பெண்கள் தெருவில் கடந்தபடி இருக்கிறார்கள்…


 

அவளை விட்டு சென்ற
பின்பு
இனி காதலையும் தரிசிக்க முடியாதுதான்

வாழ்கை
காதலுக்காக ஒரு தரமதான்
பூக்கின்றது…
மனம் முழுக்க அன்பு
நிறைந்திருக்க
தினமும் நெருங்குவதும்
விலகுவதுமாக – எனக்குள்
ஏகப்பட்ட பெண்கள்..!

ஒரே ஒரு
பெண்ணாக மட்டும்
அவள் இன்னும்
பருகாத பழரசமாக
வாழ்கிறாள்…

இப்போது வரை
தோலைத்த காதலை தேடி
தேடி
எல்லா துயர் மிகும்
வரிகளுக்களுக்கும் அவள்தான்
மூலக்காரணமாக இரக்கின்றாள் !

கள்ளப்புணர்ச்சி பற்றிய
இறுதி தீர்மானங்களை
ஓவ்வொரு நள்ளிரவும்
மறுக்கமுடியாமல்
நிறைவேற்றி வைப்பதோடு சரி
அவளுடன்
அவள் சார்ந்த எதுவுமே
இனியும்
இனையாத கோடுகளாக
மறுபடியும்
ஒலி விலகிய
நாடாவை போல
சுழல்கிறது…

ஓற்றையாக நட்சத்திரம்
ஓன்று
என்னையும் எங்கோ
இருக்கும்
அவளையும் பார்த்து
சிரிக்கின்றது…!

நான் மௌனம் மட்டுமே கொண்ட
ஒருவனாக
தனித்து நிற்கின்றேன்

பெண்கள் தெருவில்
கடந்தபடி இருக்கிறார்கள்
பெண்களின் எண்ணங்களில்
இரவு நீள்கின்றது…

Advertisements

Comments are closed.

%d bloggers like this: