முடிவின் முன்


 

நீண்ட
காலத்திற்கான
வாழ்தலின் கனவுகளுடன்
நாம் ஒன்றிணைந்தோம்…..
நீ
கூறுவதுபோல்
நான் மீசையற்ற
பாரதிதான்…
காதலர்களை இந்த உலகம்
அவ்வளவு விரைவில்
நம்புவதில்லை…
மூன்றாம்
நினைவுகளின்
அச்சுறுத்தும் தொலைபேசி
முனைகளின் முன்னும்
காலவரையற்ற நினைவுகள்
தரும் ஊதா
வளையங்களில்
நெடும் பாதைகள்
நமக்கு முன் காத்திருக்கின்றது!

பாலைவனத்தில்;
நீர் தாகத்துடன் திரிகின்றது
காதலர்களின் மயில்கால்கள்
காதலர்களற்ற
உலகில்
வர்ணங்களும்
வாழ்க்கையும் கூட
இருப்பதில்லை என்பதையும்
உலகம் அறியும்…!
இமைகளின்
மனதின்
உதடுகளையும்
உன்மையும்
எனனையும்
அவமானப்படுத்தலாம்
நாம்
சுயம் கரைந்துவிடாதபடிக்கு
நம்மை பற்றிய
பிறரின்
நினைவுகளின் முறிப்பை
மீட்டெடுக்க
வேண்டும்
என்பதே இன்றைய
நமக்கு முன்
நிற்கும் கேள்விகள்…

தினக்குரல்

Advertisements

4 Comments (+add yours?)

 1. priya
  Oct 22, 2009 @ 11:05:09

  nice…
  kathalithu anupavam unda??

  • mariemahendran
   Oct 28, 2009 @ 12:45:58

   கண்டிப்பாக எழுதுகிறேன்…அவ்வளவுதானா? முழுமையான கருத்துகளை பதிவு செய்யுங்கள்..

  • mariemahendran
   Oct 28, 2009 @ 12:47:52

   உண்டு ஆனால் வலிகள்தான் முடிவில்..மீதமாகின்றது…உண்மை காதல் எப்போதும் வலியைதான் பரிசளிக்கின்றது.

 2. venkat
  Jan 23, 2010 @ 12:33:34

  nanbarukku

  பாலைவனத்தில்;
  நீர் தாகத்துடன் திரிகின்றது

  வலிகள்தான் முடிவில்..மீதமாகின்றது…உண்மை காதல் எப்போதும் வலியைதான் பரிசளிக்கின்றது

  niraya ezuthavum

%d bloggers like this: