இலங்கை தமிழ் சினமாவுக்கான தேடல்…


                                                                                                               

“எல்லாம் சினமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது”
-ஜோன் ஆபிரகாம்-

சினமாவுக்கு வாழ்க்கைதான் ஆதாரம். வாழ்க்கை என்ற நெருப்பு இல்லாமல் கலை, இலக்கியம், இசை, ஓவியம், சினமா எதுவுமே சாத்தியமில்லை. எல்லா கலை வெளிப்பாடுகளும் வாழ்வை முன் நிறுத்தியே உருவாக்கப் படுகின்றது. வாழ்வு இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை. வாழ்வை சொல்லாத கலை வெளிப்பாடுகள் கலையாக தீர்மானிக்க முடியாதபடிக்கு காலத்தின் பெரும் பள் சக்கரங்களில் கறைந்து போகின்றது.

“தினசரி வரலாற்றை நேரடி நிகழ்வாக மாற்றியமைப்பதற்காகஇ யதார்த்தத்தோடும், உண்மையோடும் உழைக்க வேண்டியது எப்படி அதிமுக்கியமோஇ அதே காரணங்களுக்காக உள்;ளடக்கத்தை குறைத்து மதிப்பீடவோ, ஏமாற்றவோ செய்யாத வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் முக்கியமாகும்”.
என்ற ஜார்ஜ் சான்ஜினோஸின் அறிவிப்புடன் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளும் கலைஞனின் தேடலுக்கான களங்களாக முன் நிற்கின்றது. வாழ்விலிருந்து கண்டறியப்பட வேண்டியது நிறைய உண்டு. நம்முன் நிறைந்திருக்கும் வாழ்வின் நடனங்களில், நளினங்களில், வலிகளில், துயரங்களில், சிரிப்புகளில், கனவுகளிலிருந்து சிலவற்றையாவது நாம் நம் இலங்கை தமிழ் சினமாவின் வெளிகளில் நிரப்புவோம். அப்படி நிரப்பப்படும் ஒவ்வொரு சினமாவின் மொழியிலும் இலங்கை தமிழ்; சினமாவின் சுய அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்வின் அதி அற்புதமான கனவுகளை கண்டறிவோம்.
“சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டுக்கான புதியதொரு கலைவடிவம், சுய-வெளிபாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினமா வடிவமானது சக்தி வாய்ந்த கருவியாக இயங்க வல்லது.” 

திரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த சேர்ஜி ஜஸன்ஸ்hPன் மேற்கண்;;ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவுக்கான களங்களை தேடி கண்டடைவோம்.

சினமாவை குறித்து பேசுவதில் நாம் அனைவரும் சந்தேகமடைவது சினமா என்ற வசீகரிக்கும் அதி அற்புதமான சாதனம் மக்களின் உணர்வுகளை பாதிப்பதினால்தான். சினமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை அவர்களின் நினைவுகளில், மனோபாவங்களில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதுவும் உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் மனித வாழ்வும் அதன் அக்கறையும் பார்வையாளரின் அகத்தை எளிதாக தாக்ககூடியது. உலக சினமா தரும் அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர்வுகள் செலுமைப்படுவதோடு உலகம் பற்றியும், வாழ்வின் ஆன்மீக தடங்கள் பற்றியும் மனிதனின் தேடலை சாத்தியப்படுத்துவதோடு, மனிதன் பற்றிய மர்மங்களை, வாழ்விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும் சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங்களையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தை யும் உலக சினமா பார்வையாளரின் மனத்திரையில் அகலப்பரப்புகின்றது. வாழ்வை புரிந்துக்கொள்வதற்கும், தெளிவடைவதற்கும் உலக சினமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அணுக்கமானதொரு அந்தரங்கப் பிணைப்பை ஏற்படுத்துகின்றது.


“திரைப்படம் உயர் எண்ணங்களை நமக்கு ஊட்டி சீரிய வாழ்க்கையையும், சிறந்த பண்புகளையும் கடைப்பிடிக்க நம்மை தூண்ட வேண்டும்” என்கிறார் திரைப்பட விமர்சகர் கே.எஸ். சிவக்குமாரன். தமிழில் வெளிவருகின்ற தென்னிந்திய திரைப்படங்கள் நம் மூளையையும்இ மனதையும் வசீகரிப்பதன் நோக்கம் நம்மிடமிருந்து பணத்தை சுரண்டுவதற்கே…! பணத்தை மட்டுமல்ல நம் மனோ பாவத்தையும், யதார்த்தத்தை விட்டு நகர்த்தி வேறொன்றின் மேல் அக்கறை கொள்ளச் செய்வதோடு-  சுயவாழ்வின் இருப்பை, சுய அடையாளத்தை இழந்தும் விடுகின்றோம். ஆப்பிரிக்க திரைக்கலைஞன் ஹெய்லேகெரீமா இது போன்ற நிலைகண்டு இப்படி எச்சரிக்கை விடுக்கின்றார்.

 
 “நமது கலாச்சார வேர்களை ஆதிக்கக் கலாச்சாரங்களுக்காக இழந்து விடுவது முற்றிலும் தன்னை இழப்பது போலாகும்”

சினமா கலாச்சாரத்தினால் நாம் நம் சுயங்களை இழந்து வருகிறோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நம்மை நாம் அறியாத வகையில் சிதைக்கும் தென்னிந்திய சினமா குப்பைகளை விடுத்து நல்ல சினமா நோக்கி நம் பார்;வையை திருப்புவோம்இ கறைபடிந்த நம் சினமா பற்றிய பார்வையை  மாற்றிக்கொள்வதோடு நல்ல சினமாவைப் பார்ப்பதனால் நல்ல மனோபாவத்தையும் வாழ்க்கை குறித்த பார்வையை யும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதை இனியா வது உணர்வோம். தமிழ் சினமா என்பது தமிழர்களின் வாழ்வை சிதைக்கும் நாசகார ஆதிக்க சாதனம். தமிழ் சமூகத்தின் யதார்த்த வாழ்வை சொல்லாத தமிழகத்தின் சினமா மொழி ஆதிக்க வர்க்கங்களின் மொழியினால் இருக்கின்ற ஒடுக்கு முறைகளையும், அடக்கு முறைகளை யும் நியாயப்படுத்தி எடுக்கப்படுகின்ற வியாபார சூத்திரம். இவ்வியாபார சூத்திரத்தை நாம் ஏன் நம் மனதின் நம் தேசத்தில் சினமாவாக முன் நிறுத்த வேண்டும். இதற்காக நாம் ஏன் முன்னுரிமை கொடுத்து நம்மையே தாழ்த்திக்கொள்ள வேண்டும்.

இந்த சினமா நமக்கு அப்படி என்ன தந்து விட்டது. நம் வாழ்வையும், நம் சுய வாழ்வின் கலை வெளிப்பாடுகளையும், நம் ஈழத்தமிழ் சினமாவின் பிறப்பையும் அழித்து விட்டது. நாம் நம் தேசத்தின் சுயமான சினமாவை உருவாக்குவோம். அதிலிருந்து நம்முடைய வாழ்வின் பேரினவாத கொடூரத்தையும், இன வன்முறையின் வலியையும், பாதுகாப்பற்ற தன்மையையும், சமாதானமற்ற இருப்பின் நடுக்கத்தையும் நம் ஈழத்தமிழ் சினமா மொழியாக வழி கண்டறிவோம். புதிய சினமா மொழி ஒன்றை நம் வாழ்வின் புரிதலிலிருந்து கண்டறிவோம். அம் மொழியினால் உலகத்தின் தமிழர்களின் கனவுகளில் புதிய அத்தியா யத்தையும் எழுதிச் செல்வோம். சமூகத்தின் எழுச்சிகளை உலகமறிய செய்வோம்.  சர்வதேச சினமாவின் மூலங்களில் இருந்து நாம் நமக்கான சினமா மொழி ஒன்றை கண்டறிவோம். அம் மொழியின் வழியாக நம் சினமா கலையை உலகத்தின் திரைகளில் எல்லாம் கொண்டு செல்வோம். தமிழனின் மனது எதையும் சாதிக்க வல்லது. உலகெல்லாம் பரந்திருக்கும் ஈழத்தமிழர் நிச்சயமாக ஒன்றிணைந்து ஈழத்தமிழ் சினமா மொழி ஒன்றை கண்டறியலாம். அம்மொழியின் வழியாக நம் எல்லா கனவுகளையும் சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதோடு ஆதிக்க சினமா மொழிகளையும் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவினால் முறையடிப்பதோடு, அவர்களுக்கு சினமாவின் உன்னத சக்தியையும் உணர்த்தி செல்வோம்.
திரைப்படத்தை புரிந்து கொள்வதற்கு திரைப்படம் பற்றிய ஆரோக்கியமான பார்வையும், கலை புரிதலும், வாழ்க்கை பற்றிய தேடலும் தேவை. திரைப்படம் என்பது தொழி;நுட்ப கலையாக நமக்கு வெளிப்படையாக தெரிவதனால் அதை கைக்கொள்வதற்கும் நிர்மாணம் செய்வதற்கும் நாம் தயக்கமடைவது தெரிகின்றது. திரைப்படம் வெறும் தொழி;நுட்ப கலை சாதனம் மட்டுமல்ல. அது இயக்குனர் என்கின்ற ; தனிநபரின் மனத்திறனின் கலை, வாழ்வு, அரசியல் புரிதலின் மறு பிரதிதான் திரைப்படம். திரைப்படத்திற்கான வேலை பரப்பும், ஆள் தொகையும் விரிந்தளவி;ல் மேற்கொள்ளப் படுவதால் செலவு மிகுந்ததொன்றாக இருக்கின்றது. ஆனால் ஆயிரம் தொலிநுட்பவியலாளர்கள் பணி; புரிந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைப்பவர் ‘இயக்குனர்’ என்ற படைப்பாளிதான். இயக்குனர் இல்லையென்றால் திரைப்படம் இல்லை. ஆனால் தமிழ் சினமாவில் இயக்குனர் இல்லாத சினமாக்களே வெளிவருகின்றது. மசாலா கதைகளை ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் ஒரே அளவீடுகளில் உற்பத்தி செய்வதற்கு எதற்கு இயக்குனர். திரைப்பட இயக்குனர் என்பவர் மகத்தான சக்திகளின் கூட்டுணர்வின் பிதாமகன். ஒருவகையில் திரைப்பட இயக்குனரை கப்பலின் தலைவன் என்று கூட சொல்வார்கள். தலைவன் (கேப்டன்) இல்லாத கப்பல் திசையறியாது போய் சின்னாபின்னமாகி விடும். கடந்த காலங்களில் எல்லாம் தமிழ் சினமா கப்பல் திசையற்றுத்தான் போய் கொண்டிருக்கின்றது. இந்த கப்பலில் கொள்ளைக்காரர்களின் கூடாரமாகிவிட்டதால்தான் அது இன்னும் கவிழாமல் போய்கொண்டிருக்கின்றது. திருடர்களின் மூலமாக அதன் திசைப்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றது. நம் திருடர்கள் மிகவும் புத்திசாலிகள். கப்பலின் திசையை பற்றிக்கவலைப்படாமல் தலைவன் அற்று சதா திசைமாறி தன் போக்கில் போனபடி இருக்கின்றது.
திரைப்படத்திற்கான மூலக்கதையை தேர்ந்தெடுப்ப தென்பது இங்கே தன்னிச்சையாக நிகழ்வதில்லை. நிறுவன நிலையிலிருந்து தயாரிக்கப்படும் திரைப்பட கட்டமைப்பு நமக்கு தேவையில்லை. சினமாவின் உயிர்ப்பு என்பது படைப்பாளியின் அதாவது இயக்குனரின் தனித்துவமான கருத்திலிருந்தும், காத்திரமான பார்வையிலிருந்தும் உருவாக்கப்படவேண்டும்.

மரபான கதையாடல் மூலமாக திரைக்கதை நிறுவன நிலையுடனான ஆதிக்க சினமா வடிவங்களாக திரிபடைந்து ஈழத்தமிழ் சினமாவின் கதையாடல்கள், காட்சிகள், திரைக்கதை பிரதிகள், உரையாடல் தொகுதிகள், திரைப்பட கேமரா அசைவுகள் புதிய தடம் பதிக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தமிழ் சினமாவின் புதிய வழித்தடங்களை கண்டறிய முடியும். ஏற்கனவே சொல்லப்பட்ட திரைப்பட ஆதிக்க மொழியை விட்டு நாம் நம் சொந்த சினமாவின் பாதையை கண்டறிவோம். இருக்கின்ற நிலைமையை உள்ளபடி எவ்விதமான முன் மதிப்பீடுகள் அற்றும், முக்கியமாக சுய தணிக்கை என்ற கலாச்சார சமூக உளவியலின் தடைகள் அற்று கலைஞனின் உத்வேகத்துடன் சினமாவின் பிரதிகள் தயார் செய்யப்பட வேண்டும். ஒரு இயக்குனரின் பார்வைதான் ஒரு முழு திரைப்படத்தையும் நகர்த்தி செல்ல வேண்டும். அப்படி நகர்த்தி செல்லும் ஒவ்வொரு அசைவும் இயக்குனரின் சொந்த புரிதலிலிருந்தும் அகத்தேவைகளிலிருந்தும் வெளிப்படுத்தப்பட வேண்டும். உண்மையான கலை என்பது இதுவே. மனசாட்சியின் சாட்சி தன்மைதான் கலை வெளிப்பாடுகள். உண்மையை வாழ்விலிருந்தும். இதயத்திலிருந்தும். சொந்த வாழ்வு தரும் அனுபவ பகிர்விலிருந்தும் சினமாவுக்கான மூலப் பொருள் உள்வாங்கிடப்பட வேண்டும். சினமாவின் கூட்டு முயற்சி தன் சொந்த கருத்து நிலையை விரிவாக்கவும், நடைமுறைப்படுத்தவும் இயக்குனர் என்ற சினமா கலைஞன் முயல வேண்டும். நம்மை சதா சிதைக்கும் ஆதிக்க சினமா மொழியின் பிடிக்குள் திரைப்பட இயக்குனர் சிக்கிக் கொள்ளக்கூடாது. நிலவுகின்ற எல்லா விதமான ஆதிக்க வன்முறைகளுக்கும்; எதிர்ப்பு தெரிவிக்கும் தன்மையுடன் திரைப்பட இயக்குனர் பணிபுரிய வேண்டும். அடக்கு முறைகளுக்கு எதிரான மன உணர்வை சினமா படைப்பாளி தன் திரைப்பட மொழியில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

 “கலைப்பாங்காக அமையாத ஒரு படைப்பு வெறும் கருத்துத்திரளாக மட்டும் தொகுக்கப்படும் ஒரு ஜோடனை, எந்த சமூகப் பாதிப்பையும் நிகழ்த்தாமல் போய்விடும் படைப்பாக்கத்தில் அழகியல் கூறுகளும் முக்கியமானவை”
ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவாஆச்சிபி கூறுவதிலிருக்கும் உண்மையை நமக்கு முன் திரைவிரியும் அசிங்கமான தமிழ் சினமா தன் படைப்பு நிலைகளில் என்றாவது கவனம் கொள்ளுமா?

நம் சூழலில் திரைப்படங்கள் களியாட்;டம், பொழுது போக்கு என்பதாய் நிலை நிறுத்தப்பட்டிருப்பதன் பின்னணியில் நாம் மிகவும் கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும். வியாபார கலாச்சாரத்தின் பெரும் வணிக முதலாளிகளின்  நலன்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் வெகுசன சினிமாக்கள் வெகு மக்களின் களியாட்டம், பொழுது போக்கு என்பதோடு முடிந்து விடுவதில்லை. திரைப்பட பிம்பங்கள் விதைக்கும் விதைகள் மக்கள் மனதில் வேரூன்றி தேவையற்ற கலாச்சார சீரழிவுகளை நம்மில் நிகழ்த்துவதை இயல்பு வாழ்க்கையில் கண்டறிய முடிகின்றது. இந்த பெரும் வணிக சினமாக்களின் சீரழிவுக் கலாச்சார போக்குகளை அவ்வளவு எளிதில் தடுத்து விட முடியாது.

ஆனால் இந்த வியாபார சினமாக்களின் வெற்றுத்தன்மையை ஏகாதிபத்திய முதலாளித்துவ சாதிய அமைப்புகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இச்சினமாக்களின் உள்ளீடுகள் மக்கள் மனதிலிருந்து நீக்குவதற்கும் நல்ல சினமா பற்றிய பார்வையை வெகுசன வெளிகளில் கொண்டு செல்ல வேண்;டும் என்றால் நல்ல திரைப்படங்கள் மக்களிடம் கொண்டு செல்லவும், நல்ல சினமா பற்றிய பார்வையை தூண்டவும் நம்மத்தியில் திரைப்பட சங்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆசியாவில் சத்யஜித்ரேய்க்கு முன்னமே இலங்கையில்தான் முதல் முதலாக திரைப்பட சங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் வங்க திரைப்பட உலகின் மேதை சத்யஜித்ரேதான் முதல் திரைப்பட சங்கத்தை உருவாக்கினார். திரைப்பட சங்கம் என்பது நம் மத்தியில் தொழிற்சங்கம் போல் மனோபாவம் நிலவுகின்றது. அது நல்ல திரைப்படத்தை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான சர்வதேச கட்டமைப்பின் வெளிப்பாடு. ஆனால் இந்திய சினமாவில் திரைப்பட சங்கங்களின் வழியாக நல்ல சினமா பற்றிய பார்வையை பொது மக்களிடம் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்தபோதும் வங்கத்திலும்இ மலையாள திரைப்படத்துரையிலும் திரைப்படச்சங்கம் ஏற்படுத்திய திரைப்படத் தாக்கத்தினால் நல்ல சினமா வளர்வதற்கும், இந்திய சினமாவில் மாற்று சினமா பாரம்பரியம் சரியநாடு,  மிருனாள்சென், ஜோன் ஆபிரகாம்இ சத்யஜித்ரேய் போன்ற மேதைகளினால் இந்திய சினமா தன் தனித்துவமான தடத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. நிலவும் வெகுசன வியாபார மோசடி சினமாக்களும் போட்டியாக தன் இருப்பை ஒவ்வொரு தருணமும் தக்க வைத்து இன்றும் அதன் தாக்கம் இந்திய சினமாவின் சுயமரியாதையை காப்பாற்றியிருக்கிறது.

நம் சூழலில் நம்மவர்களுக்கு நல்ல சினமாவை வெகுசன அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை. மக்களிடம் ஏற்படுகின்ற காட்சி கலாச்சாரத்தின் தேவையை நியாயபூர்வமாக தீர்க்காததனால் மக்கள் இயல்பாகவே ஆதிக்க சினமாவின் மொழிகளில் முன் தன்னிலையை இழந்து காட்சி கலாச்சாரத்தை பார்க்கும் அவாவை தீரத்துக்கொள்கிறார்கள். மக்களுக்கும் நல்ல சினமாவுக்குமான இடைவெளிகள் நிரப்பப்படாமலேயே இருக்க இங்கே சினமா சிங்கள பார்வையாளர்களுக்கு இருக் கின்ற திரைப்பட வாய்ப்புகள் தமிழ் பார்வையாளர் களுக்கு ஏற்படாமல் போனது துரதிஷ்டமே. தமிழர்களின் மொழி சார்ந்த திரைப்பட கழகங்கள் பெரும் நகரமான கொழும்பில் கூட இல்லாமல் போனது தமிழர்களின் தலைவிதியே என்று நினைக்கத் தோன்றுகின்றது. தமிழர்களின் சர்வதேச தொடர்புகள் வழியாக புலம்பெயர்ந்த நம்மவர்களின் கூட்டுறவினால் நல்ல திரைப்படங்களை உலக நாடுகளிலிருந்து பெற்று திரையிடவும் இங்கு இருக்கின்ற சர்வதேச நாடுகளின் தூதுவராலயங்கள் மூலமாக நல்ல திரைப்படங்களை பெற்று திரையிடுவதற்கு தமிழர்களின் அமைப்புகள் முன்வர வேண்டும். பெரும் நகரங்களில்தான் தமிழ் சினமா தன் வியாபார கால் தடங்களை ஆழமாக ஊன்றி உள்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்தை ஏற்படுத்திக்
;கொண்டிருக்கின்றது. அதனால் நகரங்களில் திரைப்பட கழகங்களின் தேவை வெகுசன மக்களின் காட்சி கலாச்சார த்தின் வாயிலாக அறியப்பட்டதன் உண்மையிலிருந்து எழும் சிந்தனை என்பன அக்கறை கொண்டவர்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நல்ல திரைப்படங்கள் மூலமாக நல்ல சமூகவியலையும், ஆக்கபூர்வமான கலை மேதைகளின் உண்ணதங்களையும் நம்மவர்கள் பெறுவதன் வாயிலாக நல்ல சினமா பற்றியும், நல்ல சினமா உருவாக்கம் பற்றிய திரைப்பட நனவிலி மனதின் கட்டமைப்புகளும் மாற்றியமைக்கவும், ஈழத்தமிழ் சினமாவின் உருவம் புத்தெம்புடன் சர்வதேச அளவில் காலடித்தடம் பதிக்கும் வகையில் வளர்வதற்கான வாய்ப்புகளை நம்மவர்களுக்கு ஏற்படுத்துவது உறுதி. நாம் நம் பார்வையாளர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் முதலில் நல்ல சினமா பற்றிய சுயங்களை கண்டறிய சிறந்த திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்வோம். இது திரைப்பட கலாச்சாரம் மேலெழுந்து நிற்கும் நம் வெகுசன சூழலில்இ வெகு மக்களின் மனவியலின் வெளிப்பாடு என்பதிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.

திரைப்படங்கள் ஒரு சமூகத்தின் மனசாட்சிகளின் மூலமாக மறுவடிவம் செய்யப்பட வேண்டியவைகள். நம் சூழலில் நம்மை சதா நேரமும் போதைப் பொருள் போல் பிடித்து ஆட்டும் தமிழ் சினமா நாசங்கள் நம் தன்னுணர்வுகளை அழிப்பதோடு கேடு கெட்டதொரு ஆபாசமான மன வன்முறையை நம்மில் ஏற்படுத்தி விடுகின்றது. நம்மவர்களுக்கு திரைப்படம் என்பது தீபாவளிக்கு கொழுத்தப்படும் சீன வெடிகளை போல்தான். களியாட்டமும்,

 மேட்டுக்குடி கலாச்சார சோம்பேரித்தனங்களுக்கும், ஆபாசமான நாகரீகத்திற்கும் தீணி போடும் வடிவமாக தான் திரைப்படம் இருக்கின்றது.

திரைப்படங்களை நாம் பொழுது போக்குக்கான உறி;ஞ்சி குடிக்கும் சாதனமாக ஆக்கிவிட்டதன் தலை எழுத்தை நம்மிலிருந்து அத்தனை விரைவில் மாற்றிவிட முடியுமா? திரைப்படம் பற்றிய நம்மவர்களின் சிற்றின்ப கருத்துக்களினால் திரைப்படக் கலை தன் உண்னதங்களை இழந்து ஒரு வேசியை போல் நம் தமிழர்கள் மன அறைகளில் நம்பப்படுகின்றது. உலகில் எங்கும் நிலவாத வகையில் நம் தமிழ் நிலப்பரப்பில் தமிழ் சினமா உருவங்கள் ஆபாசத்தின் சதைப்பிம்பங்களையும், சிற்றின்ப காம உணர்ச்சிகளின் கேடுகெட்ட மனப்பாங்குகளின் மூலங்களை தூண்டி பணம் சுருட்டும் ஆபாசத்தின் உச்சபட்சமான பிம்பங்களை உற்பத்தி செய்து தமிழர் மனதினுள் குப்பைகளை நிரப்பியபடி இருக்கின்றது. இதிலிருந்து நாம் மீள வேண்டும். அதற்காக நம்மிடமிருக்கும் கலாச்சார தளங்களிலிருந்து நல்ல சினமா பற்றிய சூழலுக்கான புரிதலை ஏற்படுத்துவதோடு, உலகத்தின் மிக சிறந்த திரைப்படங்களை நம்மவர்களுக்கு திரையிடுவதோடு அது குறித்து திரைப்பட செய்திகளையும், தகவல்களையும் தினசரிகளிலும், ஊடகங்களிலும் தொடர்ந்து கொடுப்பதற்கு முயல வேண்டும். இப்படியான கலாச்சார நடவடிக்கையின் வாயிலாக நம் நாட்டில் நமக்கேயான தனித்துவம் கொண்ட சினமாக்களை உருவாக்க முடியும்.
 
நன்றி: நிறம்

Advertisements

5 Comments (+add yours?)

 1. s.sathiyan (trinco)
  Jul 28, 2008 @ 14:24:31

  வணக்கம் மாரியண்ணா எப்படி இருக்கிறீங்க பல தடவை உங்கட பழைய தொலைபேசில தொடபர்பு கொண்டனான் கிடைக்கல உங்கட பதிவுகளை இப்பதான் பார்த்தநான் படிச்சிட்டு சொல்லுறன்

  அன்புடன்
  சத்தியன் (திருகோணமலை)

 2. Herbal Hair Regrow Fast
  Apr 10, 2011 @ 20:14:45

  A very usefull post – A big thank you I wish you dont mind me writting about this post on my blog I will also link back to this post Thank you

 3. Training Online
  Jul 31, 2011 @ 23:06:39

  I comprehend that you will find a lot of spam lately. Apparently its pretty difficult for guys to grasp the idea that relationships can be mutually beneficial. I can leave a meaningful wonderful comment and add content and substance to one of your pages and you will give me a link in exchange. You will find too numerous takers available and they arent willing to assist people out. Take take take! .

 4. art commission
  Sep 29, 2011 @ 18:44:28

  Hands down, Apple’s app store wins by a mile. It’s a huge selection of all sorts of apps vs a rather sad selection of a handful for Zune. Microsoft has plans, especially in the realm of games, but I’m not sure I’d want to bet on the future if this aspect is important to you. The iPod is a much better choice in that case.

 5. canvas prints
  Sep 30, 2011 @ 12:26:10

  Between me and my husband we’ve owned more MP3 players over the years than I can count, including Sansas, iRivers, iPods (classic & touch), the Ibiza Rhapsody, etc. But, the last few years I’ve settled down to one line of players. Why? Because I was happy to discover how well-designed and fun to use the underappreciated (and widely mocked) Zunes are.

%d bloggers like this: