கடல் பற்றிய ஒரு குறிப்பு


ஜுலை                                              
கைவிடப்பட்ட நிலத்திலிருந்து          
அவர்களோடு
தண்ணீரில் கவிழும்
படகுகளுடன்
புதிராய் விரிந்த
வெளிச்ச வானத்தில்
ப10ததன
இந்திய கப்பல
படைகள்……
அகதிகள் என்பது
உறுதியானது….
கப்பலின் படைதரப்பு
சிகரட்டை வாங்கி
கொண்டது…
குறைந்தபட்சமாவது
ஆலயத்தின் விளிம்பிலும்
இலச்சம் உயிரையும்
மீட்கின்றது….

மார்ச் 19

முதளரவில் எரிந்த
விளக்கு அனைந்து
இருள் பரவியது
அறிகுறிகள்
உணர்த்தும் மொழியை
தவற விடாத
ஓர் நாளில்
அறைகளில் வசித்த
கடவுளின் வாசனை
என்னத் தொட்டது….
உடல் தேவைகள் தீராத
வாழ்வுகளோடு
போராடி பெண்ணுடல்
தேடும் ஆத்மார்த்தமான
பாலியல்களுக்கு
குழிப்பிட்டதொரு நாளில்
எனக்குள் அள்ளித்தந்ததால்
ஒரு புது உயிரை

எப்படி நிகழ்கின்றது
இவைகள் என்பனாத
புதிர்களும் முன்
அன்பின் மொழிகளின்
வர்ணனை மட்டும்
எனது கவிதைகள் இனனும்
தீர்ந்துவிடவில்லை…..

செப்டம்பர் 26

பைத்தியக்காரனுக்கும் எனககுமிடையேயான
ஒரே வேறுபாடு நான்
பைத்தியமில்லை! என்பதே என்று
சால்வாடார் டாலி காலத்தை
கடிகாரம் வெளியில்
ஏற்றி தண்ணிராய கரைத்து
விளையாடினான் இப்போதோ
யுத்தம் எழில்
எனது நகரத்தின் எல்லையில்
இராணுவம் இன்னும்
மனிதனின் அடையாள
அட்டையை தேடுவதோடு
பயம் எழும்
இரவுகளில் யாரும்
எப்போதும் கடத்தப்படலாம்
என்பதையும் தாண்டி
சாளரத்தில் தெரியும்
வெண்ணிலவின்
மௌர்ணி தின விகாரையில்
மட்டும் இன்னும்
சாதுக்களின்
பிரார்த்தகைளோடு
சகோதர்களின் மரணத்தை
எப்படி இவர்களால்
அத்தறை விரைவால்
நிகழ்த்திவிட முடிகின்றது…
கருணையற்ற
வாழ்வோடு போராடும்
நிர்கதியின் முன்பு
போரும்
இரானு கெடுபிடியும்
தாண்டி
கடவுளின் உறுதுனையன்றி
எனக்கேது கரைசேறும்
வாழ்வு….

நினைவு கூறப்படும்
எனது பிறந்ததின
திகதிகளுடன் மட்டுமில்லாது
அவர்களும்
நாடியாய்
நடக்கின்றோம்
காதலின் தீராத
போர்கால பாடல்களுடன்
   07.11.2007

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
தடுப்புகளுக்கு முன்

உன்னுடைய
எல்லா கதவுகளிலும்
வெளியேறிக்கொண்டிருக்காதே!

கதவுகளுடன் இறுக்க
மூடிய இரும்பு ப10ட்டுக்களுடன்
உன்
அடையாளங்கள் இறுக்கப்பட்டிருக்கின்றன…..
மற்றோருக்கான
கதவுகளிலும் பயணித்து
அதிலிருந்து
சாளரங்களின்
வழித்தடத்தை மேற்கொள்…!

மற்றும் ஒரு
இருண்ட நாளில்
உன் எலலா கதவுகளுமே
அடைக்கப்படலாம்,
நீ வெளியே முடியாமல்
அடைப்பட்டு அடிமையாக
அடையாளத்தை தொலைக்கலாம்…!
ஆனாலும்….
கதவுகளின் முன் உள்ள
தடுப்புகள் விலகும்படி
முயன்றபடி இரு….
எங்காவது
ஒளியின் ஊடுருவில்
தென்படுகிறதா என்று
கவனித்தபடி இரு….
   20.09.2005

Advertisements

Comments are closed.

%d bloggers like this: