உன் கடிதமும் என் வாழ்வும்


செத்த உடலை
யாரோ
சுமந்து செல்கிறார்கள்…

ஞாபகங்கள் முட்டித் தள்ளும்
நெரிசலில் சொற்கள்
சுணங்கி விட்டன வெளிவர
முடியாமல்…!

திரை விழாவில்
நீங்கள் இல்லாத தனிமையில்
துவண்டு உலர்ந்தேன்…

தற்சமயம்
தனிமை என்னை
தின்கிறது…!

 

 

 

 

 

 

 

 

மனக்குழப்பமும்,
உளவியல் ரீதியான
தனிமையும்,
பொருளாதார நெருக்கடியும்
கொன்று திண்கிறது…!

சமீப காலங்களில்
திரைவிழா அனுபவங்கள்
மடடுமே அற்புதமானதாக
இருக்கின்றது…!

நிகழ் வாழ்வு
தற் வெறுமை
வெற்றுப் புழுதியுள்
புதையுண்ட வாழ்க்கை!

எப்படிப்பார்த்தாலும்
தீராமல் அழைக்கழிக்கிறது
வாழ்வு…..
நிதானப்பட கதியின்றி
சதா அலைவு…

என் ஆழ் கனவில்
இங்கு பல்வேறு முயற்சிகளில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன்….

எது முடியும்
எப்படி முடியும்
எப்போது முடியும்?
தெரியவில்லை…..

முயற்சிகள் மட்டும்
தொடரும் முடிவின்றி
அதில் மட்டும் மனம்
அலுத்துவிடாத படி இருக்க
முயல்கிறேன்…..

காலத்தின் புதிர் பாதைகளில்
மாபெரும் திரைக்கனவுகளை
சாத்தியமாக்கும்
என்னத்துடன் பயணமாவோம்…
அது ஒன்றே
நமது
வாழ்வு உய்ய வழி
கலை மனதின்
தீராத போராட்டம்
எரியும் வாழ்வில் தீய்கிறது.

சருகுதிர்ந்த துளிர்த்து மரமாய்
விடும்படி நம்பிக்கைகள்
 காலங்கள் புதிதாய்
வேர் கொள்கின்றன…!

உங்கள்
நிழலை எழுதுங்கள்…!

எனது மெல்லிய
இசை அறையில் வழக்கம் போல்
நான் மட்டும்
என் புத்தகங்களோடும்
இசை நாடாக்களோடும் வசிக்கிறேன்…

ஹவிக்கு

Advertisements

Comments are closed.

%d bloggers like this: