கைவிடப்பட்ட நிலம்- உரையாடல்: விமுக்தி ஜயசுந்தர


 

 

உலக திரைப்பட விழாக்களில் மிக சிறந்த திரைப்பட விழாவான பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவை குறிப்பிட முடியும். கடந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் நமது இலங்கையை சேர்ந்த இளம் சிங்கள திரைப்படக் கலைஞரான விமுக்தி ஜயசுந்தர இயக்கிய ‘சுலங்;;;க எனு பினிஸ’ (வுhந குழச ளுயமநn டுயென) கைவிடப்பட்ட நிலம் என்ற 108 நிமிடங்கள் ஓடக் கூடிய திரைப்படத்திற்கு கேன்ஸின் கேமரா டி ஓர் என்ற உயர் விருது பெற்றதை குறிப்பிட வேண்டும். அத்தோடு பாங்கொக் நகரில் நடைபெற்ற மூன்றாவது உலக திரைப்பட விழாவின் போதும் இத்திரைப்படத்திற்கு சர்வதேச அளவிலான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ‘இரண்டு தசாப்த கால யுத்தத்தின் விளைவுகளையும், போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழலில் மனித வாழ்க்கையில் உள்ள வெறுமையையும் ஆழமாக ஆராயும் படைப்பாக 27 வயது நிரம்பிய விமுக்தியின் திரைப்படத்தைக் குறிப்பிட முடியும்’ வீரகேசரி வார வெளியீட்டில் (25ஃ09ஃ2005) படம் பற்றிய அனுபவத்தை எழுதியிருந்த சதீஷ் கிருஷ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார். விமுக்தி ஏற்கனவே ‘நிகண்ட தேசய’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அவர் இத் திரைப்படம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது ‘எனது தாய் நாட்டில் உள்ள ஏராளமான பிரச்சினைகளையே இத்திரைப்படம் பிரதிபலிக்கின்றது. மேற்கத்திய நாட்டவர்களுக்காக இது உருவாக்கப்பட்டதாக பலர் கருதுகின்றனர். ஆனால் எனது நாட்டவர்களுக்காகவும், ஆசிய நாட்டவர்களுக்காகவுமே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் ஒன்;றான தாய்லாந்திலிருந்து நான் இவ்விருதைப் பெற்றதன் மூலம் ஆசியர்களுக்காகவே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.’ என்று கூறும் விமுத்தி ஜயசுந்தர ‘சித்தரபட்ட’ என்ற சிங்கள திரைப்பட இதழில் தன் திரைப்படம் பற்றி பேசியிருக்கும் உரையாடலை நிறம் சினிமா சங்சிகைக்காக மொழியாக்கம் செய்து தருகின்றோம்.

• தற்போது இலங்கையின் வரலாற்றுக்கும் இந்த திரைப்படத்துக்குமான உறவு எவ்வாறானது?

• அரசு இராணுவப்படைகளுக்கும், விடுதலைப்புலிகளு க்கும் இடையிலான சிவில் யுத்தம் எம் அனைத்து சந்ததிகளையும் பாதித்துள்ளது. இதை மீறி நான் வேறொரு விதத்தில் ஒரு வரலாற்றுக் கதையை  படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, இந்த திரைப்படத்திற்குப் பின்னணியாக சமாதானமும், யுத்தமில்லாத இடைப்பட்ட சந்தர்ப்பத்தைக் குறிக்கின் றது.  எனது முதல் திரைப்படமான ‘நிகண்ட தேசய’ (மௌன தேசம்) யுத்தத்தின் கொடூரத்தினால் ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்பைச் சித்தரிக்கும் திரைப்படம். நான் தேர்ந்தெடுத்த கதை கட்டமைப்பு உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் யுத்தத்தின் கொடூரம்  இளைய சமூகத்தின் பாலியல் ரீதியான பின் விளைவுகளை எவ்வாறு ஏற்படுத்துகின்றது என்பதை யே காட்டுகின்றது. “கைவிடப்பட்ட நிலம்” படத்தின் இந்த இரு காரணிகளும் அடங்கியுள்ளது. இந்த இரண்டு திரைப்படத்தின் முக்கியத்துவமான கருப்பொருள் யுத்தம் பற்றியதல்ல. எனக்கு சொல்லத் தோன்றுவது யுத்தத்தின் கொடூரம் பற்றியே. இப்போது மக்களுக்கு யுத்தம் என்பது ஒரு உண்மை இல்லா விட்டாலும் அது சமூகத்தை சீரழிவுக்குட்படுத்தி யுள்ளது. அது இலங்கையர்களின் மனதையும், ஆன்மா முழுவதையும் பரந்தளவில் பாதித்துள்ளது. அவர்களின் உடல் ரீதியான ஆசைகளுக்கும் பாதிப்பை உருவாக்கியிருக்கின்றது, இந்த சிவில் யுத்தத்தின் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் அனைத்து மக்களுக்கும் பாதிப்புக்களை மட்டுமே சொந்தமாக்கி இருக்கின்றது. நான் நம்புகின்றேன் இந்த நிலமையை வேறு ஒரு இடத்திலும் கண்டுகொள்ள முடியும் என்பதே. இது ஒரு வகையான உலகளவிலான பொதுவான தன்மை.

• திரைப்படத்திற்கே உரித்தான தனித்துவமான காரணங்களினால் உங்கள் திரைப்படத்தில் ஒரு ஒற்றைக் கதையில்லாமல் பல்வேறு கதையமைப்பு திரைப்படத்தினுள் ஊசலாடுகிறது.

• நான் சிறு வயதில் கேட்ட எங்களுடைய பூர்வீகமான கலை இலக்கியத்தின் ஒரு பகுதியான புத்தர் பற்றிய பல்வேறு பட்ட கதையின் தாக்கம் என்னைப் பாதித்தது. அசைவுகளும், கதையின் நகர்த்தலின் தன்மை என்பது 

   சாதாரண திரைப்படத்தைப்போல் இல்லாமல் சொற்களுக்குப் பதிலாக பிம்பங்களைப் பாவிக்கின்ற ஒரு கவிஞனைப்போல் வேறு ஒரு விதத்தில் கதையை சொல்வதற்கு என்னிடம் இருந்த ஆவல் அதற்கான உந்து சக்தியாக இருந்திருக்கலாம். எந்நேரமும் அடுத்த சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து இருக்கும் சம்பிரதாய பூர்வமான ஒரு கதையைப் போல் அடுத்து நடக்கும் சந்தர்ப்பத்தை சொல்வது எனக்கு உடன்பாடு இல்லை. எனக்குத் தேவைப்படுவது எல்லாம் இங்கு, இப்போது சமகாலத்தில் நடப்பதைப்பற்றி சொல்வதற்கான உந்துதலே.

• நாங்கள் வாழ்வது ஒரு புனைக்கதை உலகத்தில், இங்கே சித்தரிக்கும் விசயங்கள் சமகாலத்தில் நிகழும் செயல்களாக இருந்தாலும் உங்களின் கதைகளில் சொல்லப்படும் நிகழ்வுகள் எந்த நேரத்திலும் எப்போதும் மாறாத ஒரு மனித நேயமான உணர்வுகள் பற்றியே பேசுகின்றது.

• நாம் பெரும்பாலும் புராணக்கதைகளையே விரும்புகின்றேன் பழமையான கதைகள், மூடநம்பிக்கைகளுக்கு நான் விருப்பமுள்ளவன், அவைகளில் ஒரு சிறிய அளவிலான தத்துவம் அடங்கியுள்ளது. அவைகளின் அர்த்தத்தைச் சொல்வதற்கு தேவைப்படுவது அதனுடைய மூலக்கருவைப்பற்றிய விபரங்களை நான் என் சிறு வயதிலேயே எனது பாட்டி சொன்ன கதைகளை மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். எனது பாட்டி அல்லது அம்மா ஒரே கதையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது அதில் இருந்த  வித்தியாசங்கள் கூடுதலாக எனது மனதை பாதித்தது. கதைக் கூறியவர்கள் குறிப்பிட்ட தனிப்பட்ட நபர்களின் தனித்துவத்துக்குள்ளேதான் சொல்லப்பட்டிருக்கின்றது. பல்வேறுபட்ட நபர்கள் ஒரே கதையை உள்வாங்கிக ;கொண்டு தன்னுடைய பலம் பலவீனம் அனுபவம் கலந்து மீண்டும் சொல்கிறார்கள். அவர்கள் எப்படி மீண்டும் சொல்கிறார்களோ அவ்வாறான தனித்துவத்தை பார்க்கக்கூடிய விதத்தில் காட்டக்கூடிய சரியான வழிமுறை சினமா என்றே நான் நம்புகின்றேன்.

• உங்களுக்கு கைவிடப்பட்ட நிலம் திரைப்படத்தி ற்கான எண்ணம் எவ்வாறு தோன்றியது?

• திரைக்கதை எழுதும் போது ஒரு சினமா உருவாகின்றது. அதை எழுதும்போது அடுத்த பக்கங்களில் என்னென்ன நடக்கப்போகின்றது என எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம், என்னால் ஒளிப்பதிவு செய்யக்கூடியவைகளை மட்டுமே எழுத்துப்பிரதியாக எழுதப்படுகின்றது. அந்த சந்தர்ப்பத்திலேயே எனது எண்ணங்கள் காட்சியாக மாற்றம் அடைகின்றது. ஒரு எண்ணம் ஒரு சட்டகமாக (குசயஅந) மாறுகின்றது. ஒரு எண்ணம் ஒரு காட்சித்துண்டாக (ளூழவ) ஆக மாறுகின்றது. திரைக்கதை பூரணம் அடைகின்றபொழுது எனது உள்ளத்தில் முழுமையான திரைப்படம் இருக்கின்றது.

• இந்த படைப்பாக்கத்தினால் மிகப்புரட்சிகரமான காட்சிகள் உங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை உங்களினால் இயக்கப்படுகின்றது.

• உண்மையிலேயே அவைகள் ஒரு தேர்வைவிட அவசியமானவையாகும், நான் ஒரு காட்சியை கூடுதலாக காட்டுவதற்கு விரும்பவில்லை, அத்தோடு நான் திரைப்படத்தில் தேடுவதை பெற்றுக்கொள்  வதற்காக அசையும் படிமங்களினால் நீண்டக் காட்சிப்படுத்தலை ஒளிப்பதிவு கருவியின் மூலம்  உருவாக்க தேவை ஏற்படுகின்றது. எப்படியாயினும் இப்போது நிலவுகின்ற நடிப்பாற்றலுக்கான ஒழுங்கு விதிகளுக்கு ஏற்பவும் அதிகாரத்திற்கு ஏற்ப சம்பிரதாயப்பூர்வமான திரைப்படத்தை உருவாக்க எனக்கு உடன்பாடில்லை.

 எனது நெறிமுறைகளினால் எந்த சந்தர்ப்பத்திலும் பெருமளவில் முன் தயாராகவே இருப்பது தேவையாகும். சிலவேளைகளில் ஒரு காட்சியை அல்லது இரண்டு காட்சியை எடுப்பதற்கு ஒரு நாள் தேவைப்படுகின்றது. நாற்பது வீதமான சந்தர்ப்பங்களில் படத்தை முடிப்பதற்கு இருப்பத்தை ந்து நாட்கள் தேவைப்பட்டது. இவ்வாறான சந்தர்ப் பங்களில் ஒளிப்பதிவுக் கருவியுடன் (ளுலுNஊர் ளுழரனெ) மைக்ரோபோன் காட்சிப்படுத்தப்பட்ட களத்தைச் சுற்றியும் பொருத்தப்பட்டிருந்தது. நான் நினைக்கும் விதத்தில் “காலம்” என்ற எண்ணகருவின் உள்ளே சென்று ஆய்வு செய்யும் ஒரே கலைவெளிப்பாட்டு சாதனம் சினமாவாகும். அது உண்மையாகவே காட்சிக்குறியீடுகள்(எளைரயட வநஒவ)  கொண்டதொரு அத்தியாயத்தை திறந்து காட்டுகிறது.

• உங்களுடைய எல்லா திரைப்படத்திலேயும் நீங்கள் காலத்தை ஒரே விதத்தில் காட்டுகின்றீர்கள்.

 பிற்காலத்தில் நான் காட்சி லயத்திற்கு நெருக்கமாகிவிட்டேன். என்னுடன் பணிபுரியும் ஏனைய நபர்களும், அவர்களுக்கென்று ஒரு தன்மை இருப்பத னால் அது மிகவும் கடினமானது. சிலவேளைகளில் நான் அந்நாளில் படப்பிடிப்புக்களை நிறுத்திவிட விருப்பமில்லை. எனக்குத் தொடர்ந்தும் படமாக்கப் படுவதற்கான உந்துதல் தேவைப்படுகின்றது. அடுத்த தினத்திலும் அதே ரிதத்தை கண்டுபிடிப்பது கடினமா வதால் நாள் முடிவடையும் போது நான் படிப்படியாக பரபரப்பாகி விடுகின்றேன். எனது லயத்தை திரைப் படத்தின் லயத்திற்கு ஏற்ற விதத்தில் மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றேன். திரைப்படத்தின் படத்தொகுப்பு மிகவும் முக்கியமானதும் சிரமமானதொன்றாகும். ஏனென்றால் திரைப்படத்தில் நாங்கள் அமைத்த லயத்திற்கு நாங்கள் மீண்டும் உட்சென்று அதே மாற்றங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

• கைவிடப்பட்ட நிலம் திரைப்படத்தில் எல்லாமே உணர்த்தப்படுவது காலம் ஒரே இடத்தில் உரைந்து போனதை பற்றியே.

• 2001 ம் ஆண்டு ‘நிகண்ட தேசய’ திரைப்படத்தை இயக்கிய போது யுத்தத்திற்குப் பிறகு காலம் நின்றிருப்பதைப்போல் ஓர் எண்ணம் எனக்கு இருந்தது. நிகண்ட தேசய ஒரு விவரண ரீதியான திரைப்படம் ஆனாலும், எனது எண்ணத்திற்கு அமைய அது ஒரு புனைவான திரைப்படமாக தெரிகின்றது.;

 அத்திரைப்படத்தில் நடித்து காட்டப்படுவதோ, உடலஅங்கவீனமுற்ற இளைஞர்கள் குழு தங்கியிருக்கின்ற ஒரு வைத்தியசாலை, எனக்குத் தெரிந்த ஒரு விடயமாக இருந்தது. அந்த இடத்திலும் காலம் உறைந்துப்போய் உள்ளது போல் தோன்று கின்றது. அவர்கள் செய்தவற்றை பின்னோக்கிச் சென்று மாற்றுவதற்கு அவர்களுக்கு தற்சமயம் சந்தர்ப்பம் இல்லை.

 வெடிப்புகள் நிறைந்த ஓர் இடத்தில் நீங்கள் இருக்கும்போது காலம் நின்றிருப்பது போலவும், எல்லாமே அசையாது இருப்பது போலவும் இருக்கும். எல்லா நபர்களுடைய முகத்திலும் இருப்பது ஒரே உணர்ச்சிகள்தான். அவர்களுக்கும் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது போலவே தோன்றும், அக்காரணத்தினால் ஒரே இடத்தில் நிற்பதைப்போல் ஓர் உணர்வு ஏற்படுகின்றது. ஆனால் அத்தோடு நிகண்ட தேச திரைப்படத்தில் பல்வேறு காதல் கதைகள், ஆசைகள் நிறைந்த இளைஞர் குலாம் இருக்கிறார்கள். சிலருக்கு கால்கள் இல்லாவிட்டாலும் எழுந்து நிற்பதற்கும், விளையாடுவதற்கும் அவர்களுக்கு தடை ஏற்படு வதில்லை. படைப்புகளுக்கு இருக்கின்றது போல் யுத்தத்திற்கும் முகம் இருக்கின்றது. ஒரு பக்கத்தில் இறந்த அங்கவீனமுற்ற நபர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் உடையாத ஆசைகள் இருக்கின் றது. நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் இந்த ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை ஆராய்ந்துப் பார்க்கும், சிலவேளைகளில் வேறுபட்ட கோணங்கள் மூலமாக ஒரே கதையை சொல்வதற் கான ஒரு முயற்சியாகவே கூறமுடியும்.

• கைவிடப்பட்ட நிலம் – திரைப்படத்தில் பெரும்பாலான சம்பவங்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருண்மை தன்மையுடன்  கடினமாக இருக்கின்றது. அது ஒரு வகையில் சாமுவேல் பெக்கட்டின் ‘கரை சேரும் வரை’   புத்தகத்தை ஞாபகப்படுத்துகின்றது.

• நான் பெக்கட்டை மிகவும் விரும்புகின்றேன், காப்காவை பற்றியும் அதேபோல் பேசமுடியும். சிலவேளைகளில் அவர்களின் தாக்கம் இருந்திருக்கலாம். அதிலிருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒரு நிரந்தரமான கதையை விட்டு விளகிய திரைப்படத்தையே உருவாக்குவது எனது தேவைப்பாடாக இருக்கவில்லை. உண்மையியே எனது திரைப்படத்தை அவ்வாறாக நிர்ணயிக்க முடியாததற்குக் காரணம் என்னவென்றால், அது மிகவும் நிரந்தரமான ஊடுறுவுகின்ற திரைப்படமாக இருப்பதனாலேயாகும். அதில் ஒரு குழப்பமன மனநிலை இருந்தாலும் கூட அது அகத்தில் தெளிவுடனும், புறத்தில் ஏதுவுமற்று இருக்கின்றது.

• உங்களது திரைப்படத்திலும் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைப்போல் கொலையும் -பொறுப்பு ஏற்பதைப் பற்றிய பிரச்சினைகளை ஒரே விதத்தில் அலசுகின்றது.

• முக்கியமாக ஒரு இராணுவ வீரனுக்கு அறிமுகமற்ற ஒரு நபரை  கொலை செய்ய நேரும் ஒரு சந்தர்ப்பத்தில்இ அதன் பின்பு அனுர என்பவன் தப்பியோடும்போது ஒரு மனிதனை கொலை  செய்ததனால், அழிந்து போன மனித நேயத்தினால் ஏற்படுகின்ற குற்றவுணர்வின் வலியின் மௌனம் அவனின் பாவத்திற்கான மன்னிப்பை கோருகின்றது.

 இறந்த மனிதனைப்பற்றி தெரிந்து கொள்வது கடினமாகும், அவர் தெரியாத ஒருவர். இந்த மரணம்  மனித நேயம் மனித சிதைவையும், கீழ்மட்டத்திற்கு இரங்குவதை படிப்படியாக காட்டுகின்றது. தால்ஸ்தோஸ்கியின் கதைகளினு}டாக நான் மிகவும் கவலையடைகின்றேன், இன்றைய யுத்தச் சூழலில் தெரியாத, அடையாளமற்ற ஒருவரை கொலை செய்யும் சூழ்நிலை அதிகமாக காணப்படுகின்றது. ஒருவரையொருவர் உடல் ரீதியாக விளகி து}ரத்தில் நிற்பதனால் முகத்தை அறியமுடிவதில்லை. ஆனால் எதிராளி ஒரு கருத்தியல் ரீதியான உருவமாக தோற்றுவிக்கப்படுகின்றான். இம்மாதிரியான சித்தரிப்புக்களில் ஒருவருக்கு மேலும் குற்றவாளியாக உணர்வு ஏற்பட முடியுமா?

 எனது திரைப்படத்தில் இந்த கேள்வியைப் பற்றி பேசுவதற்கு தேவை எழுந்தது. அடையாளம் காண  முடியாத ஒரு நபரை இந்த கதாபாத்தினால் கொலை செய்யப்படுவது அதனால் ஆகும்.  பெரும்பாலானவர்கள் இறந்திருப்பதையும், அதற்குள் யாராவது ஒருவர், தமது நண்பன்கூட அவன் கொலை செய்த நபராக என்பதை இப்பாத்திரம் உணர்த்துகின்றது. உங்களின் கேள்விக்கான விடை அதற்குள் இருக்கின்றது. குற்றமும், தண்டனையின் தவறும.; முகம் காணமுடியாத தவறும் சமமானதா?

• நிகழும் சம்பவங்ளை மறைப்பதற்கோ வெளிப்படையாக தெரியப்படுத்துவதற்காகவோ தேவையின்றி  பாலியல் ரீதியான காட்சிகளை உண்மையாகவே காட்டியிருக்கிறீர்கள்.

• எனக்கு பாலியல் என்பது ஒரு விடயம் மாத்திரமே. அதற்கு எனது திரைப்படத்தில் ஒரு முக்கியமான ஒரு இடம் கொடுக்கப்படுகின்றது. இன்னொரு திசையில் அது பிரதான பகுதியாகும். மர்மத்தை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றை செய்வதென்பது எனது நோக்கமல்ல, கைவிடப்பட்ட நிலம் பாலியல் பற்றிய திரைப்படம் அல்ல, அந்த அர்த்தத்தின் காரணத்தினாலேயே பாலியலை விசேட காட்சிப்படுத்துவதற்கு என்னால் முடியாது. திரைப்படத்தில் ஏனைய பகுதிகளுக்கு சமமான பகுதி பாலியலுக்கும் இருக்கின்றது.

• பாலியலை விட உங்களது திரைப்படத்தில் பாலியல் ரீதியான அதீதம் பற்றிய தலைப்பாக கொண்டதென கூறமுடியாதா?

• பாலியல் உணர்வுகள் மாத்திரமல்ல. எனக்கு அதைவிட இஸ்தீரமான மனித உணர்வுகளைக் காட்டுவதற்கு தேவை எழுந்தது. இந்த மனிதர்கள் து}ரப்பிரதேசங்களில் தனிமைப்பட்டு இருப்பதன் காரணத்தினால் அவர்கள் மோசமான முறையற்ற சந்தோசத்தை அனுபவிக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த உணர்வு, உடல் ரீதியான
 வன்முறையாக வெளிப்படுகின்றது. மிகவும் துயரத்திலிருந்து தப்புவதற்கான ஒரே வழி உடலின் ஆசைகளுக்கு இடமளித்து உணர்வுகளை தற்காலிகமாக குறைத்துக்கொள்வதேயாகும்.

• பாலியல் ரீதியான காட்சிகளை சித்தரிப்பது, இதைவிட பாலியல் முறைகளில் சம்பிரதாயப்பூர்வமான திரைப்படங்களுக்கு ஈடுபட்டுள்ள கலைஞர்கள் ஒரு பிரச்சினையாக இல்லையா?

 அனைத்து பாலியல் சம்பந்தமான பகுதிகளும் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே படமாக்கப்பட்டது. அதை முதலிலேயே செய்வது அவசியமாகும். ஏனென்றால் இந்த சந்தர்ப்பத்தில் கலைஞர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகமாகாது இருப்பார்கள். அதேபோல் அவர்கள் நண்பர்களாக இல்லாது இருப்பதனாலும் அவர்களின் நடிப்பு வெளிப்படையாக இருப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அதனு}டாக அவர்கள் ஏனையவர்களைவிட இழப்புகள் செய்தார் என ஒவ்வொரு கலைஞனும் நினைப்பதிலிருந்து விடுபடுகிறார்கள். அடுத்த காரணம் என்னவென்றால், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது கலைஞர்கள் புதிய தன்மையுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கின்றார்கள். ஆகையால் இவ்வாறான சந்தர்ப்பங்களை படம்பிடிப்பது மிகவும் இலகுவாகும். உண்மையிலேயே இந்த கட்டங்களை படம் பிடிக்கப்பட்ட பின்பு களைஞர்கள் மிகவும் ஓய்வாக இருப்பார்கள். முக்கியமாக பெண்களை குறித்து   பார்க்கும்போது அது என்ன நேரத்திலும் அப்படியாக  அமையாது இருக்கலாம். ஆனாலும் அவர்களுக்கு   இப்போது அந்த சந்தர்ப்பங்கள் திரைப்படத்திற்குரிய  சொந்தமான சூழ்நிலையாக இருக்கின்றது. அது  செய்து முடிக்கப்பட்டு இருக்கின்றது. லதாவின் பாத்திரத்தில் நடித்த நடிகை இறுதியில் சொன்னது  என்னவென்றால் பாலியல் கட்டங்களில் நடிப்பதை
விட ஏனைய கட்டங்களில் நடிப்பது அவருக்கு ஒரு சவாலாக அமைந்தது என்கிறார்.

• இவ்வாறான தலைப்புடனும் இவ்வாறான நிலையின் கீழ் கலைஞர்களுடன் வேலை செய்வது சவாலாக அமைந்ததா?

• ஆமாம். ஆரம்ப காலத்தில்  இலங்கையர்கள் இரண்டு விதமான திரைப்பட முறைகளுக்கு பழகியிருக்கிறார்கள். n‘hலிவூட்டும், பொலிவூட்டும் இவை தவிர வேறுவிதமான திரைப்படத்தைக் காண்பது கடினம். நான் ஆரம்பத்திலேயே எனது திரைக்கதையை திரைப்படக் கலைஞர்களிடம் கொடுத்தபோது இந்த திரைப்படம் எதைப்பற்றி கூறுகின்றது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளமுடியாது இருந்தது. சாதாரணமான கதையைவிட வித்தியாசமாக இருக்கிறது என அவர்கள் நினைத்தார்கள். அதனால் அனைவரும் கேள்வி கேற்கக்கூடியவாறு பல கலந்துரையாடல்களை நான் ஏற்பாடு செய்தேன். ஆரம்ப காலத்தில் அவர்கள் நிலையற்ற தன்மையில்  இருந்தாலும்கூட படம் பிடிக்கப்படும் கட்டத்தில் அவர்கள் திரைக்கதையை நன்றாக புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் தமது பாத்திரத்தை செலுமைப்படுத்தினார்கள். சிலவேளைகளில் தமது பாத்திரம் நல்லதா, கெட்டதா அப்படியில்லாவிட்டால் வெள்ளையா, கருப்பா இவ்வாறு அவர்கள் சிந்திப்பார்கள். ஆனால் இந்த பிரச்சினைகள் எழவில்லை. ஏனென்றால் எனக்கு நபர்களோ சந்தர்ப்பங்களோ நிரந்தரமானது அல்ல. சாதாரண மாக திரைப்படத்திற்கு சமமான உளவியல் ரீதியான திரைப்படக் கலைஞர்களை ஒருங்கிணைப்பது முக்கியம் என நான் நம்புகின்றேன். அதன் பெறுபேறாக திரைப்படம் நம்பிக்கைக்குரியதாக அமைகின்றது. சில வேளைகளில் தேவையற்றவாறு நீண்ட விளக்கப்படுத்தலினால் ஆபத்து ஏற்படக் கூடும். பாத்திரத்தை உருவாக்குவதற்கான சுதந்திரம் நடிகன்,நடிகை என்ற கலைஞனுக்கு வழங்கப்பட வேண்டும்.

• நகரப்பின்னணியில் திரைப்படத்தை உருவாக்கு வதற்கு முயன்றிருக்கிறீர்களா? அல்லது பாலைவனப் பின்னணியும் புல் வளர்ந்த இயற்கைக்கும் நீங்கள் கூடுதலாக விருப்பத்தை காட்டுகிறீர்களா?

• எனக்கு நகருக்குள் படப்பிடிப்பு செய்ய முடியும். அதிலிருந்து என்னால் விலகியிருப்பதற்கு எக்காரணமும் இல்லை. அதற்காக எனக்கு ஒரு தேவை இருக்கவேண்டும். எனக்கு சொல்வதற்கும்  படம் பிடிப்புக்கும் தேவையான பின்னணி நகரத்துக்குள் இருக்கவேண்டும். நான் இப்பொழுது கொழும்பிலும் பாரிஸ் போன்ற பெரிய நகரங்களில் வாழ்வதனால் நான் நினைக்கின்றேன் அந்த சூழலை மெதுவாக உணர்ந்துக்கொண்டு அதற்கு இசைந்து போகும் கதைகளுக்கு நான் ஈடுபடுவேன் என்று எனக்கே சொந்தமான நகரத்திற்கான திரைப்பட மொழி ஒன்றை நான் தேடிக்கொள்வேன் ஆனாலும் எனது இறந்தகாலமும், எனது இளமைப்பருவமும் பாழடைந்த பின்னணிகளுக்குப் பழகிப்போயுள்ளது. அது எவ்வாறாயினும் கைவிடப்பட்ட நிலம் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பிரதேசம் உண்மையிலேயே சிவில் யுத்தம் நடந்த பிரதேசம் அல்ல. எனக்கு மிக தேவைப்பட்டது. நான் மனதுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட பின்னணிக்குச் சமமான ஒரு நிலப்பரப்பைத் தேடிக்கொள்வது. – அது உங்களுக்குப் பார்க்கும் போது கடினமானதாக இருந்தாலும் அந்த படப்பிடிப்புக் களம் வரைபடத்தில் குறிப்பிடப்படாத கடலுக்கு அன்மித்த ஒரு பிரதேசம். ஒரு காலத்துக்கு முன்பு இந்த நிலப்பரப்பு நீருக்குக்கீழ் இருந்தது. மிக அருகில்தான் இந்த இடம் நீரிலிருந்து மேல் வந்தது. அதற்கமைய அது முழுமை நிறைந்த து}ய்மையான நிலப்பரப்பாகும். உதாரணமாக அங்கு கேட்கும் காற்றிற்கு நான் மிகவும் விருப்பம் அடைவ துண்டு அது கடலில் இருந்து வருகின்றது. ஆனாலும் நான் கடலை காட்சிப்படுத்தாதனால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. சத்தம் எங்கிருந்து வருகின்றது என நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். அதிலிருந்து ஒரு வினோதமான உணர்வு தோன்றுகின்றது.

 

• நீங்கள் சொல்லும் வினோதமான உணர்வினால் உங்களுடைய கதாப்பாத்திரத்தின் உலகம் வெகுது}ரத்தில் இருப்பதைப்போல் தெரிகின்றது. மற்றொரு பக்கத்தில் உலகம் உருவெடுத்த முதல் கட்டத்தில் படமாக்கப்பட்டது போல் தெரிகின்றது. திரைப்படத்திற்கான காட்சிக்களம் சரியாக உளவியல் ரீதியான காட்சிப்படுத்தலாகத் தெரிகின்றது.

• உண்மையிலேயே நான் சொன்னேன் படத்திற்கான பின்னணி எனது மனதில் இருக்கும் காட்சி பிம்பத்திற்கான பின்னணியுடன் சமமாக இருக்க வேண்டும் என்று. அதுதான் திரைப்படத்திற்கு தாள லயத்தைச் சேர்க்கின்றது. நீங்கள் அதை அவதானிக் கத் தவறினால் திரைப்படத்தில் நடக்கும் அனைத்துச் சம்பவங்களும் போலியாக சித்தரிப்பதாக தோற்றம் ஏற்படும். திரைப்படத்தின் பின்னணியுடன் அனைத்து மே இயங்கையாக அமைகின்றது. அதில் மனிதனுடைய நிழலின் சாயல் கூடத் தென்பட வில்லை, ஆனாலும் திரைப்படத்திற்கான பின்னணியி லிருந்து முழுமையான வெற்றிடத்தின் காரணமாக அங்கொரு வீட்டைக் கட்டுவதற்கான சூழல் ஏற்பட்டது. அது செயற்கைத்தன்மையுடன் தென்படும் என்று நான் மிகவும் வருந்தினேன். நாங்கள் பல்வேறு வர்ணங்களைப் பூசியபிறகு இறுதிப்பெறுபேற்றை பெற்றோம்.

• கைவிடப்பட்ட நிலம் திரைப்படத்தின் கதாப்பாத்திரங் களைப் பற்றி உங்களின் உள்ளத்தி லிருந்து எழும் உணர்வுகளைப்பற்றி எவ்வாறு கூற முடிகின்றது.

• மனிதனுடைய வாழ்க்கையிலுள்ள நிரந்தரமற்ற தன்மையையும், வெறுமையினால் ஏற்படக்கூடிய உளவியல் ரீதியான சிதைவுகளையும் காட்டக்கூடிய சிறந்த ஊடகமானது திரைப்படமே. யுத்தமும் சமாதானமும் இறைவன் பற்றிய எண்ணங்களினால் உருவாக்கப்பட்ட உலகத்தில் இருக்கும் தனிமையைஇ  வெறுமையை  ஆய்வு செய்வதற்கு இப்படத்தில் தேவையாக இருந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் பரபரப்பும் புரிந்துணர்வற்ற தன்னையும், அரவணைப்பு மனித உறவுகளுக்கிடையிலான தொடர்பைப்; பற்றியும்  கேள்வி எழுப்பவும் பேசுவதற்கு எனக்கு தேவைப்பட்டது.

உடல் ரீதியான ஸ்பரிசத்தின் உளரீதியான மகிழ்வுடன் இந்தத்திரைப்படத்தில் அனைத்துப் பாத்திரங்களையும் தேடுகின்றேன். அவர்கள் எல்லோருமே படிப்படியாக புரிதலற்றத் தன்மைக்கு சென்றாலும் தொடர்புகளுக்கு உண்மையான தேவைப்பாடு இருந்தமையினாலும் அவர்களின் சுகவீனமற்ற உடல்களைப்பற்றி நிலவும் பயத்தினாலும் படத்தை உருவாக்கும்போது தடைகள் ஏற்படுகின்றது. ஒரு செயல் நீண்டகாலமாக நடந்துகொண்டிருக்கும்போது அது ஓர் இடத்தில் நின்று விடுகின்றது. இதனால் ஏற்படுகின்ற ஒரேமாதிரியான உணர்வினால் காலத்தைப்பற்றிய பிரக்ஞை இல்லாமல் போகிறது. அறியாமையுடைய எமது நீண்ட வாழ்க்கையில் இருக்கும் வெறுமையை குறைத்துக் கொள்வதற்கு நாங்கள் முயல்கிறோம். இந்தத் திரைப்படத்தில் புவியியல் ரீதியாகவும் இருட்டையும் சண்டையற்ற உரையாடல்களினால் இந்த தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளை காண்பிப்பதற்கு தேவைப்பட்டது. ஒரு பெரிய வரண்டு போன நிலப்பரப்பில் குறிக்கோளற்ற வாழ்வின் பிரயோசனமற்ற தன்மையை காட்டுவதற்கே இப்படத்தை எடுத்தேன். குறிப்பிட்ட இந்த நிலப்பரப்பையும் தொடர்பற்ற அனுபவத்தினு}டாக நிலையற்ற ஆசைகளினால் நிரப்பப்பட்ட உணர்வை உருவாக்குவதற்கு எனக்குத் தேவைப்பட்டது. அது மனிதர்களை ஏனையவைகளிலிருந்து தமது சுற்று வட்டாரத்திலிருந்தும் வேறுபடுத்துகின்ற விளைவுகளினால் ஏற்படுகின்ற உளவியல் ரீதியான சந்தர்ப்பமாகும். கடைசியாக என் முடிவு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் வேதனைக்குரிய வெறுமையான உணர்ச்சியினால் மனித குலமே அழிவதற்கான சாத்தியம் உண்டு.

 1.  
  சிங்களத்திலிருந்து தமிழாக்கம் :
 2. நா. ஜெகநாத்கண்ணா, சங்கமித்தா, சிங்களத்தில் : கௌசல்ய பெரேரா.
  பிரெஞ்சுத் திரைப்பட ஏடான Cahiers du Cinemaசஞ்சிகையில் வெளியான கலந்துரையாடல்
Advertisements

2 Comments (+add yours?)

 1. İngilizce dil eğitimi
  Apr 24, 2011 @ 11:28:24

  world is your , is Money..

 2. maison de retraités québec
  Apr 29, 2011 @ 02:50:37

  You made some good points there. I did a search on the topic and found most people will agree with your blog.

%d bloggers like this: