போரின் குரூரத் தடங்கள்


 ,ukjpak (AUGUST SUN)

-gpurd;d tpj;jhdNfapd; jpiug;glk; gw;wpa xH ghu;it-

இப்போதைய இலங்கைத் திரைப்படத் துறையயைப் பொறுத்தவரையில் சிங்கள மொழியில் உள்நாட்டு தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களும், தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு திரையிடப்படும் தமிழ் திரைப் படங்களும் திரைப்படங்களாக கணிக்கப்படுகின்றன. அத்துடன், ஈழ சினிமா என்கிற அடையாளத்துடன். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்படும் முழு நீளக்கதைப் படங்களும், குறும் படங்களும். ஆவணப்படங்களும் என இதுவரையும் 50 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அன்மையில் போர் நிறுத்தம், சமாதானப் பேச்சு வார்த்தை ஆகிய இரமதியம (august sun)

-பிரசன்ன வித்தானகேயின் திரைப்படம் வற்றின் சமிக்ஞையாக இனக்குழு சமூகத்தின் நல் உறவின் வழித்தடத்தின் நினைவுகளை மிட்டெக்கும் முயற்சியாக சிங்கள அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலும் புலிகளின் திரைப்படமான ~கடலோரக் காற்று| என்ற தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட்டது.
1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட தமிழ் – சிங்கள இனக் கலவரத்துக்குப் பின் கறுப்பு ஜுலையின் வன்முறைக் கரத்தினால் இலங்கையில் முகிழ்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவின் காலடித் தடம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டும், பல திரைப்பட தமிழ்க் கலைஞர்கள் இன வன்மத்தியினால்  கொலை செய்யப்பட்டும், புலம்பெயர்ந்தும், தமிழ்ச் சினிமாவுக்கு சாத்திய மற்றுப் போனது. இலங்கைத் தமிழ்ச் சினிமா என்பது குறுகிய வரலாற்றுப் பக்கங்களையே கொண்டது. இதுவரை 34 தமிழ்த் திரைப்படங்கள் உள்நாட்டுத் தயாரிப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தம்பிஐயா தேவதாஸினால் இலங்கை ~தமிழ்ச் சினிமாவின் கதை| என்ற தகவல் தரும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்ச்சினிமா வரலாற்றின் மொத்தப் படங்களும் 83 ஆம் வருடத்துக்கு முன் தயாரிக்கப்பட்டன. இலங்கைத் தமிழ் – சிங்கள மொழித் திரைப்படங்களின் அடையாளத்தை சிதைக்கும் தன்மையுடன் தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வியாபார சினிமாவுக்கும் இந்த ஹொலிவ10ட் ஆங்கில படங்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்த வகையான போக்கை எதிர்க்கும் அளவில் 88 ஆம் வருடங்களில் ஜே.வி.பி. என்ற இனவாத அமைப்பு தமிழகத்திலிருந்து வெளிவரும் படங்களைத் தடை செய்த வரலாறும் உண்டு. இப்போது சொந்த மண்ணில் தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுவதில்லை. புலம் பெயர்ந்தவர்களின் படங்களும், புலிகளின் படங்களும் தான் இன்றைய இலங்கையின் ஈழத்து சினிமாவாக இனம் காணப்படுகின்றன. ஆனால் இப்படங்களில் பெரும்பாலும் தமிழக வியாபார சினிமாவினுடைய பிராமணிய கதையாடலின் மறு பாதிப்பாகவும் போர்முலாத்தனமான கதையாடலும் கொண்ட படங்களாகவே இருக்கின்றன.  ஈழ வாழ்வின் போர் நெருக்கடி பற்றியோ, பௌத்த பேரினவாத அரசுகளின் இன வன்முறை பற்றியோ, சொந்த மண்ணில் பிரச்சினைகள் பற்றிய ஆழ்ந்த புரிதலுடனும் சினிமா மொழி குறித்த பிரக்ஞையுடனும், படைப்பாளு மையுடனும் இன்று வரையும் ஒரு ஈழ சினிமா கூட வெளிவரவில்லை, தமிழக கழிசடை வியாபார நசிவு சினிமாவினுடைய இரும்பு பிடிக்குள், தன்னை தன் உணர்வை அடகு வைத்திருக்கும் சினிமாக் கலைஞர்கள் என்ற சொந்த மண்ணின் குறிப்புகளுடனும். அடையாளத்துடனும் எப்போது சினிமாவை உருவாக்குவார்களோ?

திரைப்பட சங்கங்களின் தேவையோ, திரைப்பட மொழி பற்றிய புரிதலோ. திரைப்பட கல்வி பற்றிய அறிவோ, இன்னும் கூட சரியான முறையில் இனம் காணப்படாத சூழலில். சிங்கள மொழி சினிமா இன்று உலகளவில் பேசப்படுகின்றது. ஆனால் முதல் சிங்கள சினிமா தமிழகளத்தின் மதுரை மண்ணில் பழைய ஸ்டூடியோ ஒன்றில்தான் பிறந்தது என்பது வரலாற்று உண்மை. அப்படி வளர்ந்த சிங்கள மொழி சினிமாவும் தமிழ், இந்தி திரைப்படங்களின்  மறுப்பதிப்பாகத் தான் இருந்தது ஆனால் 1951 இல் சிறிசேன விமலவீர என்பவரால் ~பொடி புத்தா| என்ற திரைப்படம் தான் சிங்கள மொழியின் சுயமான சினிமா பிறப்பதற்கு வழி வகுத்தது.

அதை தொடரந்து 1956 ரேகாவ – விதியின்கோடு என்ற சிங்கள படத்தை இலங்ரைகயின் ~ரே| என்று வர்ணிக்கப்படும் வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பிராந்தியத் தன்மையுடனும், சிங்கள கலை, மொழி பண்பாட்டுடனும் உருவாக்கினார். அவரின் தொடர்ச்சியாக பு.னு.டு. பெரோ, ~பரசுது மல்| என்ற படத்தை எடுத்த காமினி பொன்சேகா இவர்களுடன் இரண்டாம் தலைமுறை இயக்குநர்களான ர்.னு. பிரேமரத்னே, வசந்த ஒபயசேகர, சுமித்ரா பீரிஸ், தர்மசிறி பண்டார நாயக்க, திஸ்ஸ அபேசேகர, மூன்றாம் தலைமுறை இயக்குனர்களான சுகத் தேவப்பிரியா ஜேக்சன் அந்தானி மோகன் நியாஸ் லிண்டன் சோமகே, அசோகா ஹந்தகமா, இனோக்கா சத்யாங்கனி போன்ற பாரம்பரியம் இன்று வரை தொடர்கின்றது.

அதிலும் பிரசன்ன விதாகேயின் சிங்கள சினிமா இலங்கையில் சர்ச்சைக்குரிய படைப்புகளாக கருதப்படும் பௌர்ணமி தின மரணம் (புரஹிந்த களுவற) திரைப்படம் இலங்கை பேரினவாத அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதும். அது பின் உலக பட விழாவிலும் கலந்து பல சர்வதேச விருதுகளைப் பெற்றதும் நினைவுபடுத்த வேண்டிய விடயம்.

இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போர்ச் சூழலையும் அரசியல் வன்முறைகளையும் பின்னணியாகக் கொண்ட பல திரைப்படங்கள் வெளிக் கொண்டு வரப்படுகின்றன. அதில் அசோக ஹந்தகமயின் வுர்ஐளு ஐளு ஆலு ஆழுழுN படமும் சோமரத்த திஸாநாயக்கவிக் ~சசோஜா| மற்றும் பிரசன்ன விதானகேயின் ~பௌர்ணமி தின மரணம்| மற்றும் இர மதியம (யுரபரளவ ளுழn) போன்ற பிரச்சினைகள் பற்றி பேசும் சினிமாக்களைக் குறிப்பிடலாம்.

கடந்த டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் 8வது சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா (றுழுசுடுனு ஊஐNநுஆயு) பிரிவில் திரையிடப்பட்ட ~ஆகஸ்ட் சன்| என்ற சிங்கள மொழித் திரைப்படம் சிங்கள சினிமாவின் ஆளுமையான படைப்புக்களைத் தரும் பிரசன்ன விதனகேயின் ஐந்தாவது திரைப்படமாகும். இப்படம் டில்லியலில் நடந்து முடிந்த 34 ஆவது உலக திரைப்பட விழாவில் போட்டி பிரிவுக்கு தேர்வாகியிருந்ததைக் குறிப்பிட வேண்டும்.

~இர மதியம்| என்ற ~ஆகஸ்ட் சன்| திரைப்பட போர் மனித வாழ்வில் ஏற்படுத்திய அனர்த்தங்களையும் அவல நிலைமையையும் மண்ணைவிட்டு பிரிவதில் உள்ள மனித வலியையும் பற்றி பேசுகின்றது. இப்படம் மூன்று வௌ;வேறு கதைகளைக் கொண்டது. போரினால் பாதிப்படைந்த மூன்று வௌ;வேறு மனிதர்களின் வாழ்வைப் பற்றிய கதையுடன் தன்னிலையடனான சினிமா மொழியுடனும் திரைப்படம் தொடங்குகின்றது.

இஸ்லாமியர்களை துரோகிகளாகக் குற்றம் சாட்டி மன்னார் தீவுகளிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய ஏழைக் குடும்பம் ஒன்றின். ஒரு சிறு வியாபாரியும் அவருடைய சிறிய வயது மகனும் அவனுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் வளர்ப்பு நாயை விட்டு பிரியும் சிறுவனின் வாயிலாக இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் அகதியாகச் சொந்த நாட்டில் வாழ நேர்ந்த போது அங்கே புதிய குட்டி நாயொன்றின் உறவை சிறுவன் பெறுவதன் மூலமாக வாழ்வின் மாற்றம் பற்றியும்@

இலங்கை விமானப்படையில் விமான ஓட்டியாக இருந்து போர்ச்சூழலில் காணாமல் போன கணவனை ஒரு சிங்கள அறிவு ஜீவி பத்திரிகையாளனுடன் இணைந்து தேடுகின்ற ஒரு இளம் வயது பெண்ணின் தனிமை, துயரம் அதனால் எழுகின்ற அறம் பற்றிய பிரச்சினைகள் என்றும் இன்னொரு பக்க கதையும் அவைகளின் நடுவே சிங்கள இராணுவப் படையிலிருந்து வெளியேறி வேறு வேலைக்காக பல இடங்களிலும் அலையும் சிங்கள வாலிபன் ஒருவனின் அலைச்சலில் தன் தங்கை ஒரு விடுதியில் பாலியல் தொழில் ஈடுபடுகின்றாள் என்று தெரிந்து மனமுரண் அடையும் தன்மையும். பின் வீட்டுக்குத் திரும்பும் போது தன் தங்கைக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கிச் செல்லும் அண்ணனின் பாசமும் என்று மூன்று உலகத்திலும் போரினால் வாழ நேர்ந்த மனிதர்களும், அவர்கள் தன் சொந்த பிரச்சினையுடன் ஒரே நேர் கோட்டில் இறுதிக் கட்டக் காட்சியில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

அவர்களின் சந்திப்பு என்பது வௌ;வேறு உலகத்தில் வாழ்வதற்கான அடையாளத்துடன் ஒரே நேர் கோடம்டில் வந்து போகிறார்கள். அறிமுகமில்லா அவர்களின் ஒவ்வொருவருக்கும் வௌ;வேறு பிரச்சிணைகள். ஆனாலும் வரலாற்றின் பாதையில் ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்று தொனியுடன் திரைப்படம் நிறைவடைகின்றது.

திரைப்படத்தின் இயக்குனர் பிரசன்ன விதானகே ஈழக் கவிஞர்  சேரனின் கவிதை ஒன்றின் தாக்கத்தினால்தான் முஸ்லிம்களின் கதையை திரைப்படத்தில் உருவாக்கி யுள்ளதாகக் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் பாதிக்கப் பட்டவர்களிலும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாகக் கூறும் இயக்குனர் திரைப்படத்தில் இஸ்லாமியர்களின் துயரம் குறித்தோ, இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கான சூழல் குறித்தோ. பேசாமல் உள்நாட்டுப் போரினால் அதிக பட்சமாக பாதிப்படைந்தவர்கள் சிங்கள மக்கள் தான் என்ற தொனியும், சிங்கள சார்புடனான கதையாடல் இருந்தாலும், தமிழ் பேசும் மக்கள் இன்று உலகமெல்லாம் போரினால் சிதறிக் கிடக்கும் நிலையையோ. உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ நேர்ந்ததையோ, சிங்கள பேரினவாத அரசுகளினதும் இன வன்முறை அரசியலை முன் வைக்கும் பௌத்த துறவிகளினால் தினம் தினம் அல்லலுறும் தமிழர்களின் வாழ்வு குறித்து படம் கவலைப்படவில்லை என்பதும் போரினால் சிங்களப் பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற உண்மைக்குப் புறம்பான கதையாடலை சினிமா கொண்டிருக்கின்றது. பாலியல் தொழில் என்பது போருக்கு முன்னர் கூட, இதே அளவில் இருந்தமை குறிப்பிட வேண்டியதொன்று.

போர்ச் சூழலை முன் வைத்து சிங்கள இராணுவ வீரர்களுக்கு 2,000 இளம் பெண்கள் பாலியல் தொழிலா ளிகளாக ஆக்கப்பட்டது குறித்த துயரமான உண்மையைத் திரிக்கும் விதத்தில் பாலியல் தொழில் போரின் வேறு முகத்தினால்தான் உருவாக்கப்படுவதாக படம் கூறுகின்றது. மற்றும் படத்தில் ஒரு காட்சியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தனியாக வீடு பிடித்து ஓர் இடத்தில் வாழ்வதாகக் காட்டும் காட்சியில் அனைத்துப் பெண்களையும் சிங்கள இளம் சிங்கள பெண்களாகக் காட்டுவதன் வாயிலாக படம் உண்மைக்கு நேரான ஒரு பக்கச் சார்பை நிலை நிறுத்த முயல்கின்றது. இதன் மூலமாக சிங்களப் பெண்கள் மட்டுமே பாதிப்டைந்தார்கள் என்ற கருத்துக்குத் துணை நிற்கின்றது. அதேநேரம். அசோகா ஹந்தகமயின் வுhளை ளை அல ஆழழn என்ற சிங்கள சினிமாவில் தமிழ்ப் பெண் எப்படி போர் வன்முறையினால் பாலியல் பண்டமாக ஆக்கப்படுகிறாள் என்பதை உண்மையுடனும் நேர்மையுடனும் சித்திரிப்பதை இங்கே சமகால சினிமாத் தன்மையுடன் கூறும் போது உண்மைக்கும் புனைவுக்குமான முரணைக் கட்டவிழ்க்க முடியும் மேலும் தமிழ் மக்களின் உணர்வுக்கு அணுகமாகவும் போருக்கு எதிராகவும் இயங்கும் சிங்கள அறிவு ஜீவிகள் புலிகளின் ஆதரவாளர்கள் தான் என்று காட்டும் இச் சினிமா இஸ்லாமியர்களை புலிகள் தன் சொத்த ~நிலத்திலிருந்து வெளியேற்றியதாகக் காட்டுவதன் வாயிலாக. பௌத்த பேரினவாத அரசியலின் பகுதியாக இஸ்லாமியரையும் கூட்டுச் சேர்க்கும் சதி முயற்சியாகவே இதைக் கருத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.

படத்தின் சாராம்சம் போர் தரும் வலியும் அதன் பின் விளைவுகளும் துயரங்களும்  அனைவரையும் பாதிக்கின்றது. என்பதுதான். ஆனால், புலிகள் மட்டும்தான் உள்நாட்டுப் போருக்குப் பொறுப்பு என் பதாகப் படத்தின் உட்கட்டமைப்பு கொண்டிருக்கின்றது. உள்நாட்டுப் போருக்கு இரண்டு பக்கமுமே காரணம் என்பதையும் அதிலும் சிங்கள பேரினவாத அரசுக்களுக்கு இதில் பெரும் பங்குண்டு என்ற உண்மையை முன் வைக்காமல் படம் விலகி செல்கின்றது.

போர் தரும் வலிக்கு புலிகள் மட்டுமே காரணம் என்று குற்றச்சாட்டும் இப்படம் நேர்மையற்ற படைப்பாகவே தன்னை வெளிக்காட்டிக் கொள்கின்றது. மேலும் இன விடுதலையின் வரலாற்றில் இஸ்லமியருக்கு புலிகள் ஏற்படுத்திய நெருக்கடி என்பது இங்கே போர் தரும் வலியும் துயரம் என்கிற அளவில் இணைந்து பார்ப்பதென்பது நிலைமைகளை தலைகீழாகப் புரிந்து கொள்வதாகவே முடியும். போரினால் பெரும்பாலும் பாதிப்படைந்தவர்கள் சிங்கள மக்கள் தான் என்கிற ஒரு பக்கச் சார்பு கொண்ட எதிரான கருத்துக்கு வலுச் சேர்ப்பதற்கே புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர் களையும் அவர்கிள்ன நிலையையும் இணைத்து பார்க்கின்ற இப்படம். சமூகத்தின் முரண்பாடுடைய அரசியல் நடவடிக்கை களை இது போன்ற படைப்புக்குள் கொண்டுவரும் போது அது அதற்கேற்கேயான சமூக பின்னணியுடன் வைத்துப் பேசப்பட வேண்டும். படத்தினுடைய உட்கருத்துக்கு தந்திர மான முறையில் பலம் சேர்க்கப்படுவது இஸ்லாமியர்களை இணைத்துக் கொள்வதில் தான்.

போர் சிங்கள மக்களை மட்டுமே பாதிக்கின்றது என்ற ஒற்றைக் கருத்தை வலுப்படுத்த படத்தில் வரும் இரண்டு சிங்களப் பின்னணியுடனான மனிதர்களை மட்டும் காட்டுவதனால் சாத்தியமடையச் செய்ய முடியாது என்று தெரிந்தே புலிகளினால் நேரடியாகப் பாதிப்படைகின்ற இஸ்லாமியர்களை எதிரான கருத்தளவில் இணைக்கும் போது அது முரண்தன்மையுடன், சூட்சமமான முறையுடன் படம் பலமான இடத்திற்கு நகர்ந்து விடுகின்றது. படத்தில் வருகின்ற இரண்டு சிங்கள கதாபாத்திரங்களை மட்டும் படமாக்கியிருந்தால் படத்தினுடைய சார்புத்தன்மையின் அரசி யல் அப்பட்டமாக வெளிப்பட்டு விடும். இதை மூடி மறைப் பதற்கு சமூகத்தின் எதிர் நிலையிலான இஸ்லாமியர்களை இணைக்கின்றது படத்தின் தந்திரமான திரையாக்கம் தான்.

ஏற்கனவே இஸ்லாமியர்களை வெளியேற்றியது தவறுதான் என்கிற உண்மையை மன்னிப்புடன் புரிந்து கொண்ட புலிகள் அதன் தொடர்ச்சியை மறைத்து பிரச்சினைகளை மேலும் தலைகீழாக இச்சினிமா தன்னுடைய ஒரு பக்க சிங்கள சார்பான ஒற்றைத் கருத்துக்கு இஸ்லாமிய வெளியேற்றத்தை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றது. அத்தோடு. போர்ச்சூழல் சிங்களவர்களை, சிங்களப் பெண்களை மட்டும் தான் பாதிக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதொன்று இன்று உலகம் முழுவதும் அகதிகளாகத் தமிழ் மக்கள் சிதறியடிக்கப்பட்டதும், நாடற்றவர்களாக, வீடற்றவர்களாக ஆக்கப்பட்டது, இதே மண்ணில்தான். தமிழர்களின் மொழி, அடையாளம் சிதைக்கப்பட்டதும் இதே மண்ணில்தான். அத்தோடு, படத்தில் போர் வீரராக வரும் வாலிபன் அரசாங்கச் சலுகையோடு வீடு கட்டுமளவுக்கு வளர்ந்திருக்கின்ற. பொருளாதார சூழலில் எந்தப் பெண் விபசாரத்திற்குப் போவாள்.

இன்று எனது சமூகம் முற்றிலுமாக சமுதாயத்தைப் பற்றியோ சமூக பொறுப்புணர்வோ, அறிவோ இல்லாமல் போய்விட்டது. அது ஒவ்வொருவரையும் தன் சொந்தக் குடும்பத்தை பற்றியே சிந்திக்க வைக்கின்றது! அதே போராட்டத்தினால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று கூறும் பிரசன்ன விதானகே தன் படத்தில் போரின் அழுத்தம் சிங்களவர்களையே நசுக்குவதாகக் காட்டுவது முற்றிலும் முரணான பகுதியாகும். நேரடியாக போருக்கு முகம் கொடுப்பவர்கள் தமிழ் மக்கள்தான். அவர்கள் பற்றிய உண்மைகளை திரைப்படத்தில் மௌனமாக விட்டது எதனால்?

பொர் ஒரு உயிர்களை ~பலி| வாங்கிக் கொண்டு இருக்கும் போது. இன்னொரு பக்கம் வு.ஏ யின் வாயிலாக கிரிக்கெட் டே;ச் பார்ப்பவர்கள் சிங்களவர்கள்தான. உயிர் இழப்புகளைப் பற்றிய கணக்கு எண்ணிக்கையை கிரிக்கெட் வர்ணணையின் ஸ்கோர்களாகப் பார்க்கின்றவர்களும் இதே மக்கள்தான். மேலும் போரின் விளைவுகளும். அனர்த் தங்களும், மனச்சிதைவுகளும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தான் மிகவும் அதிகமாக தாக்குகின்றன. சிங்கள மக்கள் பெரும் பான்மையாக வாழ்வது தென்னிலங்கையின் மேற்குப் பகுதிகளிலும். மத்திய பகுதிகளிலும் தான் இங்கே போரின் பாதிப்பு சிங்கள மக்களை நேரடியாகத் தாக்குவதில்லை. பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு போரினுடைய துயரமும் வன்முறையும் தெரிவதுமில்லை, உணர்வது மில்லை ஆகவே, இங்கே படம் முன் வைக்கும் பிரச்சினை  கள் இன்றைய நிலையில் சாத்தியமற்ற கருத்துகள் தான்.

பத்திரிகையாளனாக வரும் கதாபாத்திரமும், கணவனை போரில் இழந்து தேடிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணும் ஒரு கட்டத்தில் உடல் ரீதியாக இணையும் தருணம் வந்ததும் பத்திரிகையாளன் அற மதிப்பீடுகளின் வழி தன் உறவை மறுப்பது எப்படிச் சாத்தியம். இப்படியான சூழலில் சுத்தமான மனிதர்களாக எந்த மனிதன் இருப்பான். உடல் ரதுpயான தாபங்கள், உடல் தேவைகள், பௌத்தம், தம்மம் எப்படி அத்தனை சீக்கிரத்தில் மனிதனை கட்டுக்குள் கொண்டு வந்துவிடும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லா மனிதர்களும் பயன்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்ட தன்னிலைகள்தான். இதை ஏன் படத்தில் வாய்ப்பு இருந்தும் இயக்குனர் தவிர்துவிட்டார். அவன் தன்னைக் காப்பது பௌத்தத்தினாலா? இல்லை அது தந்திருக்கும் அறத்தினாலா?

மலையகத் தமிழர்களின் நெருக்கடி என்பது இன்று போரினால் வேறு வகையான இன வன்முறைக்கு உள்ளாகியுள்ளதையும் இங்கே இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கின்றது. 1983 இல் ஜுலை கலவங்கள் 13 சிங்கள இராணுவத்தை கொலை செய்தமைக்கான பழிவாங்கும் தன்மையுடன் இந்திய வம்சாவளி அப்பாவி மலையகத் தமிழர்களை சுற்றியுன்ன பேரினவாத சிங்கள அரசுகளும், சிங்கள இன வன்முறை கொண்ட மக்களும் இன்னும் பழிவாங்குவதும், வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்குவதும். சந்தேகத்தின் பேரில் கைது செய்வதும் பொலிஸ் சித்திரவதைகளும். அடையாள அட்டை இல்லாததனால் அரசு காட்டும் பழிவாங்குதலும், சாதிய இன வன்முறைக்கும் வறுமைக்கும். ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் முகம் கொடுத்து வாழ்வார்கள் இந்த மலையக மக்கள்தான். தமிழ் நாட்டின் தொப்புழ் கொடி தொடர்புடைய மனிதர்களான இவர்களை எல்லா படத்தில் ஒரு செய்தி கூட சொல்லாமல் போனது இயக்குனரின் சிங்கள மேலாதிக்கப் போக்கையே முன் வைக்கின்றது. ஒரு திரைப்படத்தில் இத்தனை பிரச்சினைகளையும் பேசிவிட முடியாதுதான் ஆனால், இப்படத்தில் அதற்கான சூழல் இருந்தும் தவறவிட்டது எதனால் என்ற கேள்வி முன் எழுகின்றது.

அத்தோடு. இதே திரைப்பட விழாவில் ~சின்ன தேவதை| என்கிற இன்னொரு சிங்கள சினிமாவும் கலந்து கொண்டது. அதன் கதையாடலும் காட்சிகளும் நம் தமிழ் வெகுசன சினிமாவினுடைய தன்மையைக் கொண்டிருந்தாலும் இதில் மலையகத் தமிழர்கள் உதிரி கதாபாத்திரமாக முகமற்றவர்களாக சித்தரிக்கப்பட்டிருந்ததும். சிங்கள மொழியை காலாகாலமாக தமிழ் மக்களின் மேல் திணிக்கும்  பேரினவாத அரசுக்களின் போக்கை இப்படம் தன் கதை யாடலின் வாயிலாக நியாயப்படுத்தியிருந்தும். இப்படத்தில் இயக்குனர் சோமரத்ன திசா நாயக்கவை நான் கண்டு உரையாடிய போது. அவர் இப்படத்தை முன் வைத்த.
~தமிழர்கள் சிங்கள மொழியைப் பேசுகின்றார்கள். ஆனால் சிங்களவர்கள் தமிழ் மொழியைக் கற்பதும் இல்லை, பேசுவதற்கு முயற்சி செய்வதுமில்லை… இது தவறுதான். இது போன்ற நிலைமை மாற வேண்டும். ~என்றும் தன் தவறை அவரும் ஒப்புக் கொண்டது குறிப்பிட வேண்டிய தொன்று இப்படியான போக்குகளை உலகப் பட விழாக் களிலும் சந்திக்க, பார்க்க நெர்வது துரதிஷ்டமே

ஆகஸ்ட் சன் படத்தில் வரும் இறுதிக் காட்சியை போல்தான் வௌ;வேறு மொழிகளுடன். கருத்துகளுடன் முரண்பாட்டுடனும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொள்கிறோம். வௌ;வேறு உலகத்துடனும், அவரவர்களுக் கான நம்பிக்கையுடனும் ஆசைகளுடனும் பயணங்கள் தொடர்கின்றன.

நன்றி: தினகுரல்

Advertisements

Comments are closed.

%d bloggers like this: