கவிதைகள்


தடுப்புகளுக்கு முன்

 

  உன்னுடைய
எல்லா கதவுகளிலும்
வெளியேறிக்கொண்டிருக்காதே!

கதவுகளுடன் இறுக்க
மூடிய இரும்பு பட்டுக்களுடன்
உன்
அடையாளங்கள் இறுக்கப்பட்டிருக்கின்றன…..
மற்றோருக்கான
கதவுகளிலும் பயணித்து
அதிலிருந்து
சாளரங்களின்
வழித்தடத்தை மேற்கொள்…!

மற்றும் ஒரு
இருண்ட நாளில்
உன் எலலா கதவுகளுமே
அடைக்கப்படலாம்,
நீ வெளியே முடியாமல்
அடைப்பட்டு அடிமையாக
அடையாளத்தை தொலைக்கலாம்…!
ஆனாலும்….
கதவுகளின் முன் உள்ள
தடுப்புகள் விலகும்படி
முயன்றபடி இரு….
எங்காவது
ஒளியின் ஊடுருவில்
தென்படுகிறதா என்று
கவனித்தபடி இரு….

20.09.2005

 

 

  •  
    இரவுகள் பற்றிய….

காயங்களை
அன்பளிப்பதற்காகவா
நீ எனனை விரும்பிகிறாய்…?
நான்
ஏன்
உனக்கு மட்டும்
நகரங்களின்
காவலாளியாகி போனேன்…?

முடிந்த வரையும்
சமாளித்து விடலாம்
என்றும் தானே நம்
அறைகளில் நமது
முரண்களை ப10ட்டி வைத்தோம்….!

நீ
பருவங்களின் ப10க்கின்ற
காதல் மலர்களின்
மல்லிகை வாசனையைய் குறித்து
ஏன் அன்னிய மனநிலையுடன்
இரவுகளின் என் நெருளுசி முள்ளில்
பாதங்களுடன் குத்தினாய்…?

என் எளிமையான
ஆசை வேர்களில
காட்டும் புலப்பங்களையாவது
சூடுவாய் என்று காத்திருந்த
இரவுகள்
வெள்ளை எதிரங்களாய்
சிதறியது…

நான் மீண்டும்
என் தனித்து ஓடும்
காலத்தின் நரகங்களிளுடன்
வாழ்வை
தேடி….
மிகநாடும்
வாழ்வின் தீராத
ஒப்பனைகளுடன்
என்
படுக்கையறைகளின்
வெப்பம்
என்னை எரிக்கின்றது
நீ
அங்கு எப்படி
இருக்கிறாய்
இப்போதெல்லாம்
நீ
இருந்து சென்ற
இருக்கைகளின்
பேய்களின்
காலடி தடங்கள்
மட்டும் சூனியமாய்
மிஞ்சியிருக்கின்றது.

 

 

மீட்சிக்கான இறுதிச் செய்தி

இயற்கையின் அவேச
ருத்ர தாண்டவம் – உலகின்
பல பகுதிகளையும்
விழுங்கியிருந்தது
குடிப்பதற்கான தண்ணீர – ஒரு நாள்
உயிரை குடிப்பதற்காக
உருவெடுத்தது
உலகின் தலைகீழ் மாற்றங்களின்
நிலைகள்
அழிவின் வரை படத்தின் வடுக்கள்!

இயற்கைக்கு உயிரை தவிர
தமிழ் – சிங்கள பேதம் என்ற
விபரஙகள் அறியாது!
மரணங்களின் மொழி
சகலருக்குமானது!

கடல் கொந்தளிப்பும்
நில நடுக்கமும் – இன்னும் பிற
இயற்கை அனரததங்கள்
எல்லாமே மிதமிஞ்சி போன
மனித வன்முறைக்கான
முன் அறிவிப்புகளே!
மனிதன் உட்பட
இயற்கைக்கு முன்
அற்ப பிறவிகளினது
பிரதிகளுக்கு ஓர் முன்
எச்சரிககை செய்திதான் சுனாமி!

ஓ!
மனித வர்க்கமே
சக மனித நேசத்தின்
முடிவை – மீண்டும்
தொடங்கி வைக்கவே
சுனாமி அலைகள் நம்
உலகத்திற்கு சொல்லி
செல்லும் இறுதிச் செய்தி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்

என் காலடித்தடங்கள்
தொலைந்து போயிருந்த
ஓர் நாளில்
உன்னை சந்திக்க
நேர்ந்தது….

வாழ்வு
யாருடைய சுதந்திரத்தையும்
அனுமதிககாமல்
நம்மை அழித்துக்
கொண்டிருக்கின்றது….!

உனனைப்பற்றி
சொல்லபடும்
புனைவுகளில் எலலாம்
நம்மைப் பற்றிய
காதலை
ஊரில்
சீன வெடியாய்
கொழுத்தி போட்டு
வேடிக்கை பார்க்கின்றது!
ஆனால்
நீ எத்தனை து}றம்
கலங்கி போய் விட்டாய்
நம் காதல்
உன்
தன் வழி பயணத்தடைகளை
அழித்து வட்டதை மட்டும் தான்
தந்திருக்கின்றது…….

நீ
எத்தனை அற்புதமானவன்
கலீல் ஜீப்ரானின்
கவிதைகளைப் போல்
நீ எவ்வளவு அழகானவள்
அன்னை தெரேசாவைப் போல்
நீ எவ்வளவு அன்டானவள்
நான் தான்
பாப்லோ நெருடன் கூறியது போல்
என் காதல் ஒரு குழந்தையின்
கதறலை தவிற வேறொன்றும்
இல்லை…..

நமக்க புரிகின்ற
இந்த எளிமையான
வாழ்வுககு முன்
நம்மை சுற்றியுள்ள
உலகத்திற்கு
சாதியும்
சடங்குகளும்
வர்க்கங்களும்
பெரிதாக கெரிவதில்
ஏதேனும் அர்த்தங்கள
இருக்கின்றனவா……?
சொல்லபடும்
மூன்றாவது காரணங்களுக்கு
முன்
நீயும் நானும்
வாழ்வில் நெரும் து}றத்தின
சரிவுகளில்
யாருக்கும் தெரியாமல்
போனபடி இருக்கின்றோம்….

இருவர
சேர்ந்து வாழ
இருள் வெளிகளில்
பரவும் கணணுக்கு தெரியாத
காரணங்களுக்கு முன்
வாழ்வின்; ருசி அத்தனையும்
செத்து போகின்றதை
பாரத்தபடி வாழ்வதென்பது
சகிக்க முடியவில்லை பெண்ணே!

இயலாமை கசியும்
என்
இருபப்pல் தொடரும்
வன் முறையின் கூர் மரணத்தின்; முன்
இன்றும்
முடிக்கமுடியாத படி
மீதமான வாழ்வு
என்னை பார்த்து சிரிக்க படி
இருக்கின்றது…

கடக்க நினைக்கிற
துயரங்களுக்கும்
எழுதி செலலவும்
திரை சுருளின் வாழ்வின்
புனைவை பதிவு பண்ணவும்
என்கிற ஒற்றை
காரணங்களுடனும்
மற்றும்
நம்முன் இருக்கும்
இயலாமையை அழித்து
எப்படியாவது
எழுந்து நடக்க நினைக்கும்
ஒரே காரணத்திற்காக தான்
எழுதிக் கொண்டு…….
வாழ்ந்துக் கொண்டு….
சினிமாவை நம்பி நானும்
நானை நம்பி சினிமாவும்
தற்கnhலை செய்யாது
இக்கணம் வரை வாழ்தல்
உறுதிப்படுகின்றது….
மற்றவைகள் எல்லாம்
பின் தான்

-காதலின் கொதிக்கும் துயர் இரவுகளில்-

 

மலைகளின் பாடல்

அடக்கி வைக்கப்பட்ட
நு}ற்றாண்டின்
கறுப்பு கோபத்தை
எடுத்துக்கொண்டு
புறப்பட்டு வா….!

நாம்
லயத்து இருளில்
சுயம் இழந்து
மரணித்தது பொதும்…
காவியங்களிலும்
கதைப்பாடுகளிலும்
கண்டு கொள்ளாத நம்
கடின வாழ்வின்
இருள் வெளிகளின்
மிக உயர்ந்த
மலைகளின் துயர
பாடுகளை பாடுவோம்…

சுவர்களாலும் காற்றின்
வெற்று அலைகளாலும்
மூடுண்டு போன
அதிகாரத்தின கொடிய
கைகளின் இரும்பு
துயரங்களை பற்றி
பாடுவோம்….

மலைகளின் பாட்டு
மானுடத்தின் விடுதலையின்
பாட்டாக பாடட்டும்
புலராத நம்
பொழுதின் இருண்ட
வண்ணங்களின் து}ரிகையுடன்
காலத்தின் வளையாத
சமர்களுடன்
போர்களின் வலிகளையும்
து}ரிகையுடன் எழுந்து
படைப்போம்…..
நமது பாடல்கள்
அதிர்வுகளுடன்
பறையொலிகளின் வீச்சில்
தேசத்தின் இருள்கள்
விலகி ஒடட்டும்….

கண்ணீரின் துக்கத்தினால்
சாவை வாங்கி
அடிமையின் உயிராய்
சாவும் நம்
தலைமுறைகளின் முன்
கேள்விகள் கொண்ட
ஒரு யுகத்துடன்
புறப்பட்டு புயலென
தகர்ப்போம் நம்
அறியாமையையும்
நம்மை
அறியாமல் தடுக்கும்
முற்களின் கம்பிகளையும்….

போதும்
லயத்தின் இருளில்
செத்து செத்து
குளிரில் மலைமுகடுகளில
நமது எதும்பு, கூடுகள்
இன்னுமா நாம்
மலைகளின் விரதினை
மறந்து
கருசாயத்தின் இரத்தத்தை
நினைவுகளில் கொண்டு
எழுந்து வருவோம்….
ஒரு குழந்தையின்
கண்ணீரின் தீராத
ஓலத்தை முடித்து வைக்க
24.12.2005

தோட்டத் தொழிலாளிகள்

அன்று
நிக்ரோக்களின்
சோதரர்கள்

இன்று
பொருளாதாரச்
சிலுவையின்
இயேசுக்கள்

என்றும்
இருட்டு பெட்டியில்
விழுந்து கிடக்கும்
ஓட்டுக்கள்

அடையாளங்கள – சில குறிப்புகள்

கொலைப்படையும்
கான்;ஸ்ட்ரனடேஷன்
வதை முகாம்களும்
இங்கும்
மறைந்திருந்து
என் மக்களை நசுக்குகிறார்கள்
விகல்பமில்லாத
சாமன்ய மனிதர்களின்
சரிதங்களில் நெடுகிலும்
கூர்முனை வாளொன்று
அவனை  -துயரம் நோக்கி
நகரத்தும் நிர்ப்பந்தங்களுடன்
முனைப்பும்
காயமுறும் ஈகோவும்
கற்பிதங்களுன
நெடுநாளைய வரலாற்றின்
முன் குவிக்கப்படும்
பிம்பங்களின்
சுய தேசியமும்
அடையாளங்களும்
புதைக்கப்படுவது தெரியாமல்
நான் – என் சுயத்தைத் தினம்
இழந்து விடுகின்றேன்
மேலிருந்து எழுகின்ற
எல்லாத் தீர்மானங்களின்
முன்னும்
என் அடிமை மனது
அதிகாரத்தில் இறுக்கும்
பாம்பின் முன்
மண்டியிட்டுச் சரிகிறது!

என் கண் எதிரேயே
என் மரணங்களைத்
தடுக்க முடியாமல்
கழியும் என் துயர் மிகுந்த
வாழ்வாதாரங்கள்
அருகதையற்றவர்கள் தான்
ஆனால்… நான் நடக்கும்
ஒற்றைப்படிப் பாதைகளில்
என் கால்களை முறிக்கும்
முற்களை நான்
அன்றொரு நாளை போல்
இன்றும் நேசிக்கின்றேன்
என காயங்களுக்க
இந்த முட்களிலிருநது கூட
மூலிகைகள் அகபபடக்கூடும்
என்னை….
என் போக்கில் நடக்க விடுங்கள்
என் மரணங்களும்
வாழ்வும் என்
சுயத்திருந்து
நிகழவதாக இருந்தால்
அது அழித்தொழிப்பாகவோ
ஒடுக்கடுவதாகவோ
அதிகாரங்கள் எப்படி
வேண்டுமானாலும் அதன்
குரூரத்தை குறித்து – நான்
நானாக எனக்கு…..
எதிரானவைகளுக:கு முன்
திரண்டெழும் வலிமைகளை
நாடி உயிர்ப்புடன்
துணிகின்றேன்.
  06.09.2005

 

ஏழு பள்ளதாக்குகளும் ஏழு பறவைகளும்

பறவைகளின் மரணங்கள்
தினம் அறிவிக்கின்றன
நான் குறித்த செய்திகளை
கூடுகள்
சிதைக்கபடும் நாளில்
நீ
அனுப்பியிருந்த கவிதைகளின்
மொழி புதிர்கள்
நம் வாழ்வின் சேராத
தருணத்தின் காலங்களை
நினைக்கின்றது……..

எனக்கான
பள்ளங்களின் பயணவெளி
திறக்கபடாமலேயே
கிடக்கின்றது
நாப்பது நாள்
இயேசுவின்
பாடுகளும்
400 டீடுழுறு
நானுறு உறைகளும்
என் வாழ்நிலைகளில்
தொகுக்கபடுகின்றது.

மீண்டும் ஒரு
காற்று சுடும்
வெய்யிலில்
அம்மாவின் ஞாபகங்கள்
வீட்டில் தனித்திருக்கும்
என் இசையற்ற
புல்லாங்குழலில்
வழிகின்றது ஆத்மாவின்
பாடல்கள்
புல்லாங்குழலில்
வழிக்கின்றது ஆத்மாவின்
பாடல்கள்……

நேற்று
சநதிக்க நபர்களிடமிருந்து
எனக்கான ஓர்
குறிப்பை
எப்படி என்னுடனேயே
தந்துவிட முடிகின்றது….

புலரும்
காலையில் நம்
செய்திகளில
பரிமாறப்படும்
வீபித்துவங்கள்
நம்மிடம்
கொண்டு சேறும்
நாட்களை தேடி
பயணிக்கின்றேன்…

மற்றும்
தனித்திருக்கும்
ஓர் இரவில்
நிசப்த வெளிகளில்
புல்லாங்குழலில்
அதிர்வு என்
நாளை புரட்டி
போடுகின்றது
அந்த எழு
பள்ளதாக்குகளை நோக்கியும்
பறந்து திரியும்
பறவைகளில்
ஞாபகங்களை நினைத்தும்…..

இரவு 11.00 மணி சனிக்கிழமை 01.04.2006

எனக்குள என்னுடன் அல்லது என்னுடன் எனக்குள்

புனிதங்கள் மறுக்கப்பட்ட
உன தாய்மை உடலில்
இரத்த வாடை தானே
வீசுகின்றது
அதற்காக ஏன்
தீட்டு என்று தள்ளி
வைக்கிறீர்கள்….

விந்து கவிச்சி
அடிக்கும் என்
உடலின் மொழியைய்
புனிதமென்றும்
ஆண் அழகென்று
போற்றுகிறார்கள

கவிச்சி சோற்றில்
புரிக்கும்
ஊறுகாயின்
கொதிக்கும் டீடைகள்
கொண்ட குடியானின்
குரூரங்களில் தெரியாது
எலலாம் இரத்தம்
கசியும் நாளில்
நீ தெய்வங்களுடன்
நெருங்காது போவதும்
கடவுளின் கழிவறைகள்
நம் இல்லங்களில்
இன்னும் சுவாமி அறை
சுவர்களில் ப10ச்சி
போன பாழ் சுவர்களில்
கூடு கட்டும் சிலந்தியின்
எச்சிலும் நானும்
பள்ளியின் மூத்திரமும்
கடதாசிகளை ப10ரிக்;கும்
ஐந்துகளுமான பிரேம்
இடப்பட்ட தெய்வங்களின்
ஓவியங்களின் படிந்திருப்பது
வெற்று உருவங்களில்
ரவிவர்மனின து}ரிகையுடன்
கலாச்சார வன்முறையும்
ஆற்ற முடியாத
துக்கமும் தான்….

நேற்றிருந்த
மாலையில் பெய்த
அந்தியின் து}றல் மழையில்
நனைய விடாமல்
தடுக்கும் நம் சமூகம்
கடவுளின் தரிசனங்களை
பிரேம் இடப்பட்ட
து}ரிகை வர்ணங்களில்
குழைத்த ஓவியங்களில்
அப்படி என்ன பீதியைய
தேடுகிறார்கள்….

பெருந்தெய்வங்கள்
நிரம்பியிருக்கும் என்
வீட்டின் ப10ச்சி சிதைந்த
அறை சுவர்களின்
முன் மறைக்கபட்ட
என மூதாதையர்களின
குலதெய்வங்களை
காணாது என் ஜாமங்கள்
வேர்களின் விளிம்பை
தேடி அலைந்து…
அலைந்து சூனிய இருட்டில்
ஒற்றை அறைகளை
எனக்குள் என்னுடன் மட்டும்
தமிழ் மனத்தின் சுயங்களை
தேடி இருப்பின்
கொடூரங்கள் பிடித்து
வாங்கும் பெரும்
நித்தனைகளை….!
எங்;கள்
துப்பாக்கிகள்
எதிரிகளை
குறிவைக்க முடியாமல்
குழம்பி நிற்கின்றது…

வரலாற்றின் முரண்களின்
முன்
எங்களின் தீச்சுடர்
நாடுகள்
எதிரிகளின் நிழல் உருவம்
அறியாமல்
சுருண்டு கிடக்கின்றது!

எதிரை
தீர்மானிக்க முடியாமல்
தேயிலையின்  பச்சையைய்
கிள்ளியெறியும் எங்களின்
கரங்கள் ஒரு நாள்
உள்ள10ரின்
போர் பிரகடணத்தை
தீர்மானிக்கும்…..

எங்கள் நண்பர்களே!
நாங்களே
எங்கள் விடுதலையைய்
தீர்மாணிக்க
நிச்சயிங்கள்….
காற்றின் பெரும்
வெளிகளில் உங்களின்
துப்பாக்கிகளும்
சுய மரியாதைகளும் கண்டு
நாங்கள் தலை பணிகின்றோம்
மற்றும்
எங்களின் சுய இருள் தணியும்
ஒரு நாளில்
நாங்கள் கட்டுகல் உடைத்து
எங்களின் புதிய திசைகளை
செய்வோம்.
தாழ்த்தபட்ட
காயங்களிலிருந்து
எனது விடுதலையின் அனல்
உன் இருப்பை
நெருங்கியபடி எழுந்து
நிற்கும்….

கரும்பின் சூரிய
கிரணங்களின்
ஒளிக்காற்றைகளின்
சூனிய இருப்பின்
குருதி நாளங்களின்
கலந்திருக்கும் அடிமை
மனதின் முடிவை சொல்லிக்
கொண்டு புது
மைல்கள் தோன்றும்…

உன் எலலா விதமான
வலிகளிலிருந்தும்
நான்
சுயமான தீர்க்கத்துடன்
மறப்பேன்…..

இழிவு சாதியாக
பார்ப்பன சதி விலையில்
மனு ஸ்ருதியின்
வளையங்கள் உலகில்
சுக்கு நு}றாக்கபடும்…
சிறைச்சாலைகளும்
மதில் சுவர்களும்
நம் தேசத்தின் புது
நம்பிக்கைகளை எழுதி
செல்லும்…!

நாம்
இனி
காற்றின் அனல்
பாடுகளில் புதர்
மனக் காயங்கள்
தொலைந்து எழுந்து
நிற்பொம்
நீ நான்
என்ற நினைவுகளின்
கதிகள் மோசமடையும்…
நீரில் மிதக்கும் வெண்குருதிகள்

என்னிலிருந்து
வடிகின்ற இரதத துணிக்கைகளுக்காக
மன்னிப்பின் முன் முனைப்புடன்
உன்;னிடதிருந்து வரும்
முற்றுப்புள்ளிகளின் தொடக்கங்கள்
என்னில் மேலும் வடிந்தபடி…

உடல் வேட்கை
இருப்பின் நீள் கரங்களின்
ஆதங்கங்களுடன்
எலலா விதமான காதலின்
சாகரங்களையும்
முறைப்படிததபடி உதிர்கிறது
மலர் வளையங்களிலிருந்த
ஊதா ஆண்மாக்கள்….

நீரில் மிதக்கும்
வெண் குருதியின் கலவையில்
சுயங்களின் பிடி தளர்ந்து
ஆண்மீக வெளி சிதைந்து
முற்றுப்பெறாத தாபங்களுடன்
உடல்கள் புதைக்கப்படுகின்றது!

என்
உள்ளறைகளில் தேங்கி
சிதிலமாகி போன
அழகிய உடல்களின் மெல்லிய
மடிகள் என் அந்தரங்கத்தை
கிழித்து அதன் போககில்
வீசிய அறைகளின்முன்
இழுத்து செல்கின்றது….!

நான் விரைத்த குறியுடன்
சிதைந்த ஆளுமையுடன்
எழுந்து நடமாட முடியாததொரு
பாலைவன வெப்பத்தில்
இரவுகள் துப்பும்
உடல் தீச்சுடரில் நான்
என்னை தொலைக்கின்றேன்!

காற்றின் ஈர வெளிகளில்
சுயமைத்துனத்தின் நீள் பாறைகளின்
நான் உடைந்த நொருங்கிய
மது போத்தலகளின் கண்ணாடி
சிலசுகளாக நிலத்தில்
நாதியற்று கிடக்கிறேன்..!

சொந்த வாழ்வின்
தேவைகளில் முற் கிரிடத்தில்
அவர்களுக்கான
போக்குடன் காதலின்
துயரத்துடன்
அவள் ஒரு நகரத்திலும்
இரு வேறு திசைகளில்
எல்லைகளில் இணைய முடியாததொரு
பெரும் புள்ளியாக சாதி வன்முறைகளின்
முற்று பெற்றதொரு காதலாய்
வாழ்வின் புதினங்கள்…..

இழப்புகளுக்கு முன்
இயங்கியலின் பின்
விதிகளுக்கு மத்தியில்
உன் பெண்ணியமும்
என் கனவுகளும்
உடைந்து விழுகின்றது – நம்
சமூகத்தின் சரித்திர பின்னனிகளுடன்!
……. ஆக நானும் நீயும்…

.
உறுதியான சமாதானத்துக்கு முன்

மனிதன்
சமாதானத்துக்கு மட்டும்
ஏங்குகிற ஊதா ஆன்மா!
புரிந்துகொள்வதற்கான
புறச்சூழலில்
மற்றவர்களின்
மீதும அன்புகொள்ள
தற்போதே நாம்
புறப்படுவோம்…
இந்த விரிந்த
அகன்;ற பிரபஞ்சத்துக்கு முன்
கிரமங்களிலும்
மாநகரங்கள் வரை
மண்சட்டி விளக்கொன்றை
ஏற்றி வைப்போம்…

மனிதனுக்கு
விரோதமான
வன்முறை எதற்காக?
தாய் தந்தை
சகோரர்களுடன்
நீ பிணைந்திருக்கும் போது
நீ
உனக்கு மட்டுமான
தேநம் காத்திருக்கவில்லை
உன் எதிர்கால
சந்ததிகளுககும் காத்திருக்கின்றது!

மரணத்தை விட
வாழ்வதற்கான உறுதியுடன்
உன் தெசம் காத்திருக்கின்றது
சகல மனிதர்களும்
விலை போகிறார்கள்
என எண்ணிக்கொண்டிருக்கும்
உன்னுள் விதைக்கப்பட்ட
எண்ணம் அதற்காகவே
கற்பிக்கப்படுகின்றது….
இழப்பதற்கு ஏதுமற்ற
நிர்கதியான
நிலையிலுள்ள மரணம்
பறறிய தீராத
பயத்துடன்
வாழ்பவர்களின் இறுதி
இருப்பிடம்
மரணத்தை
நிந்திப்பதற்காகதானே
வாழ்கிறோம்….
மிகவும் உயர்வாக
சிந்தித்து…….

பிரசாத் மஹிந்தகுமார எழுதிய
சிங்கள கவிதையை தழுவி எழுதப்பட்டது.

 

மரணங்கள் பற்றிய சில குறிப்புகள்

எப்போதும்
எதுவும் நிகழ்ந்துவிடலாம்
என்ற நினைவுகளுடனே
கடக்க முடியாத
வாழ்வு என் முன்பு
நகரத்துக்கான
முக் தயாரிப்புகொண்ட
இருப்பின் பின் நழுவும்
உள் வறண்ட
கவிதைகளின் தனி
குரல் வளையங்கள்
நான்
காரணமற்று
கைது செய்யப்படலாம்
சிறவைக்கப்படலாம்
சித்திரவதையுடன் என்
நான் வீதியோரங்களில்
பிணமாக
து}க்கி வீசப்படலாம்
இன்னும்
வன்முறை நிகழலாம்
அவசரகால
சட்டங்களும்
தேடுதல்களும் இன்னும்
பிறவும் என்
பகல் பொழுதுகளையும்
அச்சுறுத்துகின்றது…
எப்போதும்
என் நாளை
குறி வைத்து துரத்தியபடி
துப்பாக்கிகள்
நான்
சிவிலியனாக இருப்பதனாலும்
இன்றும் சிரமங்கள்
வேலையற்று இருப்பதனாலும்
சந்தேகங்களுக்கு
சாட்சியாக மாறக் கூடும்

எந்த கணமும்
“நான்”க்கு
எதுவும் நிகழலாம்
நான்
இருப்பதனால்தான்
இருப்பின் விளிம்புகள்
ஊசலாடியபடி இருக்கின்றது

மரணம் கூட
அடையாளமற்று போகலாம்
நான்
ஓர் நாளில்
காணாமல் போகலாம்
ஏனென்றால் நாம்
வாழும் நாடு நம்மை
எதுவும் செய்யலாம்
மரணங்களை பற்றிய
குறிப்புகளை தயார் செய்யும்படி
நிர்பந்திக்கும்
வாழ்வின் வன்முறைக்கு முன்பு
“நான்”
என்ன நான்!
26.08.2005

பொய்களின் கதை அறைகளில்

புலப்படுவதற்கான
எல்லா இருளின்
திரைவெளிகளும்
சுயங்;களை நொறுக்கும்
வீர சாசக நாயகர்களின்
பெரும்
கதைப்பாடுகளுக்கு முன்
நான் என்
திரைகளின் மௌனத்தின்
சுய வழி முனைப்பை
தேற வைத்து வெளிகளில்
அகதியை போல்
அழைக்னிறேன்!

அடைப்பட்டுக்கிடக்கும்
திறக்க முடியாத
சாகச பிம்பங்களின்
பொய்களின் கதை
அறைகளில்
வாசல்களில் காத்து கிடக்கின்றேன்!

அந்தரேய் தார்க்கோவ்ஸ்கியின்
கண்ணாடிகளுடன்
ஒரே ஒரு தமிழ்
சினிமா கலைஞன் ஈரம் செரியும்
ஈழ மரபுகளிலிருந்து
தோன்றிட மாட்டானா?
இருளின் புனைவெளி பிம்பத்தை
உடைத்தெழும் முனைப்புடன்
ஜான் ஆபிரகாமின் ஆவி
என்னையும் பிடிக்க வேண்டும்!

நான்
அதிகமான இருப்பில்
வறண்ட குகைகளில்
அலையும் தமிழ் மன
பிம்பங்கள்
செத்து செதது
ஒழுகி மறையும்
புனிதங்கள் நிறைந்த
திரை நாளில்
முன் நாம் மறுபடியும்
உயிர்தெழுவோம்

24.12.2005

 
கடக்க வேண்டிய
மீளாத
களத்தின்
பெரும்பாடுகளுடன்
தேயிலையின்
மலைச்சுவடுகள்
பனிச்சுவடுகள்
ஒற்றையடிப் பாதைகளில்
மீளாத துயர்விடாத
பொழுதொன்றின் தீரங்கள்…………..
இன்னுமு;
நாளைய வாழ்வின்
வண்ணம் தேடி
நடக்கின்றோம்…
வரிச்சை உருவி
கவவாத்து வெட்டில்
சரிக்கப்படும் ஒரு
புனித நாளில்
வருடும் காற்றை
ஸ்பரிசித்து
புசிக்கும் தினம் ஒன்றில்
நிம்மதியான இருப்பை
தேடியழையும்
மனித வாழ்நிலையின்
எதிர்காலங்கள் இன்னும்….

26.09.2005

 

பிரிவின் பாடல்

மெல்லிய ஈர காற்றில்
ஜன்னல்களும் கதவுகளும்
சப்தம் வரு திசைக்கு
அழைக்கின்றது…

வெறுமை சூழும்
என் அறைகளில் மங்கலான
நாளில் உனது ஞாபகங்கள்….
விவாகரத்து நோக்கி
செல்லும் மண வாழ்வின்
முடிவுகள்…..
உணர்வுகளின் தீராத
நினைவுகள் மட்டும்
மனசாட்சிகளை போட்டு
உழுக்கின்றது….

காற்று வீசிய
ப10மரத்தின் உதிர்ந்த
செம்மலர்கள் போல
தரையில் கிடக்கும் உயிராக
உன்னை குறித்து எழில்
எனது பாலைவன நினைவில்
தீராத காயங்கள்
மிஞ்சுகின்றது……

ஒலி அறுந்த நாடாவை
போல
நம் பாடல்கள்
தடைப்பட்டு
சூனியமாகின்றது
ராணுவம் சுற்றித்திரியும்
எனது தெரு முனை போல….

04.09.2006

 

• 
தலை நகரத்திற்கு சென்று
வரவேண்டும் என்கிற
ஆசைகள் கூட
சுருக்கட்டு விட்டது
தேடுதல்களும்
சுற்றி வளைப்புகளும்
அடையாள அட்டைகளும்
மனிதனின் சுயங்களை
காப்பாற்றி விடமுடிவதில்லை!

எனது சிற்று}ரில்
நாட் குறிப்பை எப்படியும்
தேடி விடுவேன் எனது
நம்பிக்கையுடன்
நான் திரைப்படங்கள்
பார்க்க முடியாதவனாய்
வீட்டின் இருள் அறைகளில்
சுய வலிகளின்
மிதக்கும் எண்ணங்களின்
மீளமுடியாதபிடியில்
சிக்கி சிதைக்கின்றது
நகரத்திற்கான அழைப்புகள்….

ஒரு விரிந்த பார்வையுடன்
நடக்க முடியாமல்
தட்டு தடுமாறி விழுந்து
என் கால்களின் பயணங்கள்
மண் நோக்கி சென்று
நாளைய வாழ்வின்
நண்பனின் பேச்சற்ற
சினிமா காட்சிகளாக
தனித்து அலைகின்றேன்
தேயிலை மலை சூழ்ந்த இந்த
வாழ்வின் நெடும் பயணம் மட்டும்
முகில் கொண்ட நீல வானில்
கொழுந்து கூடைகளுடன்
தேசம் முதுகெழும்பாய்
எழுந்து நிற்கும் போது
உடலின் தீராத வேதனையின் முடிவை
பள்ளிவாசலின் பாங்கு ஓசை
அல்லாவின் தேடலை நோக்கி
சதா காலமும்…..
ஒரு சூபி கவிஞனை தேடி
நானும் பார்ப்பதற்கான
பாரசீக மண்ணின் ஏக்கங்களுடன்
காத்திருக்கும் வேலைகளில்
உறுதிமொழி கூறும்
முகம்மதுவின் தோழன்
வருவதாக கூறி வராத போகும்
காரணங்களின் முன்பு
யாரையும் நம்ப முடியாமல்
அம்மா அப்பாவின்
மளிகை கடைகளிலும் இருந்தவை
நிரப்ப முடியாத
குறற்வுணர்வில் பொழுதுகளை
தீராத வேதனையில்
இயலாமையின் விளம்பில்
உறங்கி கழிக்கும்
தற்சமயம்
என் உளவியலில் இறுக்கம்
சூழும் மன வியாதியின்
பின் புறத்தினுள்
மருத்துவமனையின் நம்பிக்கையற்று
N‘hமியோபதி உதவிகளின் முன்பு
தேடலுக்கான காரணமற்று
வாழ்வை எழுதும் சினிமாவில்
தீராத ஆசைகளுடன்
மக்களை தேடும் கலைஞன்
தார்கோவ்ஸ்கியின் சம அளவுக்கு
வாழ்வை சினிமா சட்டகத்தினுள்
அடைந்து விட்டு சாக
வேண்டும் என்கிற வைராக்கியம்
மட்டும்
மீதமாக மஞ்சியிருக்கின்றது…
மனைவியின் விலகி செல்லும்
வரலாற்றின மன முறிவை
எங்கனம் நான் தீர்ப்பேன்
இறை மறுப்பு வாசியுடன்
படுக்கையறைகளுக்கும் தீராத
காமத்திற்கும்
அன்னை தெராசாவை போல்
காமத்தின் நவீன ஓவியத்தில்
எனது
ஓடி விளையாடிய பொழுதில்
அருகில வசிக்கும் பெண்ணின்
உள்ளாடைகளை வழவாடிய
நடுநிசி மழை இரவில்
முகட்டில் திருடனாய்
ஆன நாளில்
தைரியம் இப்போது எங்கே!

ஒவ்வொரு பெண்ணியமும்
நான் கறக முடியாது
போன பால்வெளிகளின்
மார்பு காம்பின் யோனியின்
பாடலில்
இசை வரிகள்
எனது தாலாட்டில்
அம்மாவின் தழுவாத கரங்களாக
வாழ்வில்
விளிம்பிற்கு போனதன்
காரணம் தான் என்ன….

ஞானங்களின் சூழ்ச்சியாய்
மேலை தேயத்தின் காலனி மனிதனாக
மூலையின் திசக்கள்
இன்றும் சுயம் நசுக்கபட்டு
திருடப்படுகின்ற வாழ்வின்
சாரமிழந்த சக்கையான
கவிதைகளுடன் மட்டும்
என்னையும்
உன்னையும் நம்
அனைத்தையும் மீட்டெடுக்க
ஒரு அவகாசம் ஏற்படுமாயின்
அதுவே போதும்
பாரசீக மண்ணின்
சுயத்தை இங்கே
பரப்பிய நாளில் எல்லா
வன்முறைகளுடன்
முடிவை நாம் உலகிற்கு
அறிவித்தவர்களாக முடிவை
பற்றிய குழப்பமற்று
உலகில் சக மனிதனை
நேசிக்கும்
காலத்திற்காக
பிரார்த்தனையுடன் மட்டுமல்ல
என்னையும்
மீட்டெடுக்க வேண்டும்
உலகின் அழிவின் கைதியாக
உருமாற்றபட்ட
போனத்தினத்தின் பொய்மையின்
சுவரோவியங்களாக
நான்
என்னையே விற்பனை செய்து
பிழைத்து வரும் இந்நாளில்
முற்றும் துறந்து
ஒரு புதிய உலகின்
நாளில்
நாம் மறுபடியும்
சந்திப்போம்
அப்போது
நாம்
நிறைபேறாத காதலின் மிகுதியைய்
ப10ர்த்தி செய்து
வாழும் உலகின்
மீட்சிக்கமான சுயங்களை
இட்டுச் செல்லும்
நாம் சிறு குழந்தைகளின்
சிரிப்பு சப்தத்தில்
என்னுடைய கவிதையும்
உன்னுடைய கவிதையும்
புணரும் நாளில்
பிறக்கும் வாழ்வில்
மிள்வோம்…..
மரணங்கள் பற்றிய சில குறிப்புகள்
எப்போதும்
எதுவும் நிகழ்ந்துவிடலாம்
என்ற நினைவுகளுடனே
கடக்க முடியாத
வாழ்வு என் முன்பு
நகரத்துக்கான
முக் தயாரிப்புகொண்ட
இருப்பின் பின் நழுவும்
உள் வறண்ட
கவிதைகளின் தனி
குரல் வளையங்கள்
நான்
காரணமற்று
கைது செய்யப்படலாம்
சிறவைக்கப்படலாம்
சித்திரவதையுடன் என்
நான் வீதியோரங்களில்
பிணமாக
து}க்கி வீசப்படலாம்
இன்னும்
வன்முறை நிகழலாம்
அவசரகால
சட்டங்களும்
தேடுதல்களும் இன்னும்
பிறவும் என்
பகல் பொழுதுகளையும்
அச்சுறுத்துகின்றது…
எப்போதும்
என் நாளை
குறி வைத்து துரத்தியபடி
துப்பாக்கிகள்
நான்
சிவிலியனாக இருப்பதனாலும்
இன்றும் சிரமங்கள்
வேலையற்று இருப்பதனாலும்
சந்தேகங்களுக்கு
சாட்சியாக மாறக் கூடும்

எந்த கணமும்
“நான்”க்கு
எதுவும் நிகழலாம்
நான்
இருப்பதனால்தான்
இருப்பின் விளிம்புகள்
ஊசலாடியபடி இருக்கின்றது

மரணம் கூட
அடையாளமற்று போகலாம்
நான்
ஓர் நாளில்
காணாமல் போகலாம்
ஏனென்றால் நாம்
வாழும் நாடு நம்மை
எதுவும் செய்யலாம்
மரணங்களை பற்றிய
குறிப்புகளை தயார் செய்யும்படி
நிர்பந்திக்கும்
வாழ்வின் வன்முறைக்கு முன்பு
“நான்”
என்ன நான்!
   26.08.2005

Advertisements

Comments are closed.

%d bloggers like this: