லின்டன் சோமகேவுடன் ஒரு உரையாடல்


 

 

 

 

 

இலங்கை சிங்கள சினிமாவின் பிரபல்யமான நடிகன், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர்  இவர் நாடகங்களின் மூலமாக திரைப்படத்துறைக்கு இடம் பெயர்ந்தவர். 1980களில் அவர் நாடக நடிகனாகவும் நடனக்கலைஞனாகவும் பரிணமித்து 1991ம் வருடத்தில் அவர் தயாரித்து இயக்கி மேடையேற்றிய ~பஞ்சாயுத| “PயுNஊர்யுலுருனுயுலுயு” (குஐஏநு றுநுPழுNளு) என்ற மேடை நாடகம் பல்வேறு தேசிய விருதுகளை அவருக்கு பெற்று தந்தது. 1996ம் வருடம் அயோமா என்ற திரைப்படத்திற்கும் ஆநந ர்யசயமய (எருமை மாடு) என்ற சிங்கள சினிமாவுக்கும் சிறந்த நடிகனுக்குமான விருதை பெற்றுத் தந்தது இவர் நடித்த னுநயவா ழn ய குரடட ஆழழn னுயல வுhளை ளை அல ஆழழn என்ற படங்களில் நடித்தமைக்காக இரண்டு முறை சிறந்த நடிககுக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் முதல் முறையாக இயங்கி நடித்த Pயனயனயலய (வுhந ழரவ ஊயளவ) என்ற திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது. டாக்காவில் நடந்த 6வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாகவும், சிறந்த இயக்குனருக்கான விருதுகளை பெற்றது. புஷான் திரைப்பட விழாவில் இப்படம் சிறப்பு ஜுரி விருதையும் பெற்றது. இப்போது இவர் இயக்கி நடித்திருக்கும் Piஉம Pழஉமநவ என்ற திரைப்படம் 7வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. இப்படத்தை இயக்கி நடித்திருக்கும் லிண்டன் அவர்கள் நமது “நிழல்” பத்திரிகைக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை திருவனந்தபுரத்தில் வைத்து தந்தார். இவருடான நேர் காணல் அவருடைய தாய்மொழியான சிங்கள மொழியிலேயே எடுக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மற்ற எல்லா படைப்பாளிகளையும் போலவே ஒரு அறவியல் தன்மை ஒன்று தன்னையும் தொந்தரவு பண்ணியபடியே இருப்பதாக கூறும் லிண்டன் சமகே தன்னுடைய பிக்பாக்கட் திரைப்படம் பற்றியே இங்கே பேசுகின்றார்.

 

பிக்பாக்கெட் திரைப்படத்தில் நீங்கள் சொல்ல வருவது என்ன?

திரைப்படத்தில் சொல்ல நினைத்ததை அத்திரைப்படத்திலேயே சொல்லியிருக்கின்றேன். அதாவது… நான் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கின்றேன், புரிகிறதா நான் சொல்வது… ஆனாலும் அதையும் மீறி உண்மையில் சொல்ல வேண்டியதென்னவென்றால், திரைப்படங்களில் எனக்கு அவசியமாகவும் படுவதும் வாழ்க்கையை பற்றிபேசுவதற்கே… சினிமாவின் ஆன்மாவே  வாழ்க்கையை பற்றி பேசுவதே…

எவ்விதமான அர்த்தமும் அற்ற, வாழ்வில் போக்கற்ற மனிதர்களை பற்றியே எனது படத்தில் பேச முயன்றிருக்கின்றேன். அதாவது இவரைப்பற்றி எனக்கு தெரியாது உங்களைப் பற்றியும் எனக்கு தெரியாது. உலகத்தல் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு தெரியாது. நம்மை பற்றி யாருக்குமே தெரியாது. நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதும் இல்லை. இப்படிப்பட்ட நிiலையில் நாம் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்துகொள்வது, நாம் புரிந்துகொள்கிறோமா? இல்லை சண்டைப்போட்டுக் கொள்கிறோமா? கொலை செய்து கொள்கிறோமா? மனிதனை புரிந்துகொள்ளும் முயற்சியிலேயே உங்களை நான் தாக்குகிறேனா… இல்லை முடித்துக்கொள்கிறேனா?
இது போன்ற மனிதர்களை புரிந்துகொள்கிறோமா இல்லை மோசமான மனநிலையுடனே வாழ்கிறோமா? எனக்கு சொல்ல இருப்பதெல்லாம் இதுதான், மனித வாழ்வில் மிகவும் மோசமானவனாகவும், மிகவும் மட்டகரமான நாளாந்தர மனிதனாக  கருதப்படும் இந்த பிக்பாக்கெட் அடிக்கும் மனிதன், ஒழுங்கற்றவன்தான் ஆனால் அவன் வைத்தியன் அல்ல, ஆழ்ந்த படித்த அறிவு ஜீவியும் அல்ல. “ழே னுழஉவழச…. ழே Pழஉமவழச” படித்த ஒரு அறிஜீவி கூட  பெண்ணை தாக்குபவனாக இருப்பான். ஆனால் இந்த சாதரண மனிதன் தன் மனைவியை தாக்குபவனோ, பெண்கள் மேல் வன்முறை செய்பவனனோ இல்லை, இவன் தேடுகிறான் தன் மனைவி யார் என்று தேடுகிறான், தன் மனைவியின் உள் உருவத்தை தேடியலைபவனாக இருக்கிறான். அதிகபட்சமாக தனக்கு ஆதாரம் ஏதேனும் கிடைக்குமா என்று தேடுகிறான். தான் திருமணம் முடித்துக்கொண்ட இந்த பெண்ணின் பிம்புலத்தை தேடுகிறான், அதற்காக அதிகபட்சமாக கஸ்டப்படுகிறான், மனைவியை பற்றிய ரகசியங்களை தேடும் முயற்சியிலேயே தன்னைப் பற்றியும் அவன்  உணர்கிறான். அவளைப் பற்றிய ரகசிய முகத்தை தேடும் முயற்சியிலேயே அவனுடைய முகமும் அவனுக்கு தெரிகின்றது. தான் ஜேப்படி திருடன் என்கிற உண்மை அவனை சுடுகின்றது. இனியும் ஜேப்படி திருடனாக இருக்கக் கூடாது வேறு வேலை தேட வேண்டும் என்றெல்லாம் அவனுள் எண்ணங்கள் தோன்றினாலும் அவனுக்கு அந்த வாழ்விலிருந்து மீட்சி பெறுவதற்கு வாய்ப்பு கிட்டுவது கிடையாது. என்னதான் மாறுவதற்கு அவன் முயன்றாலும் மாற முடியாத சூழ்நிலை அவனை சூழ்கின்றது. அவன் மீண்டும் அதே சூழ்நிலைக்குள் சிக்குகிறான். மீண்டும் மீண்டும் அங்கேயே விழுகின்றான். அவனுள் எழும் கேள்விகளுக்கு எங்குமே பதில் கிடைப்பதில்லை, சமூகத்திற்கு முன் அவனுடைய கேள்விகள் கூட பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு விடுகின்றது.

படத்தின் இறுதி பகுதில் பிரதான கதாபாத்திரத்தை கொலைகாரனாக மாற்றி விடுவதின் வழியாக நீங்கள் கூற வருவது என்ன?

கமலை கொலைக்காரனாக சித்தரிக்கும் காட்சி படத்தில் இல்லை… அவன், சந்தர்ப்ப வசத்தினால் கொலை சிகழ்வதாகதான் நான் கூற வருகிறேன்… கமல் புகைப்படக்காரனனை தரையில் தள்ளி விடுவதாகத்தான் காட்டியிருக்கின்றேன்… ஆகவே கீழே விழுந்து மரணமடைந்து விடுகின்றான். ஆனால் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவன் துப்பாக்கியை எடுத்து வந்திருப்பான். ஆனால் அவன் அப்படி செய்வதில்லை… கமல் குழம்பிய மனநிலையில் இருப்பவன் புகைப்படக்காரனை சந்தித்த பின் தான் தெளிவடைகிறான்.

தன் மனைவிக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்று கூட தெரியாமலேயே போவற்கு வாய்ப்பு உண்டா? எப்படி தன் மனைவிக்கு ஒரு அண்ணன் இருப்பது கணவனுக்குதெரியாமல் போகும்?

இது இப்படித்தான்… கொழும்புக்கு வந்த பின் இவன் எப்படியோ சந்தித்து அவளை கல்யாணம் கட்டிக்கொள்கிறான். நான் அவர்கள் கல்யாணம் கட்டுவற்குமுன் காதல் செய்து இருப்பார்கள் என்றெல்லாம் திரைக்கதையில் கூற வரவில்லை. ஆனால் அவன் கல்யாணம் கட்டிய பின்தான். அவளுக்கே அவனுடைய வாழ்வை பற்றி அறிந்துகொள்கிளாள. அவன் ஒரு பிக்பாக்கெட்காரன் என்று தெரிந்த பின்னும் அவனை விட்டு அவனால் விலகிச் செல்ல முடியவில்லை. அவனுடைய சூழ்நிலை புரிந்த பின்னும் அவனை விட்டு விலகிச் செல்ல. அவளுடைய கலாச்சாரமும், சமூகமும் அவளை விடுவதில்லை.

ஆனால் அவள் தனக்கு குழந்தை கிடைத்த பின் தன் வீட்டுக்கு போகிறாள். அப்போது வீட்டில் தன்னை அனைவரும் சமாதானம் படுத்திக்கொண்டு ஏற்றுகொள்வார் கள் என்று. ஆனாலும் யாரும் அவளைப் புரிந்துக்கொள்ள மாட்டார்கள்…. என்னதான் நான் பெரிய நடிகனாக இருந்தாலும் என் மனைவிக்கும் என் கலை வாழ்வுக்குமான இடைவெளி நீண்டதுதான். என்னை என் மனைவி புரிந்துகொள்ள மாட்டாள். அது போல் அவள் அண்ணனும் அவளைப் புரிந்துகொள்ளமாட்டான் என்பதால்தான் அவள் அதுவரை போகவில்லை, ஆனால் குழந்தை கிடைத்த பின் வீட்டுக்கு போகிறாள்.

சரி நீங்கள் திரைப்பட துறைக்கு வந்ததைப் பற்றி கூறுங்கள்?

அடிப்படையில் நான் ஒரு நாடகக்காரன், நடிகன், டான்சர், காரத்தே கலை பற்றியும் தெரியும், நிறைய விசங்களை மெதுமெதுவாகதான் கற்றுக்கொண்டேன் சினிமாவை நான்  முறையான கல்விகளில் கற்றுக்கொண்டு வரவில்லை.

என் முதல் நாடகத்தை ~புஞ்சாயுத| என்கிற பெயரில் மேடையேற்றினேன். அந்நாடகம் து.ஏ.P. கால கட்டத்தில் பொது மக்களை அரசாங்கம் கைது செய்தது. அதைப்பற்றிய நாடகம் அது. நாடகத்தில் ஒரு தகப்பன் தன்னுடைய மகனை அந்த நரக உலகத்திலிருந்து பாதுகாப்பதற்காக வீட்டி; கதவுகளை மூடி, ஜன்னல்களை இறுக்கமாக சாத்தி பாதுகாத்து கொள்கிறார் . மகனை எங்கும் அனுப்ப பயப்படுகின்றார். அதுவே அவருக்கு மன வியாதியை ஏற்படுத்தி விடுகின்றது. இதுவே அந்நாடகத்தின் கதை, இந்நாடகத்திற்கு சிறந்த நாடகம், சிறந்த நடிப்பு என்று பல்வேறு விருதுகளை 1993ம் ஆண்டு பெற்று தந்தது. ஒரு நாடகம்தான் மேடையேற்றினே;ன் அதன் பின்னர் பல்வேறு நாடகங்களை இயக்கினேன். அதற்கு பின் திரைபடத்தினுள் காலடி எடுத்து வைத்தேன். முதலில் டீ போயாகவும், வேலை கிடைத்தது. அதன்பின் படிப்படியாக ஆடை வடிவமைப் பாளரின் உதவியாளராகவும், கெமரா உதவியாளனாகவும், பின் கிளாப் அடிப்பவனாகவும், உதவ எடிட்டராக, உதவி இயக்குனராக, பின் சின்ன சின்ன துணை நடிகனாக நடிக்க வாய்ப்பு கிட்டியது. அதன் வழியாகவே இந்நிலைக்கு வர முடிந்தது. 17 வரு காலமாக பல்வேறு வேலைகளில் அனுபவம் பெற்ற பின்னரே. எனக்கு சிறந்த நடிகன் என்ற தேசிய விருது எனக்கு கிடைத்தது. அடிப்படையில் நான் நடிகன். எனது முதல் படம் வெளியாள். கடந்த கொச்சின் திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. டாக்கா திரைப்பட விழாவில் சிறந்த படமாக விருது பெற்ற திரைப்படம் அது. அNது படம் சிறந்த நடிகனுக்கான விருதையும், சிறந்த துணை நடிகனுக்கான விருதையும் பெற்றது. சிறந்த படமாக 2000ம் வருடத்தில் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த விமர்சன விருதையும் இப்படம் பெற்றது.
.நான் ஒரு சின்ன மனிதன் அவ்வளவுதான்.
சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன? குறிப்பாக வுhளை ளை அல அழழnஇ னுநயவா ழn ய கரடட அழழn னயல போன்ற படங்களைப் போல் வேறு படங்களைப் பற்றி…?

இது போன்ற திரைப்படங்களை எடுப்பது என்பது கடினமான வேலை, இது போன்ற படங்கள் இலங்கை திரையரங்கில் ஒடுவது கடினம், பார்வையாளர்கள் இது போன்ற படங்களை பெறுவதென்பது கடினம். நான் 5 லட்சத்தை செலவழித்து எப்படி நான் வாழ முடியும், நமக்கு கலையும் வேண்டும், அதே நேரம் வாழ்வும் வேண்டும், நான் வாழ்ந்து கொண்டிருப்பதனால்தான் உங்களை சந்திக்க முடிகின்றது.

உங்கள் Piஉம Pழஉமநவ திரைப்படத்தில் புத்தரைப் பற்றிய காட்சிகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

Piஉம Pழஉமநவ அடிக்கும் மனிதன் மனரீதியானவன், நான் பிக்பாக்கெட் மனிதனை நேசிக்கின்றேன், எனக்கு அவன் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி…. ஆனால் அவன் செய்யும் காரியங்கள் எல்லாம் இல்லாத மனிதனுக்கு நன்கு தெரியும். அதாவது காற்றாடி விற்பனை செய்பவனுக்கு இவனைப் பற்றி தெரியும். அத்தோடு அவன் செய்வது அவனுக்கு தெரியும்.ஆனால் தெருவில் போகும் மனிதனுக்கு அவன் செய்வது ஒன்றும் தெரியவில்லை. அது கூட மாயா ஜால உலகம் போல்தான். அவனுடைய செயல்கள் நடக்கின்றன. அவன் அவனுள் நினைக்கின்றான், அவனுடைய செயல்கள் மட்டுமே பார்ப்பதாக… திரைப்படத்தில் வரும் இஸ்லாமிய குடும்பம் பற்றி…?

நான் முதல் முறையாக இஸ்லாமிய பின்னணியை என் திரைப்பத்தில் கொண்டு வந்தேன். இலங்கையில் இதுதான் முதல் தடவையாக இஸ்லாமியர் பற்றியும் பேசுகின்ற சினிமா, ஏனென்றால் அந்த மனிதர்களும் நம்முடனே வாழ்பவர்கள்… அவர்களும் மனிதர்களே, என்னை பொருத்தவரை, வேறு பாஷை இல்லை. ஒரே நாடுதான், ஒரே மொழிதான் என் மொழி கலை. எத்தனை மொழி இருந்தாலும், எத்தனை சாதிகள் இருந்தாலும் நான் பேசும் மொழி ஒன்றே ஒன்றுதான். அம்மொழிதான் கலையின் மொழி கலை உலகத்தின் மொழி. நான் என் கலையை உங்களுக்குத்தான் படைக்கின்றேன். இதில் மொழி ஒரு தடையல்ல, நான் இலங்கையனல்ல நான் உலகம், நான் கலைஞன் உலகத்திற்காகதான் என்னால் என் மொழியை பேச முடியும் நான் எல்லோரிடமும் பேச முயன்றேன். இலங்கை மனிதன் மட்டுமல்ல@ நான் சினிமாவை காட்சியினு}டாக கதைக்க முயன்றேன், நானும் மற்றவர்களின் சினிமாவைப்போல விபரித்துக்கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் அது என்னால் முடியாததொன்று

கதாபாத்திரத்தை குற்றாவளியாக காட்டுகிறீர்களா? இல்லை உளவியல் சிகக்கலை காட்டுகிறீர்களா?

உளவியல் சிக்கலையே இப்படம் பேசுகின்றது அவனுடைய மன நெருக்கடியில் இருக்கும் குழப்பமே இப்படம் பிக்பாக்கெட் அடிக்கும் பையில் தனது மனைவியின் புகைப்படத்தை பார்த்த பின் தன் மனைவியை அவன் அடித்து உதைக்க முடியும், ஆனால் அவன் அப்படி செய்வதில்லை, அவன் ஆர்பாட்டம் எதுவும் பண்ணுவதில்லை, அப்படியே இருக்கின்றான் இவன் மிகவும் அழமானவன், கவனமாக தான் தன் நிலையை உணர்கின்றான். கமல் புகைப்படத்தை பார்த்த பின்னும் நிதானமாகவே யோசிக்கின்றான் இதுதான் அவனுடைய பிரச்சினைக்கும் காரணமாகின்றது. உணவை மேஜையில் கொட்டிய பின்னர் சாப்பிடுவதும் மனப்பிரச்சினை கள் மட்டுமே காட்டப்படுகின்றது இப்படத்தில்.

படத்தில் ஒரு காட்சியில் நீ ஏன் கலியாணம் கட்டவில்லை என்று படத்தின் பிரதான கதாபாத்திரம் கேட்பதும் அதற்கு எதிர் கதாபாத்திரம் கூறும் பதிலும் நீங்கள் சொல்ல வருவதும் என்ன?
நீங்கள் கேட்பது புரிகின்றது. நீங்கள் கேட்கிறீர்கள் ஏன் நீங்கள் கட்டுனீர்கள் என்று, இல்லோருமே கூறும் பதில் இதுதான், அப்பா, அம்மா வற்புறுத்தியதனால் கலியாணம் கட்டினேன் என்பதுதான் நம் அனைவரினதும் பதில் ஆனால் அவனோ பதிலுக்கு எதிர் கேள்வி எழுப்புகின்றான், ~ஏன் கலியாணம் கட்ட வில்லை என்பதற்கு ஏன் கலியாணம் கட்டினாய்| என்று கேட்கின்றான். ~நான் கேட்கிறேன் நீ ஏன் திருமணம் முடிக்கவில்லை என்று ஆனால் அவனோ நீ ஏன் திருமணம் முடித்தாய் என்று எதிர் கேள்வி எழுப்புகின்றான் அதற்கு மௌனமே பதிலாகின்றது. நான் கேட்கும் வேறு உலகத்தில் பதில் இல்லை, அத்தகைய பிரச்சினைகள் யாருக்கும் பதில் தெரியாது. அவன் மறுபடியும் கேட்கிறான் நீ எங்கே போகிறாய் என்று அவன் சொல்கின்றான் காற்றடிக்கும் திசையில் செல்கின்றேன் என்று ஏனென்றால் காற்றாடிகள் எப்போதுமே காற்றடிக்கும் திசையிலேயேதான் சூழல்கின்றது. அதனால் தான் அவன் நான் பேசுகின்றேன் போகிறேன் போகிற திசையில் போகின்றான்.

அங்குல்ல தமிழ் திரைப்படங்கள் பற்றி கூறுங்கள்?

அங்கு தமிழ் திரைப்படங்கள் இல்லை, நாங்கள் தான் தயாரிக்கின்றோம் தமிழ் மக்கள் அவ்வளவு து}ரம் தமிழ் கவிதைகள் கூடிசொல்வதில்லை, தமிழ் கவிஞர்கள் இருக்கின்றார்கள் ஆனால் பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை நாங்கள் தான் அவர்களை பற்றி பேசுகின்றோம் ஆனால் அவர்கள் எங்களை பற்றி பேசுவதில்லை, சிங்கள கலைஞர்கள் தான் தமிழ் மக்களை கவிதைகள் எழுதுகின்றார்கள், ஆனால் சிங்கள மக்களை பற்றி தமிழ் மக்கள் கதைப்பதுமில்லை கவிதைகள் எழுதுவதுமில்லை அங்கே தான் இருக்கின்றது பிரச்சினை.

திரைப்படங்கள் சங்கங்கள் பத்திரிகைகள் பற்றி…?

திரைப்படங்கள் சங்கங்கள் இருக்கின்றன…. மூன்று நான்கு இருக்கின்றன… செயல்பாடுகள் கம்மி சினிமா பத்திரிக்கையும் உண்டு ~சரசவி| என்ற பத்திரிக்கை உண்டு.

இங்கிருந்து அங்கு வரும் இந்திய திரைப்படங்கள் பற்றி கூறுங்கள்?
உண்மையாக சொல்ல போனால் இங்கிருந்து (திருவானந்தபுரத்தீல்) 45 நிமிடத்தில் இலங்கைக்கு பொகமுடிகின்றது ஆனால் அங்கிருந்து இங்கு சிங்கள படங்கள் வருவதென்பது பல சிரமங்கள் இருப்பது வருத்தம் தருகின்றது. இந்தி, தமிழ் சினிமாக்கள் நிறைய வருகின்றது. ஆனால் நம் சிங்கள சினிமாக்கள் வருவதற்கு தடையிருப்பது கவளைதான். இது அரசியல் உறவுகளுக்கிடையிலான இடைவெளிகளில் உள்ள பிரச்சனை தான், எந்த அரசாங்கம் வந்தாலும் இது இப்படியேதான் இருக்கும்.

படத்தில் வரும் இறுதி காட்சி பற்றி கூறுங்கள்?

நான் சொல்ல வருவது இதுதான், நம்முடைய பிரச்சினைகள் அடுத்த சந்ததிகளுக்கு போகின்றது. இது முடிவடைவதில்லை. என்றோ ஒரு நாள் இந்த பிரச்சினை பற்றி படத்தில் வரும் சிறுமி உணர்வால், புரிந்துகொள்வால் யார் என்னுடைய அப்பாவை கொலை பண்ணினார்கள் என்று. அவனை இதுவரை யாருமே சந்தேகப்படுவதில்லை, இவள் மட்டுமே சந்தேகடுகின்றாள்? அவளுக்கு சின்னதாக ஒரு சந்தேகம் இருக்கின்றது. அந்த சந்தேகம் என்னுடைய அடுத்த படமாக கூட தொடரலாம்.

இப்படத்தில் அரசியல் பற்றி பேசியிருக்கின்றீர்களா?

ஆமா, மனிதனுடைய பணப்பையை மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் பிக்பாக்கெட் அடிக்கின்றது என்பதை சொல்லி இருக்கின்றேன் என்னுடைய கதாபாத்திரம் தன் சட்டையை நீல நிறத்திலும் சிகப்பு நிறத்திலும் மாற்றி அணிந்து கொள்ளும் காட்சி அதேயே சொல்கின்றது. இலங்கை அரசியல் கட்சிகளின் கொடியின் வர்ணம் நீலமும், சிவப்பும்

உங்கள் எதிர்கால திரைப்பட முயற்சிகளில் தமிழர்களை வைத்து படம் ஏதேனும் பண்ணும் திட்டங்கள் உண்டா?

ஆமா அடுத்து முயன்று கொண்டிருக்கும் திரைப்படம் அவர்களைப் பற்றிதான். அது கொஞ்சம் கடினமான முயற்சிதான். ~கண்ணிவெடி| என்கிற தலைப்பில் நான் அடுத்த திரைப்படத்தை தொடங்க எண்ணியுள்ளேன், தமிழர் ஒருவனும், சிங்களவர் ஒருவனும் கண்ணிவெடியில் கால்களை வைத்து விடுகின்றார்கள் மீண்டும் நிலக்கண்ணி வெடியிலிருந்து கால்களை அகற்றினால் இருவருமே மரணமடைந்து விடுவார்கள். அகற்றினால் இருவருமே மரணமடைந்து விடுவார்கள் இவர்களின் இத்தருணத்தின் நினைவுகளின் வழியாக எனது படம் தொடங்குகின்றது. இதுதான் எனது அடுத்த திரைப்படத்திற்கான முயற்சி.

அங்குள்ள சென்சார் விதிகள் பற்றி கூறுங்கள்?

நாம் சென்சாரை மீற வேண்டும் … சென்சார் எனக்கொரு பிரச்சினை இல்லை, என்னைப் பொருத்தவரை சென்சார் போர்ட் இருப்பது நல்லதுதான். அப்போதுதான் என்னுடைய படைப்பின் ஆளுமை அதிகரிக்கும், ஏனென்றால் சென்சாரை எப்படி மீறுவது என்பது பற்றி யோசிக்க முடியும், சென்சார் பிரச்சினையல்ல, அத்தோடு என்னுடைய சுய தணிக்கை அமைப்பதும் பிரச்சினைகள் இல்லை, நான் சொல்வதை சொல்வேன் ஆனால் அது அவர்களுக்கு புரிவதில்லை.

என்னுடைய முதல் படம் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி நம் அரசு தண்ணீரை விற்கின்றது. அதற்கான இத்திரைப்படத்தை தயாரித்தேன். ஏரிகளிலுள்ள தண்ணீரை யாரும் விற்பனை செய்வது கிடையாது. ஆனால் அரசாங்கம் விற்கின்றது. மனிதனுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை அதனால்தான் அப்படத்தை உருவாக்கினேன்.

 

அங்கு நிலவும் அரசியல் வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

~பைத்தியம்| அதிகாரம் கிடைக்கும் வரை சரி அதிகாரம் கிடைத்த பிக் எல்லாம் ~பைத்தியம்| தான். எல்லாம் எருமைமாடுகள்

தென்னிந்தியா தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதுண்டா?
 
ஆம் எப்போதாவது பார்ப்பதுண்டு, ஆனால் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் உட்கார்ந்து பார்ப்பதென்பது என்னுடைய வாழ்நாளின் காலத்தை வீணாக்குவதாக நான் உணர்கின்றேன். இரண்டு, மூன்று மணி நேரம் பார்த்hலும் ஒNரு விசயத்தையே மீண்டும் மீண்டும் பார்ப்பது சலித்துவிட்டது. நீண்ட வசனங்கள் பாடல் எல்லாம் அலுப்பாக இருக்கின்றது.

உங்களுடைய பிக்பாக்கெட் திரைப்படத்தின் முதலீடு எவ்வளவு?
 
66 லட்சம். இது இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

நீங்கள் ஒரு நடிகர், இங்குள்ள இந்திய திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் உண்டா?
 
நான் இந்தி படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன். எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் இலவசமாக வந்து நடித்து கொடுக்க ஆர்வம் கொண்டுள்ளேன். எனக்கு சாப்பாடும். தண்ணீரும் கொடுத்தால் போதும், அத்தோடு என் தோற்றம் இங்குள்ள தமிழ் மலையாள படங்களுக்கும் பொருத்தமான அமைப்புடனே இருக்கின்றன நீங்கள் அறிவீர்கள்
மணிரத்னம் திரைப்படங்கள் பற்றி?
 
மணிரத்தினத்தின் திரைப்படங்களைப் பார்க்கலாம் மணிரத்னம் நல்ல இயக்குனர். ரோஜா, பம்பாய் நல்ல படஙகள், ஆனால் டுவுவுநு பற்றி அவர் தன் படங்களில் பேசியிருப்பது போல் நான் பேசுவதில்லை. நான் அவ்வளவு சுதந்திரமாக என் படங்களில் பேச முடியாது. அவர் பேசும் விதம் சரியே….. அது அவருடைய பார்வை, ஆனால் நான் அப்படி செய்ய முடியாது. இதுபோன்ற விதமான நான் அப்படிசெய்ய முடியாது இது போன்ற விதமான டுவுவுநு பற்றி என்னால் பேசு முடியாது ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் வாழ்வதினால் அப்படி என்னால் பேச முடியாது. நான் தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். என்னால் அவர்களைப் பற்றி தவறாக விரோதமாக பேச முடியாது, அதே நேரம் என்னால் சிங்கள மக்கள் பற்றியும் ஆதரவாக பேசவும் முடியாது எல்லோருமே மனிதர்கள் தான். நாம் பார்க்க வேண்டியதெல்லாம் எங்கே தவறு இருக்கின்றதென்பதை மட்டுமே, வெறுப்பை பற்றி அல்ல.

ஈரான் சினிமா யுத்ததிற்கு பின்னர் வந்ததனால்தான் இவ்வளவு து}ரம் பேசப்படுகின்றது யுத்தம் முடிந்த பின்னர் டுவுவுநு பற்றி பேச முடியும். ஆனால் இப்போது பேச முடியும். ஆனால் இப்போத பேச முடியாது. இப்போது டுவுவுநு பற்றியும் தவறாக பேச முடியாது. இலங்கை இராணுவத்தை பற்றியும் தவறாக பேச முடியாது யுத்தம் ஓய்ந்த பின்னர் நான் பேசுவேன் மனித வாழ்வு பற்றி. நாங்கள் இன்று மனிதர்களாகதான் இருக்கின்றோம். எல்லாம் கலைகளுமே மனிதனை பற்றியும் மனிதாபிமானம் பற்றியே பேசுகின்றது. அது பற்றியே பேசுகின்றோம். நாம் எப்படியும் சந்திக்க வேண்டியிருக்கும், நாம் எப்படியும் மீண்டும் சந்திப்போம்.
       
நன்றி: நிழல் ———————————————-

Advertisements

Comments are closed.

%d bloggers like this: