மனித சிதைவுகள்


this is my moon

 

 

 

 

 

 

 

 

 

 

உள்நாட்டுப் போரின் வன் அழுத்தமும், வறுமை காரணிகளால் பேரினவாத இராணுவ அரசு மற்றும் பௌத்த மத அதிகார வன்முறைகளினால் வாழ்வின் அழகிய கனவுகளை எல்லாம் இழந்து மனச்சிதைவுற்ற இன்றைய ஈழத்து மனிதர்களின் அவலச் சூழலை சித்தரிக்கும் சினிமா வுhளை ளை அல அழழn

 கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தில் ஏப்ரல் மாத இறுதியில் நடந்த 6வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்துகொண்ட இச்சிங்கள சினிமா, பல்வேறு உலக நாடுகளிலிருந்து கலந்து கொண்ட படங்களிலிருந்து என்னை வெகுவாகப் பாதித்த படம் இது.

 “மனித நேயம்” என்ற அடிப்படையில் இயங்கும் இத்திரைப்பட விழாவில் இச்சிங்கள விருது பெறும் என்றே நம்பியிருந்தேன். இறுதியில் மொராக்கோ நாட்டுப்படம் “அலி சூவா” என்ற வீதி வாழ் சிறுவர்களின்உலகம் பற்றிய திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. என்னை ஏதோ செய்தது.   சிங்கள பேரினவாத அரசும் அதன் நீட்சியாய் பௌத்தமத நிறுவனமும் அது கொண்டிருக்கும் போலியான ஒழுக்கக் கோட்பாடுகளும், மனித ஆன்மீக வாழ்வை சிதைத்து, வாழ்வின் அத்தனை அம்சங்களையும் சுரண்டிய பின்னும் தொடரும் அவல வாழ்வின் மிகுதி கதைi தீர்க்கமாகப் பேசும் சினிமா வுhளை ளை அல அழழn.

 போர்ச் சூழலில் உயிரை காப்பதற்காக சிங்கள இராணுவ சிப்பாயிடம் பலவந்தமற்று தன் உடலை இழக்கும் ஒரு தமிழ்ப்பெண், செல்லும் திசை தெரியாமல் அந்த சிங்கள சிப்பாயின் குக்கிராமத்திற்கே அவன் பின்னாலேயே சொல்கிறாள். அந்த சிதிலமான கிராமத்திக் நிலையோ வேறு மாதிரியானது.

 இராணுவ இளைஞனுக்கு ஒரு காதலி, தமிழ்ப் பெண்ணின் வருகையினால் வீரனின் காதலியின் மனப்பரப்பில் ஏற்படும் தடுமாற்றம். தன் வாழ்வு பறிபோய் விடுமோ என்கிற எண்ணத்தினால் தொடரும் வாழ்வின் நிகழ்வுகள். இராணுவத்தில் தொடர்ந்து இருக்க முடியாமல் கிரமத்திற்குத் தப்பி வந்தவனைத் தேடி வரும் இராணுவ அதிகாரிகளிடம் காட்டிக் கொடுக்கிறாள்.

 சிங்கள சிப்பாயின் வறுமையான குடும்ப சூழல் இறுகிய மனநிலையில் ஸ்தப்பித்துப் போயிருக்கும் உறவுகளின் கதாபாத்திரங்கள், விரக்தியின் வடிசல்களாய் அனபற்ற வாழ்வின் நிலை. கிராமபுத்த விகாரையில் இருக்கும் சிங்கள பௌத்த பிக்குவின் பௌத்த மத நிறுவனம் சார்ந்த வாழ்வின் கட்டுப்பாடுகள். அறியாமை நிறைந்த அப்பாவி சிங்கள வர்களின் வாழ்வில் சிங்கள பேரினவாத அரசுகளும், அரசியலில் அதிகாரம் செலுத்தும் பௌத்தமத நிறுவனத்தின் உள்ளீடுக்களில்மறைந்திருக்கும் வன்முறை. அது விதிக்கும் கட்டுப்பாடுகளும், ஒழுங்கு விதிகளும் வாழ்வில் எவ்விதமான ஆன்மீக தேடலையும் தருவதில்லை என்பதை விரக்தியுற்ற வாழ்வின் ஸ்தம்பித்துப் போயிருக்கும் உறவுகளின் கதாபாத்திரங்கள் சொல்கின்றது.

 இராணுவ வீரனின் சகோதரியை சுற்றிச் சுற்றி வரும் இரு இளைஞர்களின் வாழ்வு. ஒழுக்க விதிகளுக்குள் காதலை காமத்தை வைக்க முடியாது போவதை வாழ்வின் போக்கு உணர்த்துகின்றது. வறுமையும் பொருளாதார பாதுகாப்பும் தனக்கான காதலை, நேசத்தை, அன்பை, உணர்வை சமூக வாழ்வின் மேல், போலியாக வாழ வேண்டிய சமூக நிர்ப்பந்தங்களை அவல சூழலை பெண் பாத்திரங்கள் வழியாக சொல்லப்படுகின்றது.

வேலை வாய்ப்பு ஏதுமற்ற கிராம வாழ்வில் சூதாட்ட கிளப் நடத்தும் ராணுவ சிப்பாயின் மூத்த சகோதரன். அதிலும் வருமானமற்று கிராமத்தின் ஒரு வயதானவனை ஏமாற்றி அவனுடைய பணத்தைக் கையாள்வதும்… அடக்க முடியாத காமத்தின் அவஸ்த்தையை தமிழ்ப் பெண்ணின் மேல் பழி தீர்த்துக் கொள்வதும், இராணுவப் படையில் உயிரிழந்தவனின் விதவைப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு, அவளோ அதை நிராகரித்துவிட இவனோ வாழ்வில் விரக்தியுற்று பௌத்த பிக்குவாக மாறிவிடுவதன் வழியாக, பௌத்த மதத்தின் மேலும், ஆன்மீக தேடல் ஏதுமற்று பிக்குகளின் வாழ்வு வழிமுறைகள் மேலும் இயக்குனர் அசோக அந்தகம கேள்வி எழுப்பயிருப்பது, இன்றைய இலங்கை திரைமறைவு அரசியலில் அதிகாரம் செலுத்தும் பௌத்த மத நிறுவனங்களுக்கு கோபத்தைக் கிளரி விடக்கூடும்.

 வறுமை நிறைந்த சிங்கள மக்களின் வாழ்வில் இராணுவ “ஆள்நிறைக்கும்” வேலை வாய்ப்பினால் வருமானம் வருவதோடு, கணவன் உயிரிழந்தாலும் ஊதிய பணமும் உயிழப்புக்கான பணமும் வரும் என்கிற சுரண்டல் நிறைந்த வாழ்வின் கணங்களையும், விதவை பெணகளின் தனிமை வாழ்வின் காமம் என்று நீளும் இன்றைய சிதைந்து போன சிங்களவர்களின் வாழ்வை பேசினாலும் தமிழ்ப்பெண் பாத்திரம் வழியாக ஈழத் தமிழர்களின் உள் சுமைகளை, போர் ஏற்படுத்தியிருக்கும் மன விகாரங்களை எவ்விதமான கட்டுப்பாடுகளுமற்ற கலை மனச் செழுமையுடன் முன் வைக்கின்றது இச்சினிமா.

 அனைத்து பார்வையாளர்களையும் உலுக்கிய இச்சிங்கள சினிமாவில் பிரமாண்டமான ஹாலிவுட் மயக்கும் தொழில்நுட்ப மாயைகளோ, கம்ப்ய10ட்டர் கிராபிக்ஸ் ஏதுமற்று ஒரு புகைப்படத்திற்கான தொழில் நுணுக்கத்தை மட்டுமே நம்பி சினிமாவிற்கான சாத்தியத்தை எட்டியிருக்கின்றது.

 சராசரி சினிமாவில் கையாளப்படும் ஆனை ளூழவஇ டுழபெ ளூழவஇ ஊடழள நரி” இவைகளை மட்டுமே கொண்ட இச்சினிமாவில் ஊயஅயசய நகர்வு ணுழழஅஇ Pயniபெஇ டில்ட் அப், டில்ட் டவுண் என்று ஏதுவுமற்ற திரைப்பட வடிவத்தைத் தாண்டி ஒரு புதிய சினிமாவாக உருவெடுத்திருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

 நல்ல சினிமாவிற்கான அத்தனை உன்னதங்களும் கொண்ட இப்படத்தில் இன்றைய ஈழத்துப் போர்ச் சூழலின் சிக்குண்ட மனித வாழ்வின் துயரத்தை எவ்விதமான இன பாகுபாடுமற்று சார்பற்றும் மிகவும் அக்கறையுடனும், ஆழமாகவும் பேசியிருப்பது சிங்கள சினிமா கலைஞர்களின் அக்கறையை உணர்த்துகிறது. நல்ல சினிமாவைத் தேடும் பார்வையாளர்களுக்கு வுhளை ளை அல அழழn அதிர்வைத் தரும்.

நன்றி: புதிய தடம்

Advertisements

Comments are closed.

%d bloggers like this: