அன்பற்ற நகரத்தில் இருந்து வெளியேறியவன்


பீரங்கிகளும்
வெடிகுண்டுகளும்
காவலர் அரண்களும்
சூழ்ந்திருக்க நாம்
நகரத்தின் சூனியங்களில்
பயணங்களின் நெடுகிலும்
சக உயிரின் வலிகளை
மிதித்தபடி
பொருளாதார வியாபார
நிர்ப்பந்தங்களின்
நுகர்வின் புள்ளிகளின்
சிக்கிய சாகசங்களுடன்
எழுகின்றது நகரத்தின்
தீர்மானங்கள்…

மிதிபட்டு எழுந்து நிற்கும்
நகரத்தின இருப்பின்
உடல்கள் நெளியும்
தன் காமத்தின் திணிவை
சகா கமந்தபடி தொரும்…
உடல்களின் பிம்பங்கள்
அசைவுகளின் ஈர்ப்பில்
சுளிக்கின்றது மைத்துனங்களை

காமத்தகனங்களில்
உடல் வேட்கை அனலில்
சிக்குண்ட நகரத்தின்
இரும்பு பேருந்தில்
ஆண்மையம் குற்றவுணர்வுகளுடன்
யாரோ ஒரு இனம்
பெண்ணின் புலம்பல்களை
தினமும் சாபங்களாக
வாங்கி பொசுங்கியபடி…….

பாவம் நம்
குழந்தைகள்
இருப்பின் காலங்களின்
வன்முறையுடன் தன்
சுமைகொண்ட உறுதிகளுடன்

நடுத்தெருக்களில்
சிக்னல் சமிக்ஞை சாலைகளில்
யாசகம் கேடடும்
ஊனப்படுத்தப்பட்ட வெள்ளை
மலர்களின் இளம் கரங்கள்
நம் தேசத்தின் நாகரிகங்களினால்
அவமதிப்புகளுடன்
முடிக்கப்படுகின்றது வாழ்வாதாரங்கள்!

சிறைச்சாலைகளுடன்
சேரிகளுடன் தன் நவீனங்களை
தாபிக்கும் நகரங்களிலிருநது
என்னால் ஏன் வெளியேறி
போவதற்கு முடிவல்லை……..

குளிரந்த
நீரோடைகளின்
பருவங்கள் தொலைத்த
அந்த மரணித்த காலங்களுடன்
சிறிய குழந்தைகளாகவே
இருந்து விட மனிதனுக்கு
சாபம் நிழாதா…?

என்னடையதும்
உன்னுடையதும் நம்
எல்லோருடையதையும் இனி
மீண்டும் தேடி விடாதபடிக்கு
நகரம் நம்மை
வெகுது}ரத்திற்கு
கடத்தியிருக்கின்றது….

மீண்டும் வரவும்
மீண்டும் வரவும் – நாம்
குழந்தைகளிடம்
நான்களை தேடி போவோம்

சற்றே அமர்ந்து பேசி
நான்
நானறிய பேசிய காலங்கள்
நம்மை விட்டு அகன்று சென்றது ஏனோ….

காதலி
உன்னுடைய ஸ்பரிஷமும்
நேசமும் என் நகரத்தின்
தனிமையை போக்குகின்றது
ஆனாலும்,
நீ ஒரு நகரத்திலும்
நான் ஒரு நகரத்திலும்
சுயங்களை குறித்து
பேசாத நம் காதலினால்
~நான்| நானாக இல்லை

நகரத்தின்
இருள் வெளிகளில்
உன கடினமான
நினைவுகளுடன்
என் தொடர் நகர்வுகள்
உன்னைத் தேடி
என்னைத் தேடி
எங்கோ செல்லும்
நகரத்தின் இருப்புக்கு
மத்தியில்
தனியனாக
இன்னும் என்னவெல்லாமோ
தேடியபடி….!

ஒரு நகர மனிதனின் குறிப்பிலிருந்து…

  தினக்குரல் 10.07.2005

Advertisements

Comments are closed.

%d bloggers like this: