுத்தார்கள். ஆபாசம் வக்கீரமான உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள், வாழ்க்கையைப் பிரதிபலிக்காத கதைகள் சினிமாவில் இடம்ப்பெற்று “ மசாலாப் படங்கள்” என்கிற பெயரில் அமோகமாக விற்பனை ஆகத்தொடங்கின.

சினிமா இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. மனித நாகரீகத்திற்கு விஞ்;;ஞானமும் கலையும் இணைந்தளித்த கொடை. உலக வரலாற்றில, மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்தாக இருந்து சிறப்பு பெற்றது. துமிழ்க் கலாசாரத்தை, வாழும் முறையை சினிமாவைப் போல் வேறு எந்த ஊடகமும் பாதித்ததில்லை. தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தவர்களில் பெரும் பகுதி திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பதிலிருந்;தே. தமிழ் மக்களின் வாழ்க்கையில் சினிமா எத்தகைய ஆட்சியை செலுத்துகிறதென்பதை உணரலாம்.வர்த்தக தமிழ் சினிமா இந்தியாவின் வறுவான தொழிற்தளமாக அடையாளம் காணப்பட்டாலும், வர்த்தகம் மட்டுமே வளர்ச்சியின் குறியீடாக எடுத்துக்கொள்ள முடியுமா? தமிழுக்கு ஆதாயம் செய்வதை விட தமிழை வைத்து ஆதாயம் அடைபவர்கள் அதிகம் இருப்பதைப் போல், சினிமாவை வைத்து கோடிக்கணக்கில பிழைப்பவர்கள் சினிமாவிற்கு திருப்பித் தந்ததும், தருவதும் என்ன என்ற நீண்ட கேள்விகளுடன் தான் நாம் இன்னும் இருக்கின்றோம்!

இந்த நிலையில் சினிமா என்கிற கலையில் உண்மையான அக்கறை கொண்ட கலைஞர்கள் சிரமப்பட்டு பல நல்ல படங்களை எடுத்தார்கள். எடுத்தாலும், இந்தப்படங்கள் நல்லப் படங்கள், வாழ்க்கையை உண்மையாக சொல்வதாலும் போலித்தனமான கழிசடை கனவுக் காட்சிகளை காட்டாததாலும், ஆபாசக்காட்சிகள் இல்லாததாலும் இந்தப்படங்களை வாங்கித்திரையிட விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை. நுல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு சென்றால் வியாபார சினிமாக்களின் பொய்யும், வ ; சகமும் அம்பலப்பட்டுப் போகுமென்று வியாபாரிகளின் தந்திரமான கணிப்பினால் மக்கள் நல்ல படங்களை விரும்ப மாட்டார்கள், அவைகள் ஓடாது என்கிற பொய்யான காரணங்களை மக்களிடம் திணித்தார்கள். அத்தோடு அவைகள் கலைப்படம, அது மெதுவாக நகரும், “போர” அடிக்கும் என்பதாக கட்டுக்கதைகளை பெரிய ஊடகங்களின் மூலம் கட்டமைத்தார்கள். இதன் மூலமாக ‘நல்ல சினிமாவை” மக்களிடமிருந்து விலகி வைத்ததோடு அந்தப் படங்கள் மக்களிடம் சென்று விடாதபடிக்கு எல்லா வகையான தந்திரங்களையும் மேற்கொண்டார்கள்.

இந்த நிலையில், எடுக்கப்பட்ட நல்ல படங்களை மக்களிடம் கொண்டு செல்வது எப்படி? அவர்களுக்கு உண்மையான சினிமாவை இனம் பிரித்துக் காட்டுவது எப்படி?

eisenstein1

நல்ல ரசனையும், கலையுணர்வும் கொண்ட இளை ர்கள் சிலர், இதே போன்ற நல்ல படங்களைப் பார்க்க வேண்டும். என்று விரும்பிய இன்னும் சிலரையும் சேர்த்துக் கொண்டு, தாங்களே ஒரு அமைப்பாக உருவானார்கள். இந்த அமைப்புக்கு பெயர் தான் ஃபிலிம் சொசைட்டி அதாவது திரைப்படக்கழகம், திரைப்பட இயக்கம் திரைப்பட சங்கம்; என்று பல்வேறு பெயர்களில் தமது செயல் முனைப்பில் இறங்கினார்கள்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஃபிலிம் சொசைட்டிகள், நல்லப் படங்களைத் தேர்ந்தெடுத்து, எடுத்து வந்து தங்கள் உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டுகின்றன. சேன்னையில் சில சிறந்த திரைப்பட சங்கங்கள் இன்றும் தமது திரையிடல்களை செம்மையான முறையில் வடிவமைத்து நடைமுறைப்படுத்துகிறார்கள். தமிழகத்தின் அணைத்து ஊர்களிலும் ஃபிலிம் சொசைடிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு மொழியிலும் சிறந்நப் படங்களைத் தேர்ந்தெடுத்து திரையிடுவதோடு, உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் சிறந்த திரைப்பட மேதைகளின் படங்களையும் கொண்டு வந்து தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த சொசைட்டிகள் திரையிடுகின்றன.

02

ஃபிலிம்; சொசைடிகளின் தோற்றம்

உலகத்திலேயே முதன் முதலில் பிரான்ஸில்தான் ஃபிலிம் சொசைட்டி தோற்றுவிக்கப்பட்டது. ஃபிலிம் சொசைட்டிகளின் தாக்கத்தினால் பிரெஞ்சு சினிமாவில் ‘புதிய அலை” (நேற றுயஎந) சினிமா இயக்கம்
உலக சினிமாவின் முகத்தையே மாற்றி அமைத்தது. 1958 இல் பிரான்சில் தோன்றிய புதிய அலை இயக்கம் அந்த நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் – சமூகத்திற்கு தேவையான முக்கியமான கலைகளில்
திரைப்படமும் ஒன்று என்று கருதிய நாடுகளில் – ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில், கல்கத்தாவில இயக்குனர் சத்தியஜித் ரேயும், சித்தானந்த தாய் குப்தாவும் சேர்ந்து முதலில்  ஃபிலிம் சொசைட்டிகளை உருவாக்கினார்கள். வங்கத்தில் ஃபிலிம் சொசைட்டியோடு நல்ல சினிமாவும் வளர்ந்தது. இது வளர்ந்து நாளடைவில் இந்தியாவின் அணைத்து மாநிலங்களிலும் ஃபிலிம் சொசைட்டிகள்  அணைத்தும் ஒரு பெரிய அமைப்புக்குள் அடக்கப்பட்டன. இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கின்றது. இந்தியாவின் அணைத்த மாநிலங்களின் ஒன்றிணைந்த பிலிம் சொசைட்டிகளின் தலைமை அமைப்பின் பெயர் ‘ ஃபெடரேசன் ஆஃப் பிலிம் சொசைட்டீஸ் ஆஃப் இந்தியா “

குநுனுநுசுயுவுஐழுN ழுகு குஐடுஆ ளுழுஊஐநுவுஐநுளு வுர்நு ஐNவுநுசுNயுவுஐழுNயுடு குநுனுநுசுயுசுஐழுN ழுகு குஐடுஆ ளுழுஊஐநுவுஐநுளு (சர்வதேச திரைப்பட கழகங்களின் சம்மேளனம்) ஐகுகுளு
தமிழகத்தில் திரைப்பட சங்கங்களின் வளர்ச்சிக்கு திரைப்பட மேதை நிமாய் கோ~; பங்களிப்பு பெரிதும் உதவியது.பார்க்கவும் ஃபிலிம் சொசைட்டி அவசியமானது என எண்ணினார். இதன் அடிப்படையில் சென்னையில் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி தோன்ற அடிப்படைக் காரணம், நிமாய் கோ~;
தனது ஈடு இணையற்ற பங்களிப்பினால் நல்ல சினிமா மக்களிடம் சென்றடைய அரும்பாடு பட்டார். இதன் மூலமாக தமிழ் சினிமாவில் 70 களில் ஏற்பட்ட புதிய திரைப்பட போக்குகளுக்கும், புதிய வகை சினிமாக்கள் மக்களிடம் சேர்வதற்கும,; ருத்ரய்யா, அருண்மொழி, மகேந்திரன், துரை, தேவராஜ், மோகன் போன்றவர்களின் சினிமாவில் மாற்றம் ஏற்ப்டடதோடு, திரைப்பட கழகத்தின் பங்களிப்பினால் சென்னையில் நல்ல சினிமாவை பார்ப்பதற்கான சாளரம் திறக்கப்பட்டது. அதே நேரம் இந்தியாவில் சத்ய    தனது திரைப்பட சங்கத்தை தொடங்குவதற்கு முன்பே ஆசியாவில் முதல் திரைப்பட சங்கமாகக் கருதப்படும் கொழும்பு திரைப்பட சங்கம் 1945- ல் தொடங்கப்பட்டது.என்பது ஆச்சரியம் தரும் விடயமாகும். இன்றைய சிங்கள சினிமாவின் வளர்ச்சிக்கும், அதன் தனித்துவத்திற்கும் திரைப்பட சங்கங்கள் தான் மூலக்காரணம் என்பதை நம்மவர்கள் உணர வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் திரைப்பட சங்கங்களின் மூலம் வளர்ந்தவர்கள் தான் நல்ல சினிமாவை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்கள் தான் உலக சினிமாவின் புதிய மொழியையும், புதிய திரை படைப்புகளையும் உலகிற்கு தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

நல்ல சினிமாவைப்; பற்றி இந்;திய சினிமாவில் அடையாளம் படுத்தும் வகையில் கேரள சினிமாவையும், பெங்கால் சினிமாவையும் சொல்வதுண்டு. இரு மாநிலங்களும் கம்யுனிசம் ஒரு பின்னனியாக இருந்தாலும் நல்ல சினிமா வளர்வதற்கு திரைப்பட இயக்கங்களின் பங்களிப்பு மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் ஜோன் ஆபிரகாமும் அவர் குழுவும் இணைந்து கேரளத்தில் தொடங்கிய ஒடேஸ்ஸா திரைப்பட இயக்கம்; தான் மலையாள சினிமாவின் மூல வேர்களுக்கான காரணம்.’ டீ குடிப்பதற்கு காசில்லாத இளைஞர்களுக்கு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், புரொஜெக்டரை இயக்குவதற்கும், 16அஅ கேமராவை கையாள்வதற்கும் திரைப்படங்களை விவாதிப்பதற்கும் வழியை ஏற்படுத்தித் தந்திருந்தது. ‘ ஒடேஸா திரைப்பட இயக்கம்.’தொலைக்காட்சியைக் கூட பார்த்திராத கிராமத்து மக்கள் உலக சினிமாவை நேரடியாகப் பார்த்தனர்.என்று தனது நினைவுகளில் எழுதுகிறார் புகைப்பட கலைஞர் சு.சு. சீனிவாசன்.

ரீஜினல் ஃபிலிம் புரோமோடிங் சொசைட்டி என்ற அமைப்பு, ஃபெடரே~னோ அல்லது சொசைட்டியோ தமக்கு சொந்தமாக ஒரு படம் வாங்கிக்கொள்ள பணம் கடனுதவி செய்கிறது. சென்னை ஃபெடரே~ன் அவள் அப்படித்தான், பிரதி~;மா, காடு போன்ற படங்களை வாங்கி வைத்திருக்கிறது. புpராந்திய மொழிப் படங்களில் ஆங்கில உப வாசகங்களை இணைத்து வட இந்தியாவில் உள்ள சொசைட்டிகளுக்கு ஃபிடரே~ன் அனுப்பி வைக்கிறது.கல்கத்தா ஃபிலிம் சொசைட்டி உறுப்பினர்கள் தாமே சொந்தமாகப் படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள். ஃபிடரே~னில் இனனொரு வசதி மினி நு}ல் நிலையம். சோசைட்டி உறுப்பினர்கள் இங்கு உள்ள அருமையான சினிமா பற்றிய உலகப் பெரும் டைரக்டர்களின் புத்தகங்களைப் படித்துப் பலன் பெறலாம். சமீபத்தில் டெலிவி~னில் ‘ சினிமா எடுக்கும் முறை’ பற்றி ஒரு தொடர் வெளியிடப்பட்டது. இதற்குக் காரணம் ஃபிலிம் சொசைட்டிகள் தான். டேல்லி ஃபிலிம் பெடரே~ன் தேர்;ந்தெடுத்து இந்திய அரசு அங்கீகரிக்கும் படங்கள் எல்லாம் மாநிலங்களில் சொசைட்டிகளில் வெளியிட அந்த மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.

art_numerique

03

ஃபிலிம் சொசைட்டிகளின் பணிகள்

உலக திரைப்பட விழாக்களில் மட்டுமே காணக்கூடிய அல்லது அது போன்ற அபுர்வமான திரைப்படங்களை பல நாடுகளில் இருந்தும் வரவழைத்து சொசைட்டிகளுக்கு கொடுக்கின்றது. டீல்லியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பிற நாட்டு து}தரகங்கள் நாட்டின் சிறந்த திரைப்படங்களை வழங்குகின்றன. ஆங்கிருந்து அற்தப் படங்களை திரையிட்டு பார்த்து, தேர்ந்தெடுத்து இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சொசைட்டிகளுக்கு அனுப்பி, ஆர்வமுள்ள உறுப்பினர்களைப் பார்த்து மகிழுமாறு செய்கிறது

தமிழில் ருத்ரையா, ஜெயபாரதி, மலையாளத்தில் அமூர் கோபாலகிருஸ்ணன்,அரவிந்தன், கன்னடத்தில் கரந்த், கிரீ~; கர்னாட், ஜீ. வி. ஆய்யர் மற்றும் ~;யாம் பெனகல், மிருணாள் சென், ரே போன்ற சிறந்த இயக்குனர்களின் படங்களைவாங்கி சொசைட்டிகளுக்கு கொடுத்து உதவுகிறது இந்த அமைப்பு. சிறந்த திரைப்படங்கரள அவை எவ்வாறு சிறந்த திரைப்படங்கள் என்று அறிந்துக் கொள்வது? மோசமான படங்களில் இருந்து இவர்களின் படங்கள் எந்த விதத்தில் வேறுபட்டு இருக்கின்றன? ஒரு காட்சியை படமாக்கி இருக்கும் முறையில் ஒரு நல்ல டைரக்டருக்கும், மோசமான டைரக்டருக்கும், எங்கே, எப்படி, எந்த விதத்தில் வேறுபாடு காண முடிகிறது? என்பதை அறிந்து கொள்ள ‘பயிற்சி” தேவை. அந்தப் பயிற்சிக்கு ‘ஃபிலிம் அப்ரிசியேசன்ஸ் கோர்ஸ்” என்று பெயர். ஒருவாரம், பதினைந்து நாட்கள், ஒரு மாதம் என்று இந்த மாதிரியான கோர்ஸ்களை இந்த சொசைட்டிகள் நடத்துகின்றன.

ஒவ்வொரு படத்தை திரையிட்டு முடித்த பின்னும்
கலந்துரையாடல் நடக்க வேண்டும் என்பது சொசைட்டிகளின் பணியாக முக்கிய பணி;யாக எதிர்ப் பார்க்கப் படுகிறது. படத்தைப பற்றிய அபிப்ராயங்கள் பரிமாற்றிக் கொள்ளப்படும் போது அது சினிமா பற்றிய அறிவை வளர்க்க பயன்ப்படும்.

சென்னையில தற்சமயம் ‘ நிழல்” திரைப்பட இயக்கம் மூலமாக குறும்படங்களின் வளர்ச்சியும், குறும்படம் உருவாக்கத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. திரைக்கதை,   பயிற்சி பட்டறையின் மூலமாக குறும்படம் எடுப்பதற்கான பயிற்சியோடு களத்திலேயே மூன்று தினத்தில் ஒரு குறும்படத்தை தயாரித்து தமிழகத்தில் சிறப்பான வகையில் நிழல் திரைப்பட இயக்கம் பணி புரிந்து வருகின்றது.

நல்ல சினிமாவைப் பார்ப்பதோடு, நல்ல சினிமாவை சிறிய முதலீட்டில் உருவாக்குவதற்கான தேவையும், உந்துதலும் நம் மத்தியில் எதிர் காலங்களில் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். நிழல்” போன்ற திரைப்பட இயக்கத்தினர் நம் மத்தியிலும் குறும் படங்களை திரையிட்டு பயிற்சி பட்டறையின்  மூலமாக மூன்றே தினத்தில் படத்தை உருவாக்குவதற்கும், நம்மிடம் நல்ல சினிமா பரவுவதற்கும் உறுதுணை புரிய காத்திருக்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்வோம்.

04

ஒரு சொசைட்டி எப்படி உருவாகிறது?

குறைந்த பட்சம் 100 உறுப்பினர்கள் இருந்து, சரியானபடி நிர்வாகம் நடக்கிறது என்பது ஒரு சொசைட்டியை ஃபெடரேஷன் கருதுமானால் அந்த சொசைட்டி அங்கீகாரம் பெருகிறது.100 பேர் சேரவில்லை என்றால் குறைவான உறுப்பினர்கள் வைத்து ஆரம்பிக்க முடியாதா? ஒரு சொசைட்டியை நடத்துவதற்கு உணர்வு மட்டும் போதாது பணமும் வேண்டும். தியட்டர் வாடகை, புரொஜெக்டர் வாடகை, நிர்வாக செலவு, படம் பெறுவதற்காக ஃபெடரே~னுக்கு கொடுக்க வேண்டிய சிறு தாகை ஆகியவைகளுக்காக ஆண்டுக்கு சுமார் 50 ரூபாய்களை உறுப்பினர்களிடமிருந்து சொசைட்டி பெற்றுக் கொள்கிறது. 50 ரூபாய் செலுத்திய ஒரு உறுப்பினர் மாதத்திற்கு குறைந்தது 2 படங்களும், ஆண்டுக்கு குறைந்தது 40 படங்களும் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

நம் சூழலில் நல்ல சினிமாவைக் காண்பதற்கும், அது குறித்து தெரிந்து கொள்வதற்கும் நம்மவர்களிடம் நல்ல ஆர்வம் இருக்கின்றது.  இலங்கையைப் பொறுத்தவரையில் சினிமா மக்களுக்கு இது போன்ற நிறைய அமைப்புகளும் நல்ல திரைப்படங்களை பெரு நகரங்களில் திரையிட்டபடி தான் இருக்கின்றது. ஆனால் பெரு நகரங்களை தவிர்த்து சிறிய நகரங்களில் திரைப்பட இயக்கத்தை இன்று சிறப்பான முறையில் கட்டி எழுப்ப முடியும்.

நம்மிடம் இன்று தொழில்நுட்பங்கள் பெருகி விட்ட போதும் அவற்றை நாம் இன்னும் படைப்புணர்வோடு பயன் படுத்தவில்லை என்பது உண்மை, இன்று ஏதோ ஒரு தன்னார்வ அமைப்பிடமோ, கலாச்சார அமைப்பிடமோ, மிகச் சிறந்த மல்டி மீடியா புரொஜெக்டர் கருவி இருக்கிறது. ஆனால்; யாரும் அதை நல்ல சினிமா வளர்வதற்காக பயன்ப்படுத்துவதில்லை. என்பது நமது அறியாமையோடு, நமது துரதிஷ்டம் என்று தான் மனம் குமுற வேண்டி உள்ளது. அதனால் முன்னர் போல் திரையரங்குகளில்தான் நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்பதில்லை, ஒரு 50 பேர் அமர்ந்து உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவுக்கு வசதியான ஒரு இருட்டறை ஒன்றை ஏற்படுத்தி அதில் நல்ல சினிமாவை திரையிட்டு காட்டலாம். அத்தோடு படம் பற்றியும், படத்தின் சாராம்சம் பற்றியும் சிறிய விபரக் குறிப்பும், தகவல்களையும் பார்வையாளனுக்கு வழங்கலாம். இதற்கு இன்றைய சூழலில் பெரிய செலவுகள் தேவையில்லை, நல்ல சினிமாவை பார்ப்பதற்கு இன்று டிஜிட்டல் வசதிகள் பெருகி விட்டன. ஆதை நாம் ஆக்க புர்வமாக பயன்ப்படுத்தவும், சிறப்பான திரைப்பட இயக்கத்தை நடத்துவதன் மூலம் நல்ல சினிமா பற்றிய பார்வையைத் து}ண்ட முடியும்.

அதனால் உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் அதுவும் இல்லை என்றால் தோட்டங்களில் ஒரு 20 பேரை இணைத்து சிறிய அளவில் ஒரு திரைப்பட சங்கத்தை தொடங்குங்கள், நல்ல சினிமாவை உலக சினிமாவை உங்களிடம் திரையிட்டு அது பற்றி விவாதியுங்கள், சிறிது சிறிதாக படைப்பு மற்றும் தொழிநுட்பம் ;பற்றி பேசுங்கள். நீங்களும் உங்கள் அளவில் ஒரு சிறிய கேமராவில் உங்களுக்கு தெரிந்த மொழியில் உங்களுக்கு பிடித்தவற்றை படம்பிடித்து நேர்த்தியாகத் தொகுத்து அதை திரை இட்டு விவாதியுங்கள். உங்களின் பிரச்சினைகளை உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகளை உரு ஆவணப்படம் போல் எடுத்து திரையிடுங்கள். 20 பேரிலிருந்து எல்லோருக்குமான சினிமா உருவாகும். இப்படி தான் உலகத்திலே மிக சிறந்த சினிமாக்கள் பரிணமித்தன என்பதை நினைவில் என்றும் மறக்காதீர்கள்.

அத்தோடு சிறந்த திரைப்படங்களை திரையிட்டுப் பாருங்கள். ஊரக சினிமாவில் ஈரானிய சினிமா தான் நம் மத்தியில் ஆரம்ப வகை திரையிடலுக்கு மிகவும் ஏற்றது. அதனால் கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுங்கள். முடிந்தால் அந்தப்படங்களை மொழி மாற்றம் செய்து உப தலைப்புடன் திரையிடுங்கள்.   அப்படி மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் நம்மிடம் நிறைய உண்டு. அத்தோடு சிறந்த உலக சினிமாவை உங்கள் ஊரில் திரையிடும் போது கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்யுங்கள். அப்போது தான் நல்ல சினிமா உங்கள் மத்திளில் வேர் கொள்ளும். கலந்துரையாடலின் போது படைப்புணர்வும், சினிமா   பற்றிய தேடலும் நம்மிடம் பெருகும். சுpலர் திரைப்பட இயக்க தேவைகளை நிராகரித்து அரசியல் நோக்குடன்  திரையிடுகிறார்கள் அப்படியான திரையிடல்களில் ரசனையோ நல்ல சினிமா பற்றிய உரையாடலோ ஏற்ப்பட வாய்ப்பில்லாமல் போவதோடு, நல்ல சினிமா வளர்வதற்காக தொடங்கப்பட்ட திரைப்பட இயக்கங்கள் இன்று திசை மாறிபோவதோடு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு போய் விடுகிறது. இந்த நிலமை ஏற்படாத வகையில் ஒரு திரைப்படத்தின் படைபடபு சார்ந்தும், ரசணை சார்ந்தும் அதன் உள்ளடக்கம் சார்ந்தும் மனதில் அது ஏற்படுத்திய அவஸ்தையை சார்ந்தும் கலந்துரையாடல் அமையும் போது நல்ல சினிமாவின் ரசணைப் பகிர்தல் வளர்வதோடு, பார்வையாளனும் படைப்பாளியாக மாற்றமடைய முடியும் என்பதை கலந்துரையாடலை நெறிப்படுத்தும் திரைப்பட ஆர்வலர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இப்படியான நோக்கில் நீங்கள் கலந்துரையாடலை படைப்பு சார்ந்து செய்யாத போது பார்வையாளன் தன்னிலிருந்தும் தன் அக உணர்வுகளிலிருந்தும் புதிய தேடலை தீர்மாணிக்கும் மனதின் தேடலைத் தீர்க்காத போது  பார்வையாளன் தன்னிலிருந்தும் திரைப்படம் அவனுள் ஏற்படுத்தி இருக்கும் உணர்வு நிலையிலிருந்தும் அவன் திருப்தி அற்றவனாக வெறுமை நிரம்பியவனாக திரையிடப்பட்ட நிகழ்விலிருந்தும் விலகிப் போவதற்கான  வாய்ப்புண்டு என்பதை திரைப்படம் பற்றிய கலந்துரையாடலை நெறிப்படுத்தும் கவனத்துடன் உசய்ய வேண்டும்.ஏதோ நெறிப்படுத்துவதென்பது தலைமைத்துவமும் தன்னை நிலை நிறுத்துவதற்கான அரசியல் களம் என்று நினைத்தால் அது பார்வையாளனையும் சினிமா ரசணை உள்ளவனையும் து}ரப்படுத்துவதோடு, நல்ல சினிமாவிற்கான தேடலையும் துண்டித்துவிடும்.

05

ஃபிலிம் சொசைட்டி மேலும் சில தகவல்கள்

பெங்க@ரில் உள்ள சுசித்ரா ஃபிலிம் சொசைட்டிக்கு சொந்தமாக ஒரு தியட்டரே இருக்கின்றது. மோகநு}ரில் உள்ள சொசைட்டி (சர்க்கரை தொழிழக ஊழியர்கள்) தரையில் அமர்ந்தே படம் பார்க்கிறார்கள், விவாதிக்கிறார்கள். மிகப்பழையப்படங்களை பார்க்கவும் சொசைட்டியில் வாய்ப்பு இருக்கிறது.  சென்னையில் ‘ மார்த்தாண்ட வர்மா” என்ற பேசாத படம் (ஊமைப்படம் 1930 -க்கு முன் வெளிவந்தது.) திரையிடப்பட்டது. ஓர் ‘hர்மோனியக்காரரும், ஒரு மிருதங்கக் கலைஞரும் திரைக்கு எதிரே உட்கார்ந்து, கதை ஓட்டத்திற்கு ஏற்ப வாசித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
டைரக்~ன் துறையில் சிறந்து விளங்கும் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யுட் மாணவர் ஒருவருக்கு ஒவ்வொரு வருடமும் 500 ரூபாய் பரிசுத்தொகையும் விருதும் வழங்கி கௌரவிக்கின்றது சென்னை ஃபிடரே~ன். பாசு சட்டர்ஜி, மிருனால் சென் போன்றவர்கள் இந்த மாதிரி அமைப்புகளின் ஊக்கத்தால் உயர்ந்தவர்களே. கேரளாவில் ஃபிலிம் சொசைட்டிகள் மிகப் பெருகி இருக்கின்றன. அடூர் கோபாலகிருஸ்ணன் இம்மாதிரி சொசைட்டிகளை சார்ந்து வளர்ந்தவர்கள் கேரளாவில் இன்று’ ஈ நாடு” ‘ இனி யெங்கினும்” போன்ற படங்கள் வருவது இந்த சொசைட்டிகளின் பாதிப்பினால்தான்.

ரீஜினல் ஃபிலிம் புரோமோடிங் சொசைட்டி என்ற அமைப்பு, ஃபெடரே~னோ அல்லது சொசைட்டியோ தமக்கு சொந்தமாக ஒரு படம் வாங்கிக்கொள்ள பணம் கடனுதவி செய்கிறது. சென்னை ஃபெடரே~ன் அவள் அப்படித்தான், பிரதி~;மா, காடு போன்ற படங்களை வாங்கி வைத்திருக்கிறது. புpராந்திய மொழிப் படங்களில் ஆங்கில உப வாசகங்களை இணைத்து வட இந்தியாவில் உள்ள சொசைட்டிகளுக்கு ஃபிடரே~ன் அனுப்பி வைக்கிறது.கல்கத்தா ஃபிலிம் சொசைட்டி உறுப்பினர்கள் தாமே சொந்தமாகப் படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள். ஃபிடரே~னில் இனனொரு வசதி மினி நு}ல் நிலையம். சோசைட்டி உறுப்பினர்கள் இங்கு உள்ள அருமையான
சினிமா பற்றிய உலகப் பெரும் டைரக்டர்களின் புத்தகங்களைப் படித்துப் பலன் பெறலாம்.

டெலிவி~னில் ‘ சினிமா எடுக்கும் முறை’ பற்றி ஒரு தொடர் வெளியிடப்பட்டது. இதற்குக் காரணம் ஃபிலிம் சொசைட்டிகள் தான். டேல்லி ஃபிலிம் பெடரே~ன் தேர்;ந்தெடுத்து இந்திய அரசு அங்கீகரிக்கும் படங்கள் எல்லாம் மாநிலங்களில் சொசைட்டிகளில் வெளியிட அந்த மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
06

 உலகத்தில் மிகச் சிறந்த இயக்குனர்களாக கருதப்பட்ட அணைவரினதும் சிறப்புக்கு பின்பு நல்ல திரைப்படங்களும் திரைப்பட இயக்கங்களின் உறுதுணையும் இருந்துள்ளதை இங்கே நினைவு படுத்தி செல்லலாம் என்று நினைக்கின்றேன். அந்த வகையில் நம் நாட்டிலிருந்து தென்னகம் சென்று தன் திரைப்படங்களின் மூலம் புகழ்ப் பெற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பானுமகேந்திராவின் நினைவுகளை நாமும் பகிர்ந்து கொள்வோம்:

நான் படிச்ச பள்ளி ஜெஸ்யுட் பாதிரிமார்கள் நடத்தின பள்ளி. ஏனக்கு ஆசிரியராக இருந்த ஃபாதர் டோரி பெரிய ரசிகர். அப்பவே 6.00 மணிக்கு மேல 16 எம் எம்- ல தினமும் படம் பாமிப்பாரு ‘ பைசைகல் தீவ்ஸ்” படம் அங்க தான் முதல்ல பார்த்தேன். ‘புனே இன்ஸ்டிடியுட்” எல்லாம் அப்புறம் தான். அப்ப நான் தொடர்ந்து பார்த்த சினிமாவோட தாக்கம் எனக்கு பயங்கரமா இருந்தது. ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாதிரியார் புரொஜக்டர் மூலம் காண்பிச்ச படங்கள் பாதிப்பை ஏற்படுத்திச்சி. ஏன்று கூறுகிறார். பாலுமகேந்திரா
முதலாவதாக திரையிடும் படங்கள் எல்லோருக்கும்  ஓரளவுபுரிகிற கதைப்படங்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எடுத்த எடுப்பில் சிக்கலாகத் தோன்றும் படங்களைக் காட்டினால் அவற்றிற்குப் பழக்கமற்ற பார்வையாளர்கள் குழம்பிப் போகலாம். அதனால் மிகச்சிறந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட வேண்டும். பார்வையாளர்;கள் தொடர்ந்து வருவதும் இதனால் பாதிக்கப் படலாம். செக்ஸ் காட்சிகள் நிறைந்தப் படங்களையும இது போலவே துவக்கத்தில்  தவிர்ப்பது நல்லது. படம் பார்க்க வருபவர்கள் சினிமா சங்கத்தின் செயற்பாடு குறித்து தவறாக அபிப்ராயம் கொள்வதை இதன் மூலம் தவிர்க்கலாம்.

உலக சினிமாவில ஈரானிய சினிமாதான் நமது பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா  பற்றிய புதிய கதைகளை திறந்து வைப்பதற்கான மிகச் சரியான திரைப்படமாக இருக்கும் என்பது எனது திரையிடல்களில் நான் கண்ட அனுபவம். ஈரானிய சினிமாவில் கதை சொல்லும் விதம், காட்சிகள், அழகியல், மற்றும் கதாப்பாத்திரங்களின் தேர்ந்த நடிப்புத் திறன். நடிகர்களின் வெளிப்பாடும், வாழ்வை மிக அருகில் கொண்டு வந்து பார்வையாளனின் அகத்தை ஊடுருவும் கலை நேர்த்தியும் நமது பார்வையாளர்களுக்கு பிடிக்கும் அத்தோடு நமது தமிழ் மனம் கதை தேடும் மரபுகள் கொண்டது, அதனால் ஈரானிய சினிமாவில் கதை சொல்லும் வகை நமக்கேற்ற வகையுடன் இருப்பதனால் நமது பார்வையாளர்களிடம் அத்திரைப்படங்கள் பெரும்பான்மையாக திரையிடவதனால் அது நல்ல சினிமாவுக்கான புதிய வாசல்களை பார்வையாளனின் மனதில் தேட செய்யும், நல்ல சினிமா பற்றிய  மனப்பதிவு” இறை அருள் மாதிரி அவனுள் இறங்கும். ஆதன் பின்பு நர்ர சினிமாவை கொண்டு செல்வது இலகுவான விடயம் அதனால் ஒவ்வொரு படம் திரையிடப்படும் பொழுதும் அப்படத்தின் கதை சுருக்கம், அப்படத்தினல் பார்த்து ரசிக்க வேண்டிய அம்சங்கள் போன்றவற்றை சிறு பிரசுரங்களாக விநியோகிக்கலாம். ஒரு சில நல்ல படங்களை திரையிடப்பட்ட பின்னர் படங்களைப் பற்றிய அங்கத்தினர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு ஏற்பாடு செய்யலாம். பல முறை பார்த்து ரசித்து புரிந்துக் கொள்ள வேண்டிய படம் என்று ஒரு படத்தை பார்வையாளர்கள் எண்ணினால் அவற்றைப் பற்றிய விபரங்களுடன் மீண்டும் திரையிட்டு திரனாய்வு செய்து, நம் மனப்பதிவை எழுதி வெளியிடலாம்.

உங்கள் பகுதியில் ஒன்று கூடுவதற்கும், கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்வதோடு சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்கள், நல்ல சினிமா சஞ்சிகைகள் ஆகியவற்றை அங்கத்தினர்களுக்கு வரவழைத்து தரலாம். ஓத்த கருத்தும், புதிய சிந்தனையும் கொண்ட நால்வர் ஒன்று கூடினால் தகுந்த செயற்பாட்டிற்கான புதுப்புது எண்ணங்கள் இயல்பாகவே தோன்றும். நல்ல சினிமாவை மக்களிடம்  கொண்டு செல்வதற்கு, நம் மத்தியில் ஒரு திரைப்பட கழகத்தை ஏற்படுத்துவதற்கும் நாம் செய்கினற அதேவேளையில், திரையிடப்படும் திரைப்படங்களின் கருத்து, காட்சி, மற்றும் அது நமது சமூக சூழலுக்கும், அரசியல், புறகாரண காரிய சூழலுக்கும் பொருத்தமானதாக இருக்கின்றதா என்பதைக் கண்டு உணர்ந்து ஆய்வு செய்து திரையிடவும், முதல் முறையாக செய்வதனால் மிகுந்த கவனத்துடன் இவைகளை முன்னெடுக்க வேண்டும்.

Advertisements