பிக்பாக்கெட்-இருண்ட மன அறையில் வசிக்கும் திருடன்…


எந்த ஒரு சினிமாவும் அதனளவில் மனித சாதிக்கு தன்னளவிலான ஏதொ ஒன்றை சொல்லவெ மயல்கின்றது. அது சொல்லப்படும் விதிகளிலும் புரிந்துகொள்ளப்படும் மனவியல்களின் அளவுமானத்தை கொண்டு அத்திரைப்படத்தின் முக்கியத்துவம் ஒரு எல்லைக்குள் வைத்து தீர்மானிக்கப்படும். 7வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த சிங்கள சினிமாவான “பிக்பாக்கெட்” என்ற படம் அதனளவில் முழுமையாற்று இருந்தாலும் சினிமாவுக்கான காட்சி பிரக்ஞையும், காட்சிய10டகத்தின் வழியாகவே கதையாடலை சொல்லி யிருக்கும் விதம் காட்சிய10டகத்தின் புதிய அனுபவத்தை பேசியிருப்பதாகவே தோன்றுகின்றது.

 திரைப்படத்தில் கமல் என்கிற பிரதானமான கதாபாத்திரமாக வரும் இப்படத்தின் இயக்குனர் லிண்டன் சேமேகே இலங்கையில் பிரபல்யமான ஒரு சிங்கள நடிகர், நாடக பயிற்யுடன் ஆளுமை பெற்ற ஒரு சிறந்த நடிகர். தமிழ் நாட்டில் நாசர் போன்று இலங்கை சிங்கள சினிமாவின் சிறந்த ஆளுமை லிண்டன் சேமேகே.

 


கமல் ஒரு பிக்பாக்கெட் திருடன், பெருந்தெருக்களில் முகமற்று அலையும் மனித கூட்டத்தினுள் திருடப்பட்ட பண பர்சுகளிலிருந்து வெறும் ரூபா நோட்டுக்கள் மட்டும் கிடைப்பதில்லை, ஒரு கட்டத்தில் அவன் திருடிய பர்ஸில் தன்னுடைய மனைவியின் புகைப்பட பிரதியும் இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் விழும் அவனுடைய கவனம் எல்லாம் தன் மனைவியின் மேல் சந்தேக கீறலை கீறிச் சென்றாலும் ஆர்பாட்டம் இல்லாமல், தனக்குள் குழம்பிய மனநிலையுடன் அப்புகைப்படத்தின் இருப்பை பற்றி ஆராய்கின்றான்.

 “ஜேப்படித் திருடன் ஒரு கலைஞன் துப்பறிபவன் அதிபட்சம் ஒரு விமர்சகன் மட்டுமே” என்று எழுத்தாளர் ஜி.கே.செஸ்டர்டன் குறிப்பிட்டது போல் அவனுடைய வாழ்வின் போக்கை ஒரு புகைப்படம் மாற்றி அமைகின்றது. அது அவனுடைய வாழ்வின் நடைமுறைகளை சற்றே சலனமுற செய்கின்றது.

 தன் மனைவிக்கு தெரியாமலேயே தனக்குள் இருக்கும் குழப்பத்திற்கு தீர்வை தேடுகின்றான் கமல், தீர்வை தேடித் திரியும் பயணத்தில் தன்னை பற்றியும் தான் செய்யும் சமூக விரோத செயல்கள் பற்றியும் தனக்குள் குற்ற உணர்வு கொண்டவனாக உணர்கிறான் அவனுக்கு இப்போதெல்லாம் தன்னைப் பற்றி கவலை இல்லை, தன் மனைவியின் புகைப்படம் எப்படி இன்னொருவனின் பண பர்சுக்குள் வந்தது என்பதைப் பற்றியே சிந்திக்கின்றான்.

 கர்ப்பவதியான மனைவியுடன் இதைப் பற்றியெல்லாம் நேரடியாக கேட்டு சண்டைப் போடுவதோ அவனைப் பொருத்தவரை நினைத்துக் கூட பார்க்க முடியாததொன்று. தன் குழப்பம் சூழ்ந்த அகமனச சிக்கலுக்கான தீர்வை தேடுவதில் மட்டுமே அவனுடைய ஒட்டு மொத்த சந்தேகமும் அடங்கியிருக்கின்றது. தன்னுடைய எல்லா பிரச்சினை களுக்கும் தன் மனைவியின் புகைப்படம் எப்படி இன்னொரு வனின் பண பர்சுக்குள் வந்தது என்பதைப் பற்றியே சிந்திக்கின்றான்.

 கர்ப்பவதியான மனைவியுடன் இதைப் பற்றி யெல்லாம் நேரடியாக கேட்டு சண்டைப் போடுவதோ அவனைப் பொருத்தவரை நினைத்துக் கூட பார்க்க முடியாத தொன்று. தன் குழப்பம் சூழ்ந்த அகமனசிக்கலுக்கான தீரு;வை தேடுவதில் மட்டுமே அவனுடைய ஒட்டுமொத்த சந்தேகமும் அடங்கியிருக்கின்றது. தன்னுடைய எல்லா பிரச்சிகளுக்கும் தன் மனைவியின் புகைப்படம்தான் மூலக்காரணமாக அமைந்தாலும் அவளுடன் அவன் நேரடியாக தன் பிரச்சினையை பகிர்ந்து கொள்ள முடியாத வாழ்வு சூழலில் அவன் சிக்கப்பட்டிருப்பதையும் மனித தனிமையையும் படம் உணர்த்தி செல்கின்றது.

இதற்காக ஒரு புகைப்படகாரனை தேடி ஒரு மலைப் பிரதேசத்திற்கு போகின்றான் – அங்கே சரியான பதில் கிடைக்காததனால் மீண்டும் திரும்புகின்றான். இப்போது மனைவியின் புகைப்படத்தைப் பற்றி எண்ண அலையினுள் தன்னைப் பற்றியும் சற்றே சிந்தித்து பார்க்க அவனுக்கும் அவனுடைய இறுக்கமான வாழ்வில் ஒரு அவகாசம் கிட்டுகின்றது. பிக்பாக்கெட் அடிக்கும் திருட்டுதனத்தை விட்டு விட்டு வேறு வேலை செய்யலாம் என்று நினைக்கின்றான், தெருவில் காற்றாடி விற்கும் ஒரு தனியனிடம் தன்னைப் பற்றி பேசுகின்றான், பேச்சின் தருணங்களிள் தனியனாக வாழும் அவனிடம் “நீ ஏன் திருமணம் முடிக்கவில்லை…?”  என்று கேட்கிறான் அதற்கு அவனோ “நீ ஏன் திருமணம் முடித்துக் கொண்டாய்?” என்று எதிர் கேள்வி எழுப்புகின்றான். அவனால் பதில் சொல்ல முடிவதில்லை, திருமணங்கள் பற்றிய கேள்விகளுடன் காற்றாடி விற்பனை செய்பவன் காற்று எந்தப் பக்கம் வீசுமோ அந்த பக்கம் தன்னுடைய காற்றாடி போல தன் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருப்பதாக சொல்லி செலகின்றான். கமல் நடக்கிறான் மன விகாரம் அவனை தடுமாற்றமும் பதற்றமும் அடைய வைக்கின்றது.

 இதற்கிடையில் முதியோர் இல்லத்தில் கிடக்கும் தாய் மரணித்து போகிறாள். அவனுடைய வாழ்வுக்குள் பல்வேறு மன குழப்பங்களை சூழ்கின்றது. மனைவியின் புகைப்படத்தை பற்றிய இறுதி பயணத்தை மேற்கொள்கிறான். மீண்டும் மலைபிரதேசத்திற்கு போகின்றான் வழியில் ஒரு சவ ஊர்வலம் போகின்றது. புகைப்படக்காரனின் உறவினர்களின் இறுதி ஊர்வலம் அது. வீடு செல்பவன் மனைவியிடம் மரண வீட்டுக்கு போய் வருவதாக கூறுகின்றான். அவள் கேட்கும் கேள்விகளுக்கு அவனால் புரிந்துகொள்ளும்படி பதில் கூற முடிவதில்லை.

 இறுதியாக ஒரு சிறிய நரகத்தின் ஸ்டூடியோ வாசலில் கண்ணாடியில் தன்மனைவியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக் கின்றது. அவன் உள்ளே செல்கின்றான், தான் கிராமத்தி ற்கும், மலைபிரதேசத்திற்கும் தேடி சென்ற அதே மனிதன்தான் இவன் என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். உள்ளே சென்று புகைப்படம் எடுப்பவன், அந்த மனிதனிடம் தன் மனைவிக்கும் உனக்கும் என்ன தொடர்பு என்று கேட்கின்றான், கேட்டப்படியே ஆவெசமாக அந்த மனிதனின் சட்டையை அழுத்திப்பிடிக்கின்றான். காட்சியில் சம்தம் மட்டும்  கேட்கின்றது. கமல் தெருவில் இயங்கி ஒரு வைன் நிலையத்துக்குள் பதற்றத்துடன் நுழைகின்றான், தன் கழுத்தில் இருக்கப்பட்டு கிடக்கும் “டையை” கழற்றி குப்பைத்தொட்டியில் வீசுகின்றான். காட்சியின் வேறுபகுதி ஆரம்பிக்கின்றது – மனைவியின் குழந்தையை து}க்கிக்குண்டு இருவரும் முன்பு சென்று வந்த அதே மலை கிராமத்து வீட்டு செல்கிறார்கள் கமல் இப்போது ஒரு கணம் நின்று தடுமாறுகின்றான், அவன் கண்களில் பெரும் குழப்பம் சூழ்கின்றது.

 மனைவியின் தாய் வெள்ளையுடையுடன் இருக்கிறாள், மகளை கண்ணீருடன் உள்ளே அழைத்து போகின்றாள் ஆனால் கமல் பின் வாங்கி நடக்கின்றான் – இப்போது பல்வேறு தருணங்களில்  இவனை தன் வீட்டில் வைத்து பார்த்திருக்கும் கொலையுண்ட புகைப்பட காரனின் சிறய மகள் கமலை இனம் காண்கிறாள். படத்தில் அந்த சிறுமி அவனை சந்தேகத்துடன் பார்க்கிறாள், அந்தப்பார்வை நம்மையும் பார்க்கின்றது. அந்த காட்சுயும் அப்படியே புகைப்படமாக திரையில் நிலைத்து நிற்கின்றது, இப்போது படம் முடிகின்றது.

 இது தான் பிக்பாக்கெட்டின் கதை…. இத்தனை கதைகளையும் 32 உரையாடல்களை அடக்கி காட்சியின் வழியாகவே கதை சொல்லப்பட்டிருக்கின்றது. திரைப்படம் 85 நிமிட நேரம் திரையில் ஓடுகின்றது.

 காமராவின் வழியாக கதையை சொல்லும் சினிமா விம்பங்களின் தனித்துவம் அதனு}டே சொல்ப்படும் விதத்தை பொறுத்து கூர்மை அடைகின்றது. இப்படத்தில் ஒரு செப்படி திருடனின் மனவிகாரங்களையும், அவனுக:குள் இருக்கும் செத்துவிடாத உணர்வின் தொடுதலையும், மனைவியின் புகைப்படம் எங்கோ திருடப்பட்ட பணப்பையில் கிடைத்ததன் பெரதிர்விலிருந்து மனப்பரப்பில் எழுந்து வரும் குழப்பமான பகுதிகளையும் அவனுக்குள் எழும் தடுமாற்றத்தையும், வாழ்வின் நிர்ப்பந்தத்தையும் தனிமையையும், குடும்ப உறவின் இடைவெளிகளின் பள்ளங்களையும் இயக்குனரின் பார்வையின் வழியாக சொல்லப்பட்டிருக்கின்றது.

 படத்தில் கமல் என்கிற கதாபாத்திரம் வெறுமனே நடந்தபடி இருப்பது அழுகையையும், சேர்வையும் தந்தாளும் கமலின் உளிவியல் அளவை காட்ட காட்சி சொல்லப் பட்டிருந்தாலும், பல்வேறு காட்சிகள் பார்வையாளனுக்குள் சென்று சேராமல் போனது இயக்குனரின் போதமையையே காட்டுகின்றது.

 (இந்தப்படத்தில் பிக்பாக்கெட் அடிக்கும் ஒருவனின் மன அலைச்சலை பற்றி பேரினாலும் இலங்கை இன வெறி வரலாற்றில் சிங்க பேரினவாதிகள் தமிழ் மக்களில் சொத்தை, சூறையாடி கொண்டு செலுத்த நிலை வன்முறைகளையும், தமிழ் மக்களின் பொருளாதார தந்திரங்கள் பிக்பாக்கெட் அடித்த அரச வன்முறையாளர்களினும், இனவெளி கொண்ட காடையர்களிலும் எத்தனை பேர் இன்னும் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்று கூறிடும் படத்தில் செய்திகள் இல்லததும், தமிழர் வாழ்வு இலங்கை சூழலில் சிங்கள சினிமாவில் மூடி மறைக்கப்பட்டு வெளிவருவது குறித்தது நான் பல தடவை யோசிப்பதுண்டு, சிங்கள இயக்குனர்கள் பலர் தமிழர்களின் இருப்பை பற்றி துணை கதாடாத்திமாக கதை சித்திரிக்க முடியாத அளவுக்கு பார்வை அளவிடும் உளவியல் ரீதியாகவும் பின் தங்கி போயிருப்பதோடு அக்கறையற்ற சக உலகின் வாழ்வு பற்றிய பேரினவாத  எண்ணத்தின் பொது மனத்தின் சாயலுடன் சிங்கள தேசத்தினர் விசேட பயணக்கிறார்கள், ஆனால் பயணங்களில், அலுவலகங்களில், ஆஸ்பத்திரியில், மற்றும் சிறை கூடங்களில் எல்லா சிங்கள மக்களுடனும் தமிழ் மக்களின் கதாபாத்திரங்கள் இணைந்தே இருப்பதை இவர்களின் பார்வையில் ஏன் தென்படுவதில்லை, சிங்கள சினிமாவின் விகளவிலான மதிப்பு பெற்றிருக்கும் இந் வேலையில் சிங்கள சினிம பேசும் கருத்தியல்களின் முன் நாம் கவனத்திட அனுக வேண்டியர்களாக இருக்கின்றோம் 27.09.2005)

 நான் மாயாஜாலமான முறையில் திரைப்படம் எடுக்கவிரும்புவதில்லை எனக்கு என்னத்தோன்றுகின்றதோ அதையே எடுக்க விரும்புகிறேன் என்று கூறும் இயக்குனரின் வாக்கு மூலம் இந்தப்படத்தை பொறுத்தவரையும் நிஜமாகவே செயல்பட்டிருக்கின்றது. திரைப்படம் தான் எடுத்துக் கொண்ட கதை அமைப்பிலிருந்து சற்று கூட பின்வாங்கி விளகி சென்றுவிடாமல் எந்த விதமான சமரசமற்று திரைக்கதையை புதிய மொழியுடன் நகர்ந்திருப்பது வரவேற்க தகுந்த விசயம், சமகால சிங்கள சினிமா உலகில் “ஸெஸ்பியன்” என்ற போர்வையில் பாலியல் படங்களை எடுத்து தள்ளிக் கொண்டிருக்கும் சூழலிலிருந்து தனக்கேயான தனித்துவத்துடன் இது போன்ற சமூக வாழ்வின் மனித வாழ்வு பற்றி ஆரோக்கியமாக சினிமா எடுப்பது என்பது நெருக்கடி நிறைந்த காலச்சூழலில் நாம் சிக்கியிருக்கின்றோம். இது போன்ற சமூக அக்கறையுடன் திரைப்படம் எடுக்கும் கலைஞர்களின் பாதையை வேதனையையும், வலியும் நிறைந்ததுதான் “வேதனையும், வலியும் எங்களை விடுதலை போராட்டத்தை முடித்துவிடுவதில்லை என்று கூறிய தலைவர்களின் வாக்கு மூலத்தைப் போல இனியும் எல்லைகள் தீர்ந்து விடுவதில்லை என்பதையே இது போன்ற சினிமாக்கள் உணர்த்தி செல்கின்றது.

 திரைப்படம் பிக்பாக்கெட் அடிப்பவனின் வாழ்வைப் பற்றிய விவரணத்தை தொடர்ந்தாலும், பிக்பாக்கெட் அடிப்பவனின் கவனம் என்பது மரண தருணத்தை அடக்கிய போராட்டம் தான். ஆனாலும் “கவனம்” என்பது அவனுக்கு வேறொருவனுடைய பணத்தை அபகரிக்க குவிக்கப்படு வதற்காகவே சேமிக்கப்படுகின்றது. ஆனாலும் தன்கான சுய வாழ்விலும் அவனுடைய கவனம் தொடர்வதை திரைப்படம் சொல்லி சொல்கின்றது. எந்தவொரு சராசரி மனிதனும் தன் மனைவியைப்பற்றிய சந்தேகத்தை வன்முறை மூலமாகவே தீர்த்துக்கொள்வான். சமூகத்தில் தினப்படி வாழ்வில் பல்வேறு குடும்ப வன்முறைகளுக்கு இது போன்ற சந்தேகங்களை மூலக் காரணமாக இருப்பது தினசரி செய்திகளே சாட்சி. ஆனால் இதில் வரும் கதாபாத்திரம் தன் மனைவியை பற்றிய புகைப்படம் கிடைத்தப்பின் ஏற்படும் மனக்குழப்பத்தில் கோபம் கொள்ளாமல் நிதானத்துடனே சிந்தித்து செயல்படும் “கவனம்” அவனை பொருத்தவரையில் அது திருடப்படுவதற்காக குவிக்கப்படும் கவனமும் நிதானமும் என்ற ஒழுங்கற்ற நியதிகளிலிருந்து உருவெடுத்த பழக்கம், தன்னகான பிரச்சினைகளிலும் அடந்து படர்ந்து செல்வதை காட்சியினுள் இருக்கின்றது.

 “பிக்பாக்கெட்” திரைப்படம் ரோபெர்ப் ரெஸ்ஸோனின் இதே தலைப்புடனான பிரெஞ்சு திரைப்படத்தை நினைவு படுத்தினாலும் ப்ரெஸ்ஸோன் சினிமாவில் வரும் ஆழமான காட்சிகளும் கவித்துவமும் இப்படத்தில் இல்லாது போய்விட்டது.

 காட்சி கலையின் வழியாகவே கதையை சொன்னாலும் அது அதனுடைய பலகீனமாக முடிந்துவிடுகின்றது. இது போன்ற காட்சி மற்றுமே கவனத்திற்கு கொண்ட விசுவல் பட இயக்குனர்களின் படங்களுக்கும் பொருந்தும்.

 திரைப்படத்தை ப்ரெஸ்ஸோன் “அகச்சலனம்” என்று சொன்னான் திரைமொழி காட்சி மட்டுமே கொண்ட காட்சி சித்திரம் நல்ல சினிமாகவாக முடிவதில்லை, மனித வாழ்வை அக்கறையுடனும், ஆழமாகவும் பேசத் தெரிந்த சினிமாக்கள் மட்டுமே நல்ல சினிமாவாக முடியும்.

 நம் சூழலில் நந்தா, ஆளவந்தான் போன்ற திரைப்படங்களில் காட்சி புரிதல் இருந்தாலும், அவைகளை நல்ல சினிமாவாக நாம் அங்கீகரிக்க முடியாது. அவைகள் நாசக்கார வன்முறை சினிமாக்கள் தான், காட்சிய10டகத்தின் நீட்சி என்பது அகச்சலனத்தை பற்றிய விரிவாக்கமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கதையினுள், கதையை மட்டுமே காட்சி புரிதலுடன் சொல்லி விடுவதென்பது எவ்விதமான அர்த்தத்திற்கும் இட்டு செல்வதில்லை, அது கலைஞனின் பணியும் அல்ல, திரைக்கதை என்பது மனித வாழ்வின் ஆழமான பக்கங்களைப் பற்றிய ஆவணமாக எழுதப்படாத வரை எந்த ஒரு காட்சியும் மிகச் சரியான சினிமாவாக ஆகி விடுவது இல்லை.

 சினிமா என்பது வெறும் காட்சி சட்டகம் மட்டுமல்ல, எந்த ஒரு சினிமாவும் பற்றி, மனித வாழ்வு பற்றி பேசாத போது அது வெறும் சக்கைதான், சரி! இச்சினிமாவை இனி நாம் என்ன மாதிரியான மனநிலையுடன் வைத்துப் பார்ப்பது….?

Advertisements

1 Comment (+add yours?)

  1. paintings for sale
    Sep 29, 2011 @ 14:11:37

    Sorry for the huge review, but I’m really loving the new Zune, and hope this, as well as the excellent reviews some other people have written, will help you decide if it’s the right choice for you.

%d bloggers like this: