நமக்கான சினிமா


 

 

 

 

 

 

இந்த சமூக அமைப்பு செரித்து உட்கிரகிக்க முடியாதவையும்,
அதன் தேவைகளுக்கு அந்நியமானவயுமான. திரைப்படங்களைத் தயாரித்தல்,
அல்லது இந்த அமைப்பை நேரடியாகவும், வெளிப்படையாகவும் எதிர்த்துச்
சண்டைபோட்டும் திரைப்படங்களைத் தயாரித்தல் இந்த இரண்டில் ஒரு தேவையைக்
கட்டாயம் நிறைவேற்றினால் மட்டுமே இந்த சமூக அமைப்பால்
வழங்கப்படுகின்றவை;களிலிருந்து வேறுப்படுகிற மெய்யான
மாற்றுத் திரைப்படங்கள் சாத்தியமாகும்.

-பெர்ணான்டோ சொலானஸ்-

சினிமாவை குறித்து பேசுவதில் நாம் அனைவரும் சந்தோச மடைவது சினிமா என்ற வசீகரிக்கும் அதி அற்புதமான சாதனம் நேரிடையாக மக்களின் மனத்தை உணர்வுகளை பாதிப்பதனால்தான. சினிமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை. அவர்களின் நினைவு களில். மனோபாவங்களில், நடை, உடை, பாவனை களில், கலாசாரத்தில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் நமக்கு முன் திணிக்கப்படும் தமிழ் சினிமாவின் வியாபார  சூத்திரத்திலான திரைப்பட சக்கைகளினால் நாம் நம் திரைப்படம் குறித்த ரசனையை, பார்வையை முற்றும் முழுதுமாக இழந்து விட்டோம் என்றுதான் கூறவேண்டியிருக்கின்றது. தென்னிந்தியாவிலிருந்து பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் திரைப்பட பிரதிகளினால் நம் ஈழத்தமிழ் பார்வையாளர்களின் திரைப்பட கலாசாரம் மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனால்தான் நாம் நம் சூழலில் தயாரிக்கும் நம்மவர்களின் திரைப்படங்களில் தென்னிந்திய தமிழ் சினிமாவின் தாக்கம் வெளிப்படுகின்றது. நம்முடைய நனவிலி மனதில் தென்னிந்திய கழிசடை சினிமாவின் பிரதி பிம்பங்களின் குவிக்கப்பட்டிருக்கும் திரைப்பட அறிவினால் நாம் நம்முடைய சுயமான சினிமாவையும், நமது கலாசார,வாழ்வாதாரங்கள் பற்றிய புரிதல்களை பெறமுடி யாதவர்களாக இழுத்து செல்லப்படுகின்றோம். இது ஒரு வகையான திரைப்பட படைப்பாளிகள் சார்ந்த நெருக்கடியான போராட்டம்தான் நம் மனது :தமிழ் நாடு” என்றவுடன் மிகவும் இலகுவாக இழுத்துச் செல்லப்படுவதன் மூலமாகவும். நமக்கு வேறு வகையான சினிமாக்கள் இல்லாது போனதினாலும் நாம் நம்முடைய திரைக்கதைகளை தென்னிந்திய திரைப்பட வடிவத்துடன் ஜக்கியப்பட்டு தயாரிப்பதனால் அது எவ்விதமான சாரமற்று அன்னியப்பட்டு போகின்றது. இந்த நிலைமையிலிருந்து நாமும், நம் திரைப்பட கலாச்சாரமும் மீட்டெழுந்து வெளியேற வேண்டு;ம். உலகில் மிக சிறந்த திரைப்பங்களை படைப்பாக்கம் செய்யும் ஈரானிய திரைப்பட வராலாற்றிற்கு பின் இருக்கும் கடினமான மிகவும் நெருக்கடியான தணிக்கை விதிகளும், சமூகக்கக்ட்டுப்பாடுகளும்தான் அவர்களின் திரைப்படங்களில  ; எளிமையும் அழகும், மிகுந்த நேர்த்தியான திரைப்பட மொழியை கண்டறிதணை புரிந்துள்ளது. அது போல ஆபிரிக்க திரைப்படங்களுக்கு பின் உள்ள வெள்ளை நிற எதிர்ப்பும், நிறவெறி அடக்குதலும்தான் அங்குள்ள ஆப்பிரிக்க கருப்பு சினிமாவை தனித்துவம் நிரம்பியதாக மாற்றியிருக்pகன்றது. அதனால்தான் திரைப்பட போராளியான உஸ்மான் செம்பேன் “கருப்பர்கள் சினிமா எடுப்பதென்பதே புரட்சிகரமானது தானே” என்கிறார்.

 

அதனால் நம் சூழலில் நம் கலாச்சார விழுமியங்களை சிதைக்கும் தமிழ் சினிமாவின் மாய பிம்பங்களினால் நமக்கும், நம் சுதேசிய சினிமாவுக்குமான படைப்பு உருவாக்கங்கள் மிக நீண்ட காலமாக தேக்கமடைந்து போய்விட்டதோடு, நம் படைப்புணர்வையும் அச்சினிமா சிதைத்து விட்டிருக்கின்றது. அதனால் நாம் நம் தமிழ் சினிமாவை தனித்துவத்துடன் உருவாக்க வேண்டும் என்றால் தென்னிந்திய ஆபாச குப்பைகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும்.

தணிக்கை விதிகளை பலமாதாக மாற்ற வேண்டும். ஆடல், சண்டை, ஆபாசங்கள் நிறைந்த வியாபார சினிமாவின் ப10ர்ஸ்வா சூத்திரங்களை மிகவும் கடுமையான வழி முறைகளுடன் கட்டுப்படுத்த வேண்டும். தென்னிந்திய மற்றும் இந்திய திரைப்படங்களின் நிலவும் மோசமான வடிவங்களை அரசு தணிக்கைப்படுத்த வேண்டும். இப்படியான சூழலில்தான் நாம் நமக்கான திரைப்படங்களை உருவாக்க முடியும். ஆபாசமான காட்சிகள், வசனங்கள், பெண்களை இழிவு செய்து மிகமோசமாக நெளிந்து ஆடப்படும் சிருங்கார நடனங்கள், வன்முறையை விதம் விதமாக (நந்த,  கஜனி, தொட்டிஜெயா) காட்டி, சமூகத்தின் மேல் வன்முறையை பற்றிய கருத்துக்களுக்கு து}ண்டிவிடும் காட்சிகளை கட்டுப்படுத்தும்போது தமிழ் சினிமா இயல்பிலேயே தன் வழித்தடங்களை மாற்றிக் கொள்வதற்கான நிர்ப்பந்தத்திற்கு உட்படும். இங்கே படைப்பாளி சுதந்திரம் எல்லாம் பேசுவதற்கான நியாயங்கள் நிலவுவதில்லை. தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் ஆபாசமும், வன்முறையும், சமூக சீரழிவும் போதும், இனிமேலும் நாம் இவைகளை தொடர்ந்து அனுமதிப்போமாயின் அது நாம் நம் சமூகத்திற்கு இழைக்கும் மிகவும் மோசமான அநீதியாகும்.

சினிமா என்பது இருபதாம் நுஸற்றாண்டுக்கான புதியதொரு கலைவடிவம், சுயவெளிப்பாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினிமாவடிவமானது சக்திவாய்ந்த கருவியாக இயங்கவல்லது. திரைப்படக்கலைக்கு இலக்கணம் வகுத்த செர்கய் ஐஸன்டின் மேற்கண்ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினிமாவுக்கான களங்களை தேடி கண்டடைவோம். நாம் நமது வாழ்வின் மேலும் காலாசாரத்தின் மீதும் மனித குல ஒன்றிணைவில் நாட்டமும், காதலும் கொண்டு படைப்புருவாக்கங்களில் ஈடுபடுவோம். நமக்கேயான நமது படைப்பாக்களுக்கான சுயங்களை மீட்டெடுக்க நாம் வேறெங்கும் செல்ல தேவையில்லை. உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் பிரபஞ்ச திரைப்பட மொழியின் மூலமாக, அதன் படைப்பாக்கம் காதல் கொண்டிருக்கும் மனிதவாழ்வும் அதன் அக்கறையும் பார்வையாளனின் அகத்தையும் எளிதாக தாக்க கூடியது. உலக சினிமா தரும் அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர்வுகள் செலுமைப்படுத்துவதோடு, மனிதன் பற்றிய  மர்மங்களை, வாழ்விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும், சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங்களையும், குழப்பம் நிறைந்த மனித உளவியலையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தையும், தெளிவற்ற குழப்பங்கள் சூழ்ந்த மனிதனின் நினைவுகளை மீட்டெடுத்து புதிய முகம்கொண்ட தீர்க்கம் நிறைந்த மனிதனாக பார்வையாளர்களை உலக சினிமாவின் சிறந்த திரைப்பட படைப்புகள் அகலப்பரப்புகின்றது.

“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில் நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து உம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும் ஒரு காட்சியோ, ஒரு வசனமோ போதும் நமக்கு தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு நல்ல சினிமாவுக்கும் பார்வையாளனுக்குமான அந்தரங்க ஆன்மீக உறவை குறித்து ழான் கோலே கூறுவதிலிருந்து, சிறந்த சினிமாவின் சக்தியை நாம் புரிந்து கொள்ள முடியும், நல்ல சினிமா வாழ்வை புரிந்துகொள்வதற்கும், தெளிவடைவதற்கும், உலக சினிமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அனுக்கமானதொரு அந்தரங்க உரையாடலை, பிணைப்பை ஏற்படுத்துவதோடு பார்வையாளனை நல்ல படைப்பு படைப்பாளியாகவும் மாற்றும் வலு கொண்டது.

“திரைப்படம் உயர் எண்ணங்களை நமக்கு ஊட்டிய சீரிய வாழ்க்கையையும், சிறந்த பண்புகளையும் கடைபிடிக்க நம்மை து}ண்ட வேண்டும்.” என்கிறார் திரைப்பட விமர்சகர் கே.எஸ்.சிவக்குமாரன். தமிழில் வெளிவருகின்ற தென்னிந்திய  திரைப்படங்கள் நம் மூளையை, மனதையும் வசிகரிப்பதன் நோக்கம் நம்மிடமிருந்து பணத்தைச் சுரண்டுவதே. பணத்தை மட்டுமல்ல நம் மனோபாவத்தையும், யதார்தத்தைவிட்டு நகர்த்தி வேறொன்றின்மேல் அக்கறை கொள்ள செய்வதென்பது, சுய வாழ்வின் இருப்பை, சுய அடையாளத்தை இழந்து விடுகின்றோம்.

ஆப்பிரிக்க திரைக்கலைஞன் ஹெய்லே கெரீமா இதுபோன்ற நிலை கண்டுதான் இப்படி எச்சரிக்கை செய்கிறார்.

“நமது கலாசார வேர்களை ஆதிக்கக் கலாசாரங்களுக்காக இழந்து விடுவது முற்றிலும் தன்னை இழப்பதுபோலாகும்.”

சினிமா கலாசாரத்தினால் நாம் நம் சுயங்களை இழந்து, தமிழினத்தின் வேர்களை மறந்து, பார்ப்பண கருத்தி;யல்களின் முன் அடிமைப்பட்டு, குல தெய்வங்களை மறந்து ரவிவர்மன் வரைந்தபுராண,இதிகாச பெரும் கற்பனை கடவுள்களின் பிரேம் இடப்பட்ட ஓவியங்களை தெய்வங்களாக நம் வீட்டு பூஜை அறைகளில் இருளிலிருந்து தொங்குகின்றது நமது கலாசார அரசியல் இந்த கலாசார கடவுள் அரசியலின் கிண்ணனியில் தமிழ் திரைப்படத்தையும், தொலைக்காட்சி தொடர்களின் பார்ப்பணமய கருத்தியல்களையும் நாம் புரிந்து கொள்கிறோமா? இல்லை சினிமாவின் வசீகர மாயையில் பொழுது போக்கு, களியாட்டம் என்று திரை வெளிகளில் முன் நமக்கு நம்மை அறியாமல் திணிக்கப்படும் ஆதிக்க சாதி கருத்தியல்களை அறியாமல் நகர்ந்து போகின்றோமா என்பதை குறித்து சந்தித்து பாருங்கள்? 

ஆக!

நம்மை நாம் அறியாத வகையில் சிதைக்கும் தென்னிந்திய சினிமா குப்பைகளை விடுத்து நல்ல சினிமா நோக்கி நம் பார்வையை திருப்புவோம். கறைப்படிந்த நம் சினிமா பற்றிய பார்வையை மாற்றிக்கொள்வதோடு நல்ல சினிமாவைப் பார்ப்பதனால் நல்ல மனோபாவத்தையும் வாழ்க்கை குறித்தபார்வையும் மாற்றிக்கொள்ள முடியும். என்பதை இனியாவது உணர்வோம்.

தமிழ் சினிமா என்பது தமிழர்களின் வாழ்வை சிதைக்கும் நாசகார ஆதிக்க வர்க்கங்களின் மொழியினால் இருக்கின்ற ஒடுக்னுமுறைகளையும், அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தி எடுக்கப்படுகின்ற வியாபார சூத்திரம், இவ்வியாபார சூத்திரத்தை நாம் ஏன் நம்மினத்தின், நம் தேசத்தின் சினிமாவாக முன் நிறுத்த வேண்டும்.

இந்த சினிமா நமக்கு அப்படி என்ன தந்து விட்டது. நம் வாழ்வையும், நம் சுய இருப்பின் கலை வெயிப்பாடுகளையும், நம் ஈழத்தமிழ் சினிமாவின் பிறப்பையும் அழித்துவிட்டது. நாம் நம் தேசத்தின் சுயமான சினிமாவை உருவாக்குவோம். நம் படைப்புணர்வின் சுய நினைவிலிருந்து நம்முடைய வாழ்வின் பேரினவாத கொடூரத்தையும், இன வன்முறையின் வலியையும், பாதுகாப்பற்ற தன்மையின் நிர்கதியையும், சமாதானமற்ற இருப்பின் நடுக்கத்தையும் நம் ஈழத்தமிழ் சினிமா மொழியின் வழி கண்டறிவோம். புதிய சினிமா மொழி ஒன்றை நம் வாழ்வின் புரிதலிலிருந்து கண்டறிவோம். அம்மொழியினால் உலகத்தின் தமிழர்களின் கலையுலகின் முன் புதிய அத்தியாயத்தையும் எழுதிச்செல்வோம். சர்வதேச சினிமாவின் படைப்புணர்வின் மூலகங்களின் இருந்து நாம் நமக்கான சினிமா மொழியின் ஒன்றை கண்டறிவோம். அம்மொழியின் வழியாக நம் சினிமா கலையை உலகத்தின் தரைகளில் எல்லாம் கொண்டு செல்வோம். தமிழனின் உறுதி எதையும் சாதிக்க வல்லது. உலகெல்லாம் பரந்திருக்கும் ஈழத்தமிழர்களின் கூட்டுறுதியின் பலத்துடன் ஈழத்தமிழ் சினிமா மொழி ஒன்றை கண்டறிவோம்.

 

Advertisements

3 Comments (+add yours?)

 1. Jon Stringer
  Feb 02, 2011 @ 17:57:49

  Hello! I just would like to give a large thumbs up for the excellent info you have here on this post. I will likely be coming back to your blog for more soon.

 2. digital art
  Sep 29, 2011 @ 22:28:28

  The Zune concentrates on being a Portable Media Player. Not a web browser. Not a game machine. Maybe in the future it’ll do even better in those areas, but for now it’s a fantastic way to organize and listen to your music and videos, and is without peer in that regard. The iPod’s strengths are its web browsing and apps. If those sound more compelling, perhaps it is your best choice.

 3. buy art
  Sep 30, 2011 @ 16:22:04

  Between me and my husband we’ve owned more MP3 players over the years than I can count, including Sansas, iRivers, iPods (classic & touch), the Ibiza Rhapsody, etc. But, the last few years I’ve settled down to one line of players. Why? Because I was happy to discover how well-designed and fun to use the underappreciated (and widely mocked) Zunes are.

%d bloggers like this: