நகரப் பேருந்து…


..
பகல் பொழுதொன்றின்
அவனுக்கும் எனக்குமான விட்டு போன
உறவு மீணடும் துளிர்ந்தது…..!

சாலைகளில் மனித உயிரை
பயமுறுத்தி ஓடும் நகரப் பேருந்தில்
கண்ணாடி ஐன்னலில் வெறித்து பார்த்து
சிரிக்க மறுத்து விட்டு போகும்
அடையாளம் தெரியாத பெண்களை போல
தற்சமயம் இருவரும் இடைவெளிகளை
உடைக்க விருப்பமில்லாமல்
விலகி சென்றோம்….!

ஊடைந்த கண்ணாடி சில்லுகளிலின்
முகம் அம்பலப்பட்டு போன தினங்களுடன்
உன்னுடனான கடைசி பாலமும்
புயலில் சிக்கி நில நடுக்கத்தில்
தகர்ந்து போனது…!

இப்போதும் யாருமற்ற அறையில்
அவனின் கையெழுத்து எழுதிய
வெள்ளை காகிதங்களை
ஒவ்வொரு நானிலும் குப்பைகளை
நிரப்பியபடி இருக்கின்றேன்…..

அழைப்புகள் ஏதுமற்று கை தொலைபேசியில்
இலக்கங்களின் பதியும் தகட்டை
வெறுமனே சுழற்றி சுழற்றி அறிவுறுத்தல்
செய்வதோடு தொலைபேசிகளுடகான
உறவுகளும் சுருங்கிவிட்டன்…!

முழை பெய்யும் அந்தி நாளில்
அலுவலகம் விட்டு நனைந்த
கைகுட்டையை துவைக்கும் போது
உள்ளாடைகளில் படிந்திருக்கும்
மழையை பற்றிய அயர்வான
கதைகளுடன் பகிர்வதற்கான ஒரே ஒரு
ஆள் கூட இல்லாமல்
வெற்றுச் சாலைகளில்
பாதுகாப்பு கவசங்களுடன்
இராணுவம் காவல் காத்திருக்கின்றது
என்னை கொல்வதற்கா
அல்லது
கடத்தி சென்று காணாமல்
செய்வதற்கா என்பதை அறியாமல்
தடுமாறுகிறேன் இக்கனம் வரை…!

 24.06.2008—————— இரவில்

Advertisements

Comments are closed.

%d bloggers like this: