தனிமையின் புல்லாங்குழல்


உதிரும் முத்தங்கள்
ஓவ்வொ நாளும்
இப்படிதான் ஏதோ ஒரு
தீர்க்க முடியாத
அவாவோடு முடிகின்றது…!

என்னைப் பற்றி புரிந்துகொண்ட
உனது புரிதல்கள் பற்றி
எனது தவறான கணிப்பில்
முரண்களின் விலகலோடு
நாம்
தேடி கண்ட புன்னகைகள்
நாம் அவசரகாக
அனைத்து போட்ட
முத்தங்களாக
உதிர்கின்றது….!

உனது வெட்கத்தை
புரிய செய்த எனது
சுவாசத்தின் அனல் காற்று
அடையாளம் தெரியாத
நபராக தொலைந்ததன்
காரணங்களை யாரிடம்
சென்று முறையிடுவது…!

காதலிக்க தெரியாத
ஒருவனுக்காக காதலையும்
ஒருவருக்கும் தெரியாமல்
போட்டு புதைப்பதன்
சித்து விளையாட்டுதான்
இன்னும் புரியவில்லை….!

ஓவ்வொரு நாளும்
பசியோடு எனது
இரைபையின் நாவுகள்
உனது தாக சாலை வேண்டி
மனதின் நாட்காட்டியை
அலையடிக்கும் திசைக்கு
அழைத்து போகின்றது….!

இங்கே
எல்லா இசையும்
முடிந்த பின்பும்
உனது ஆசையான முகம்
பற்றிய இசை மட்டும்
ஒரு புல்லாங்குழலாக
தனிமையில்
என்னை அழைத்து
வாசிக்கின்றது….!

• 2.7.2008

Advertisements

Comments are closed.

%d bloggers like this: