கவிதைகள்


இரவுகள்

கனவுகள்
உருகி வடிகின்ற ஓர்
நாளில் திண்ணும்
அறைகளில்
வெறுமை மீதமாக
என் கவிதைகளை தேடி
எங்கோ திரிகின்றது…

புண்ணியஙகள்
சிதறும் வாழ்வின்
நெரிசலில்
ஆன்மாவின் பாடல்
குரூரத்தின் பின்னணி
இசையுடன்
சதா காலமும் ஒலித்துபடி…

மற்றும்
இடைவிடாத கவிதைகளின்
இருப்பில்
அழிவின் புனைவை
எழுதும் மீதங்களாக
இந்த வெட்கை கவிழும்
இரவின் அறைகளின்
தனிமை….

மனைவியுடன்
புணர முடியாத
வலியுடன்
திரை விரிப்பில்
எனக்காக
தடங்களை அழித்தபடி
விடிகின்றது இரவுகள்……

இன்னொரு
முறையும் தனிமையுடன
நடக்கின்றேன்…..
இப்போது
நான்
அவர்களிடமிருந்து
அநநியப்பட்டுப் போய்
ஒரு உணர்வு
என்னை தேடி தேடி
திரிகின்றது….

 

நெடு நாட்களாய…

கறுப்பு உதிரத்தினால்
துவண்டு போகிறாய்
இருள் பரவும்
அடுப்பங்கரையில்
நீ தொலைத்த
கவிதைகளின் மொழி
அழுகின்றத….

மூவாயிரம் வருடங்களாக
உன் இருப்புகளை
அடுப்பங்கரைகள்
தீண்டியிருக்கின்றது…!

உன் வாழ்வு மட்டும்
ஏன் இப்படி…
உன் கழிவறையில்
தெரியும் சுதந்திரம்
திறந்த கதவுகளுக்கு முன்
சுக்கு நூறாக
உடைந்து போகின்றது….

கணவன்
மகன்
மருமகன்
போன் என்று
ஆதிக்க மொழிகளின்
வேர்கள் உன் எல்லா
பகுதிகளிலும்
மூச்சு விடாதபடிக்கு
உன் கழுத்தை
நெரித்தபடி இருக்கின்றது…!

நீ
சமாசம் செய்யும்
ஒவ்வொரு கணமும்
உனக்கான சவக்குழிகள்
உன்னுடனே சவக்குழிகள்
உன்னுடனே தயாரிக்கப்படுகின்றன…!

பிரதி பிம்பங்களின்
நகர்வுகள்
உன்
படுக்கையறைகளின்
சூழ்ந்த இருள்
உன்
மருத்துவமனை வரையும்
விரிகின்றபடி வாழ்வு
துயரமான மீள முடியாத
வன்முறை தடங்களில்
நீ
நெடு நாட்களாக
போராடிய படி….

தினகுரல் 26.06.2005

 
யாருமற்ற…

போல
காமத்தின் நீள் வெளிகளில்
என்
நிர்வாண உடல்
வெந்து
சாம்பலாகின்றது
அன்றொரு நாளில்
நாம் சேர்ந்திருந்தவைகள்
நினைவுக்கு வருகின்றது….!

யாருமற்ற
இருளின் சுயமைத்துனத்துகான
பிம்பங்கள் தேடி
அவையும் பொழுதின்
வேர்களின் கசியும்
ஆதி மனிதனின்
காதலின் சடலங்கள்…!

நினைவுகளில் இன்னும்
இருக்கின்றது
வண்ணத்து ப10ச்சியின்
மகரந்த துகற்கள்
உன் சுருள் முடிகளின்
சிக்குண்டு கிடக்கும் என்
முடிந்து விடாத காமத்தின்
தீயின் மகரந்தஙகள்!

சங்கமித்தா காலங்களின்
மழைநாளின் குடையுடன்
நாம் கொண்டிருந்த இருளின்
காதலின் அனல் மொழிகள்
இன்னும் உன் உடல் தாபங்களை
நினைவுபடுத்தியபடி…..
நீயும் நானும்
முற்று பெறாத உலகினில்
இயலாமையின் முன்
மரணித்து போனோம்……

 

அன்பற்ற நகரத்தில் இருந்து வெளியேறியவன்;…

பீரங்கிகளும்
வெடிகுண்டுகளும்
காவலர் அரண்களும்
சூழ்ந்திருக்க நாம்
நகரத்தின் சூனியங்களில்
பயணங்களின் நெடுகிலும்
சக உயிரின் வலிகளை
மிதித்தபடி
பொருளாதார வியாபார
நிர்ப்பந்தங்களின்
நுகர்வின் புள்ளிகளின்
சிக்கிய சாகசங்களுடன்
எழுகின்றது நகரத்தின்
தீர்மானங்கள்…

மிதிபட்டு எழுந்து நிற்கும்
நகரத்தின் இருப்பின்
உடல்கள் நெளியும்
தன் காமத்தின் திணிவை
சகா கமந்தபடி தொடரும்…
உடல்களின் பிம்பங்கள்
அசைவுகளின் ஈர்ப்பில்
சுளிக்கின்றது மைத்துனங்களை
காமத்தகனங்களில்
உடல் வேட்கை அனலில்
சிக்குண்ட நகரத்தின்
இரும்பு பேருந்தில்
ஆண்மையம் குற்றவுணர்வுகளுடன்
யாரோ ஒரு இளம்
பெண்ணின் புலம்பல்களை
தினமும் சாபங்களாக
வாங்கி பொசுங்கியபடி…….

பாவம் நம்
குழந்தைகள்
இருப்பின் காலங்களின்
வன்முறையுடன் தன்
சுமைகொண்ட உறுதிகளுடன்

நடுத்தெருக்களில்
சிக்னல் சமிக்ஞை சாலைகளில்
யாசகம் கேடடும்
ஊனப்படுத்தப்பட்ட வெள்ளை
மலர்களின் இளம் கரங்கள்
நம் தேசத்தின் நாகரிகங்களினால்
அவமதிப்புகளுடன்
முடிக்கப்படுகின்றது வாழ்வாதாரங்கள்!

சிறைச்சாலைகளுடன்
சேரிகளுடன் தன் நவீனங்களை
தாபிக்கும் நகரங்களிலிருந்து
என்னால் ஏன் வெளியேறி
போவதற்கு முடிவல்லை……..

குளிரந்த
நீரோடைகளின்
பருவங்கள் தொலைத்த
அந்த மரணித்த காலங்களுடன்
சிறிய குழந்தைகளாகவே
இருந்து விட மனிதனுக்கு
சாபம் நிழாதா…?
என்னடையதும்
உன்னுடையதும் நம்
எல்லோருடையதையும் இனி
மீண்டும் தேடி விடாதபடிக்கு
நகரம் நம்மை
வெகுது}ரத்திற்கு
கடத்தியிருக்கின்றது….

மீண்டும் வரவும்
மீண்டும் வரவும் – நாம்
குழந்தைகளிடம்
நான்களை தேடி போவோம்

சற்றே அமர்ந்து பேசி
நான்
நானறிய பேசிய காலங்கள்
நம்மை விட்டு அகன்று சென்றது ஏனோ….

காதலி
உன்னுடைய ஸ்பரிஷமும்
நேசமும் என் நகரத்தின்
தனிமையை போக்குகின்றது
ஆனாலும்,
நீ ஒரு நகரத்திலும்
நான் ஒரு நகரத்திலும்
சுயங்களை குறித்து
பேசாத நம் காதலினால்
~நான்| நானாக இல்லை

நகரத்தின்
இருள் வெளிகளில்
உன கடினமான
நினைவுகளுடன்
என் தொடர் நகர்வுகள்
உன்னைத் தேடி
என்னைத் தேடி
எங்கோ செல்லும்
நகரத்தின் இருப்புக்கு
மத்தியில்
தனியனாக
இன்னும் என்னவெல்லாமோ
தேடியபடி….!

ஒரு நகர மனிதனின் குறிப்பிலிருந்து…
தினக்குரல் 10.07.2005

 

நான் உட்பட நீ

உடைந்த மனதில்
நெடுகிலும்
அகதியாகும் கதையின்
புனைவின் நீள்
வரைப்படங்கள்….!

கண்ணாடியின்
விழும் பிம்பங்களின்
சலனத்தின் சிதைவுகளின்
பள்ளங்கள்
யாருடைய
குரலோ என
வாழ்வின் மீதங்களை திண்டு தீர்த்தபடி…!

காதலின் வளைவுகளில
உன்
தாஜ்மஹால் சுக்கு நு}றாகி
உடைந்து போன
பள்ளத்தாக்குகளின்
நினைவுகளை மீற முடியாத
வாழ்வின் மரணங்கள்….

நிற்க இதுவும் நாடகமாகி
போவதன் எதிரொளி!

காட்டில் அலையும்
ஒற்றைப் பறவையின்
வழித்தடம் மறந்த
நிர்க்கதியான நினைவுகளுடன்
இன்னும் இருக்கலாம்…

யார் யாருடைய
அடையாளங்களை இழந்தோம்

விளிம்பில் இருந்து கொண்டு
நான் பேசுவதும்
உன்னுடனான என் எல்லா
குரல்களையும் மீறி
கடினமான எதிர்ப்புணர்வுகளுக்கு
மத்தியில் பலமற்றுவிழும்
ஆன்மாவின் மொழிகள்

போர்களும்
இன வன்முறைகளும்
அழித்தொழிப்புகளும்
குடும்பம் தரும் சுமைகளும்
தனித்திருக்க விடாமல்
என்னை நெட்டித் தள்ளும்
காலச் சூழலில் விரைந்து
செல்ல விடாமல் தடுக்கும்
வேலைகளின் முற்கிரீடங்களை
யார் தலையில் சூடுவது…!

பொறுப்புகளினால் – நான்
நானை இழக்க வேண்டுமா?

குடும்பம் துப்பிய எச்சிலில்
இன்னும் என் ஆன்மாவின்
மொழிகள் சிதறடிக்கப்படுகின்றன

ஆன்ம பலம் சிதறியோ
தறிகெட்டு ஓடும்
மின்சார ரயிலின்
சூட்கமத்தில் என்னை
குழப்பும்
வார்த்தைகளின் நிழலில்
~நான| தன் சரீரத்தை
தன்னிலை இழந்து
முடிகின்றது காதலின்
சலனங்கள்…!

மூழ்கின்றது
நெருப்பின் அனல்

பிடிமானம் தன்னிலையிழந்த
சிகரட் புகை அனலின்
இருதயம் கக்கும்
மன நெருக்கடியில்
வாழ்வின் எவ்விதமான
சிந்தனைகளும்
நடைமுறை அழுத்தும்
வன்முறைகளில்
உடைந்து வழிகின்றது

நிதானங்கள் தவறி
பைத்தியத்தின் முடிவில்
வாழ்வு மூழ்குமோ
இல்லை
என்
~நான்னின் மரணம்
நிகழலாம்….

இததோடு
நான்உட்பட
நீ பற்றிய
காதலின் சங்கமம்
முடிவுக்கு வருவதாகவே
அறிகிறேன்..!

 

அகதி

நெஞசுக்குள்
அடை காத்திருந்தது
ஈழத்து
மணற பரப்பில்
கசியும் ஈரத்தைப் போல்

வரலாறுகளாலும்
போர்களாலும்
இன்னும் பிற
வன்முறைகளாலும்
தீர்க்கமுடியாத தொரு
மகத்துவங்களுடன்
நான்
இருப்பேன்
நீங்கள்
மீண்டும் திரும்பலாம்

ஊர்களும்
எல்லைகளும்
சிதிலமாகியிருக்கலாம்
ஆனாலும்
நான் இருபபேன்
எஙகோ ஓர்
அகதியாக
விடுதலையின்
குறியீடாக…

அகதிகளாகிப்போன
என் பாட்டிக்கும், மாமாவுக்கும்

 

 

 

 

 

சுய துளிகள்

இருளின் புதிர்
விழித்திடல்களில
உன் விரிந்த மார்பின்
சுவரோவியங்கள்
என் குகைகளை சேர்த்து
சுயங்களையும்
தின்று தீர்த்தபடி
மூச்சின் அனல் வெளிகளில்
என் குறிவெறியின் தாபங்கள்
எல்லாவிதமான
நிர்பதங்களையும் முறையடித்து
வலுவற்றதொரு வாழ்வின்
போக்கிடமற்று
உயிர் துளிகள் விணாகி
போனதொரு நிலையில்
முதுமையுறும் உடல்களின்
நர்ததனங்கள்….
காமம் சேராத
வாழ்வின் காதல் முறிவின்
வழியற்ற வெளிகளில்
இனி யாருடனும்
என் செவிப்பறைகளில்
இசையற்ற வறண்ட
பாலைவெளிகளில்
கசிகின்றது உயிரின்
கடைசி வரிகள்….

எல்லோருக்குமான
சுயதுளிகளுடன்
தேவைகளுடன் வாழ்வு
தன் போக்கை சிருஷ்டித்த போது
எல்லோருக்குமானதொரு
இலக்கையும் நாம்
இழந்து நிற்கின்றோம்…!

சகல தாபங்களுடன்
நீ மரணிக்கிறாய்
~நான்|
நம் கதலின்
சுயம் நசிந்த
முற்றுப்பெறாத புள்ளிகளை
தேடி
ஒளியாண்டுகளை தாண்டி
வேர் தேடி
அலைகின்றேன் என
சக நீள்
கொடுக்குகளுடன்…….

06.05.2005

 

அறிவின் புதிர் பாதைகளில்…

கடவுளுக்கும்
எனக்குமான உறவுகள்
மிக நீண்ட காலமாகவே
காலாவதியாகிவிட்டது!

கிழிந்து கிடக்கும்
சுவர் ஒட்டிகளைப்
போல்
என் தெருக்களில்
கடவுளின் சவம்…..!

கடவுளை
மறுப்பவனோ
நாஸ்திகனோ என்ற
விவாதங்களற்று
நான்
வெளியேறியிருந்தேன்!

எனக்கும்
இவ்வுலகத்துக்குமான
இடைவெளிகளில்
எதற்குக் கடவுள்?

முற்றுப்பெறாத
தேடல்களுக்கு முன்
கடவுள் தன்
உடைகளைக் களைந்து
நிர்வாணமாகி போனான்!
ரவிவர்மனின்
உருவெளி து}ரிகையில்

வரையப்படாத
உருவங்களை நான்
தேடும் கடவுளை
எங்ஙனம் கண்டறிவது

நம்பிக்கையின்
ஆழ் வேர்களின்
கசியும் இருளின்
நடுநிசி தனிமையில்
மரண பயத்தின் போது
கடவுளின் உச்சாடனத்தை
நம்பி நாவுகள்
துடிக்கும்…..
பயதத்pன் அதிர்வில்
கடவுளின் முகம் நிலத்தை
விட்டு அதிர்வாய் வெடிக்கும்….
அறியாமையின் பேய் தடங்களில்
என் ஜீவிதத்தின் கதையை
பள்ளத்தாக்குகளில் தள்ளிவிட
காத்திருக்கும்……!

மனித ஆவியின்
வேர்களில் மூழ்கியிருக்கிறது
அறிவின் புதிர் பாதைகளில்
கடவுளின் சாவை நான்
காண நேர்ந்தது
மறுகணம் நான் “நானை”
அறிந்தேன்…!
ஓர் நாள் அப்படியாக
என் கடவுள் என்னுள்
மரணித்துப் போனான்….
புதிர் வெளிகள் தொடர்ந்தன…..

நான்
நானை அறிந்த போது
நான் யாரைக்
கடவுள் என்பது

குழந்தையின் சிரிப்பும்
மழைத்துளியும்
காற்றின் மென் வருடலும்
இன்னும் பிறவும் கடவுளை
என்னில் நினைவுப்படுத்தியபடி
இருக்கின்றது….

ஆக
இல்லாத ஒன்றை
கடவுள் என்று
எப்படி அழைக்க
கற்றுக்கொண்டோம்…!

தினக்குரல் 25.12.2005

 

• 
கோரிக்கைகளுடன் முடியும்
போராட்டங்கள்
சிறைவைப்பும், சித்ரவதைகளும்
மூச்சி தினற வைக்கும்
அலைச்சலுமாய் கழியும்
நாட்கள்…….
வர்க்க நலன் கொண்ட
நமது அரசியல் தலைவர்களின்
பொய்வாக்குறுதிகளின்
அவ நம்பிக்கைகளின்
முடிவை அவர்களின் முகத்தில
காறி உமிழ்ந்து தெரிவிபபொம்

தேயிலையை அறுக்கும்
கவ்வாத்தின் சீவிய கத்தியின்
பதத்துடன் நாம்
தனித்து தெரியாமல்
போராடுவோம்…..

முன் விரிந்து தொங்கும்
கரிய இருள் சார்ந்த
பயத்தின் பிடியை கழற்றி
எறிவோம்…..
நாம்
போராட வேண்டியதும்
நொறுக்க வேண்டியதும்
கால்களினால
மிதித்து மிதித்து
புதிய விடியலுக்கான
பரபபை கட்ட வேண்டியதொறு
நு}று வகையான வேலிகள்
உண்டு…..
மலைத்தமிழனினி; துயரை அழுதபடி

விடியும் டெவன் நீர் வீழ்ச்சியை
தலைவாக்கலையை அழித்து
எழும் மேல் கொத்மலை திட்டங்கள்
சமபவங்களின் கைகளை சுரண்டும்
தனியார் பண்பாட்டின் கம்பனிகளின்
தரகு முதலாளிகளின் சுரண்டல்கள்
சீனியும், அரிசியும் பருப்பும்
வாங்க முடியாது பொகும்
விலைவாசி உயர்வுகள்
எதிர்ப்புணர்வு போராட்டங்களை
பட்டதாரிகளினதும்
நீண்டிருககும் நிலப்பரப்பில்
அடுக்குமாடி கட்டி
நம் ஆயுள் காப்புறுதி பணத்தினை
சுரண்டி எதிர்காலத்தை
சவககுழிக்குள் தள்ளும்
மோசடிகளை…..
நம்மை பிரித்து
சாதியாலும் வார்க்கத்திலும்
மேல் கணக்கு
கீழ் கணக்கு
நடுக்கணக்கு என்று சாதியின்
படிநிலையை இன்னும்
குடியிருப்பின் பரப்பியிருக:கும்
பார்ப்பன மனு தர்மத்தை எதிர்த்து…..
தோட்டக்காட்டான் என்றும்
டவுன் என்றும்
பேதங்களுக்கு எதிராகவும்
நாம் போராட்டங்கள்
தொடருவோம்…..
து}ங்கும் துயர் மிகுந்த
என் மலை தமிழனே

உன்
சிந்தனையின்
இருப்பை வீரியமாக்கி
போராடு……

ஆயுதங்களாலும்
இன்னும் பிற
நிழல் போர் முறைகளும்
நம்;மை ஒடுக்கும்
நமது எதிரிகளை
ஆயுதங்களினால மட்டும்
போராடி வெற்றி பெற்றிருக்க
முடியாது!
நாம்
பரந்;த விரிந்த
கல்வியை
சிந்தனையின்
உயர்வை
எனயும்
ஏன்
எதற்கு என்று
கேடா சொனை
சாக்ரமஸின்
தத்துவ தரசிறிக
நோக்கி கற்போம்
கற்பதும்
போராடுவதும்
புரட்சி செய்வதுமே
நமது
விடுதலையை
சாத்தியமாக்கும்
பலம் பெற்ற
குணத்தினால் – நம்
முன் விரியும்
ஒடுக்குமுறைகளை எல்லாம்
மீறி
நாம்
இந்த மகத்தான
பன்படர்ந்த
பச்சை மலைகளே
போல
கம்பீரமாக எழுந்து
நிற்க முடியும்…..

போராடு தமிழனே
போராடு
இனத்தலி
மொழியலி
சாதியலைப்
பிரதேசங்களாலும்
கீழ் கணக்கு
மேல் கணக்கு
நடுகணக்கு என்கிற
நுட்பங்களினாலும் பிரிந்து
கிடக்கும் நாம்
ஒன்றினைந்து போராடுவோம்
எல்லா விதமான
அடுக்கு முறைகளுக்கும்
எதிர்காலம்
எழுந்து நிற்போம்

05.04.2005
சிரிப்பதற்கான சொற்ப காரணங்கள்

பரிவுடன்
ஈரக்கனவுகளை
புரிந்து
கொள்வதற்கான
உலகமற்று
போனதன் மனமுறிவு

மனிதனின்
நரகவெளி சூழ்ந்த
இருள் மனத்தை
கண்டறிந்த பின்
நெருங்காமல் போகும்
வாழ்வின் பொய்மை

ரயில் சினேகத்துக்கான
அருகதையை கூட
நம் உறவுகள்
நமக்கு தருவதில்லை!

பாசாசங்குகளின்
முறிவில் அழியும்
ஆன்மாவின் வண்ணம் கொண்ட
முக அக தோற்றங்கள்

சிரிப்பதற்கான
சொற்ப காரணங்கள்
மட்டுமே
என்னிடம் மிஞ்சியிருக்கின்றது!

என்னையும் உன்னையும்
மற்றும் நம்முடைய
நிகழ்வுகளையும்
நினைத்து பெரிதாக
சிரிக்கின்றேன்…

சிரிப்பது ஒன்றுதான்
இறுதியான விடுதலையின்
வழியாக உறுதியாக தோன்றுகின்றது

எல்லாவற்றுக்கும்
எதிராக சிரிப்பது
மட்டுமே தீர்வாகின்றது

தற்காலிகமான
வாடகை அறைகளில்
நம்மிருப்பு நம்மை பார்த்து
சிரிக்கின்றது

ஆக
பின்னர் வரும்
காலங்களில்
இறுக்கமாகிபோன
வெளிகளில் முன்
இடுக்கில அகப்பட்ட
சிரிப்பை எங்கிருந்து
தேடுவது

குழந்தைகளும்
முதியவர்களும் நம்மிடமிருந்து
விலகி செல்கிறார்கள்
சூனியங்கள் முழ்கும்
இருப்பின
ஏறி வெளிகளில
மட்டும்
சுயங்களின்
குறிப்பை பற்றி
குறிபடிகளுடன்
அப்படி எங்கே செல்வது…

 

முன்னொருநாளில்

நிழல் பிம்பங்களின்
நெளியும் மனித
வதைகளின் மொழிகள்
நான் உட்பட
நீ பற்றிய
எல்லா ஓவியங்களும்
நெடிய துயரங்களுடன்
தீக்கறையாகி விட்டது
காற்றின்
மென் சலனத்தில்
விசிறிகளின் இடைவிடாத
நகர்வுகளில்
உன் சுருட்டை கூந்தலின்
அந்தரங்க இருட்டில்
உதடுகளின் ஸ்பரிசம்
என் கால்களின்
வழியும் உன்னுடனான
மழை பற்றிய தொலைபேசி
உரையாடல்கள்

மெதுவாக நம்மிலிருந்து
பிரியும்
மௌனங்களின்
துயர் வடுக்கள்
இப்போதுவரை
உன் ஆழ்மன வெளியில்
என் நான் குறித்த
கனவுகள்
உடைத்தெறியப்படுகின்றது……

மிகவும்
நேசிக்கப்படுகின்ற
வாழ்வின்
நெடும் பயணத்தின்
தடை சுவர்கள்
சாதியின் பெயரால்
வன்முறைகளின்
வழிகளின் வழி
தீர்க்கப்படுகின்றது.

அற்பங்களை சுமக்க
வேணடிய
நிர்பந்தங்களுடன்
வாழ்வு என்முன்
வன்முறையுடன்

22.07.2005

• 
நகரத்துடனான
கதவுகள் என் முன்பு
திறந்தபடி இருக்கின்றன….

முழுவதுமான அழைப்புகள்
தீர்ந்து
கைதுகளின் பயத்தில்
வெளியேற முடியாத
சிறைகள்
போர்களின்
வலிகளை நாம்
எங்கனம் தொலைப்பது……..

ஓடித்திரிகின்றது
வெண்மேகத்தின்
ஓவியங்கள்
எங்கள் பாடுதான்
சகிக்கமுடியாதபடிக்கு
தினம் ஒரு
வன்முறையுடன்

அசையும்
பாம்பின் வாயில்
எச்சில் புதரில்
நசுங்கும் தீணியாக
தமிழனின் இருப்பு
கேள்விகளின் நெறியும்
இன குரோதங்கள்…..

வெளியேறி விடாதபடிக்கு
என்
நாளின்
தடங்கள் அழித்து
தீரு;க்கப்படுகின்றது.
முற்றுப்புள்ளியின்
இடப்படும்
மரணத்தின் சாயல்
விடுதலைக்கான
விதைகளை
ஆழமாக விதைக்கின்றது.

பதற்றங்கள்
பெருமை வாழ்வின் முன்பு
கைதுகளும்
தடுத்து வைப்புகளும்
மிரட்டல்களும் – உயர்
அச்சுறுத்தலுகளும்
படுகொலைகளும்
எம்
கனவின்
வெலிகளை
தேடி
நிர்பந்திக்கின்ற
நெடு நாளைய
கனவுகளின்
முடிவுகள்
தென்படுகின்றது…
   22.01.2006

Advertisements

Comments are closed.

%d bloggers like this: