அறைகளில்


தண்டிக்கப்பட்ட என்
மன நினைவுகளுடன்
உன்னைப்பற்றிய
நினைவுகள் என்னில்
கொதிப்தெடுத்தபடி
இருக்கின்றது….

உன் அன்பான காதலை
மறுத்து உன்னை
ஏமாற்றிய ஓர் நாளில்
நான்
சவமாகி போனதுதான் மிச்சம்….
வீரத்துடனும்
துணிவுடனும்
வாழ்வை
எதிர்கொள்ள முடியாது
போகச் செய்தது எது!

எல்லா விதமான
அடக்கு முறைகளுக்கும்
அச்சுறுத்தலுக்கும்
நான்
பணிந்துபோய்
பிணமானதுதான்
மிகுதியானது…..

என் வாழ்வு
முழுவதுமே
வலிக்கிறது….

நீ
அங்கு எப்படி
மௌனமாக
இருக்கிறாய்….!
சாளரங்கள்
முடிவில்
உன் கண்ணீரில்
வெப்ப ஊற்றில்
நான்
இன்னும் தன்னிலை
தொலைத்து
அலைத்து திரிகின்றேன்…
காற்றின்
புதிர்பேகம்
வாழ்வின்
வண்ணம் இழந்த
ஒற்றைச் சிறகாய்
வசிக்க மறந்த
தன்
தன்னுடைய
அறைகளில்…!

Advertisements

Comments are closed.

%d bloggers like this: