நான் என்ற நான்


ஒவ்வொரு முறையும்
தவற விடுகின்ற
புள்ளியிலிருந்து என்
வாழ்வின் முரண்கள்
வளர்கின்றன…!

வீட்டின்
இருள் மையத்தில்
ஒற்றைப் பனையுடனான
உரையாடல்கள்…
காற்றின் மழைத்துளிகள்
போல் நனைகின்றன…
தனிமையுற்றிருக்கின்றன
என் எல்லாக்கனவுகளும்…!

மற்றும் சில
செய்திகளுடன்
நான் என்னைத்தேடி
அலைகின்றேன்…!
இங்கிருந்தாவது
எங்காவது என்
“நான்” பற்றிய
விளக்கங்கள்
சிலந்தி வலையுடனான
சிதிலத்தில் அகப்பட்டிருக்கலாம்!
ஆக,
நான்
இத்தோடு
இன்றும்…

தெரிதல்

மரணத்தை நோக்கி
செல்லும் வேர்கள்

ஆற்றின் பள்ளத்தாக்குகளின்
அழைக்கும் மரணங்களுக்கு
முன் நிகழும்
ஒட்டுமொத்தமானதொரு
இருள் நாளில்
நாளின் புதிர்வெளிகள்
தன்னிலையை இழந்து
நகரங்களின் வன்முறை தரும்
முகசாகரங்களுக்கு
முன் தள்ளும் பொழுதுகள்

இருள்
சூழ்கின்றது – நம்
வாழ்வாதாரங்களில்….

ஒன்னிறிலிருந்து
வேறொன்றின் முன்
நிர்பந்தங்களின் மன இறுக்கத்தின்
காற்றின் மொழிகள்
தடமற்று தன்போக்கில்
பிடிப்பற்று மரணத்தை நோக்கி
செல்லும் வேர்கள்….

மளிகை சாமன்களின்
மத்தியில் நான் கலமாகி
போனதொரு பாதையில்
அழுகையுடன் முற்றுப்பெறாத
ஆதாரங்களின் முடிவுடன்
தொடர்கின்றது…
சிலுவை சுமக்கும்
வாழ்வின் பொய்கள்……!

அறைகளில் நிரம்பி போயிருந்த
காற்றின் புழுதியில் என்
ஒட்டகங்களின் முதுகில்
பொதிகளுடன்
கால் சுடும் மணற்
பரப்பில் யாருமற்ற
அனல் காற்று வீசும்
தனிமையில் புதைகின்றது
உன் நிறைவுகளுடன்….

உணர்வுகளின்
உயிரை கசக்கி
பிழியும் நிர்கதியற்ற
வாழ்வின்
ஆதாரங்கின் முன் மரிக்கும்
நளைய கனவுகளின் ஜீவன்கள்…..

என் அறைகளில்
தேங்கியிருக்கும் உன்
முகங்களின் சிரிப்பும்
சப்தங்கள் – நம்
எல்லா விதமான
தடங்களையும் கேலி
செய்து சரித்தபடி…
   
மல்லிகை மாத இதழ் அக்டோபர் 2005  

 

 

சிலுவை சுமக்கும்
வாழ்வின் பொய்கள்……

அறைகளில் நிரம்பி போயிருந்த
காற்றின் புழுதியில் என்
ஒட்டகங்களின் முதுகில்
பொதிகளுடன்
கால் சுடும் மணற்
பரப்பில் யாருமற்ற
அனல் காற்று வீசும்
தனிமையில் புதைகின்றது
உன் நிறைவுகளுடன்….

உணர்வுகளின்
உயிரை கசக்கி
பிழியும் நிர்கதியற்ற
வாழ்வின்
ஆதாரங்கின் முன் மரிக்கும்
நளைய கனவுகளின் ஜீவன்கள்…..

என் அறைகளில்
தேங்கியிருக்கும் உன்
முகங்களின் சிரிப்பும்
சப்தங்கள் – நம்
எல்லா விதமான
தடங்களையும் கேலி
செய்து சரித்தபடி…

மல்லிகை மாத இதழ் அக்டோபர் 2005

சிறு குழந்தைகளின் கண்ணீர் துளிகள்

காலத்தின் நீள் இருக்கைகளில்
வெறுமையுற்றியிருக்கும்
பொழுதுகள்
சாம்பல் மேடாகும் வாழ்வின்
ஆதாரங்கள்
மீட்சி பெற முடியாத
ஒரு கால தருணத்தில்
நீயும் சுடப்பட்டு இறந்து
போனாய்…

கொடூரமான
வன்முறைகளுடன்
வாழநேர்ந்த நிர்பந்தங்கள்
உன்னத இலட்சியத்திற்காக
வாழ்ந்து உயர்ந்த
மனிதர்களை சாவு
அழித்து விடுவதில்லை…..

தராக்கி
போன்ற மாமனிதர்களின்
சாவு
மரணத்தின் சுவடுகளை
அழித்து எழுந்து நிற்கிறது.

ஏமாற்றமும்
வஞ்சகங்களும்
தந்திரங்களும்
துரோகங்களும்
தமிழ் இனத்தின் வேர்களை
அழித்துவிட போவதில்லை…

நம்
ஈழத்தின் பெறுமதியான
அழகிய கனவுகள்
சுக்கு நு}றாக்கப்படுகின்றன.

ஒரு தாராக்கியன்
உயிருக்கு முன்
ஆயிரம் தராக்கிகள்
பிறப்பார்கள்…

ஆக….
நடக்கும் எல்லா
அதிகாரங்களிலும்
வன்முறை கைகொண்டு
எதிர்ப்புணர்வின் கால்களுக்கு
பின்
சிறு குழந்தைகளின்
கண்ணீர் துளிகளின்
அலறல் கேட்டபடி
இருக்கின்றனது…!

ஆற்றாமையின்
கணங்களின் உள் தள்ளும்
மனித படுகொலையின்
பட்டியலை நியாயப்பாடுகளின்
பழி நாளைய
போரின் துயரத்தின் முன்
முடிவடையலாம்.

தலையில்
உட்புறத்தில்
சரிந்த துப்பாக்கி குண்டின்
இரத்தம் தோய்ந்த
இறுதி நினைவின்
மரணத்தின் போது
இருளினு}டாக
நீ மறுபடியும் ஒளியாய்
பிறப்பாய் தராக்கி….

நீ
ஒரு யுகத்தின்
விடியலுக்காக
விதைக்கப் பட்டிருக்கிறாய்….
மறுபடியும்

நீ
எங்கள் முன்
தோன்றுவாய்….

தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த ஊடகவியலாளராகக் கருதப்பட்ட சிவராம் சமீபத்தில் இலங்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இராணுவ புலனாய் ஆய்வியலாளர் என்ற நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டவர் சிவராம்.

புதிய காற்று ஆக 2005
மதுரை

பொய்களின் கதை அறைகளில்…

புலப்படுவதற்கான
எல்லா இருளின்
திரைவெளிகளும்
சுயங்களை நொறுக்கும்
வீர சாகச நாயகர்களின்
பெரும்
கதைப்பாடுகளுக்கு
முன் –
நான் என்
திரைகளின் மொளனத்தின்
சுயவழி முனைப்பை
தேடி வெற்றுவெளிகளில்
அகதியைப் போல
அலைகின்றேன்…!

அடைப்பட்டுக் கிடக்கும்
திறக்க முடியாத
சாகாச பிம்பங்களின்
பொய்களின் கதை
அறைகளில் உள் எரியும்
வாசல்களில்
காத்துக்
கிடக்கின்றேன்…
~அந்த்ரேய் தாரக்கோவ்ஸ்கியின்|
கண்ணாடி2களுடன்
ஒரே ஒரு தமிழ்
சினிமா கலைஞன் ஈரம் சொரியும்
ஈழ மரபுகளிலிருந்து
தோன்றிட மாட்டானா…?

இருளின் புனைவெளி பிம்பத்தை
உடைத்தெழும் முனைப்புடன்
ஜோன் ஆபிரகாமின்3 ஆவி
என்னையும் பிடிக்க வேண்டும்…!

நம்
சிதிலமான இருப்பின்
வறண்ட குகைகளில்
அலையும் தமிழ் மன
பிம்பங்கள்
செத்துச் செத்து
ஒழுகி மறையும்
புனிதங்கள் நிறைந்த
திரை நாளின் முன்
நாம்
மறுபடியம்
உயிர்த்தெழுவோம்!

 

 
நீர் தேக்கங்களின்
நினைவுகள்….

என் பிறந்த வீடு
அங்கிருந்து
ஆகற்றப்பட்டு விட்டது!

புலம் பெயர்ந்த
மனிதர்களுக்கு
வாழ்வளிக்காத நிலத்தை
நீர் தேக்கம் என்ன
நிரப்பி விடுமா என்ன!

நேற்று
ஓடி விளையாடிய
கால்களின் வாசனையை
இனி
நாம் எங்ஙனம்
தேடுவது…..

அம்மாவின்
நினைவிலிருந்து
தேயிலை மலை முகடுகள்
மட்டுமல்ல
அப்பாவோடு வாழ்ந்த
வீடும் நிலமும்
தண்ணீரில் மூழ்கி
விட்டது…!

காற்றின் மணம்வீசும் புல்வெளிகளில்
புல் அறுத்த
அறிவாளின் பச்சையாக
சிக்கியிருக்கும் புல்லின்
இரத்தத்தை போல்
மாடு அசை போடும்
ஆதி நினைவில் மூழ்கி
மின்சாரம் வராத
எனது லய காம்ராவில்
ஜப்பானியனின் கனவுக்கு
மட்டும்
உறுதி தெரியும் நமது
வாழ்வில் இனியும்
ஒரு வீட்டில் வாழ்ந்த
காலத்தின் மழை துளி
வடிந்தோடும்
நினைவில் இறுதி பாடலில்
வரிகளில்

பாட்டியின்
மரணம்….

முதாதையர்களின் எலும்பும்
மச்சையும் மீதமாக
காதலிக்கும் இனி
சென்று வருவதற்கு
வீடும் சொந்த ஊரும்
இல்லாமல்
மலைகளில் புலம்பெயர்ந்து
மலைகளின் முன்பு ஒரு
மலை வாசியாக
வாழ்தல் மட்டும்
தகிக்கின்றது கருணைகள்
ஏதுமற்ற கடவுளின்
உள்ளார்ந்த பொய்களினால்….

Advertisements

5 Comments (+add yours?)

 1. Parts Gas Stove
  Apr 13, 2011 @ 20:45:42

  A very usefull article – Thank you very much I wish you will not mind me blogging about this post on my blog I will also leave a linkback Thanks

 2. Hawaii payday loans
  Apr 17, 2011 @ 08:15:52

  Hello , what entice you to post an article. This article was extremely interesting, especially since I was searching for thoughts on this subject last Thursday.

 3. magicjack
  Apr 22, 2011 @ 12:37:46

  Hello , what entice you to post an article. This article was extremely interesting, especially since I was searching for thoughts on this subject last Thursday.

 4. Training Online
  Jul 31, 2011 @ 09:01:26

  I enjoyed reading this, You must have a Facebook group for your site?

 5. paintings for sale
  Oct 01, 2011 @ 01:42:47

  Apple now has Rhapsody as an app, which is a great start, but it is currently hampered by the inability to store locally on your iPod, and has a dismal 64kbps bit rate. If this changes, then it will somewhat negate this advantage for the Zune, but the 10 songs per month will still be a big plus in Zune Pass’ favor.

%d bloggers like this: