எனக்கு விருப்பமான                              
புத்தகத்தை படிக்க முடிவதில்லை
அவர்கள்
அடிக்கடி புத்தகதை
தடை செய்கிறார்கள்..

எனக்கு விருப்பமானவைகளின்
பட்டியல் ஒன்றை
அவர்கள் ஏற்கனவே
தயாரித்து தந்த படிவத்தில்
எவ்விதமான
அறிவுறுத்தலும் இல்லாமல்
நிரப்பி கொண்டார்கள்..!

நேற்றிரவு
ஆடையாள அட்டையை
கொண்டு; வர சொல்லி
எனது தலையை சுற்றி
சிவப்பு பையினால்
வட்டமிட்டார்கள்…!

பின்தொடரும் நபர்களிடம்
எனது நகரத்து
வரைபடம் கவசமிடப்பட்ட
வெள்ளை நிற வேனில்
முன் இருக்கையில்
இரவுகள் குறித்த
அலறும் மரணங்கள்…

பயமுறுத்தும் நகரத்து
சாலைகளில்
கவச வாகனங்கள்
அறைகளின் சுழலும்
மின்விசிறியை போல
உயிர் தவிப்பை
தவிர்க முடியவில்லை

மரணங்களை தவிர்பதற்கும்
அருகதை இல்லாத
தினசரி அசைவில்
வாழ்வதற்கான அவா
மட்டும்
மிஞ்சுகிறது….

  • 30.06.2008
  •  ; 
Advertisements

Comments are closed.

%d bloggers like this: