தமிழ் சினிமாக் குப்பைக்கு மாற்றீடு:திரைப்பட சங்களின் இயக்கம்


திரைப்பட சங்களின் இயக்கம்                       

நல்ல சினிமா பற்றிய பார்வை நம் தமிழ் பார்வையாளனுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளது. அதற்கான முழுமையான காரணம், குப்பைக்கூளமாக- தமிழ் சிந்தனைப் பரப்பில் குவிக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான வருகையும், நல்ல சினிமாவைத் திட்டமிட்டுப் பொதுவான வெளிகளில் மறுப்பதற்கான சூழ்ச்சியைகளை தமிழ் சினிமாவின் வியாபாரிகள் செய்து வருவதாகும். தமிழ்நாட்டின் சூழலை விட்டுவிட்டு நம்மவர்களின் சினிமாபற்றிய புரிதலைப்  பேச முனைந்தாலும் ப10ஜ்யம்தான் மிஞ்சுகின்றது. தமிழ் நாட்டில் கல்வியறிவு, எழுத்தறிவு மிகவும் குறைவு: ஆனால் நம் நாட்டின் கல்வியறிவு, எழுத்தறிவு 90 சதவீதமாக கணிக்கப்பட்டாலும், நல்ல சினிமா அறிவின் சராசரி வீதம் மிகவும் குறைவுதான், நம்மவர்களின் மனது, இந்தத் தமிழ்க் கழிசடை சினிமாதான் சினிமா என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் நல்ல சினிமா கலாச்சாரத்தை நோக்கி இன்னும் நகராமல், இந்தத் தமிழக சினிமாவின் மாயைக்குள் அகப்பட்டு நம் கலாசார அடையாள வேர்களை இழக்கின்றோம்.

உலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களை நாம் ஏன் நம் தமிழ்ச் சமூகத்திற்கு முன் கொண்டுசெல்லக்கூடாது? பொதுவாக நம்மவர்களின் சினிமா நினைவு என்பது, தமிழக சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் நிலையிலிருந்து இன்னும் வளர்ச்சியடையாமலேயே இருக்கின்றது. தமிழ் சினிமா என்பது சினிமாவே அல்ல: அது களியாட்ட விருந்தின் ஒரு கேளிக்கைப்பொருள் மட்டும் தான். அது முழுக்க முழுக்க வியாபாரச் சூத்திரம் கொண்ட  அபட்டமான பாசாங்குகள் நிரம்பிய  படம் பிடிக்கப்பட்ட நாடகம்தான். உள்ளடக்கம், உருவச் சிறப்புமற்ற வெறும் சக்கையான வடிவம்தான் தமிழ் சினிமா. நாம் உள்ளுணர்வுகளையோ படைப்புணர்வின் ஆற்றுகையையோ, நினைவுப்படுத்தவும் படைப்புணர்வின் ஆனுபவத்திற்கான அந்தரங்க உரையாடலை நிகழ்த்தவும் தகுதிகள் ஏதுமற்ற வெறும் சக்கையான குப்பைகள்தான. வியாபார சூதாடிகளின் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கதையாடல்களினால் நாம் நம்மைத்தான் இழந்து கொண்டிருக்கின்றோம்.
 
நல்ல சினிமா அனுபவத்தை பொதுசனத்திடம் கொண்டு செல்வதற்கான செயற்பாட்டில் திரைப்பட இயக்கங்கள் முனைய வேண்டும். நல்ல திரைப்பட புரிதல் நிறைந்த திரைப்பட சங்கங்களினால், நல்ல சினிமா கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்ப முடியும். வங்கத்திலும், கேரளாவிலும் சிறந்த திரைப்படச் சங்கங்களின் செயல் முனைப்பினால்தான் அச்சமூகத்தின் சினிமாக்கள், இந்திய சினிமாவின் ஆன்மாவை உலகளாவிய

காப்பாற்றியுள்ளன. கேரளத்தில் ஜோன் ஆபிரகாமின் “ஓடெஸ்ஸா” திரைப்பட இயக்கத்தின் பங்கை எளிதில் மறுத்துவிட முடியாது. கேரள சினிமாவின் முகத்தையும் அகத்தையுமு;, ஓடெஸ்ஸாவின் மாற்றக்கூறுகள் அடங்கிய செயல் முறைப்புதான் வெளின்னொண்டு வந்தது. அதனால் நாமும் நம் சூழலின் நல்ல சினிமாவைப் பொதுசனத்திடம் கொண்டு செல்லும் நோக்குடன் திரைப்பட இயக்கத்தின் அத்தியவசியத்தை உணர வேண்டும். திரைப்பட இயக்கம், அதன் செயல் முனைப்பு என்னவென்று தெரியாத அளவுக்கு இலங்கையில் நாம் சிந்தனைப் பரப்பு மிகவும் தாழ்வுற்றுத்தான் இருக்கின்றது. யாழ்பாணத்தில் இயங்கும் “யாழ். பல்கலைக்கழக திரைப்பட வட்டத்தைத் தவிர கொழும்பில் தமிழ்ச் சங்கத்தின் பிரக்ஞையற்ற திரைப்படத் திரையிடல்கள் மட்டும்தான் இலங்கையின் தமிழ்ப் பார்வையாளனுக்கு இருக்கின்ற மாற்று சினிமா வாசல்கள்.

மிக நீண்ட இருண்ட அரங்குகளின் அறைகளின் வெக்கைச் சுமையுடனும் சுயவலியுடனும், சுயவலியுடனும் தமிழ் சினிமாவைத் தவிர்க்க முடியாது. தமிழ்ப் பார்வையாளன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக் கிறான். அவனை விடுவிப்பதற்கும் நாம் முயலவேண்டும். இப்போதைக்கு திரைப்படம் குறித்து ஆர்வம்கொண்டிருக்கும் நம்மவர்கள், நகரங்களிலாவது திரைப்பட சங்கங்களின் மூலமாக நல்ல சினிமாவை அதன் வட்டத்தில் திரையிட வேண்டும். உறுப்பினர்களின்

எண்ணிக்கையைப் பெருக்கி திரைப்பட கலாசாரம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். நம்மவர்களும், தன்னார்வ அமைப்புக்களும், எழுத்தாளர்களும், தமிழ்ச் சங்க கிளை அமைப்பாளர்களும் மற்றும் கலாசார அமைப்புக்களும், திரைப்படக்கலைக்கு முன்னிரிமை கொடுத்து நம்மவர்களின் திரைப்படப் பிரக்ஞை வளர்வதற்கும், நம் இலங்கைத் தமிழ் சினிமா சுய அடையாளத்துடன் வெளிவருவதற்கும் இனியாவது முனைய வேண்டும். நல்ல உல சினிமாக்களை நாம் அந்தந்தத் தேசத்தின் து}துவராலயத்தின் மூலம் பெற்றும், திரைப்பட கலாசார அமைப்புகளிடம் பெற்றும் திரையிட முடியும்.

மோசமான தமிழ் சினிமாவின் வரவை தொடர்ந்தும் அனுமதித்தபடி இருப்போமானால், நாம் நம் சுயமான சினிமாவைப் பற்றிய தேடலையும் இல்லாது செய்வNதூடு, இந்த மோசமான திரைப்பட கலாசாரத்தின் வாயிலாக நம்மவர்களை “லும்பன்” களாக மாற்றுவதற்கு நாமே வழி அமைத்துக் கொடுத்தவர்களாக மாறுவதற்கான காலச்சூழல் இருக்கின்றது. “நல்ல திரைப்பட கலாச்சாரத்தின் மூலமாக நல்ல சமூக கலாச்சாரத்தையும் உருவாக்க முடியும். நல்ல பிரக்ஞையை, நல்ல படைப்பாளிகளை, உயர்ந்த சினிமா க்களை உருவாக்க முடியும்” அதனால், தாமதிக்காமல் நாம் ஒன்றிணைந்து. மூடுண்டு இருளில் கிடக்கும் தமிழ் சினிமாவின் மாயக் கதவுகளை உடைத்தெறிந்து புதிய கதவுகளைத் திறப்போம்: நம் பார்வையாளனுக்கு  புதிய சினிமா அனுபவம் ஒன்றை ஏற்படுத்தித்தருவோம்!

“நமது போராட்டத்தின் முன்னணியில் மிக முற்போக்கான கலைவடிவமான சினிமா இருந்ததாக வேண்டும். சமாதானத் துக்கும் மனிதகுல மேம்பாடடுக்குமா பாதையை உலக நாடுகளுக்குக் காட்ட வேண்டிய பெரும் பொறுப்பை சினிமா என்கிற நவீன கலைவடிவம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்!” என்று மிகவும் உறுதிபடச் செயல்பட்டவர், ரஷ்யத் திரைப்படமேதை சேர்ஜி ஜஸன்ஸ்ரீன். ஆகவே நம்மவர்கள், எழுத்து ஊடகம் மட்டும் தான் நம் கலாசாரத்தை நிர்ணயிக்கும் கலையென எண்ணாமல் திரைப்படத்தைப்பற்றிய அக்கறையை வளர்த்து, நல்ல சினிமாவைப் பற்றிய புரிதலுடன் நம் கலை இலக்கியவாதிகள் ஒருங்கிணைந்து செயற்பட முனைய வேண்டும். ஊருக்கு ஒரு தமிழ்ச் சங்கத்தை மட்டும் நிறுவிவெறுமனே இலக்கியம் மட்டும் பேசாது. நல்ல திரைப்படங்களை மாதத்தில் ஒரு தடைவையாவது உள்ளுர் கலாச்சார மையத்தில் திரையிடவும் விவாதிக்கவும் முன்வரவேண்டும். உலகத்தின் மிகச்சிறந்த  – அற்புதமான – திரைப்படங்களை நம்மவர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து திரையிடுவதனால், இதுவரை காலமும் நம்மை மிக மோசமாக ஏமாற்றி வந்திருக்கும் இந்தத் தமிழ் சினிமாவின் போலி முகத்தை அம்பலப் படுத்துவதோடு, நமக்கேயான தனித்துவம் நிரம்பிய சுயமான தனித்துவம் நிரம்பிய சுயமான திரைப்படங்களை உருவாக்கும் காலத்தை நோக்கியும் நாம் முன்னகரந்து செல்லமுடியும்!

நன்றி:தெரிதல்

Advertisements

Comments are closed.

%d bloggers like this: