ஏழு பளளதாக்குகளும் ஏழு பறவைகளும்


பறவைகளின் மரணங்கள்
தினம் அறிவிக்கின்றன
நான் குறித்த செய்திகளை
கூடுகள்
சிதைக்கபடும் நாளில்
நீ
அனுப்பியிருந்த கவிதைகளின்
மொழி புதிர்கள்
நம் வாழ்வின் சேராத
தருணத்தின் காலங்களை
நினைக்கின்றது……..

எனக்கான
பள்ளங்களின் பயணவெளி
திறக்கபடாமலேயே
கிடக்கின்றது
நாப்பது நாள்
இயேசுவின்
பாடுகளும்
400 டீடுழுறு
நானுறு உறைகளும்
என் வாழ்நிலைகளில்
தொகுக்கபடுகின்றது.

மீண்டும் ஒரு
காற்று சுடும்
வெய்யிலில்
அம்மாவின் ஞாபகங்கள்
வீட்டில் தனித்திருக்கும்
என் இசையற்ற
புல்லாங்குழலில்
வழிகின்றது ஆத்மாவின்
பாடல்கள்
புல்லாங்குழலில்
வழிக்கின்றது ஆத்மாவின்
பாடல்கள்……

நேற்று
சநதிக்க நபர்களிடமிருந்து
எனக்கான ஓர்
குறிப்பை
எப்படி என்னுடனேயே
தந்துவிட முடிகின்றது….

புலரும்
காலையில் நம்
செய்திகளில
பரிமாறப்படும்
வீபித்துவங்கள்
நம்மிடம்
கொண்டு சேறும்
நாட்களை தேடி
பயணிக்கின்றேன்…

மற்றும்
தனித்திருக்கும்
ஓர் இரவில்
நிசப்த வெளிகளில்
புல்லாங்குழலில்
அதிர்வு என்
நாளை புரட்டி
போடுகின்றது
அந்த எழு
பள்ளதாக்குகளை நோக்கியும்
பறந்து திரியும்
பறவைகளில்
ஞாபகங்களை நினைத்தும்…..

 இரவு 11.00 மணி சனிககிழமை 01.04.2006

Advertisements

Comments are closed.

%d bloggers like this: