எது நல்ல சினிமா?


 

நல்ல திரைப்படம் என்னறவுடன் நம் நினைவுக்கு வருவது எது? பராசக்தியும், பாசமலரும், அந்நியனும், கஜனியும், தொட்டிஜெயாவும் தான் என்பது என் பணிப்பு. நிஜமாகவே இவைகள் நல்ல திரைப்படங்கள் தானா. இந்த நல்ல என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் அரசியல் என்ன? பொது புத்தியை போற்றி மெச்சக்கூடிய படைப்புகள் எல்லாமே பொதுவாகவே நல்ல என்ற அடைமொழிக்குள் அகப்பட்டு தன் ஆன்மாவை இழந்து விடுகின்றது. அது போல நல்ல சினிமா பற்றிய நமது பொது புத்தியன் எண்ணங்கள் மூலமாக நல்ல சினிமாவை நாம் கண்டறிந்துவிட முடியாது. அதாவது படைப்புணர்வு இல்லாத வெறும் சக்கையான வியாபார குப்பைக் கூலங்களான தமிழ் சினிமாவை நல்ல சினிமா என்கிற கருத்தியல்களுக்குள் அடக்க முடியாது. எது நல்ல சினிமா என்பதற்கு ஜப்பானிய திரைப்படக்கலைஞன் அகிராகுரொசாவோ ஒரு தடவை மிருகத்திற்கு ஒப்பிட்டு அது நாயை போலவும் இருக்கும், நரியை போலவும் இருக்கும் அது எதுவென்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

அது போல நாம் நம் மத்தியல் உலாவும் தமிழ் சினிமாவை முன் வைத்துக் கொண்டு நல்ல சினிமாவை எது என்று எழுதி முடிவு கண்டுவிடுவது கடினம். ஆனால் நம் முன் நம்மை சதா காலமும் பிடித்து நசுக்கும் தமிழ் சினிமாவை நல்ல சினிமா என்று எப்படி கூறுவது. இது மிகவும் மோசமான சினிமா என்று மட்டும் உறுதியாக கூறலாம். பொதுவாக தமிழ் சமூகத்தின் சாப நீட்சியாக தமிழ் சினிமாவை அடையாளப்படுத்த முடியும்.

தமிழ் சினிமாவை தமிழர்களின் வாழ்வின் அடையாளமாக கொள்வதற்கு எந்தக் காரணமும் அதில் இல்ல, தமிழர்களின் வாழ்வு வேறு பேசும் பார்ப்பான சினிமா வேறு. இவைகள் இரண்டும் வௌ;வேறு உலகத்தின் பொழுது போக்கு ஊடகங்கள். ஆனால் பாவப்பட்ட தமிழர்களின் ஒட்டுமொத்த சினிமாவாக தமிழ் சினிமா தன் மாய வசிகரத்தின் வக்கீரத்தினதும், குரூத்திரனதும், ஆபாசத்தினதும் தன்மையின் வடிவாக இருப்பதோடு இல்லாமல், அதுதான் தமிழர்களின் சினிமா என்கிற கேளியுடனும் வெளியுலகிற்கு தன் வியாபார முகத்தை காட்டி வசூல் வேட்டையாடி விளையாடுகின்றது.

பாவப்பட்ட தமிழ் சமூகத்தின் மனதில் தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் வரலாற்று வடுவை அவ்வளவு விரைவில் அழித்துவிட முடியாது நம்மவர்களுக்கு ரஜினி, விஜயபாந்தும், அஜித் அர்ஜுனும் தான் நம்மவர்களுக்கு பெரும் கலை ஞானிகள், இவர்கள் பேசுவதும், ஆடுவதும்தான் இவர்களுக்கு எல்லா வகையான வேதமாக இருக்கின்றது. ஆக நல்ல சினிமா பற்றிய தமிழ் சமூகத்திக்கு பொது புத்தியை பற்றி கவலைப்படுவதற்கு முன்பு நல்ல சினிமாவை நாம் நம் சந்ததிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். உலகத்தின் மிக சிறந்த திரைப்படங்களை நம் தாய்மொழி மூலமாக குரல் பதிவு செய்து (னுரடிடிiபெ) தமிழ் பார்வையாளனுக்கு கொண்டு செல்ல வேண்டும். நல்ல சினிமாவை ஒவ்வொரு ஊரிலும் திரையிட வேண்டும் நம் தனியார் தொலை க்காட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், கலாச்சார நிறுவனங்களும், அரசின் கலாச்சார அலுவல்களும் நல்ல சினிமா எது என்பதற்கான அருகதையுடன் உலக சினிமாவை பொது சனத்திடம் கொண்டு செல்ல முயல வேண்டும். நல்ல சினிமாவை ஒரு குறிப்பிட்ட அறிவு சார்ந்த நபர்களுக்கு மட்டும் குளிர் அறைகளில் திரையிடுவதனால் பொதுசன புத்தியை மாற்றிவிட முடியாது. திரைப்பட திரையிடல் என்பது கலாச்சார ரீதியான நுண் நிகழ்வாக அமைக்கப்படல் வேண்டும். மேலும் நம் மத்தியில் தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் சினமா பற்றிய மாயை உடைத்தெறிய வேண்டும் என்றால் நாம் நல்ல சினிமாவை பொது சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

[

சத்யஜித்ரேயின் வீதியின் பாடல் (பாதேர் பாஞ்சாபி) திரைப்படத்தை வங்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதி ஒன்றில் திரையிட்டபோது படிக்காத பாமர மக்கள் பெரிதும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்ததாக கூறுகிறார்கள் திரைப்பட ஆர்வலகள். அது போல் கேரள மாநிலத்தி கோழிகோடு ஊரில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் பொது மக்களுக்கென்று திறந்தவெளி அரங்கில் சிறந்த திரைப்படங்கள் தினமும் திரையிடப்பட்டன. அப்போது நான் தினமும் அந்த திறந்தவெளி அரங்கை பார்வையிடுவதற்காக சென்ற போதெல்லாம் கூட்டம் மொய்த்தபடிதான் இருக்கும். அப்போது ஓர் நாள் இரவில் சிதம்பரம் என்ற பு..அரவிந்தனின் திரைப்படத்தை திறந்தவெளி அரங்கில் திரையிட்டார்கள் நான் அரவிந்தன் திரைப்படத்தைபார்ப்பதற்காக சென்ற போது அங்கே து}றிக்கொண்டிருந்த மழையோடு தரையில் அமர்ந்து அந்த ரசிகர்கள் படத்தை உன்னிப்பாக கவனித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். நானும் என்னோடு வந்திருந்த சகோதர்களும் வியந்து போனோம், அப்போது நம் நாட்டின் சிங்கள திரைப்பட இயக்குனரும் அவர் மனைவியும் கூட அதை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நல்ல திரைப்படத்தையும், நல்ல கலை வெளிப்பாடுகளையும் ரசிப்பதற்கு கல்வி அறிவும் நவ நாகரிகமும், கௌரவமும் தேவைப்படுவதில்லை. எளிமையான உள்ளளும் வாழ்வும்தான் கலையின் உயிர்ப்பும் ஜீவனும் இருக்கின்ற மர்மம். எந்த கலைப்படைப்பும் எல்லா விதமான மனிதனுக்கும் ரசிப்பதற்கான உணர்வை கொண்டுதான் இருக்கின்றது. ரசிப்பதற்கு தடையாக எவ்வித புறக்காரணிகளும் இருப்பதில்லை. நல்ல படைப்பு எல்லோரின் மனதிலும் சற்றென்று மின்னல் போல் பாய கூடியதுதான், கலையை ரசிப்பதற்கு வேறென்ன வேண்டும், உணர்வு இருந்தாலே போதும், மனிதனே உணர்வால் செய்யப்பட்ட உயிர்தானே?

“புரிந்து கொள்ளப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு உருவாக்கப்படும் கலைப்படைப்பு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ அந்த அளவிற்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எடுக்கப்படும் கலைப்படைப்பும் அர்த்தமற்றதாகும்.” 
        என்கிறார் மார்க்ஸ்

ஒரு திரைப்படத்தை பற்றிய வியாபார சொல்லாடல்களான “ஓடும், ஓடாது” என்பவைகள் எல்லாம் வெறும் ரசிகனின் ரசனை மட்டத்திலான அளவீடுகளிலிருந்தும், அவனுடைய தேவைகளிலிருந்தும் எடுக்கப்படும் முடிவுகள் கிடையாது. இதற்கெல்லாம் பின்னணியாக திரைப்பட வியாபாரம் மட்டுமே முன் நிற்கும் ஒற்றைக் காரணங்கள். இது ஒரு வகையான திட்டமிடப்பட்ட ரசிகன் என்ற அப்பாவியின் மேல்  திணிக்கப்படும் கருத்தியல் வன்முறைதான். இதைதான் தென்னிந்திய திரைப்பட வியாபாரிகளினதும் மாஃபியா என்பது படம் “ஓடும், ஓடாது” என்கிற காரணங்கள் கூட திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றது. தமிழ் சினிமாவினுள் இருந்து அதற்குள்ளேயே நல்ல என்கிற அடையாளத்துடன் வெளிவருகின்ற திரைப்படங்கள் (சேது, காசி, ஆட்டோகிராப், அன்பே சிவம்) பொதுவாக ஓடாது என்பது போன்ற திடடமிடப்பட்டு உருவாக்கப்படும் ஊடக புனைவிற்கு பின்னணியில் தமிழ் சினிமாவின் வியாபாரிகளினது பயம்தான் தென்படுகின்றது. தமிழ் சினிமாவில் ஏற்படும் புதிய அலைகளை (நேற றுயலய) திட்டமிட்டு காய் அடிக்கும் போக்கை பெரிய பெரிய வியாபார ஸ்தாபனங்கள் கவனத்துடன் செய்து முடித்து விடுகின்றது. அதனால் தமிழ் சினிமா என்கிற மாயையை தவிர்த்து இந்த சினிமாவுக்கு வெளியே நல்ல சினிமா கலாச்சாரத்தை கட்டியெழுப்பு வதற்கும், தமிழர்களின் மனதில் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையை உடைத்தெறிவதற்கும் உலக சினிமாவை பற்றிய சரியான அறிமுகத்தை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க முன் வர வேண்டும். தமிழ் சமூகத்தின் சினிமாவை புசிப்பதற்கும் மனத்தடையாக எதுவும் கிடையாது. திட்டமிடப்பட்ட வியாபாரதடைகள்தான் ஏற்படுத்தப்படுகின்றது. அதுவும் ஊடகம் திரைப்படத்திற்கு வெளியே கட்டமைக்கும் புனைவில் வியாபார நலனுக்கான தேவைகள் மட்டுமே முன் நிற்கின்றது. திரைப்படம் கலாச்சார சாதனம் என்கிற மன நிலைகளுடன் சினிமாவை பற்றிய சினிமா கிசுகிசுக்கள் எழுதும் ஊடக மனசாட்சிகள் மறந்து விடுகின்றது.

வியாபார லாப நோக்கில் திரைப்பட சூத்திரத்தின் உலகத்தில் புனையப்படும் சினிமா பற்றிய கட்டுக்கதைகளின் பின்புறத்தில் ரசிகனின் படைப்புணர்வுக்கோ, ரசனைகோ முன்னுரிமை கொடுப்பதில்லை, வியாபார வசதி கருதி தமிழ் சினிமா (தமிழ் சினிமாவை சினிமா என்று வரையறைக்குள் கொண்டுவர முடியாது, வெறும் அபத்த நாடக பிரதிகள்தான்) ஏற்படுத்தும் மாய கதைகள் அணுகி நாற்றமெடுத்துவிட்டது. எப்போதும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு

சென்று மீண்டும் தமிழ் நாட்டுக்கு திரும்பும் போது தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையை நினைத்தும், பிரமாண்டமான பொய்களை நினைத்தும், நம் அப்பாவி தமிழ் ரசிகர் உள்ளங்களை நினைத்தும் மனம் கண்ணீர்விடும்.

எழுத்தாளன் பார்த்து சொன்னது போல் “உலகமே கதையாடல் மயம்” என்பது போல் தமிழ் மனத்தின் அறிவை தமிழ் சினிமா இலகுவில் கதையாடல் வலைக்குள் சிக்க வைத்திருக்கின்றது.

“மோசமான திரைக்கதை என்று எதுவுமில்லை மோசமான தயாரிப்பாளர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை”

 என்ற வார்த்தைகள் நம் திரைப்பட வியாபாரசூழலுக்கு பெரிதும் பொருந்தி போகின்றது. எந்த கதைகளும் மோசமான திரைக்கதைகள் இல்லை, அது வியாபாரிகளின் கைகளில் சிக்கும் போது சூதாட்ட பிரதிகளாக மாறிவிடுகின்றது.  திரைக்கதை பிரதிகள் எழுதுவதற்கு என்று தமிழ் சினிமாவினுள் மிக புத்திசாலியான எழுத்து வியாபரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றியும் கலை, கலாச்சாரம் பற்றியும் எதுவும் தெரியாது.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பணப்பிரதிகள்தான், அதனால்தான் தமிழ் சினிமாவின் உயிர்ப்பு இன்னும் கண்டறிய முடியாது புதைக்குழியில் கிடைக்கின்றது. தமிழ் சினிமாவின் திரைக்கதை பிரதி ஆக்கத்தின் போதும், கதை விவாதங்களின் போதும் ஒரு இயக்குனரும், திரைக்கதை எழுதுபவரும் படைபாளியாக தன்மனசாட்சிக்கு முன்நின்று எழுந்து பிரதிகளை தயாரிப்பது இல்லை, நிறுவனம் நிர்பந்திக்கும் தயாரிப்பாளர்களாகதான் செயல்படுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு பண முதலீடு செய்யும் வடக்கத்திய மார்வடிகளுக்கு தங்கத்தின் நிறைதான் தெரியும், தமிழர்களின் மனது தெரியாது தமிழர்களினது வாழ்வு தெரியாது.

தமிழ் சினிமாவினுள் கதை தேடும் களம் இன்னும் வேடிக்கையானது. ஒவ்வொரு திரைப்பட உதவி இயக்குனர் களிடமும் தனக்கும் தன் வாழ்வுக்கும் முற்றிலும் சம்பந்தமில்லாத கதைகள் வைத்திருப்பவர்கள். கோடாம் 10 பாக்கத்தில் கதையை எழுதுவதற்கு மறுபெயர் “கதையை பிடிக்கணும்” என்பதுதான். கதையை பிடிப்பதற்கென்றே அங்கே அலையும் கதைகாரர்கள் நிறைய பேரை காணலாம். ஒவ்வொருவரிடமும். ஒரு கதை இருக்கும், கதை பிடிக்கின்ற மனநோய் என்பது இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடுதான், ஆனால் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தொழில் புரியும் வாழ்வு. ஆனாலும் கதைபிடிப்பதற்காக வெறு புதை மன நிலையில் அழைந்து கொண்டிருப்பார்கள். வாழ்வு பற்றியும், தன் நிலையின் அரசியல் பற்றியும் அவர்களுக்கு மறந்து போயிருக்கும், தன் வாழ்வே ஒரு சினிமாதான் அதில் காட்சிகள் இருக்கின்றது. கதைகள் இருக்கின்றது, கனவுகள் இருக்கின்றது. வலி வேதனை இன்னும் எத்தனையோ இருக்கின்றது. இதை எல்லாம் மறந்து தனக்கும் தன் வாழ்வுக்கும் சம்பந்தமில்லாத உலகில் கதைகளை தேடி திரியும் இந்த பிழைப்பு வாதிகள்தான். நாளைய நாட்களில் தமிழ் சினிமாவை உருவாக்கி தன் ப10ர்ஷ்வா வழிமுறைகளின் வழி தன்னையும். தன் ஆடம்பரமான சொகுசு வாழ்வுக் காகவும் தமிழ் சினிமாவை பாலியல் வக்கீரம், வன்முறையன் மூலமாக தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தை பாழ்படுத்தி கொண்டிருப்பார்கள்.

இவர்களின் கதை பிடிக்கும் மனதுக்கு பின் உள்ள நிர்பந்தங்களையும், கலாச்சார காரணிகளையும் நாம் உண்ணிப்பான ஆய்வுடன் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். நல்ல சினிமா பற்றிய மன புரிதலுடன் தமிழ் சினிமாவினுள் வேலை செய்வதென்பது நினைத்து பார்க்க முடியாதது. நல்ல சினிமாவினுள் அத்தனை விரைவில் நிகழ்த்தி விட முடியாது. அதனால்தான் நல்ல சினிமாவை நேசிக்கும் படைப்பாளிகள் அந்த வியாபார சூத்திர சூட்சுமமான பலிவாங்களுக்கு இரையாகி போய் தன் சுயங்களை இழக்கிறார்கள். அதில் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, கமலஹாசன், மணிரத்னம் என்று நீண்ட பட்டியலை சொல்லமுடியும்.

Advertisements

Comments are closed.

%d bloggers like this: