வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்


என் காலடித்தடங்கள்
தொலைந்து போயிருந்த
ஓர் நாளில்
உன்னை சந்திக்க
நேர்ந்தது….

வாழ்வு
யாருடைய சுதந்திரத்தையும்
அனுமதிககாமல்
நம்மை அழித்துக்
கொண்டிருக்கின்றது….!

உனனைப்பற்றி
சொல்லபடும்
புனைவுகளில் எலலாம்
நம்மைப் பற்றிய
காதலை
ஊரில்
சீன வெடியாய்
கொழுத்தி போட்டு
வேடிக்கை பார்க்கின்றது!
ஆனால்
நீ எத்தனை து}றம்
கலங்கி போய் விட்டாய்
நம் காதல்
உன்
தன் வழி பயணத்தடைகளை
அழித்து வட்டதை மட்டும் தான்
தந்திருக்கின்றது…….

நீ
எத்தனை அற்புதமானவன்
கலீல் ஜீப்ரானின்
கவிதைகளைப் போல்
நீ எவ்வளவு அழகானவள்
அன்னை தெரேசாவைப் போல்
நீ எவ்வளவு அன்டானவள்
நான் தான்
பாப்லோ நெருடன் கூறியது போல்
என் காதல் ஒரு குழந்தையின்
கதறலை தவிற வேறொன்றும்
இல்லை…..

நமக்க புரிகின்ற
இந்த எளிமையான
வாழ்வுககு முன்
நம்மை சுற்றியுள்ள
உலகத்திற்கு
சாதியும்
சடங்குகளும்
வர்க்கங்களும்
பெரிதாக கெரிவதில்
ஏதேனும் அர்த்தங்கள
இருக்கின்றனவா……?
சொல்லபடும்
மூன்றாவது காரணங்களுக்கு
முன்
நீயும் நானும்
வாழ்வில் நெரும் து}றத்தின
சரிவுகளில்
யாருக்கும் தெரியாமல்
போனபடி இருக்கின்றோம்….

இருவர
சேர்ந்து வாழ
இருள் வெளிகளில்
பரவும் கணணுக்கு தெரியாத
காரணங்களுக்கு முன்
வாழ்வின்; ருசி அத்தனையும்
செத்து போகின்றதை
பாரத்தபடி வாழ்வதென்பது
சகிக்க முடியவில்லை பெண்ணே!

இயலாமை கசியும்
என்
இருபப்pல் தொடரும்
வன் முறையின் கூர் மரணத்தின்; முன்
இன்றும்
முடிக்கமுடியாத படி
மீதமான வாழ்வு
என்னை பார்த்து சிரிக்க படி
இருக்கின்றது…

கடக்க நினைக்கிற
துயரங்களுக்கும்
எழுதி செலலவும்
திரை சுருளின் வாழ்வின்
புனைவை பதிவு பண்ணவும்
என்கிற ஒற்றை
காரணங்களுடனும்
மற்றும்
நம்முன் இருக்கும்
இயலாமையை அழித்து
எப்படியாவது
எழுந்து நடக்க நினைக்கும்
ஒரே காரணத்திற்காக தான்
எழுதிக் கொண்டு…….
வாழ்ந்துக் கொண்டு….
சினிமாவை நம்பி நானும்
நானை நம்பி சினிமாவும்
தற்கnhலை செய்யாது
இக்கணம் வரை வாழ்தல்
உறுதிப்படுகின்றது….
மற்றவைகள் எல்லாம்
பின் தான்

காதலின் கொதிக்கும் துயர் இரவுகளில்-

Advertisements

3 Comments (+add yours?)

 1. Praca piekarz
  Feb 03, 2011 @ 19:29:28

  I think this is among the most significant information for me. And i am glad reading your article. But want to remark on some general things, The web site style is wonderful, the articles is really excellent : D. Good job, cheers

 2. Training Online
  Jul 31, 2011 @ 18:13:07

  It usually takes about 3 years to total that with.

 3. abstract art prints
  Oct 01, 2011 @ 02:26:02

  The new Zune browser is surprisingly good, but not as good as the iPod’s. It works well, but isn’t as fast as Safari, and has a clunkier interface. If you occasionally plan on using the web browser that’s not an issue, but if you’re planning to browse the web alot from your PMP then the iPod’s larger screen and better browser may be important.

%d bloggers like this: