மழையும் மச்சமும்


உடலை பற்றிய
பரவசங்களை தினம் தினம்
எனது கண்ணாடியில் தரிசிக்கின்றேன்…..
ஒவ்வொரு நாளும்
உடலின் ஞாபகங்கள்
மறந்து விட்ட இசை குறிபை
நினைவுப்படுத்துவதோடு
மழை கசியும்
உடலில் தற்சமயம்
நீ
இன்று அனுப்பியிருந்ந
குறுஞ்செய்தியில் உடலில் இருக்கும்
மச்சங்கள் பற்றியும்
கேட்டிருந்தாய்….

மழை நாளில் எனக்குள்
பெய்யும் மழையை விட
மச்சம்தான் கறுப்பு நிலவு போல
தொட்டு விடவும் ஸ்பரிசித்து
முத்தமிடவும் தழுவும் போதும்
இருளில் தவிக்கும் உனது
இருப்பின் சாயங்கால கவிதைளில்
நமக்கான ஐந்து மச்சங்களிலும்

எனக்குள்ளும் இருப்பதாக தடவி
செல்கிறேன்….

அந்த ஐந்து மச்சங்களில்
ஓன்றை மட்டும் எப்போதும்
எனக்காக வைத்திருப்பேன்
புரிகிறதா…?

இரவில்…13.07.2008
இருவருக்கு மட்டும் புரியும் கவிதைகள்

Advertisements

Comments are closed.

%d bloggers like this: