——


• 
நேற்றிரவு
சுடப்பட்டு வீதியில்
வீசப்பட்டு கிடந்தது
எனது நண்பனின் பிணம்!

அம்மாவோடும்
அப்பாவோடும்
பேச முடியாமல் தவிககும்
மன முறிவின் காயங்கள

மனைவியின்
விவாகரத்துகான
நினைவுகள் மட்டுமே
மிஞசியிருக்கும்
திருமணத்திற்கான பதிவுகள்!

மழைக்கு ஒதுங்கிய
ஒரு தருணத்தில்
நினைவில் தகிக்கும்
எனது காதலியை கண்டு
தீ பிழம்பாய் கொதிக்க
தருணங்களில்
என்னால் உடைத்தெழுந்த
நினைவு தகர்ப்புகள்!

குறும்படத்திற்கான
கதையுடன் இனியும்
பயணிக்காத பாதைகள்
எழுதி முடிக்க வேண்டிய
சிறுகதைகளில் முடிக்காத
முடிவுகளில்….

தொடரும் வாழ்வின் இருப்பின்
நம்பிக்கைகள் மட்டும்
ஏனோ பலமற்று…!

Advertisements

Comments are closed.

%d bloggers like this: