மழையும் மச்சமும்


உடலை பற்றிய
பரவசங்களை தினம் தினம்
எனது கண்ணாடியில் தரிசிக்கின்றேன்…..
ஒவ்வொரு நாளும்
உடலின் ஞாபகங்கள்
மறந்து விட்ட இசை குறிபை
நினைவுப்படுத்துவதோடு
மழை கசியும்
உடலில் தற்சமயம்
நீ
இன்று அனுப்பியிருந்ந
குறுஞ்செய்தியில் உடலில் இருக்கும்
மச்சங்கள் பற்றியும்
கேட்டிருந்தாய்….

மழை நாளில் எனக்குள்
பெய்யும் மழையை விட
மச்சம்தான் கறுப்பு நிலவு போல
தொட்டு விடவும் ஸ்பரிசித்து
முத்தமிடவும் தழுவும் போதும்
இருளில் தவிக்கும் உனது
இருப்பின் சாயங்கால கவிதைளில்
நமக்கான ஐந்து மச்சங்களிலும்

எனக்குள்ளும் இருப்பதாக தடவி
செல்கிறேன்….

அந்த ஐந்து மச்சங்களில்
ஓன்றை மட்டும் எப்போதும்
எனக்காக வைத்திருப்பேன்
புரிகிறதா…?

இரவில்…13.07.2008
இருவருக்கு மட்டும் புரியும் கவிதைகள்

Advertisements

மாய நகரம்


இரயில் வண்டிகளின்
தண்டவாளங்களுடன் மட்டும்தான்
ஆன் பெண் உறவை
பொருத்த முடிகிறது…

சமிக்ஞை விளக்குகளுக்கு
மத்தியில்
அரை போதையில்
சத்தியம் செய்தவள்
இன்று வோறொருவனுடன்
இனைகிறாள்
பிரிவின் துயரம் பற்றிய
பரிவுகளற்று….

எல்லா நகரங்களிலும்
கடத்தல்களும்
கற்பழிப்புகளும்
மோசடிகளும்
வரும் முன்பு தெரிவதில்லை…

எல்லா நகரங்களிலும்
மயானத்தை நோக்கிய
பாதையின்
முடிவடைவது
மட்டும்தான்
இறைவனின் விதியாம் !
அலுவலக வேலைகளில்
காதலை துறந்தவளின்
அம்மாவை பற்றிய
கவிதைகள் மட்டும்
ஏனோ பொய்களினால்
அடுக்கப்பட்ட வார்தைகளில்
பருவங்களின் கடைசி
பள்ளதாக்கில்
வசிப்பவனின் இரவுகளில்
உதிரும் காமத்தை
யார் அறிவார்…!

நானும்
என் நண்பனும்
சென்ற ஜென்மத்தில்
சபிக்கப்பட்ட பிறவிகள்
அதனால்தான் பெண்
சினேகம் இல்லாத
பேய்களின் ராத்திகளோடு
கைகளில் நீளும்
வெண் நிற இரவுகளில்
பொழுதை புணர்ந்து புணர்ந்து
சரிகிறேன்…

வீட்டில் —— 29.05.2008 ——–

தீராத இசை…


வண்ணத்து பூச்சியின்
சிறகுகளுடன்
பறக்க நினைக்கிறேன்…

கலை மனதின்
மன பாடலுடன் ஒரு
பறவையின் வாசகனாக
வாழ விருப்பம்….

அந்திமாலையில்
கடற்கறையில் இசைபாடும்
குயிலின் வசீகரம்
தீராத இசையில்
சிம்பொனி குரலில்
நண்பனின் துன்பம் போக்கும்
வார்த்தைகளுக்கு மட்டும்
ஏனோ
இன்னும் கொங்சம்
வுhழ்ந்து விடவும் அவா
எழுகின்றது…..

ஒவ்வொரு புல்வெளியும்
சில பனிதுளிகளுடன்தான்
வாழ்கின்றது….
மனிதனுக்கு மட்டும் ஏன்
இந்த துயரம்
கடவுளே கடவுளே
என்னை ஒரு கலைஞனாக
வாழ வழி விடு….

சிறகுகளின் வலிகளுடன்
வனாந்தரம் மறந்து
புது தேசம் தேடும்
புறவைக்கும் இருக்கும்
துக்கம்…

எழுந்து நடமாட வேண்டும்
இந்த தெருவெங்கும்
ஆந்த வங்சகமற்ற
குழந்தையின் குரலாக
ஓலி பரப்பும்
குரலில்
தீராத சந்தோசம்
மட்டும்
தொலைபேசி மணியை போல
தீராத காதலின்
சங்கீதமாக
அறையெங்கும்
சினுங்குகிறது….

30.05.2008

நண்பன் பாலரமேஸ்க்கு