ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!


 

மக்கள் திரைப்படக் கலைஞன் ஜோன் ஆபிரஹாம் பற்றிய ஒரு குறிப்பு

மாரி மகேந்திரன்

01

ஜோன் ஆபிரஹாமை பற்றி எழுதுவதென்பது அரூபமான ஒரு நவீன ஓவியத்தை தரிசிப்பது போல உணர்ச்சிகளின் கொந்தளிப்பை அவரின் வாழ்வு எனும் கடினமான இருப்பு நமக்குள் ஒரே நேர்கோட்டில் இரு வேறு உணர்வுகளை தரும் ரகசியமான ஒரு அவஸ்தை என்றுதான் எனக்கு எழுத தோன்றுகின்றது.


ஜோன்  ஆபிரஹாம் என்ற இந்த பெயரை நான் முதன் முதலில் கேள்விப்பட்டது “சலனம்’ என்ற திரைப்பட இதழின் வாயிலாகத்தான். 1993 ஆம் ஆண்டளவில் அப்போது அட்டனில் இருந்த கேசவன் புத்தக நிலையத்தில்  “சலனம்’ என்ற இரு மாத சினிமா சஞ்சிகையை  பார்த்து  ஆச்சரியத்துடன் வாங்கி படித்தபோது அதில் ஜோன் ஆபிரஹாம்  பற்றிய நு}லின் விளம்பரத்தை பார்த்து மனதில் இவர் யாராக இருக்கக் கூடும் என்பதை புரியாமல் இது புனை கதையாக இருக்குமோ என்று எண்ணி கொண்டாலும் அதன் பின்பு தமிழகத்திலும் கேரளாவிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் ஜோன் ஆபிரஹாமை பற்றியும் அவரின் ஒடேஸா (o மக்கள்  திரைப்பட இயக்கம் பற்றியும் கேள்விப்பட்டதோடு, ஓடேஸா தோழர்கள் மதுரையில்  திரைப்பட திரையிடங்கள் செய்யும்போது  பேசியதோடு அதன் பின்பு திருவனந்தபுரத்தில் நிகழும் பன்னாட்டு திரைப்பட விழாவில் சி.வி.  சத்தியன் மூலமாக ஜோன் ஆபிரஹாமை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டதுண்டு. சி.வி.  சத்தியன்தான் தற்சமயம் ஒடேஸாவை  தொடர்ந்து கொண்டு  செல்கிறார்.
ழுனநளளய தூழn யுடிசயாயஅ வுசரளவ  என்ற அமைப்பின் மூலமாக கேரளத்தில் திரைப்பட பணிகளை ஆற்றி வருகிறார்கள். இப்படியாக ஜோன் ஆபிரஹாம் எனக்குள் உள்வாங்கப்பட்டதோடு, கால போக்கில்  காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன் திருநெல்வேலியிலிருந்து பல்வேறு கால கட்டங்களில் தொகுத்த மிக அற்புதமான நு}லான “ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை என்ற நு}லை 2000 வருடத்தில் நிழல் நடமாடும் திரைப்பட இயக்கமும் தாமரைச் செல்வி பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட போது என்னளவில் 5 பிரதிகளை விற்பனை செய்து கொடுத்ததோடு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு தமிழ ;இனி மாநாடு கருத்தரங்கில் வைத்து அன்பளிப்பாக வழங்கிய போது அவர் சந்தோசம் கொண்டதை  மறக்க முடியாது. அந்தனி ஜீவா ஜோன் ஆபிரஹாமை பற்றி அடிக்கடி சொல்வதை கேள்விப்பட்டதுண்டு.


ஜோன் ஆபிரஹாம் என்ற மகத்தான கலைஞன் பற்றி எனக்குள் கடவுளை போல எண்ணி வந்திருக்கின்றேன். இன்னும் அவரின்  நினைவுகளில் இருந்து எனது மன பிரக்ஞை வெளியே வர முடியாத படிக்கு அவரின் மகத்துவம் மேல் இதயம் இறுக்கமாக கட்டுண்டு  கிடக்கின்றது. கேரள சர்வதேச திரைப்பட  விழாக்களில் மலையாள திரைப்பட இயக்குனர்களான
aravindan_c

aravindan_c

 

ஜி. அரவிந்தன், சாஜி கைலாஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், ரி.வி. சந்திரன், எம்.டி. வாசுதேவநாயர், கே.ஜி. ஜோர்ஜ் இப்படியான மலையாள திரைப்பட உலகத்தின் சிறந்த திரைப்பட மேதைகளுக்கு இல்லாத அருகதையும் மக்கள் சினிமா மேல் தன் கடைசி உயிர் பிரியும் வரையும் நம்பிக்கை கொண்டு போராடிய கலைஞன் ஜோன் ஆபிரஹாம். ஜோனின் வாழ்வும், சினிமா கலையும் ஒன்றை ஒன்று நேர்மையும் நேர்த்தியும் கொண்டது. அவருடன் படைப்பு சார்ந்து ஒப்பிடக் கூடிய மற்றொரு மøலயாள திரைப்பட மேதைஃ அபூபக்கரையும் (“”நிறம்” திரைப்பட இதழில் இவர் பற்றி படிக்கலாம்)
ஆடுர்

ஆடுர்

சொல்ல முடியும். அபூபக்கரின் திரைப்படங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை தனது கால மனசாட்சியோடு தேடிய போது ஜோன் சமூகத்தின் அரசியலையும் மனித வாழ்வில் குற்றவுணர்வின் தவிர்க்க முடியாத தீராத முரண்களையும் அவிழ்த்து பார்க்கும் முயற்சியோடு அன்பின் மொழியை தனது படைப்புணர்வின் அசலாக கண்டறிய முற்பட்ட கலைஞன் ஜோன் ஆபிரஹாம் அதனால்தான் ஸக்கரியா “ஜோன் ஆபிரஹாமாக ஆவது என்பது அசாத்தியமே!’ என்று எழுதியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
02
 
 
 
 
 
 

 

1937 ஆகஸ்ட் 11 ஆம் திகதி ஜோன் ஆபிரஹாம் பிறந்தார். இனி ஜானைப் ஜானே சொல்வதை கேட்போம்.
என்னுடைய ஊர் குட்ட நாடு. ஆனால் நான் பிறந்தது குன்னங்குளத்தில் விடுதலைக்கு முந்தையஅந்தப்  பொழுதில் என் அப்பா தலைமறைவு அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
 என் குழந்தைப் பருவமும் ஆரம்பக் கல்வியும் குட்ட நாட்டில் கழிந்தது. பள்ளி இறுதியை அடையும் முன் பதினொரு பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. எனக்கு விருப்பமானது இலக்கியம் என்றாலும்  கோட்டயம் சி.எம்.எஸ். கல்லு}ரியில் பொருளாதாரம் பட்டம் பெற்றேன். பின் தார்வார் பல்கலைக்கழகத்தில் அரசியலை  முதுகலைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அதை முடிக்கும் முன்  v.ஐ.இ. யில் வேலை கிடைத்ததால் கோயம்புத்து}ருக்கு வந்துவிட்டேன்.
கல்லு}ரியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே அரசியலில் நான் தீவிரமாக ஈடுபட்டேன். தேர்தலில் நான் தனியாக நின்றும் வெற்றி பெற்றிருக்கிறேன். உண்மையில் எனது அரசியல் எனது தகப்பனõருடைய அரசியலின்  சாயலாகத்தான் இருந்தது. உள்ளூர்த் தொழிலாளர்களின் து}ண்டுதலால்தான் நான் அரசியலில் கால் ஊன்றுவதற்கு முக்கிய காரணம். மார்த்தோமா கல்லு}ரியில் ஆர்ட்ஸ் கிளப் செயலாளர் பதவிக்காக நடைபெற்ற கடும் போட்டியில் கோட்டயத்தைச் சேர்ந்த எதிர்வேட்பாளரை வெற்றி  கொண்டேன்.
எங்களுடையது ஒரு  நடுத்தர வர்க்க சாதாரணக் குடும்பம். மத விவகாரங்களில்

 
 
 
ஐந்து வயதிலிருந்தே திரைப்படம் பார்க்கத் துவங்கிவிட்டேன். ஒரு நல்ல பாடகனாக வேண்டுமென்ற விருப்பமிருந்தாலும் ஒரு திரைப்படக் கலைஞனாக வேண்டுமென்பதே எனது ஆழ்மனதில் படிந்து கிடந்த ஓர் அபிலாஷை. குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி ஓர் எண்ணம் என் மனத்திலோ, நனவிலோ மனத்திலோ இருந்திருக்கலாம். என்றாவது ஒரு நாள் சினிமா எடுப்பேன் என்று அன்றே என் நண்பர்களிடம் நான் கூறியதுண்டு. காரணம், என்னுடைய தாத்தா.
தாத்தாதான் என் குரு. அவர் ஓர்  ஓய்வுபெற்ற இன்ஜினியர். அவரிடம் போட்டோகிராஃபி மற்றும் சினிமாவைப் பற்றிய நிறைய நு}ல்களும், ஒரு பழைய மூவி கேமராவும் ஒரு புரொஜக்டரும்  இருந்தது. அவருடைய புத்தகங்களையெல்லாம் என்னை வாசித்துக் காட்டச் சொல்வார். அதற்குக் காலணாவோ, அரையணாவோ கொடுப்பார். அவர்தான் எனக்கு சினிமா பார்க்கக் கற்றுத் தந்தார். உண்மையிலேயே அவர் ஒருமேதை. இன்று அவருடைய  திறமையில் கால் பங்குக் கூட என்னிடம் இல்லை.  அவருடைய பெயர்தான் எனக்கும் என் முழுப் பெயர் ஜேக்கப் ஜான்.
1965 ல் பூனா திரைப்படக் கல்லு}ரியில் சேர்ந்தேன். திரைப்படக் கல்லு}ரியில்,  பழக்கப்படாத வேறுவித சினிமாக்களைப் பார்த்தபொழுது முதலில் எல்லோரையும் போல் எனக்கும் குழப்பம் தான் உண்டானது. காலப் போக்கில் அதுவரை என்னிடம் திரைப்படம் குறித்த  கருத்தாக்கங்களை எல்லாம் அடியோடு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.  ஒவ்வொரு திரைப்படத்தைக் காணும்போதும் புதிய அனுபவங்களும் சிந்தனைகளும் உருவாவதுண்டு. இங்மர் பெர்க்மன், அந்தோணியானி, லு}யிபுனுவல், குரோசவா… இப்படி மேதைகளின் படங்களையும் பார்த்ததுண்டு. ஆனால் ஒரு தடவை கூட, அப்படிப்பட்ட  திரைப்படத்தை இமிடேட் செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. நான் புதிதாக எதையாவது படைக்க விரும்பினேன். அதுவே அன்று எனக்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதாவது நமக்குரிய முறையில் ஏதாவது ஒரு படைப்பு, அது முழுமையாக என்னிலிருந்தே வர வேண்டும். அதுதான் அன்றைய எனது சிந்தனைப் போக்கு?
03
ஜோனின்  சினிமாவின் உயிர்ப்பு. இந்த இடத்திலிருந்துதான் தனித்துவம்  கொண்டதாக பரிணமிக்கின்றது. அவரின் இந்த தனி வழி பயணம் தன்னுடைய அத்தனை சுயமான நடவடிக்கைகளிலும்  வெளிப்படுத்த துவங்கியிருக்கின்றது. அவரின் இந்த தனித்துவமான  தனக்கேயுரிய பயணம் அவரின் அன்றாட நிகழ்வுகளிலும்  அது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. அது தனது கலை மனதை எந்தவிதமான வியாபார சு10தாட்ட  நிர்பந்தத்திற்கும் சமரசம் செய்யாமல் மிகவும் கடினமானதொரு வாழ்வுக்கு தன்னை உட்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார். அவரின் சினிமா வேட்கை வாழ்க்கையை, சமூகத்தை அன்றாடம் நிகழும் சராசரி பொழுதின் மேல் கோபமாக  வீசுகின்றது. போலிகளற்ற  அவரின் து}ய ஆத்மா இந்த பிசாசுகளின்  கூடாரத்தோடு போராட முடியாமல் திணறுகின்றது.அந்த திணறலின் உள் வலிதான் ஜோன் ஆபிரஹாம். அதனால்தான் அவரை அவர் வாழ்ந்த காலத்தை சக படைப்பாளிகளும் நண்பர்களும் முரண்பாடுகள் புதைந்த மனிதனாக பார்க்க  செய்துவிட்டது.

“ஜடமாயிருக்கப்  பழகிவிட்ட சமூகத்தில்
சுரணையுள்ளவன் படும்பாடு மனநிலை
பாதிக்கப்பட்ட வாழ்வாக மாறினால்
ஒழிய மாளாது என்றே உள்ளோடுகிறது
உயிர் நடுக்கம்’

என்று கவிதா சரண் என்ற சிறு சஞ்சிகையின் ஆசிரியர் எழுதியிருந்த அர்த்தபூர்வமான குறிப்பை ஜோனின் துயரமான நெடிய வாழ்வுடன் பொருத்திப் பார்க்க தோன்றுகின்றது.

ஜோன் சினிமாவை  ஆத்மாவின்  பகுதியாகவே நேசித்தார். சினிமாவை  வர்த்தக சு10டாட்டத்தின் வியாபார மலிவான  சரக்காக பார்க்க தெரியவில்லை. மக்களின் வாழ்வுக்கும் புத்திக்கும் சினிமா என்பது ஏதாவது செய்ய வேண்டும் எனது கனவு கண்டவர்களில் ஜோனும் ஒருவர். ஜோனின் கனவு அனைவரையும் விட சிறிது கடினமானது. சினிமாவை இத்தனை உணர்வுபூர்வமாக நேசித்தவர்களை  உலக சினிமாவில் கூட காண முடியாது.

“எனது சக மனிதர்களுடன் தொடர்புகொள்ள நான் தேர்ந்தெடுத்த சாதனம்தான் சினிமா’ கேமராவின் மொழியே திரைப்படம். இந்த மொழியை தன் வெளிப்பாட்டுக்காக கலைத்தன்மையுடன் பயன்படுத்தும் போதுதான் அது கலையாகிறது. கலைப்படைப்பு என்றால்  சுதந்திரம் என்று அர்த்தம். அடிப்படையில் அது மானுட மதிப்பீடுகளின் உண்மையைத் தேடுவது.  திரைப்படமும் பிற  எந்தக் கலையையும் போலவே மனித வாழ்க்கையுடன் உறவு கொண்டது. சமூகத்தில் ஓர் அங்கம் என்ற நிலையில் எனது சினிமாவும் அந்தக் கடமையைத்தான் மேற்கொள்கிறது. திரைப்படம் ஒரு காட்சி சாதனம். ஆனால் வெறும்  காட்சியம்சங்களை வைத்துக் கொண்டு நல்ல சினிமா உருவாகிவிடும் என்பதில்லை,  அதற்குள் கலைஞனின் சொந்த அடையாளம் அதாவது பார்வை (ஏளைழைn) உருவாக வேண்டும். எனது திரைப்படம் என்று சொன்னால் அது  எனது பார்வை. அதில் நீங்கள் என்னையே காண்கிறீர்கள். எனது துக்கங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள், எதையும் நான் அதில் மறைத்து வைப்பதில்லை.  அதில் நான் உட்பட்ட சமூகத்தோடு என்னைப்  பார்க்கிறேன். நான் பார்ப்பது இன்னொருவர் பார்ப்பது போலல்ல, யதார்த்தங்களின் உண்மையை அல்ல, உள்முகமான உண்மையையே நான் ஆராய்கிறேன். தகவல்களை அதன்  யதார்த்த கண்ணோட்டத்தில் காண்பதே என்னுடைய  தேவை.

04

ஜோன்  ஆபிரஹாமை நாம் புரிந்து கொள்வதென்பது ஆசாத்தியமே. ஏனென்றால் அவரின் திரைப்படங்களை நாம் பார்ப்பதற்கோ விவாதிப்பற்கோ  இங்கே எந்தவிதமான சு10ழலும் இல்லை,  அனைத்து ஊடகங்களிலும் வணிக சினிமாவின் செய்திகள்தான் பேயனெ கலந்திருக்கின்றது. நல்ல சினிமாவை தேடும் நம் சமூகத்தின் படிப்பாளிகளும் ரசனையாளர்களும் இந்த ஊடகங்கள் திணிக்கும் பொய்களையே  திரும்ப திரும்ப  படிக்க வேண்டியுள்ளது. இது நமக்கும் நம்  சந்ததிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் காலத்தின் துயரம். நல்ல சினிமாவை தேடும் ஒரு தலைமுறையின் பசியை தீர்க்க இங்கு நம்மிடம் எதுவுமே இல்லை. என்பது நமது துயரமே. அதனால் ஜோன் ஆபிரஹாம் போன்றவர்களைப் பற்றிய தேடலை இப்படிதான் எழுத  வேண்டியுள்ளது.

“”1969  ல் கல்லு}ரியிலிருந்து வெளிவந்த பின் முதல் முறையாக மணிகௌலுடன் உஸ்கிராட்டியில் வேலை செய்தேன். அது ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. அதன் உள்ளடக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தி நாடகாசிரியரான மோகன்ராகேஷின் கதை அது. டில்லியில் இருக்கும்பொழுது நானும் மணிகௌனும்  சேர்ந்து திரைக்கதையைத் தயார் செய்தோம்.
அப்பொழுது இமயமலைøயப் பற்றி ஃபிலிம் டிவிஷனுக்காக  ஒரு டொக்குமெண்டரி இயக்கும் வேறு ஒரு வாய்ப்பு கிடைத்தது. உண்மையில், அதை இயக்கிக் கொண்டிருந்தவருக்கு விபத்து நேர்ந்ததால் என்னிடம் ஒப்படைத்தார்கள். அதுதான் என்னுடைய முதல யுளளபைnஅநவெ;.
உஸ்கிரொட்டி திரைப்படத்திற்கு பின் சென்னை வந்தேன். ஆஸாத், கே.ஜி. ஜார்ஜ், பாலு மகேந்திரா முதலிய திøரப்படக் கல்லு}ரி தோழர்கள் அனைவரும் ஒரு லாட்ஜில் தங்கினோம். அப்பொழுதுதான்  வித்யார்த்திகளே இதிலே, இதிலே’ என்ற படம் துவங்கியது. ஆஸாத்தான் அதற்குக் காரணம், அதற்குப் பின் “”ஜோசப்’ என்ற புரேகிதன்’ என்ற திரைப்படத்திற்குத் திட்டமிட்டோம். நானும் சக்கரியாகவும் சேர்ந்து சினிமாவுக்காக எழுதிய கதை அது. அதன் திரைக்கதை வேலைக்காக  கோயம்புத்து}ரில் தங்கியிருந்தபோது, “அக்ரஹாரத்தில் கழுதை’ யின் கரு முதன் முதலாக எனக்குத் தோன்றியது. ஒரு மாலையில் சக்கரியாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தேன். நிறைய பிராமணர்கள் தங்கியிருந்த ஓர் அக்ரஹாரம் வழியாக வந்தபொழுது நிறைய கழுதைக் குட்டிகளைப் பார்க்க அழகாயிருந்தது. நாங்கள் அகதைப் பற்றி பேசியவாறே நடந்தோம். எத்தனையோ வகையான  மிருகங்களை மக்கள் வளர்க்கிறார்கள். ஆனால் ஒரு கழுதைக் குட்டியை யாரும் வளர்ப்பதில்லையே என்று யோசித்தேன். அக்ரஹாரத்தில் ஒரு பிரமாணன் கழுதை வளர்த்தால் என்னவாயிருக்கும் நிலைமை? அங்குள்ள பிராமணர்களுடைய வாழ்க்கையை நான் நன்கறிவேன். அப்படி ஒரு சு10ழலில்தான் “கழுதை’ யை உண்டாக்கினேன், “கழுதை’ துவக்கம் முதல் முடிவுவரை முழுமையாக என் படைப்பாக இருந்தது.
1978 ல் “அக்ரஹாரத்தில் கழுதை’ வெளிவந்தது. படத்தை நான் பார்த்தபோது கதையை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று தோன்றியது. பொருளாதாரப் பற்றாக்குறையினால் நினைத்தபடி சிலவற்றை திரைக்குக் கொண்டுவர முடியவில்லை, தொழில்நுட்பத்தை அலசும்போது பல குறைபாடுகள் இருக்கும். ஆனால் அது எதுவுமே சினிமாவின் சாரத்தினை வெகுவாகப் பாதிக்கவில்லை.  அன்றைய தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால் மிகவும் நல்ல பிராந்திய திரைப்படம் என்ற விருது “கழுதை’க்குக் கிடைத்தது. அதுவும் இதற்கு இன்னொரு காரணம் உண்மையில் எந்த சமுதாயத்தையும் அதில் விமர்சிக்கவில்லை, பிறகு அவர்களுக்கும் இது சரியெனப்பட்டது. தமிழ்நாட்டில் அதைத் திரையிடுவதற்கான சந்தர்ப்பம் நழுவிப் போனது. “ஜனசக்தி பிலிம்ஸ்’ அதை விநியோகத்திற்கு எடுத்துக் கொண்டது. அவர்கள் அதை தமிழ்நாட்டில் திரையிட வேண்டிய கட்டாயமிருந்தது. ஆனால் அவர்கள் அதற்கு முனையவில்லை. படமெடுத்தால் மனிதர்களுக்குக் காட்ட வேண்டும் என்பது மேலான தர்மம். என்னுடைய படத்தை (அக்ரஹாரத்தில் கழுதை) மக்களிடம் காட்டினால் மக்கள் அதை விரும்பவார்கள் என்று எனக்கு நன்கு  தெரியும். ஆனால் அவர்கள் அமிதாப்பச்சனையும் எம்.ஜி. ஆரையும் மட்டும் பார்க்கக்  கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ரசனை மலினப்படுகிறது. நாம் இப்பொழுது நல்ல படங்களைப் பார்க்கத் து}ண்டுவோம். இதுவரையிலான முறையை மறுக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் படங்கள் நாலோ ஐந்தோதான். அறிவுஜீவிகளுக்காக மட்டும் எடுக்கப்படும் படங்கள் ஒரு வகை அறிவுபூர்வமான சுய இன்பம்  என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோரும் புரிந்து கொள்வதற்காகத்தான் படம். மனித வாழ்க்கையுடன் அவை நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.”

05

ஜானின் “அக்ரஹாரத்தில் கழுதை’ திரைப்படத்தின் கடைசி பிரதி ஏ.வி.எம். நிறுவனத்திலிருந்து மக்களிடம் அப்படம் சென்று சேர கூடாது என்கிற வஞ்ச நோக்குடன் தீக்கிரையாக்கப்பட்ட செய்திகளோடு ஜோன் ஆபிரஹாம் பற்றிய செய்திகளையும் நல்ல சினிமா பற்றிய விபரக் குறிப்புகளையும் தமிழக வெகுசன இதழ்கள் செய்திகள் கூட வெளியிடுவதில்லை என்பதிலிருந்து சினிமாவின் அரசியல் எப்படியான நலத்தை காப்பாற்றி வருகின்றதென்பதை நம்மவர்களும் புரிந்து கொள்ள முனைய வேண்டும்.
ஜோன் ஆபிரஹாமின் தனித்துவம் அவர் கூறியதுபோல்,
“நமக்குரிய முறையில் ஏதாவது ஒரு படைப்பு, அது முழுமையாக என்னிலிந்தே வர வேண்டும். அதுதான் அன்றைய எனது சிந்தனைப் போக்கு.
என்பதாக அவரின் தேடல் ஒரு புதிய சினிமாவுக்கான தேடலுடன் வாழ்வை அர்ப்பணித்தார். முரண்பாடுகளும்  வஞ்சனைகளும் பொய்களும் போலிகளும் நிறைந்த வாழ்வை அவரால் எதிர்கொள்ள முடியாது போகின்றது. நாடோடி தனமான வாழ்க்கையும், சமூகத்தின் மேலிருக்கும் கோபத்தை வெளிப்படுத்த முரண்பட்ட ஆளுமையை அவர் தனது சராசரி வாழ்வொன்றின் மேல் பிரயோகிக்கிறார். அவரோடு அவரின் திரைக்கதைக்கு பணிபுரிந்த வெங்கட் சாமிநாதன் அவரைப் பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருந்தாரோ தெரியவில்லை. ஆனால் அவரே ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கின்றார்.
“அவரின் ஏற்றுக்கொள்ள  முடியாத பழக்கங்களும் தன்னிச்சையான பொறுப்பற்ற நடவடிக்கைகளும் அவரது நண்பர்களை  சில நேரங்களில் கோபமூட்டியது உண்டு. ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு குறும்புப் புன்னகையுடன் வழக்கம்போல இருப்பார். நடைமுறை உலகத்தோடு ஒத்தோட முடியாத அவரது இயலாமை நிஜம். ஜானின் நேர்மை சந்தேகத்திற்கிடமில்லாதது.’
ஜானின் நேர்மை மக்களின் துயரம் சார்ந்தது. மக்களின் விடுதலையை தனது படைப்புகளின் வழி தேடியவர்  ஜான். ஜான் காசுக்கும், புகழுக்கும் பணத்திற்கும் கடுகளவு கூட ஆசைப்படாதவர். அவர் சமூகத்தின்  உண்மையை தனது படைப்பின் மூலம் கண்டறிவதிலும் விடுதலையை தேடிய ஆத்மீக கலைஞன் ஜான்.
உலக திரைப்பட மேதைகளிடம் யாரிடமும் இல்லாத பண்பு ஜானிடம் இருந்தது. அது “அம்ம அறியான்’ என்ற திரைப்படம் உருவான விதம் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை செய்திராத புதிய முயற்சி இத்திரைப்படம். அதன் உள்ளார்ந்த இசையை போல் ஜானின் ஆளுமையை வெளிப்படுத்தினாலும் அத்திரைப்படத்திற்காக ஜான் மக்கள் மீது தான் வைத்திருந்த அபரிதமான நம்பிக்கை. நல்ல சினிமாவை சாதாரண மக்களிடம் எடுத்து சென்ற விதம், அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் எளிய மக்களின் துயரத்தை தேடிய ஆன்மா, “அம்மா அறியான்’ திரைப்படம் எடுக்க, கேரளத்தின் வடக்கு முதல் தென்கோடி வரை சுவரொட்டி ஒட்டி,  தமுக்கடித்து, பொதுமக்களிடம் பணம் திரட்டி படம் எடுத்த முறையை   தமிழர்கள் அறிய வேண்டும் என்கிறார் நிழல்  சினிமா சஞ்சிகையின் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு. இந்திய சினிமாவில்  இப்படியான விதி விலக்கான புதிய வழியை கண்டறிந்து அதில் தனது மகத்தான பெயரை நிரப்பியவர் ஜான்.
இன்று நம் சு10ழலில் திரைப்படத்திற்கான பொருளாதாரத்தை  பேசுகின்றோம், ஆனால் ஜான் பொது மக்களிடம் கையேந்தி பணம் வசு10ல்  செய்து ஒரு அற்புதமான படைப்பை முற்றிலும் புதிய மொழியில் உருவாக்கியவர் ஜான் ஆபிரஹாம்.
“அம்ம  அறியானைப் போன்ற திரைப்பட வடிவமும் இந்திய சினிமாவில்  இதுவரை இல்லை. இவ்வேளையில்தான்  நாம் ஜோன் ஆபிரஹாமின் ஆளுமையினையும் ஒட்டுமொத்த சிந்தனையினையும் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது’ என்கிறார் ஆர்.ஆர். சீனிவாசன்.

Vidyarthikale Ithile Ithile - 1971

Vidyarthikale Ithile Ithile - 1971

தன் மனசாட்சிக்கு சரி என்பதற்காக அவரின் பயணம் மற்றவர்களுக்கு எரிச்சலை  ஏற்படுத்துகிறது. ஆனால் ஜோன் ஆபிரகாம் போல் தனது சினிமாவை இத்தனை ஆழமாக அன்பு செலுத்தியவர்கள் குறைவுதான். சினிமாவை வாழ்வின் பகுதியாகவும் விடுதலையின் குறியீடாகவும் கண்டவர் ஜோன் ஆபிரஹாம்.
06

 

 

 

 

 

 

 

 

“”1970 ல் வெளியான எஸ்பினோசா எழுதிய “நேர்த்தியற்ற சினிமாவிற்காக’ (குழச வாந ஐஅpநசகநஉவ ஊiநெஅய்) என்ற அறிக்கையில், “இன்றைய நேர்த்தியான சினிமா’ வானது தொழில்நுட்ப ரீதியிலும் அழகியல் உணர்வுகளிலும் சிறப்பான தன்மையைப் பெற்ருக்கிறது. ஆனால் இது மிகவும் பிற்போக்கான சினிமாவாக உள்ளது’ என்கிறார். இதற்கான காரணங்களையும் நியாயங்களையும் விளக்கும் எஸ்பனோசா
“மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சி பெறும் பொருளாதார முன்னேற்றத்தில் வணிகத் திரைப்படத்தின் உற்பத்திகளுக்கு நேரிடும் பண விரயமானது முட்டாள்தனமானது என்கிறார். இது கேரளத்திற்கும் தமிழகத்திற்கும், ஏன் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். 1981 ல் பண முதலீட்டைப் பொறுத்தவரை திரைப்படத் தொழிற்சாலைகள், தொழிற்சாலை வகைகளில் நான்காவது இடத்தைப் பெறுவதாக இந்தியாவில் கணிக்கப்பட்டது. “தொழில்நுட்ப அழகியல் நேர்த்தி நமக்குள் உருவாக்கும் மனநிலையானது என்னவெனில் செவ்வியல் பூர்ஷ்வா கதையாடல் குணாம்சங்களைத்தான். இந்த முரண்பாட்டிலிருந்து நம்மை விடுவிக்கவும், ஜடம் மாதிரி அமர்ந்திருக்கும் ரசிகர்களை விழிப்படையச் செய்யவும் நமக்குப் “புதிய சினிமா’ தேவைப்படுகிறது. இந்திய  “புதிய சினிமா’ வானது ரசிகர்களை கற்பனையான தளத்திற்குள்அவர்களை சுவீகரித்துக் கொண்டு சமூகத்தின் யதார்த்தத்திற்கு இட்டுச் செல்கின்றது.  இந்தத் திரைப்படங்கள் ரசிகர்களின் தீவிரப் பங்கெடுப்பின் தன்மையில்லாமல் முழுமையடையாது’ என்கிறார் எஸ்பினோசா. குறிப்பிட்ட சிறு குழுவினர்கள் படம் எடுத்து கோடிக்கணக்கான மக்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற நியமங்கள் உடைக்கப்பட வேண்டும். படம் எடுக்கும் தொழில்நுட்பக் கருவிகள் மக்களின் கைகளுக்குச் செல்ல வேண்டும். இதன் மூலம் வெகுசனக் பொய்க் கலை களையெடுக்கப்பட வேண்டும். உண்மையான வெகுசனக் கலை உருவாக்கப்பட வேண்டும். கோடிக்கணக்கில் அழகாக படம் எடுத்து மக்களை ஏமாற்றம் கூட்டத்திற்கு எதிராக குயவன் மண் பானையைச் செய்வதுபோல மிகக் குறைந்த பண முதலீடுகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இதுவே ஒடேஸ்ஸா இயக்கத்தினரின் நோக்கமாகவும் இருந்தது.

நம்முடைய  வீட்டை நாமே கட்டிக் கொள்வது போல நமக்குத் தேவையான  திரைப்படங்களை நாமே எடுத்துக் கொள்ள  வேண்டும் என்பதுதான் “நல்ல சினிமா’ உருவாவதற்கு மக்களும் திரைப்படத் தயாரிப்புச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்; இது முற்றிலும் புதிய சினிமாவை உருவாக்கும் என்பது ஜான் ஆபிரஹாம் மற்றும் அவர்களது இயக்கத்தினரின் சிந்தனை. வெகுசன திரைப்படங்களைப் பற்றி வெகுவாகவே விவாதித்தாயிற்று. வணிகமும் நல்ல திரைப்படமும் இணையாதா? இந்தியாவில் இன்னும் சாப்ளின், ஹக்ஸ், ஃபோர்டு மற்றும் கப்போலோ போன்று கலையையும் வணிகத்தையும் சரியாக இணைத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் இல்லை. நமக்கு “உலக சந்தை’ யை நோக்கிய எண்ணம் இல்லாமலிருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்நிலையில் “நல்ல சினிமா’ வெகுசன சினிமாவாக மாற வேண்டும், என்பதே ஜோன் ஆபிரஹாமுக்கும் அவரது இயக்கத்தினருக்கும் நோக்கமாக இருந்தது. “அம்ம அறியான்’ வெகுசன மக்களை அடைய வேண்டம் என்ற முன் முடிவுடனே உருவாக்கப்பட்டது.அதில் வெற்றியும் பெற்றது எனலாம். இரண்டாயிரத்திற்கும் அதிகமான திரையிடல்கள் கேரளத்தின் அனைத்துக் கிராமங்களையும் உள்ளடக்கி நிகழ்த்தப்பட்டது. நல்ல சினிமாவைப் பார்ப்பதன் மூலம் உழைக்கும் வர்க்க மக்கள் வணிக சினிமாவுக்கு மாற்றான ஒன்றை உருவாக்க முடியும் என்று நம்பினார் ஜோன்.  அதேவேளையில் வழக்கமான அரசு மான்யம் பெற்று தயாரிக்கப்பட்டு யாரையும் சென்று  அடையாமல் இருக்கும். “கலைச் சினிமா’ வுக்கு எதிரான ஒன்றாகவும்  இருக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்டது. அம்ம அறியான் 75 பேர் கொண்ட குழு மக்களிடம் 1 ரூபாய், இரண்டு ரூபாய் பெற்று 16 ட்ட் கேமராவுடன் (ஒளிப்பதிவாளர்ஃ  வேணு) வய நாட்டிலிருந்து கொச்சின் வரை பயணம் செய்து கேரளத்தின் அரசியல் வரலாற்றோடு இணைந்து உருவாக்கப்பட்டது. பொது மக்கள் பணம் கொடுப்பது மட்டுமல்லாமல் படத் தயாரிப்பிலும் ஆங்காங்கே தாங்களாகவே ஈடுபட்டனர். திரைக்கதை, வசனம் அனைத்தும் அங்கங்கே விவாதிக்கப்பட்டு, இட்டுக் கட்டப்பட்டு, எழுதப்பட்டு படம் பிடிக்கப்பட்டது. தொழில் முறை நடிகர்களும் அதிகம் இதில் நடிக்கவில்லை.
படம் முடிக்கப்பட்டு கேரளமெங்கும் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது. டில்லியில் திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டது. தேசிய விருதும் பெற்றது. வெளிநாடுகளிலும் திரைப்பட  விழாவில் காண்பிக்கப்பட்டது. ஒரு பகுதியினர் “அம்ம அறியானை’ வெகுவாகப் புகழ்ந்து தள்ளினர். இன்னொரு பகுதியினர் ஜோன் ஆபிரஹாமுக்கு திரைப்படத்தைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. தொழில்நுட்ப ரீதியாக எதுவும் சரியாக இல்லை, சினிமாவின் அடிப்படையான அழகுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லை. ஒளிப்பதிவு சரியாக இல்லை, டாக்குமெண்டரி மாதிரியிருக்கிறது. படத் தொகுப்பு சரியாகச் செய்யப்படவில்லை, திரைப்பட விழாவில்  திரையிடும் அளவிற்குத் தகுதியில்லாத படம், மொத்தத்தில் நேர்த்தியில்லாத திரைப்படம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

07
நேர்த்தியற்ற சினிமாவின்  அரசியல் என்ற குறிப்பில் ஆர்.ஆர். சீனிவாசன் எழுதும் இந்த விடயத்தோடு, ஜோன்  ஆபிரஹாமின் ஒடேஸ்ஸா திரைப்பட இயக்கத்தின் பணிகளும்,  அர்ப்பணிப்பும் கேரள சினிமாவின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் திரைப்பட அரங்குகளின்  வேலைத்திட்டத்தை ஜோன் போல் வேறொருவர் திøரப்பட வரலாற்றில் மேற்கொண்டதில்லை, மாற்றுத் திரைப்பட கலாசாரம் ஒன்றை மிகவும் வலுவுடன் கட்டியெழுப்பியவர்  ஜோன் ஆபிரகாம்.
ஜோன் ஆபிரஹாமின் சினிமா மொழி தனித்துவமானது. இதை குறித்தும் சினிமா பற்றியும் அவர் கூறுவதை அவர் மொழியில் கேட்போம்;
எனது சக மனிதர்களுடன்  தொடர்பு கொள்ள நான் தேர்ந்தெடுத்த  சாதனம் தான் சினிமா. காமிராவின் மொழியே திரைப்படம். இந்த மொழியை தன் வெளிப்பாட்டுக்காக கலைத்தன்மையுடன் பயன்படுத்தும் போதுதான் அது கலையாகின்றது. கலை படைப்பு என்றால் சுதந்திரம் என்று அர்த்தம். அடிப்படையில் அது மானுட மதிப்பீடுகளின் உண்மையை தேடுவது திரைப்படமும் பிற எந்தக் கலையையும் போலவே  மனித வாழ்க்கையுடன் உறவு கொண்டது. சமூகத்தில் ஓர் அங்கம் என்ற நிலையில் எனது சினிமாவும்  அந்தக் கடமையைத் தான் மேற்கொள்கின்றது. திரைப்படம் ஒரு காட்சி சாதனம். ஆனால் வெறும் காட்சியங்களை வைத்து கொண்டு நல்ல சினிமா உருவாகிவிடும் என்பதில்லை. அதற்குள் கலைஞனின் சொந்த அடையாளமும் அதாவது  பார்வை ((ஏளைழைn) உருவாக வேண்டும்.
எனது திரைப்படம் என்று சொன்னால் அது எனது பார்வை. அதில் நீங்கள் என்னையே காண்கிறீர்கள். எனது  துக்கங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள் எதையும் நான் அதில் மறைத்து வைப்பதில்லை.  அதில் நான் உட்பட்ட சமூகத்தோடு என்னை பார்க்கிறேன். நான் பார்ப்பது  இன்னொருவர் பார்ப்பது போலல்ல. யதார்த்தங்களின் உண்மையாய் அல்ல, வன்முகமான வன்மையையே நான் ஆராய்கிறேன். தகவல்களை அதன் யதார்த்த கண்ணோட்டத்தில் காண்பதே எனது தேவை.
சினிமா ஒரு கட்டுக்கலை அல்ல. ஜான் ஆபிரஹாம் இயக்கிய சினிமா, ஜாஜ் ஆபிரஹாமின் சினிமாதான். முடிவெடுப்பது நான் தான். திரைப்பட தயாரிப்பின் ஒளிப்பதிவு, இசை, நடிப்பு முதலிய தொடர்புகளின் படைப்பு ரீதியான தேவையை நான் ஏற்று கொள்கிறேன். அவர்களின் ஆலோசனைகளை கேட்பதுண்டு. ஆனால் அவர்கள் எனக்காக  தான் பணி புரிகிறார்கள். எனது கருத்துக்களின் வெளிபாட்டுக்காகவே அவர்கள் கேமராவை இயக்குகிறார்கள்; நடிக்கிறார்கள். அங்கே சமரசங்களில் பிரச்சினையே  கிடையாது. அவர்களின் ஆலோசனைகளை நான் ஏற்றுக் கொள்ளும்போது அவை எனது படைப்புக்கான அவர்களின் பங்களிப்புகள். அதுதான் படைப்புத்திறன். சினிமா என்பது ஒளிப்பதிவு தான். ஆனால் நான் தான் முதலில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறேன். எடிட் செய்கிறேன். அவர்கள் எல்லோரும்  என்னுடன் ஒத்துழைக்கிறார்கள். தொழில்நுட்ப திறமையாளர்களான அவர்கள் கலைஞர்களாக இருந்தால் எனது கற்பனையைப்புரிந்து கொள்ள  இயலும். நடிக, நடிகையர்களின் விஷயம் பெரிய பிரச்சினையல்ல. பிரேம் நசீரை வைத்து  நான் படமெடுக்கலாம். பத்து பாடல்களுள்ள படம்  எடுக்கலாம். ஆனால்  அது என்னுடையது  மட்டுமேயான படமாக இருக்கும். இயக்குனர்  மடையனாக இருந்தால் மட்டுமே திரைக்கதை ஆசிரியரின் சினிமாவாக மாறும். இயக்குனரின் திறமையின்மையால் தான் திரைக்கதை மட்டுமே வெற்றி பெறுகின்றது. நான் என்னை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே படம்  எடுப்பதில்லை. செல்ஃப் எக்ஸ் பிரஷன் இவர் ??? பேஷன், இதுவே எனது கண்ணோட்டம். ஆண் பெண் உறவு மூலமே படைப்பின் நிறைவு ஏற்படும் என்று சொல்வது போலவே கலை முழுமையடைய வேண்டுமானால் சமூகக் கண்ணோட்டத்துடன் எனது கருத்தும் இணைய வேண்டும். ஐ யஅ ய ளுழஉயைட டிநiபெ; சமூகத்தில் தனிமைப்பட்ட எந்த இருப்பும் இல்லை. என்னைப் பொகுத்தவரை, கலைஞன் என்ற தனிநபர் உணர்வுள்ள சமூக உறுப்பினர் என்பதை கடந்து எதுவும் இல்லை.
 சமூகப் பார்வை இல்லை என்றால் நான் எதுவும் இல்லை. சமூக வீதியின் பாகமாக இருந்தால் மட்டும் தான் என்னால் எதைப் பறியாவது சிந்திக்க முடியும். மக்களின் நன்மைக்காக ஏதாவது செய்தால் அவன் மனிதன் என்று அவனுக்கு உணர்வூட்ட வேண்டும். அதுவே எனது நோக்கம். மக்களிடம் சில உண்மைகளை எடுத்து சொல்ல வேண்டும் என்று தோன்றும் போது தான் நான் படைப்பாளியாகிறேன், சினிமா எடுக்கிறேன். சினிமா கலாபூர்வமானது என்றால் அதை மக்கள் ஆதரவு (Pழிரடயச ) பெற்றதாக மாற்ற வேண்டும் என்பது எனது நம்பிக்கை. எனது படத்தை  மக்கள் பார்க்க வேண்டும். அதை எல்லா அர்த்தங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு பிடிவாதம் இருக்கிறது. டீக்கடையில் டீ குடித்ததற்காக தகப்பனாரிடம் அடி வாங்கியவன் நான். அது போன்ற சு10றரான இயல்புள்ள ஒரு நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்த நான் உண்மையான கம்???? இருக்க  விரும்புகிறேன்.

08
“”நேர்த்தியில்லாத திரைப்படம்” என்பது பாசாங்குகள் எதுவும் இல்லாத சராசரி மனிதனின் கதையை பேசும் சக்தி கொண்டது. சாமõனியனின் தன்னிச்சையான சினிமாதான் அது. அது போலியான மாயாஜால பிரமாண்டங்களிலும் கிராஃபிக்ஸ் வித்தைகளிலும் ஈகூகு சவுண்ட் என்கிற மனதை நினைவுகளை பிடுங்கி திங்கும் போலி கலை படைப்புகள் போன்றதல்ல அது. மக்களின் கண்ணீரையும் வேதனையையும் உண்மையையும் தேடும் தியான ஊடகம், ஆனால் மக்கள் தனது துக்கத்தையும் வேதனையையும் திரையில்  பார்ப்பதற்கு  தயாரில்லை’ என்ற குற்றச்சாட்டு கூட உண்மையானதல்ல, நல்ல சினிமாவை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்கிற வியாபாரிகளின் கூற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லை, மூன்று மணி நேரம் மக்களை வசீகரிக்கும் இச் சினிமாக்கள் முழு வாழ்வையும் ஏமாற்றுகின்றது என்பதை மக்கள்தெரிந்து வைத்திருக்கிறார்கள். மூன்று மணி நேரம் மட்டும் மக்கள் தன் சொந்த பிரச்சினையை மறந்து திரையில் லயித்திருக்கிறார்கள் என்பதற்கான  அர்த்தம் மக்களின் தப்பிதல் மனோ நிலை மட்டுமல்ல, சினிமாவின் அற்புதம்தான் அது, அதனால்தான் தரமானது  எதுவானாலும் மக்கள் ரசிப்பார்கள், நல்ல சினிமாவை நமக்கும் மக்களுக்கும் நாம் இன்னும் ரசிப்பதற்கான சு10ழலை ஏற்படுத்தவில்லை, அப்படி நல்ல சினிமாவை மக்கள் ரசிக்க தொடங்கி விட்டால் இங்கே வியாபாரிகளின் கதிதான் ஆட்டம் கண்டு விடும். அதனால்தான் மக்களை நல்ல சினிமாவின் பக்கம் யாரும் அழைத்து  செல்வதில்லை, ஆனால் ஜோன் ஆபிரஹாம் அந்த நிலைகளை உடைத்தெறிந்தார்.
 
நல்ல சினிமாவுக்கான அரசியல், பொருளாதார தடைகளை உடைத்தெறிந்தார். நல்ல  சினிமாவுக்கான அரசியல், பொருளாதார தடைகளை தகர்த்தினார்.மக்களை நம்பினார், மக்களுக்கான மொழியில் அவரின் திரைப்படங்கள் மக்களிடம் பேசியது. மக்களின் அங்கீகாரத்தை பெற்றார். அதனால்தான் நம்மை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு இது போன்ற சினிமா கலைஞர்களும் அவர்களின் முயற்சிகளும் சுயேச்சையான படைப்புகளும் சினிமா முயற்சிகளும் நம்பிக்கை தர கூடியது. பெரிய முதலீடுகளில் பிரமாண்டமாக உருவாக்கப்படும் சினிமாவில் இல்லாத ஆன்ம பலம் இந்த சொற்ப முதலீடுகளில் உருவாக்கப்படும் சினிமாவில் இருப்பதை நம்மவர்கள் உணர வேண்டும். நல்ல சினிமா ஆன்மாவிலிருந்தும் வாழ்வின் ஆதாரத்திலிருந்தும் உருவாக்கப்பட வேண்டும். நு}று நாட்கள் ஓடும் ஒரு படத்தை நல்ல சினிமா என்று எப்படி வரையறுப்பது. 10 தினங்கள் ஓடும் ஒரு சிறந்த திரைப்படம்  எப்போதும் சிறந்த படமாகவே இருக்கின்றது. ஆனால் 100  நாட்களில் ஓடிய திரைப்படம்  மக்களின் மனதிலிருந்து மறக்கப்பட்டு விடுவதிலிருந்து அந்த 100 நாட்களின் வியாபார தந்திரம் நல்ல சினிமாவுக்கான இடத்தை அடைய  முடியாதபடிக்கு அழிந்து போகின்றது.
ஜோன் ஆபிரஹாம் பற்றி நான் நமக்கு அறிமுகம் செய்து எழுதுவதன் நோக்கம் கூட இதுதான். நமக்கான சினிமாவை, நமக்கென்று ஒரு தனித்துவமான சினிமாவை உருவாக்க நினைக்கும் சக கலைஞர்கள், நண்பர்கள், தோழர்கள் நமக்கென்று சினிமா கலை பற்றியும் அதன் தனித்துவமான மொழி பற்றியும் சுயதேடலின் வழி கண்டறிந்து கொள்ள தனது முயற்சிகளை முடக்கி விட வேண்டும். நமக்கான சினிமாவை உருவாக்குவதில் சுயமான பிடிப்பும், நம்பிக்கையும் கொள்ள வேண்டும்.
சினிமா என்ற ஆவலில் நம்பிக்கையுடன் இத்துறையில் காலடி எடுத்து வைக்கும் நம்மவர்களிடம் பெருமளவில் காணப்படும் குறைபாடு தமிழ் சினிமாவை போல் நாமும் இங்கு ஒரு திரைப்பட கலாசõரத்தை உருவாக்கி விட வேண்டும் என்று கனவு காண்பதுதான். அதனால் அவர்களின் சினிமாவில் தனித்துவம், சாரமும், கலை மனதின் தீராத வேட்கையும் தொலைத்தடிக்கப்படுகின்றது என்பதை ஏன் இவர்கள் உணர்வதில்லை. தமிழக சினிமா பெரியளவில் பணம் புரளும் வர்த்தக லாபம் ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டதொரு துறை. அதில் மனிதனுக்கும் மனித உணர்வுகளுக்கும் அந்த சினிமாவில்  எந்த வேøலயும் இல்லை, பணம் பணம் பணம்தான் அதன் தாரக மந்திரம்.

09

நம்மவர்கள் சினிமா மூலம் பணம் சம்பாதிக்க ஆசை கொள்வது என்பதெல்லாம் தவறு என்று நான் வாதாட வரவில்லை, பணம் புரளும் இந்த சினிமா துறையில் பணம், லாபம், வெற்றி என்பதுதான் உங்கள் இலக்கு என்றால் தமிழகத்தில் அதை செய்வதுதான் புத்திசாலி தனம் என்பது என் கணிப்பு.
கை நிறைய பணம் இருக்குமாயின் தமிழகத்தில் அந்த பணத்தை முதலிட்டு சென்னை சினிமாவில் லாபத்தை ஈட்ட முடியும். நம்மவர்களில் பலர் இப்படியான முயற்சிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். செவ்வேல் தனது திரைப்படங்களை  தமிழகத்தில்தான் முதலீடு செய்து உருவாக்குகிறார். அதுபோல வியாபார நோக்கில் திரைப்படத்தை உருவாக்க சிறந்த இடம் சென்னைதான்.
நமக்கான  சினிமா வெறும் பொருளாதாரம், லாபம், வெற்றி, ஆணிது ணிழூ ஏடிவ வகைகளில் நமக்கு எந்த விதத்திலும் இங்குள்ள சு10ழல் வாய்ப்பை தரப் போவதில்லை என்பதை நம்மவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் சினிமாவை வைத்து லாபம் சம்பாதிக்க முடியாத படிக்கு அதன் சந்தையை தமிழக சினிமா ஏற்கனவே  கபளீகரம் செய்து விட்டபோது நாமும் அதன் பின்னே சென்று “லாபம்’ சம்பாதித்து விட முடியாது என்ற உண்மையை நம்மவர்கள் உணர வேண்டும். ஆனால் பொருளாதார வெற்றி மட்டுமே சினிமாவின் உயிர்ப்பாக இருக்காது.
வியாபார ரீதியில் நாம் இலங்கையில் தமிழ்த் திரைப்படம் ஒன்றை வைத்து வெற்றி பெற முடியாத அந்த ஒரே காரணத்தினால்தான், நான் முன் வைக்கும் “நல்ல சினிமா’ என்ற கருத்தியலின் அடிப்படையில் சிறந்த சினிமாவை உருவாக்க படைப்பு ரீதியான திறனை பெறுவோம். நம்முடைய வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் மற்றும் பல்வேறு கலை நிர்மாணங்கள் அனைத்தும் இந்திய சாயலின் அடிப்படையிலும் வெகுசன, ஜனரஞ்சகம் என்ற அடிப்படையில் சிந்திப்பதனால்தான் நம்மவர்களின் முயற்சிகளை நம் நாட்டு மக்களே  வெறுக்கிறார்கள். இங்கே நிறைய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நாம் நம்மை வெளிப்படுத்த தவறியுள்ளோம் என்பதுதான் உண்மை. ஒப்பீட்டளவில் தமிழக நாளேடுகளை விட இலங்கையின் நாளேடுகளில் தரமும் செய்திகளின் தன்மையும் உயர்வானது. அத்தோடு வார வெளியீடுகளின் தரம்  தமிழக சிற்றிதழ்களின் தரத்துடன் ஒப்புநோக்கவல்லது. இதில் நமக்கென்று ஒரு தனித்துவத்தை பேணி வருகின்றோம். ஆனால் சினிமா, எப்.எம். வானொலி அலைவரிசைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நமக்கென்று பார்வை இல்லை என்பதை கோமாளித்தனமான நடப்புகள் அம்பலப்படுத்துகின்றது. ஆனால் மக்களின் ரசனையை நாம் எந்த விதத்திலும் குறை கூற முடியாது. இந்தியாவிலேயே கேரள மாநிலம் தான் கல்வியறிவில் உயர்வான மாநிலம். அங்கு சாதாரண பெட்டி கடையிலும் தெருக்களிலும் தீவிர படிப்புக்கான சஞ்சிகைகள், கவிதைகள், நாவல்கள் என்ற இலக்கியத்தை பார்க்க முடியும். ஆனால் நமக்கு  பாலகுமாரனையும் ரமணிச் சந்திரனையும் ராஜேஷ் குமாரையும் சுஜாதா, லக்ஷ்மியை தவிர நாம் வேறென்ன படிக்கின்றோம், மிஞ்சி மிஞ்சி போனால் குமுதம், ஆனந்த விகடனை படிப்போம். ஆனால் நாமும் கேரள மாநிலத்தவர் போல படிப்பறிவில் கல்வியில் முன்னேறிய சமூகம், கேரளாவில் நல்ல சினிமாவிற்கான அலை எப்போதும் உண்டு. ஆனால் நாம் இந்திய, தமிழக பாதிப்புக்களினால் நமது சுயத்தை இழந்துள்ளோம் என்பது தான் உண்மை. அதனால்தான் நம் மத்தியிலிருந்து படைப்புணர்வுடன் வெளிவர வேண்டிய எத்தனையோ வளங்களை நாம் வெளிப்படுத்த முடியாமல் முடங்கி போயுள்ளோம். இந்த நிலையை மாற்றி அமைக்க நாம் முயல வேண்டும். நமது படைப்புணர்வுக்கு தடையாக அøமயும் முட்டுக்கட்டைகளை தாண்டி நாம் நமது படைப்புகளை நம் மண்ணில் மிகவும் உயிர்ப்புடன்  படைக்க முனைய வேண்டும். அப்போதுதான் நமக்கான சிவிமாவின் பிறப்பை நாம் நம் மண்ணில் தரிசிக்க முடியும்.

10

சினிமாவை ஒரு அசல் தன்மையுடன் புரிந்து கொண்டு நமக்கென்று ஒரு தனித்துவமான சினிமாவை இங்கே  உருவாக்கும்போது அது லாபத்தை பெற்று தருவதோடு, சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தையும் பெற்று தரும் என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொழில் நுட்பத்திலும் நடிப்பிலும் திரைக்கதை பிரதியாக்கத்திலும் மற்றும் பல்வேறு களங்களிலும் சிறந்ததொரு திரைப்படமாக நமது திரைப்படம் அமையும்போது நாம் நினைக்கும் அத்தனையும் நமக்கு கிட்டும், அப்போது நமக்கான சினிமாவும் சாத்தியமாகும். அதற்கு ஜோன் ஆபிரஹாமை போல் மகத்தான கலைஞனாக இருக்க வேண்டும் என்பதல்ல, வாழ்வை, சமூகத்தை அரசியலை தெளிவாகவும் மனசாட்சியுடனும் சினிமாவின் கண் கொண்டு வெளிப்படுத்தும் வரம் இருந்தால் போதும் நமக்கான சினிமா வெற்று பெறும். ஜோன் போன்றவர்களை நமது பயணத்திற்கு முன்னே வைத்து பயணிப்பது நமது இலக்கை அடைவதற்கான இலகுவான வழி, அத்தோடு அது நமக்கு உண்மையையும், நேர்மையையும் நோக்கி நம்மை அழைத்து செல்லுவதோடு நமக்கேயான அடையாளத்தையும் அது கட்டமைக்கும்.
“சினிமா தான் எனது மிகப் பெரிய பலவீனம். எனது மிகப் பெரிய சக்தி. சினிமாவின் அடிமை நான். எனக்கு வாழ்க்கையில் பெரிய ஆசைகள் எதுவுமில்லை. சினிமா எடுக்க முடிந்தால் போதும், என்பதே பிடிவாதம். சினிமாவிலிருந்து எனக்கு ஒரு சல்லிக் காசு கூட இலாபம் வேண்டாம் எனது வாழ்க்கைத் தேவைகள் குறைவு. பட்டினி கிடந்தாலும் எனக்கு அங்கலாய்ப்பில்லை. பசியை ஜெயிக்க எனக்குத் தெரியும். படுத்துறங்க எனக்கு மேற்கூரை தேவையில்லை. ஆகாயத்துக்குக் கீழே படுத்துக்  கொள்வேன். நான் இயற்கையின் மைந்தன், புழுதியே எனக்கு இதம். ஆனால் என்னைத் திரைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். எனக்கு வேண்டியது அது மட்டுமே. சினிமாதான் எனது வாழ்க்கை. அது இல்லையென்றால்  நானுமில்லை.
ஜோன் சினிமாவை உயிர் மூச்சாக கொண்டிருந்தார், ஜோன் ஆபிரஹாம் என்ற மகா கலைஞனை இந்திய சினிமா என்றும் மறக்காது. அவர் சொந்த வாழ்வை போல மரணமும் அவரை அகாலமாக்கியது. 1987 ல் மே மாதம் 30 ஆம் திகதியன்று, நண்பர்களுடன் அதிகமாகக் குடித்துவிட்டு போதை அதிகமாகி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விடுகிறார். கிட்டதட்ட தற்கொலைக் கொப்பானது தான் அவருடைய இறப்பு என்கின்றனர் அவரது நண்பர்கள்.

நன்றி: ஜான் ஆபிரஹாம் கலகக்காரனின் திரைக்கதை (நு}ல்)

 
 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisements

7 Comments (+add yours?)

 1. Praca frezer
  Feb 03, 2011 @ 22:21:17

  Great blog here! Also your site loads up very fast! What host are you using? Can I get your affiliate link to your host? I wish my website loaded up as fast as yours lol

 2. Extra website
  Feb 13, 2011 @ 15:50:37

  I as well as my friends came looking through the great strategies from the website then unexpectedly I had a terrible suspicion I had not thanked the site owner for those techniques. The young men are already as a result excited to read through all of them and now have certainly been making the most of them. Appreciate your genuinely considerably kind and then for considering such amazing topics most people are really desperate to learn about. Our own sincere apologies for not expressing gratitude to earlier.

 3. treatment acnezine cure
  Apr 19, 2011 @ 02:40:11

  A very usefull article – A big thank you I hope you will not mind me blogging about this post on my blog I will also leave a linkback Thank you

 4. Sondages Payants
  Apr 24, 2011 @ 21:11:03

  Hi, I can’t understand how to add your site in my rss reader. Can you Help me, please 🙂

 5. werkstattwagen mit werkzeug
  Jun 06, 2011 @ 03:21:57

  Good day! I just want to give an enormous thumbs up for the very nice data?s you’ve got right here on this post. I can be coming again to your blog for more soon. This real answered my drawback?s, i?m happy over the information! best wishes Jasmin

 6. pool party food
  Jul 21, 2011 @ 17:19:50

  Bookmarking now cheers, a good fast read. Will re-tweet later!

 7. Training Online
  Jul 26, 2011 @ 11:55:56

  Youre not the average website writer, guy. You certainly have anything powerful to add on the web. Your style is so powerful that you could virtually get away with being a poor writer, but youre even amazing at expressing what you have to express. Such a superb blog. Ill be back for a lot much more.

%d bloggers like this: