தமிழ் சினிமா


 

புதிருடன் விரியும்
திரைப்படச் சுருள்
அந்த அறைகளில்
யாரோ
அடைப்பட்டுக்கிடக்கின்றார்கள்….
பாவங்கள் சுமந்த
காயத்தின் மருந்து
வாசனையை வீசும்
பாடலின் வரிகள்….
யோனியை
பெண் மார்புகளை வியாபார
சரக்குகளாக மாற்றி
நம்
தினசரி அசைவில்
நசுங்கும் பஸ் பயண
அவஸ்தையில் நெளிகிறார்கள்
பெண்கள்…..

வீட்டில் சினிமாவை
ரசித்துக்கொண்டு
வன்முறையைப் பற்றிய
எதிர் மனங்களை
தேடும்
வாழ்வின்
ஒரு ஆணின்
கூரிய வாளில்
தீராத யோனிப் பள்ளத்தில்
தினிக்கப்படுகின்றது…!
வன்முறையுடனான அழுத்தம்
நகரத்தெருவில்
வீட்டில மூளையில்
சுயம் சிதைக்கும் ஒரு
சிறுமீயின் மீது
பால் வேளைகள்
தன் கருப்புக் கரங்களினால்
சுரண்டித் தின்று தீர்க்கின்றது….!
உடல் சதைகளை
எது என்று எனககும் தெரியவில்லை….

ஆகவே
அதை ஏன்
செய்கிறீர்கள் என்பதுதானே
உங்களின் கேள்வி……
சும்மா இருப்பதனால் தான்
அதை செய்து கொண்டிருக்கிறேன்
ஆக!
அதை செய்வதனாலும்
சும்மாதான் இருக்க
போகின்றேன்….

12.11.2007

Advertisements

Comments are closed.

%d bloggers like this: