RED ROSE இதழ்கள்


உன்
ஈர முத்தங்களில் அடக்கி வைக்கப்பட்ட
இரும்பு மிருகங்கள் என் அந்தபுரத்திலிருந்து
மெதுவாக உடைந்து நொறுங்கியது….!

புpரிக்க முடியாத இதழ்களில்
ஏச்சில் வாசனைகளில் என்
ஜாமங்கள் வண்ண நிறங்களை
இருள் வானில் ஒற்றை
நட்சத்திரமாக உருமாற்றி மாற்றி
என் தனித்த அறையில்
நீ பேசும் குறுங்செய்தியாக
உனது தொலைபேசி அழைப்புகளில்
நீ உதிர்க்கும் அன்பு பற்றிய
பாடலின் வசிகர இசை
எனது
ஜன்னல்களிலும் எப்போதும்
திறக்காத மாடி அறை
கதவுகளும்….
ஐஸ்கீறீம் விற்பனை செய்து
போகும் வண்ண வளக்கு வண்டியையும்
எனனோடு பிரிந்து நடக்கும்
எனது முரண்பாட்டு முகத்தையும்
ஓர் நொடி அசைக்கன்றது….

நீ
ஓர் மதிய நேரத்தில்
அன்பளித்த அந்த
சின்ன ரோஜாவை
நான்
என்றும் இதயத்தில் வைத்திருப்பேன்…!

நம் காதலின் முதல் ரோஜாவை
நாம் நம் குழந்தைகளிடம்
அன்பளிப்போம்…

எனக்காக பூத்திருக்கும்
என் சின்ன ரோஜாவே
வறன்ட என் வானில்
வண்ணம் கொண்ட கவிதை ஒன்றை
வாசம் தீராமல் வரைவோம்…

09;.07.2008 இரவு

Advertisements

Comments are closed.

%d bloggers like this: