நகரப் பேருந்து…


..
பகல் பொழுதொன்றின்
அவனுக்கும் எனக்குமான விட்டு போன
உறவு மீணடும் துளிர்ந்தது…..!

சாலைகளில் மனித உயிரை
பயமுறுத்தி ஓடும் நகரப் பேருந்தில்
கண்ணாடி ஐன்னலில் வெறித்து பார்த்து
சிரிக்க மறுத்து விட்டு போகும்
அடையாளம் தெரியாத பெண்களை போல
தற்சமயம் இருவரும் இடைவெளிகளை
உடைக்க விருப்பமில்லாமல்
விலகி சென்றோம்….!

ஊடைந்த கண்ணாடி சில்லுகளிலின்
முகம் அம்பலப்பட்டு போன தினங்களுடன்
உன்னுடனான கடைசி பாலமும்
புயலில் சிக்கி நில நடுக்கத்தில்
தகர்ந்து போனது…!

இப்போதும் யாருமற்ற அறையில்
அவனின் கையெழுத்து எழுதிய
வெள்ளை காகிதங்களை
ஒவ்வொரு நானிலும் குப்பைகளை
நிரப்பியபடி இருக்கின்றேன்…..

அழைப்புகள் ஏதுமற்று கை தொலைபேசியில்
இலக்கங்களின் பதியும் தகட்டை
வெறுமனே சுழற்றி சுழற்றி அறிவுறுத்தல்
செய்வதோடு தொலைபேசிகளுடகான
உறவுகளும் சுருங்கிவிட்டன்…!

முழை பெய்யும் அந்தி நாளில்
அலுவலகம் விட்டு நனைந்த
கைகுட்டையை துவைக்கும் போது
உள்ளாடைகளில் படிந்திருக்கும்
மழையை பற்றிய அயர்வான
கதைகளுடன் பகிர்வதற்கான ஒரே ஒரு
ஆள் கூட இல்லாமல்
வெற்றுச் சாலைகளில்
பாதுகாப்பு கவசங்களுடன்
இராணுவம் காவல் காத்திருக்கின்றது
என்னை கொல்வதற்கா
அல்லது
கடத்தி சென்று காணாமல்
செய்வதற்கா என்பதை அறியாமல்
தடுமாறுகிறேன் இக்கனம் வரை…!

 24.06.2008—————— இரவில்

Advertisements

தனிமையின் புல்லாங்குழல்


உதிரும் முத்தங்கள்
ஓவ்வொ நாளும்
இப்படிதான் ஏதோ ஒரு
தீர்க்க முடியாத
அவாவோடு முடிகின்றது…!

என்னைப் பற்றி புரிந்துகொண்ட
உனது புரிதல்கள் பற்றி
எனது தவறான கணிப்பில்
முரண்களின் விலகலோடு
நாம்
தேடி கண்ட புன்னகைகள்
நாம் அவசரகாக
அனைத்து போட்ட
முத்தங்களாக
உதிர்கின்றது….!

உனது வெட்கத்தை
புரிய செய்த எனது
சுவாசத்தின் அனல் காற்று
அடையாளம் தெரியாத
நபராக தொலைந்ததன்
காரணங்களை யாரிடம்
சென்று முறையிடுவது…!

காதலிக்க தெரியாத
ஒருவனுக்காக காதலையும்
ஒருவருக்கும் தெரியாமல்
போட்டு புதைப்பதன்
சித்து விளையாட்டுதான்
இன்னும் புரியவில்லை….!

ஓவ்வொரு நாளும்
பசியோடு எனது
இரைபையின் நாவுகள்
உனது தாக சாலை வேண்டி
மனதின் நாட்காட்டியை
அலையடிக்கும் திசைக்கு
அழைத்து போகின்றது….!

இங்கே
எல்லா இசையும்
முடிந்த பின்பும்
உனது ஆசையான முகம்
பற்றிய இசை மட்டும்
ஒரு புல்லாங்குழலாக
தனிமையில்
என்னை அழைத்து
வாசிக்கின்றது….!

• 2.7.2008

நமக்கான சினிமா


சாத்தியங்களும் அசாத்தியங்களும்

“மக்கள் தங்களது எண்ணங்களை
வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும்
பென்சிலும் எப்படி எளிதாகக்
கிடைக்கிறதோ; அது போல
சினிமா என்று சாத்தியமாகிறதோ
அந்த நாளில் தான் அது
சாமன்ய மனிதனின் கலை
வடிவமாக அங்கீகரிக்கப்படும்’

பிரெஞ்சு திரைப்பட இயக்குனர்
ழான் காக்தூ

“”திரைப்பட சஞ்சிகைகளின் தேவை”

 மாரி மகேந்திரன்

பிரெஞ்சு புரட்சியை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதே பிரெஞ்சு தேசத்தில் சினிமாவில் மாபெரும் இயக்கமாக தோன்றிய “புதிய அலை’ சினிமா இயக்கத்தை பற்றி நாம் ஓரளவுக்கு தான் அறிந்திருப்போம். உலக சினிமாவின் ஒவ்வொரு அசைவுகளிலும் புதிய அலை சினிமாவின் தாக்கம் இன்றுவரை பிரதிபளிக்கின்றது. இந்த “புதிய அலை’ பற்றி முழுமையாக கேசரி வாசகர்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்கும் போது எழுதுகின்றேன். விசயம் இதுதான் இந்த புதிய அலை சினிமாவின் வளர்ச்சிக்கும் புதிய அலை என்கிற திரைப்பட இயக்கமும் தோன்றுவதற்கும் ஒரு சினிமா சஞ்சிகை தான் மூலக் காரணம் என்றால் நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும். ஆம் இது உண்மை. “கயேது சினிமா’ (இச்டடிஞுணூண் இடிணஞுட்ச்) என்ற அந்த சினிமா சஞ்சிகைதான் மூல பிரெஞ்சு சினிமாவை மாற்றியதோடு, உலக சினிமாவிலும் மாற்றத்தை  அந்த சஞ்சிகை. ஒரு பத்திரிகையின் மூலமாக மாபெரும் திரைப்பட மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா என்கிற கேள்விக்கு “கயேது சினிமா’ தான் நல்ல உதாரணம். அதனால் நல்ல சினிமா பற்றிய அறிமுகத்தை அ தை மக்கள் மயப்படுத்தும் உன்னதமான வழிவகைகளை பத்திரிகை, காட்சி ஊடகங்கள் மிக சிறப்பாக செய்து காட்ட முடியம். ஆனால் தமிழில் அதுவும் நம் இலங்கை தமிழில் சூழலில் நல்ல சினிமாவுக்கான இதழ்களின் பங்களிப்பை நாம் இன்னும் காத்திரமான முறையில் பயன்படுத்தாமல் இருக்கின்றோம் என்பதுதான் நம்மிடமிருக்கின்ற குறை.
இந்த வெற்றிடம் நம் மத்தியில் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலேயே இருக்கின்றது. நல்ல சினிமா மக்களின் மனோபாவத்தில் உயிர் மூச்சாக கலக்கும் வகையில் நாம் எழுத்தூடகங்களை பிரக்ஞை பூர்வமாகவும், காத்திரமான வகையிலும் பயன்படுத்த முனைய வேண்டும். தமிழில் நல்ல சினிமாவுக்கான இதழ்களின் பங்களிப்பை நாம் இன்னும் பயன்படுத்தாமல் இருக்கின்றோம். இந்த வெற்றிடம் நம் மத்தியில் நிரப்பப்படாமல் இருக்கின்றது. இதற்கான முயற்சிகளில் நாம் இறங்க வேண்டும். நல்ல சினிமா பற்றிய சிறு சஞ்சிகைகளின் மூலம்தான் படைப்பு சார்ந்த உரையாடலை நம் படைப்பாளிகளிடமும், நம் பார்வையாளர்களிடமும் ஏற்படுத்த முடியும். இன்று நல்ல சினிமாக்களின் ஈஙஈ கள் சாதாரணமாக எங்கும் இலகுவில் கிடைப்பதன் தேவை மூலம், பரவலாக நல்ல திரைப்படங்களை நமது பார்வையாளர்கள் பார்ப்பது தொடர்ந்தாலும் பார்க்கும் படங்கள் பற்றிய உரையாடலை நல்ல சினிமா சஞ்சிகைகளும், வெகுசன இதழ்களும் ஏற்படுத்த தவறியுள்ளது.


தமிழகத்தில் சினிமா பற்றிய சஞ்சிகைகள் இரு வேறு போக்குகளுடன் வெளிவந்தபடி இருக்கின்றது. வெகுசன சினிமா பற்றிய விளம்பர சுவரொட்டிகள் போல வெளிவரும் பொம்மை, ஜெமினி சினிமா, வண்ணத்திரை, ஈ சினிமா, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற வர்த்தக சினிமாவினது கிசு கிசு பத்திரிகைகள் மஞ்சள் பத்திரிகை மூலம் வெளிவந்தாலும் அ தில் நல்ல சினிமா பற்றிய செய்திகள் வருவதென்பது குறைவு என்பதை விட வருவதில்லை என்றுதான் நிலை இருந்தது. ஆனால் இன்று இதுபோன்ற திரைப்படம் பற்றிய பல இதழ்கள் மக்கள் ஆதரவு இல்லாமல் பாதியிலேயே நிண்டு போனதோடு, தற்சமயம் நியூ பிலிமாலயா, சினிமா எக்ஸ்பிரஸ் வண்ணத்திரை, ஈ சினிமா போன்ற இதழ்களில் வெறும் ஆபாசம் மட்டும் இன்று விலை போகாததால் அதில் நல்ல சினிமாவுக்கும் ஒரு இடம் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதன் மூலம் இன்று ஈ சினிமாவில் உலக சினிமா பற்றிய தொடர்புகளுடன், குறும் படங்கள் பற்றியும், ஆவணத் திரைப்படங்கள் பற்றியும் எழுத வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழ்ச் சூழல் ஏற்படுத்தியிருப்பது வரவேற்க வேண்டிய விடயம்.
இது பொது புத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையே வெளிப்படுத்துகின்றது. இப்படியான நிலை நமது இலங்கை சூழலிலும் விரும்பப்படுகின்றது என்பதுதான் நிஜம். அத்தோடு இந்த போக்குகளுக்கு மண்ணனியாக நல்ல சினிமாவுக்கென்று வெளியான தமிழக அக்கறையை நாம் மறந்து விடக் கூடாது. சிறு குழுக்களின் தனி நபர் முயற்சிகளாக பல நல்ல திரைப்பட இதழ்கள் தமிழகத்தில் பல்வேறு கால கட்டங்களிலும் வெளியாகியுள்ளதை நாம் மறந்து விட கூடாது. அ ந்த வகையில் அகவிழி, சலனம், கோணம், இடறல், செவ்வகம், படப்பெட்டி, நிழல், திரை போன்ற நல்ல சினிமாவுக்கென்று வெளியான இந்த இதழ்கள் தொடர்ந்து வெளிவராது போனமை துரதிஷ்டமே. அதில் “சலனம்’ என்ற இரு மாத சினிமா சஞ்சிகை மூலம் தமிழகம் நல்ல சினிமாவின் வளர்ச்சியின் கதவுகளை அகலத் திறந்ததோடு ஒரு காத்திரமான சினிமாவை பற்றிய அழைப்புக்கு சலனம் பெரிதும் துணை புரிந்தது. நல்ல சினிமா பற்றிய ஒரு தொடக்க உரையாடலை சலனம் தமிழகத்தில் பரவலாக ஏற்படுத்தியதோடு, இலங்கையிலும் அச்சஞ்சிகை நல்லதொரு பார்வைக்கு வழி திறந்தது. சலனத்தின் சினிமா சலனம் நல்ல சினிமாவை தேடிக் கொண்டிருக்கும் பார்வையாளனுக்கு பெரியளவில் உறுதுணை புரிந்தது. அத்தோடு இன்னும் தொடர்ந்தும் பல வருடங்களாக வெளிவரும் “நிழல்’ என்ற சினிமா சஞ்சிகை மூலம் குறும்படமும், ஆவணத் திரைப்படமும் தமிழகத்தில் பரவலாக உருவாக்கப்படுவதற்கான கதவுகளை இச் சஞ்சிகை மூலம் வழி திறக்கப்பட்டிருப்பதோடு உலகெங்கும் குறும் படங்களும், ஆவணத் திரைப்படங்களும் திரையிடப்படும் சூழலையும், தமிழில் திரைப்பட முயற்சிகளை வெகுசனப்படுத்திய பெருமையை நிழல் சஞ்சிகையின் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் பெரும் பங்காற்றியமை குறிப்பிட வேண்டும். நிழல் சஞ்சிகையை வெகுசன வாசிப்பாளர்களும் அறிந்து கொண்டது ஒரு வெற்றிதான். இவற்றை விட வீணா மணிமேகலையை ஆசிரியராக கொண்டு வெளிவந்த “திரை’ என்ற சினிமா சஞ்சிகை நம் தமிழக சூழலுக்கும் நம் சூழலுக்கும் மிகவும் பொருத்தமானதொரு புது வழித்தடம். அந்த சஞ்சிகை வெறும் அறிவு மட்டத்தில் இயங்கும் தீவிர வாசிப்பு என்ற வகைக்குள் மட்டும் அடங்கி விடாமல்

!


!
காதல்…
பார்வைகள் ரயில்
தண்டவாளங்கள்…….!

மனதின் மொழிகளை
நீ தினமும்
மொழிபெயர்கிறாய்
உனது
கொள்ளும் புன்னகையால்…..!
  


எனக்கு விருப்பமான                              
புத்தகத்தை படிக்க முடிவதில்லை
அவர்கள்
அடிக்கடி புத்தகதை
தடை செய்கிறார்கள்..

எனக்கு விருப்பமானவைகளின்
பட்டியல் ஒன்றை
அவர்கள் ஏற்கனவே
தயாரித்து தந்த படிவத்தில்
எவ்விதமான
அறிவுறுத்தலும் இல்லாமல்
நிரப்பி கொண்டார்கள்..!

நேற்றிரவு
ஆடையாள அட்டையை
கொண்டு; வர சொல்லி
எனது தலையை சுற்றி
சிவப்பு பையினால்
வட்டமிட்டார்கள்…!

பின்தொடரும் நபர்களிடம்
எனது நகரத்து
வரைபடம் கவசமிடப்பட்ட
வெள்ளை நிற வேனில்
முன் இருக்கையில்
இரவுகள் குறித்த
அலறும் மரணங்கள்…

பயமுறுத்தும் நகரத்து
சாலைகளில்
கவச வாகனங்கள்
அறைகளின் சுழலும்
மின்விசிறியை போல
உயிர் தவிப்பை
தவிர்க முடியவில்லை

மரணங்களை தவிர்பதற்கும்
அருகதை இல்லாத
தினசரி அசைவில்
வாழ்வதற்கான அவா
மட்டும்
மிஞ்சுகிறது….

  • 30.06.2008
  •  ;