விழித்தடங்களில்


நீண்ட புதைகுழியின்
மரணங்கள் பற்றிய
குறிப்புகளை தயார் செய்தபடி
கழியும் வாழ்நாட்கள்

கனிப் பொறிகள்
அறைகளின்
வெட்கை கனலின்
பேச்சு துணையற்ற
முடியும் கவிதையின் மொழி
குழந்தைகள்
வருகிறார்கள்
போகிறார்கள்
குழந்தைகளை அதன்
அர்த்தங்களோடு புரிந்து
கொள்ள முடியாமல்
தவிக்கும் மனசு

ஓவியங்களின் நிழல்
பிம்பங்களின் கானல்
பொழுதில்
வெளியே அடிக்கும்
வெய்யிலின் தணல்!

இருப்புக்களின்
மீதெழும் அவநம்பிக்கையுடன்
மிகுதி வாழ்வை
நம்பிக்கையற்று
வரண்ட வழித்தடங்களில்
நான்
    
30.06.2005

Advertisements

Comments are closed.

%d bloggers like this: