எது நல்ல சினிமா?


 

நல்ல திரைப்படம் என்னறவுடன் நம் நினைவுக்கு வருவது எது? பராசக்தியும், பாசமலரும், அந்நியனும், கஜனியும், தொட்டிஜெயாவும் தான் என்பது என் பணிப்பு. நிஜமாகவே இவைகள் நல்ல திரைப்படங்கள் தானா. இந்த நல்ல என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் அரசியல் என்ன? பொது புத்தியை போற்றி மெச்சக்கூடிய படைப்புகள் எல்லாமே பொதுவாகவே நல்ல என்ற அடைமொழிக்குள் அகப்பட்டு தன் ஆன்மாவை இழந்து விடுகின்றது. அது போல நல்ல சினிமா பற்றிய நமது பொது புத்தியன் எண்ணங்கள் மூலமாக நல்ல சினிமாவை நாம் கண்டறிந்துவிட முடியாது. அதாவது படைப்புணர்வு இல்லாத வெறும் சக்கையான வியாபார குப்பைக் கூலங்களான தமிழ் சினிமாவை நல்ல சினிமா என்கிற கருத்தியல்களுக்குள் அடக்க முடியாது. எது நல்ல சினிமா என்பதற்கு ஜப்பானிய திரைப்படக்கலைஞன் அகிராகுரொசாவோ ஒரு தடவை மிருகத்திற்கு ஒப்பிட்டு அது நாயை போலவும் இருக்கும், நரியை போலவும் இருக்கும் அது எதுவென்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

அது போல நாம் நம் மத்தியல் உலாவும் தமிழ் சினிமாவை முன் வைத்துக் கொண்டு நல்ல சினிமாவை எது என்று எழுதி முடிவு கண்டுவிடுவது கடினம். ஆனால் நம் முன் நம்மை சதா காலமும் பிடித்து நசுக்கும் தமிழ் சினிமாவை நல்ல சினிமா என்று எப்படி கூறுவது. இது மிகவும் மோசமான சினிமா என்று மட்டும் உறுதியாக கூறலாம். பொதுவாக தமிழ் சமூகத்தின் சாப நீட்சியாக தமிழ் சினிமாவை அடையாளப்படுத்த முடியும்.

தமிழ் சினிமாவை தமிழர்களின் வாழ்வின் அடையாளமாக கொள்வதற்கு எந்தக் காரணமும் அதில் இல்ல, தமிழர்களின் வாழ்வு வேறு பேசும் பார்ப்பான சினிமா வேறு. இவைகள் இரண்டும் வௌ;வேறு உலகத்தின் பொழுது போக்கு ஊடகங்கள். ஆனால் பாவப்பட்ட தமிழர்களின் ஒட்டுமொத்த சினிமாவாக தமிழ் சினிமா தன் மாய வசிகரத்தின் வக்கீரத்தினதும், குரூத்திரனதும், ஆபாசத்தினதும் தன்மையின் வடிவாக இருப்பதோடு இல்லாமல், அதுதான் தமிழர்களின் சினிமா என்கிற கேளியுடனும் வெளியுலகிற்கு தன் வியாபார முகத்தை காட்டி வசூல் வேட்டையாடி விளையாடுகின்றது.

பாவப்பட்ட தமிழ் சமூகத்தின் மனதில் தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் வரலாற்று வடுவை அவ்வளவு விரைவில் அழித்துவிட முடியாது நம்மவர்களுக்கு ரஜினி, விஜயபாந்தும், அஜித் அர்ஜுனும் தான் நம்மவர்களுக்கு பெரும் கலை ஞானிகள், இவர்கள் பேசுவதும், ஆடுவதும்தான் இவர்களுக்கு எல்லா வகையான வேதமாக இருக்கின்றது. ஆக நல்ல சினிமா பற்றிய தமிழ் சமூகத்திக்கு பொது புத்தியை பற்றி கவலைப்படுவதற்கு முன்பு நல்ல சினிமாவை நாம் நம் சந்ததிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். உலகத்தின் மிக சிறந்த திரைப்படங்களை நம் தாய்மொழி மூலமாக குரல் பதிவு செய்து (னுரடிடிiபெ) தமிழ் பார்வையாளனுக்கு கொண்டு செல்ல வேண்டும். நல்ல சினிமாவை ஒவ்வொரு ஊரிலும் திரையிட வேண்டும் நம் தனியார் தொலை க்காட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், கலாச்சார நிறுவனங்களும், அரசின் கலாச்சார அலுவல்களும் நல்ல சினிமா எது என்பதற்கான அருகதையுடன் உலக சினிமாவை பொது சனத்திடம் கொண்டு செல்ல முயல வேண்டும். நல்ல சினிமாவை ஒரு குறிப்பிட்ட அறிவு சார்ந்த நபர்களுக்கு மட்டும் குளிர் அறைகளில் திரையிடுவதனால் பொதுசன புத்தியை மாற்றிவிட முடியாது. திரைப்பட திரையிடல் என்பது கலாச்சார ரீதியான நுண் நிகழ்வாக அமைக்கப்படல் வேண்டும். மேலும் நம் மத்தியில் தமிழ் சினிமா ஏற்படுத்தியிருக்கும் சினமா பற்றிய மாயை உடைத்தெறிய வேண்டும் என்றால் நாம் நல்ல சினிமாவை பொது சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

[

சத்யஜித்ரேயின் வீதியின் பாடல் (பாதேர் பாஞ்சாபி) திரைப்படத்தை வங்கத்தின் மிகவும் பின்தங்கிய பகுதி ஒன்றில் திரையிட்டபோது படிக்காத பாமர மக்கள் பெரிதும் கைதட்டி வரவேற்று மகிழ்ந்ததாக கூறுகிறார்கள் திரைப்பட ஆர்வலகள். அது போல் கேரள மாநிலத்தி கோழிகோடு ஊரில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் பொது மக்களுக்கென்று திறந்தவெளி அரங்கில் சிறந்த திரைப்படங்கள் தினமும் திரையிடப்பட்டன. அப்போது நான் தினமும் அந்த திறந்தவெளி அரங்கை பார்வையிடுவதற்காக சென்ற போதெல்லாம் கூட்டம் மொய்த்தபடிதான் இருக்கும். அப்போது ஓர் நாள் இரவில் சிதம்பரம் என்ற பு..அரவிந்தனின் திரைப்படத்தை திறந்தவெளி அரங்கில் திரையிட்டார்கள் நான் அரவிந்தன் திரைப்படத்தைபார்ப்பதற்காக சென்ற போது அங்கே து}றிக்கொண்டிருந்த மழையோடு தரையில் அமர்ந்து அந்த ரசிகர்கள் படத்தை உன்னிப்பாக கவனித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். நானும் என்னோடு வந்திருந்த சகோதர்களும் வியந்து போனோம், அப்போது நம் நாட்டின் சிங்கள திரைப்பட இயக்குனரும் அவர் மனைவியும் கூட அதை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு நல்ல திரைப்படத்தையும், நல்ல கலை வெளிப்பாடுகளையும் ரசிப்பதற்கு கல்வி அறிவும் நவ நாகரிகமும், கௌரவமும் தேவைப்படுவதில்லை. எளிமையான உள்ளளும் வாழ்வும்தான் கலையின் உயிர்ப்பும் ஜீவனும் இருக்கின்ற மர்மம். எந்த கலைப்படைப்பும் எல்லா விதமான மனிதனுக்கும் ரசிப்பதற்கான உணர்வை கொண்டுதான் இருக்கின்றது. ரசிப்பதற்கு தடையாக எவ்வித புறக்காரணிகளும் இருப்பதில்லை. நல்ல படைப்பு எல்லோரின் மனதிலும் சற்றென்று மின்னல் போல் பாய கூடியதுதான், கலையை ரசிப்பதற்கு வேறென்ன வேண்டும், உணர்வு இருந்தாலே போதும், மனிதனே உணர்வால் செய்யப்பட்ட உயிர்தானே?

“புரிந்து கொள்ளப்படக்கூடாது என்ற நோக்கத்தோடு உருவாக்கப்படும் கலைப்படைப்பு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ அந்த அளவிற்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எடுக்கப்படும் கலைப்படைப்பும் அர்த்தமற்றதாகும்.” 
        என்கிறார் மார்க்ஸ்

ஒரு திரைப்படத்தை பற்றிய வியாபார சொல்லாடல்களான “ஓடும், ஓடாது” என்பவைகள் எல்லாம் வெறும் ரசிகனின் ரசனை மட்டத்திலான அளவீடுகளிலிருந்தும், அவனுடைய தேவைகளிலிருந்தும் எடுக்கப்படும் முடிவுகள் கிடையாது. இதற்கெல்லாம் பின்னணியாக திரைப்பட வியாபாரம் மட்டுமே முன் நிற்கும் ஒற்றைக் காரணங்கள். இது ஒரு வகையான திட்டமிடப்பட்ட ரசிகன் என்ற அப்பாவியின் மேல்  திணிக்கப்படும் கருத்தியல் வன்முறைதான். இதைதான் தென்னிந்திய திரைப்பட வியாபாரிகளினதும் மாஃபியா என்பது படம் “ஓடும், ஓடாது” என்கிற காரணங்கள் கூட திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றது. தமிழ் சினிமாவினுள் இருந்து அதற்குள்ளேயே நல்ல என்கிற அடையாளத்துடன் வெளிவருகின்ற திரைப்படங்கள் (சேது, காசி, ஆட்டோகிராப், அன்பே சிவம்) பொதுவாக ஓடாது என்பது போன்ற திடடமிடப்பட்டு உருவாக்கப்படும் ஊடக புனைவிற்கு பின்னணியில் தமிழ் சினிமாவின் வியாபாரிகளினது பயம்தான் தென்படுகின்றது. தமிழ் சினிமாவில் ஏற்படும் புதிய அலைகளை (நேற றுயலய) திட்டமிட்டு காய் அடிக்கும் போக்கை பெரிய பெரிய வியாபார ஸ்தாபனங்கள் கவனத்துடன் செய்து முடித்து விடுகின்றது. அதனால் தமிழ் சினிமா என்கிற மாயையை தவிர்த்து இந்த சினிமாவுக்கு வெளியே நல்ல சினிமா கலாச்சாரத்தை கட்டியெழுப்பு வதற்கும், தமிழர்களின் மனதில் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையை உடைத்தெறிவதற்கும் உலக சினிமாவை பற்றிய சரியான அறிமுகத்தை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க முன் வர வேண்டும். தமிழ் சமூகத்தின் சினிமாவை புசிப்பதற்கும் மனத்தடையாக எதுவும் கிடையாது. திட்டமிடப்பட்ட வியாபாரதடைகள்தான் ஏற்படுத்தப்படுகின்றது. அதுவும் ஊடகம் திரைப்படத்திற்கு வெளியே கட்டமைக்கும் புனைவில் வியாபார நலனுக்கான தேவைகள் மட்டுமே முன் நிற்கின்றது. திரைப்படம் கலாச்சார சாதனம் என்கிற மன நிலைகளுடன் சினிமாவை பற்றிய சினிமா கிசுகிசுக்கள் எழுதும் ஊடக மனசாட்சிகள் மறந்து விடுகின்றது.

வியாபார லாப நோக்கில் திரைப்பட சூத்திரத்தின் உலகத்தில் புனையப்படும் சினிமா பற்றிய கட்டுக்கதைகளின் பின்புறத்தில் ரசிகனின் படைப்புணர்வுக்கோ, ரசனைகோ முன்னுரிமை கொடுப்பதில்லை, வியாபார வசதி கருதி தமிழ் சினிமா (தமிழ் சினிமாவை சினிமா என்று வரையறைக்குள் கொண்டுவர முடியாது, வெறும் அபத்த நாடக பிரதிகள்தான்) ஏற்படுத்தும் மாய கதைகள் அணுகி நாற்றமெடுத்துவிட்டது. எப்போதும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு

சென்று மீண்டும் தமிழ் நாட்டுக்கு திரும்பும் போது தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயையை நினைத்தும், பிரமாண்டமான பொய்களை நினைத்தும், நம் அப்பாவி தமிழ் ரசிகர் உள்ளங்களை நினைத்தும் மனம் கண்ணீர்விடும்.

எழுத்தாளன் பார்த்து சொன்னது போல் “உலகமே கதையாடல் மயம்” என்பது போல் தமிழ் மனத்தின் அறிவை தமிழ் சினிமா இலகுவில் கதையாடல் வலைக்குள் சிக்க வைத்திருக்கின்றது.

“மோசமான திரைக்கதை என்று எதுவுமில்லை மோசமான தயாரிப்பாளர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை”

 என்ற வார்த்தைகள் நம் திரைப்பட வியாபாரசூழலுக்கு பெரிதும் பொருந்தி போகின்றது. எந்த கதைகளும் மோசமான திரைக்கதைகள் இல்லை, அது வியாபாரிகளின் கைகளில் சிக்கும் போது சூதாட்ட பிரதிகளாக மாறிவிடுகின்றது.  திரைக்கதை பிரதிகள் எழுதுவதற்கு என்று தமிழ் சினிமாவினுள் மிக புத்திசாலியான எழுத்து வியாபரிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றியும் கலை, கலாச்சாரம் பற்றியும் எதுவும் தெரியாது.

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பணப்பிரதிகள்தான், அதனால்தான் தமிழ் சினிமாவின் உயிர்ப்பு இன்னும் கண்டறிய முடியாது புதைக்குழியில் கிடைக்கின்றது. தமிழ் சினிமாவின் திரைக்கதை பிரதி ஆக்கத்தின் போதும், கதை விவாதங்களின் போதும் ஒரு இயக்குனரும், திரைக்கதை எழுதுபவரும் படைபாளியாக தன்மனசாட்சிக்கு முன்நின்று எழுந்து பிரதிகளை தயாரிப்பது இல்லை, நிறுவனம் நிர்பந்திக்கும் தயாரிப்பாளர்களாகதான் செயல்படுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு பண முதலீடு செய்யும் வடக்கத்திய மார்வடிகளுக்கு தங்கத்தின் நிறைதான் தெரியும், தமிழர்களின் மனது தெரியாது தமிழர்களினது வாழ்வு தெரியாது.

தமிழ் சினிமாவினுள் கதை தேடும் களம் இன்னும் வேடிக்கையானது. ஒவ்வொரு திரைப்பட உதவி இயக்குனர் களிடமும் தனக்கும் தன் வாழ்வுக்கும் முற்றிலும் சம்பந்தமில்லாத கதைகள் வைத்திருப்பவர்கள். கோடாம் 10 பாக்கத்தில் கதையை எழுதுவதற்கு மறுபெயர் “கதையை பிடிக்கணும்” என்பதுதான். கதையை பிடிப்பதற்கென்றே அங்கே அலையும் கதைகாரர்கள் நிறைய பேரை காணலாம். ஒவ்வொருவரிடமும். ஒரு கதை இருக்கும், கதை பிடிக்கின்ற மனநோய் என்பது இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடுதான், ஆனால் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தொழில் புரியும் வாழ்வு. ஆனாலும் கதைபிடிப்பதற்காக வெறு புதை மன நிலையில் அழைந்து கொண்டிருப்பார்கள். வாழ்வு பற்றியும், தன் நிலையின் அரசியல் பற்றியும் அவர்களுக்கு மறந்து போயிருக்கும், தன் வாழ்வே ஒரு சினிமாதான் அதில் காட்சிகள் இருக்கின்றது. கதைகள் இருக்கின்றது, கனவுகள் இருக்கின்றது. வலி வேதனை இன்னும் எத்தனையோ இருக்கின்றது. இதை எல்லாம் மறந்து தனக்கும் தன் வாழ்வுக்கும் சம்பந்தமில்லாத உலகில் கதைகளை தேடி திரியும் இந்த பிழைப்பு வாதிகள்தான். நாளைய நாட்களில் தமிழ் சினிமாவை உருவாக்கி தன் ப10ர்ஷ்வா வழிமுறைகளின் வழி தன்னையும். தன் ஆடம்பரமான சொகுசு வாழ்வுக் காகவும் தமிழ் சினிமாவை பாலியல் வக்கீரம், வன்முறையன் மூலமாக தமிழ் சமூகத்தின் கலாச்சாரத்தை பாழ்படுத்தி கொண்டிருப்பார்கள்.

இவர்களின் கதை பிடிக்கும் மனதுக்கு பின் உள்ள நிர்பந்தங்களையும், கலாச்சார காரணிகளையும் நாம் உண்ணிப்பான ஆய்வுடன் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். நல்ல சினிமா பற்றிய மன புரிதலுடன் தமிழ் சினிமாவினுள் வேலை செய்வதென்பது நினைத்து பார்க்க முடியாதது. நல்ல சினிமாவினுள் அத்தனை விரைவில் நிகழ்த்தி விட முடியாது. அதனால்தான் நல்ல சினிமாவை நேசிக்கும் படைப்பாளிகள் அந்த வியாபார சூத்திர சூட்சுமமான பலிவாங்களுக்கு இரையாகி போய் தன் சுயங்களை இழக்கிறார்கள். அதில் பாலுமகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜா, கமலஹாசன், மணிரத்னம் என்று நீண்ட பட்டியலை சொல்லமுடியும்.

Advertisements

உலக சினிமாவில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்படும் சினிமா ஈரானிய சினிமாதான்……


 மனிதர்கள் புத்தகங்களிலும், கலைகளிலும் மட்டுமன்றி மனதிற்கு ஆனந்தத்தைத் தரும் தன்னலமற்ற பணிகளிலுங்கூட தங்களது துயர் நிறைந்தஇறந்தகாலத்திற்கும் நிச்சயமற்ற எதிர்காலத்திற்கும் ஓர் அர்த்தத்தைக் காண்கின்றனர்.

திரைப்படங்களில் தீராதகாதல் கொண்டு திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டவரும் ‘மாற்றுச் சினிமா’, ‘நல்ல சினிமாவைக் கண்டடைதல்’ குறித்துத் தீவிரமாக எழுதிவருபவருமான மாரி மகேந்திரன், தனது தொலைந்துபோன இறந்தகாலத்திற்கும் துயர்நிறைந்த நிகழ்காலத்திற்குமான அர்த்தத்தை சினிமாவில் காண்கின்றார்.

மலையகத் தமிழர்களின் வியர்வையில் வளங்கொழிக்கும் தேயிலைச் செடிகள் நிறைந்த ‘பொவந்தலாவ’ என்ற ஊரில் பிறந்த மாரிக்கு, பாடசாலை நாட்களில் பார்க்கக் கிடைத்த திரைப்படமும் வாசித்த புத்தகமும் சினிமாவின் மீது ஈர்ப்பை ஏற்படுத்திவிட சினிமா வாய்ப்புத் தேடி தமிழகம் செல்கின்றார்.

இவ்வுரையாடலில், தமிழ்நாட்டு சினிமாவின் எதிர்பார்ப்புக்களையும் தனது தமிழக அனுபவங்களையும் , படைப்புணர்வின் வேரைத் தரிசிக்கத் தக்க சர்வதேசத் திரைப்பட விழாக்களின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடும் மாரி, அமெரிக்க அரசியலை நுட்பமாகக் கொண்டுவரும் ஹொலிவூட் சினிமாவையும், வாழ்வை மிக நெருக்கமாக் காண்பிக்கும் ஈரானிய சினிமாவையும், அதிகாரம் புனையும் பாலியல் குறித்த அனைத்து விதமான விம்பங்களையும் உடைத்தெறியும் பஸோலினியின் சினிமாவையும் குறித்த தனது பார்வைகளையும் முன்வைக்கின்றார்.

சிங்கள சினிமாவின் முற்போக்கான பாய்ச்சலுக்குக் காரணமாக இருந்த சினிமாஇ,தழ்களையும், திரைப்பட இயக்குநர்களான ட்ரூஃபோவும் கோடார்ட்டும் எரிக் ரோமரும் பிரான்சியத் திரைப்படங்களை புதிய தளத்திற்கு ,ட்டுச்செல்லக் ‘காயேது சினிமா’ என்ற சினிமா இதழின் கடுமையான விமரிசனங்கள் காரணமாக இருந்ததையும், விம் வென்டர்ஸ் என்ற ஜெர்மனியத் திரைப்பட ஆளுமை, தனது மருத்துவத் துறையை மறந்து சினிமாத்துறைக்கு வரச்செய்ததே ‘பிலிம் கிரிட்டிக்’ என்ற சினிமா சஞ்சிகையே என்றும் குறிப்பிடும் மாரி, உலக சினிமா குறித்த விழிப்புணர்வைத் து}ண்டும் வகையில் ‘நிறம் என்ற சஞ்சிகையைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றார்.

தமிழ்மொழி பற்றி, அதன் தொன்மை பற்றி ஆவணப்படம் ஒன்றைத் தயாரிக்கும் விருப்புடன் இருக்கும் மாரியின்;, ‘அறையின் தனிமை’ என்ற குறும்படத்திற்கு திருப்பூர் அரிமா சங்க விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

மாரியுடனான நேர்காணல் வைகறைக்காக 2007 சித்திரையில் பதிவுசெய்யப்பட்டது.

 
சினிமா மீது உங்களுக்கு ஏற்ப்பட்ட ஈடுபாடு  நல்லசினிமா உங்களை ஈர்த்தது பற்றி?

இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள். என் அக்காவின் நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தைகளை  இன்றும் நான் மறக்கவில்லை. இளமைக்கால நினைவுகளில் மீண்டும் மிதப்பதென்பதே ஒரு அலாதியான சுகம் தான் இளமை அழகுமிக்கது அதுவும் பள்ளிக் காலத்து வாழ்வு என்பது நினைவுகளில் தேங்கி; புல்லாங்குழலினை மீட்டிப்பார்ப்பது போன்று ஆனந்தத்தைத் தரும். ஒரு மனிதனின் அறிவுத் தேடல் என்பதே 12 வயதோடு முடிந்து விடுகின்றது. 12 வயதுடன் ஆன்மாவின் கிண்ணம் நிரம்பி விடும்;. சிந்தனைகள், ஞாபகங்கள், எண்ணங்கள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் காலடித்தடங்களாக வாழ்வுடன் வந்தவண்ணம் இருக்கின்றது.

நான் பிறந்தது நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு சிறிய நகரமான பொவந்தலாவ என்ற ஊரில். ஆரம்பக்கல்வியை ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றேன். அங்கு படித்துக் கொண்டிருந்த காலத்தில்தான் சினிமா என்மேல் அதீதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சினிமாவை என் வாழ்வாக மாற்றிக் கொள்வதற்கும் அதுவே என் எல்லாமாக மாறுவதற்கும் வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது 5 ஆம் வகுப்போ அல்லது 6ம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தேன் சரியாக வகுப்பு ஞாபகம் இல்லை.  ஒரு கிறிஸ்தவ நிறுவனம் பாடசாலையில் திரைப்படம் ஒன்றை திரையிட்டார்கள். அந்தப்படத்தி;ன் பெயர் இயக்குனர் பெயர் எதுவும் எனக்குத் தெரியாது ஆனால் என் வாழ்வில் அத்தரைப்படம் பெரும் தாக்த்தை ஏற்படுத்தியது.

அந்தப் படம் இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றியது. இயேசுவின் அன்பும் அவரின் கருணையும் என் அடிமனதில் பெரும் அலைகளை உருவாக்கியது. அப்படத்தில் தோன்றும் ,யேசுவின் கதாபாத்திரமாகவே நான் அன்று மாறிப்போனதோடு ,யேசுவை சிலுவையில் அறைந்த போது என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாது போனது@ படம் நிறைவுற்றது. வாழ்வில் புதிய கனவு ஒன்றும் அந்த நாளில் முளை விட்டது. படம் முடிந்த பின்பு வெளியே வந்தால் பெரும் மழை, நான் நனைந்து கொண்டே நடக்கிறேன்@ வீட்டில் அம்மா என்னைப் பார்த்துவிட்டு “குடை எங்கே ஏன் நனைந்துகொண்டு வருகிறாய்?” என்று கேட்ட போதுதான் என்னால் சுய நினைவுக்கு வரமுடிந்தது. கொண்டுபோன குடையை மறந்து விட்டு மழையில் நனைந்தபடி வந்திருக்கின்றேன், என்பதே அப்போதுதான் புரிந்தது. அதன் பின்பும் இரண்டொரு தினங்களாக நான் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்ததாக அம்மா என் நிலைமையை பின்னாட்களில் நினைவுபடுத்தினார்.

அதன்பின்பு என் மனதில் புதிய ஒரு விதையின் துளிர் வளர்வதை உணரக் கண்டேன். ஆனாலும் அப்போதும் தமிழ் நாட்டுத் திரைப்படங்களில் மேல் காதல் எழவில்லை. அதன் பின்பு சார்ளி சாப்ளின் படங்கள், கார்ட்டூன் படங்கள் என்று பார்க்கத் தொடங்கினேன். சிங்களப் படங்களை ரூபவாஹினியில்(அரச தொலைக்காட்சி) பார்த்து இப்படியும் திரைப்படங்கள் இருக்கின்றதா என்று என்மனம் ஆச்சரியப்பட்டது. அப்போதுதான் ரூபவாஹினியில் பதேர் பாஞ்சாலி, சாருலதா, ரசோமான் போன்ற உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களைத் திரையிட்டனர்.

அந்தக்கால கட்டத்தில் படங்களை மட்டும் தான் பார்த்தேன் இயக்குனர்களின் பெயர்களையெல்லாம் பின்பு தான் தெரிந்து கொண்டேன். அப்போது நிறைய வாசிப்பதற்கான சந்தர்ப்பமும் உருவானது. ஹொலிரோசரி பாடசாலையில் கல்வி கற்ற நாட்களில் அம்சன்குமார் எழுதிய சினிமா ரசனை என்ற புத்தகத்தைப் பாடசாலையின் அதிபரிடம் இருந்து இரவல் வாங்கிப் படித்தபோது தான் சினிமா என்ற உலகம் வேறெங்கோ இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

6 ஆம் வகுப்பிற்குப் பின்னர் கண்டி அசோகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்புக் கிட்டியது.  அங்கு விடுதியில் தங்கியிருந்து கற்றபோதுதான் வாசிப்பின் இன்னொரு பக்கம் என்னுள் விரிந்தது. கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களின் கதைகளையும்; ஆனந்தவிகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளையும் படிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியது. கல்கியில் வருகின்ற உண்மைக் கதைகளை விடாது படிப்பது ஒரு சுவாரஸியமாக இருந்தது. அந்தக்கால கட்டத்தில் தான் பத்திரிகைக்கு எழுதுவதற்கு உத்வேகம் எழுந்தது. வீரகேசரி சிறுவர் பகுதியில் எனது முதற் கதை வெளியான போது விடுதியல் அனைவரும் வியந்து போனதோடு எல்லோரும் அதைக் குறித்துப் பேசுவதும் , அக்கதையை எனது தமிழ் ஆசான் c.நடராஜா அவர்கள் பாடசாலை அறிவிப்புப் பலகையில் தனது கையொப்பத்துடன் வைத்ததும் மனதில் பெருந்தெம்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு தமிழ் மொழி மேல் காதல் வரும் வகையில் அசோகா வித்தியாலயத்தின் அதிபரும் தமிழறிஞ்ஞருமான c.நடராஜா அவர்கள் நு}ல்களை வாசிப்பதற்கும் கற்பதற்குமான உத்வேகத்தைத் தந்தார்.

ஒரு ஞாபகம் இப்போதும் உண்டு. ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு திரைப்படங்ககளைத் திரையிடுவார்கள் ஆனால் தமிழக சினிமாவை போட்டு சாகடித்துவிடுவார்கள். அப்போது நான் இது போன்ற நேரங்களில் நல்ல சினிமாவைத் திரையிட்டுக் காட்டி மாணவர்களுக்கு படிப்பினையைத் து}ண்ட கூடாதா என்று ஏங்குவதுண்டு.

சினிமாவை  நேசித்த அந்தக் காலங்களில் இலக்கியம் மீதான ஈடுபாட்டையும் குறிப்பிட வேண்டும். விசயங்கள் மறந்துவிடுவதனால் அனைத்தையும் ஒன்றாக தொகுத்துப் பேச முடியவில்லை. வாழ்க்கையில் பலவற்றை மறந்துவிடுவதும் பலவற்றை எவ்வளவுதான் முயன்றாலும் மறக்க முடியாதிருப்பதும் பெரிய முரணாகவே இருக்கின்றது.
‘கலை’ பொதுவாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தாது என்ற கருத்து நிலவுகின்றது. உங்களது வாழ்வில் சினிமாவிற்குரிய இடம் என்ன?

நிஜமாகவே சொல்கிறேன் இந்த சினிமா என்ற அதி அற்புதமான ஊடகம் இல்லாது போயிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்திருப்பேன் இந்தக் கணம் வரை இந்த சினிமாவும் கவிதையும் தான் என் வாழ்வை என் மன நெருக்கடியைப் பகிர்ந்தபடி இருக்கின்றது. வாழ்வு மிகத் துயரமானது@ காதலில் ஏற்பட்ட தோல்வியை என்னால் என்றும் மறந்துவிட முடியாது. நான் நேசித்த அந்தப் பெண் என் வாழ்க்கைக்குள் வந்திருந்தால் நான் இன்னும் ஒரு பிறவி எடுத்திருப்பேன். சாதி என்கிற ஒரே காரணம் என் காதலை அறுத்துப் போட்டு விட்டது. என் காதலின் முடிவுடன் நான் வாழ்வை வெறுத்து விட்டேன்@ இனி வாழ்வு இல்லை என்ற கசப்புணர்வோடு தான் வாழ்கிறேன். இடையில் வேறொரு பெண்ணொடு திருமணம். அதுவும் பாதியில் முறிந்து போன பின்பு ஒரு அகதியைப் போல் வாழ்வு என்னை கசக்கிவிட்டது. அப்போதும் சினிமாவும் கவிதையும் என் உயிரை எந்தத் திசை நோக்கியும் செல்லாமல் பிடித்து வைத்திருக்கின்றது. இப்போது வரை எனக்கு ஆறுதல் தருவதற்கு உலகில் வேறொன்றும் இல்லை என்று நம்புகின்றேன்@ சினிமாவைத்தவிர. ஆனாலும் மனிதன் வேறெதிலும் விடுதலை பெற முடியாத படி உலகம் அவனை தன்னிலிருந்து அந்நியப்படுத்திவிட்டது. ஆன்மீகம் மட்டுந்தான் சுயஇருப்பைத்; தரும் என்று நம்புகின்றென்.

“ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி” என்ற வாக்கியம் ஆன்மீகம் குறித்தாகத்தான் இருக்க வேண்டும். உலகசினிமாவில் ஸென் சினிமா, ஆன்மீக சினிமா என்று தனி வகைகள் உண்டு. இப்போதும் நான் சிறுவயதில் பள்ளியில் பார்த்த அந்த மறக்க முடியாத ,யேசு பற்றிய, நசரேத் ஜீஸஸ் திரைப்படம் போல யேசுவின் வார்த்தைகளில் வெளிப்பட்ட ஆன்மிக மொழிதான் அந்தத் திரைப்படத்தை இன்னும் மறக்க முடியாமல் வைத்திருக்கின்றது. மறுபடிமறுபடி அந்தத் திரைப்படத்தை பார்த்தாலும் அது பல்வேறு பரிமாணங்களுடன் எனக்குப் புதியதாகத் தெரிகின்றது. சினிமா மட்டுந்தான் வாழ்வதற்கு ஆதாரமானது@ சாட்சியாக இருக்கின்றது. இனி என் வாழ்வை சினிமாவுக்காக அர்ப்பணித்து செயல்பட வேண்டும் என்று எனக்குள் வேட்கைகொள்கின்றேன்@ அது காலத்தின் கட்டாயம் என்றால் நிறைவேறும்.

நான் தற்சமயம் இரண்டு குறும்படங்களுக்கான முயற்சியில் இருக்கிறேன். எதிர்காலத்தில் சிறந்ததொரு சினிமாவை மலையகப் பின்னணியில் வைத்து செய்வதற்கு விருப்பம். தமிழ்மொழி பற்றிய, அதன் தொன்மை பற்றிய ஆவண படத்தையும் செய்வதற்கு வேட்கைகள் உண்டு.

மலையகத்தில் இன்று உள்ள சினிமா ரசனை மற்றும் தொலைக்காட்சிகளின் செல்வாக்குப்பற்றி? 

மலையகச் சூழலில் இன்று தமிழக சினிமாவினால் இ,ளைய சமூகம் தன்னிலையை ,இழந்துள்ளது. குறுந்தகட்டில் பெருமளவில் வீடுகளில் சினிமா புசிக்கப்படுகின்றது. எவ்விதமான ரசனை, பிரக்ஞை ஏதுமற்று தமிழ்நாடு என்கிற மாயையில் சினிமா உறிஞ்சிக் குடிக்கப்படுகின்றது. வாழ்நிலையில், கலாசார, ஒழுக்க, விழுமியங்களில் சினிமா துஷ்பிரயோகம் செய்தபடி ,இருக்கின்றது. ,ன்று சக்தி வுஏ யில் , சன் வுஏயில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகங்கள் நம் வீடுகளில் பெரும் தலை சுற்றலாக ,இருக்கின்றது. ,இதை எப்படிக் கட்டுப்படுத்துவதென்று தெரியவில்லை. சமூகம் சீரழிந்து குட்டிச் சுவராகி கொண்டிருக்கும் போது நல்ல சினிமாவை அறிமுகம் செய்வதைச் சமூகக் கடமையாக நமது எழுத்தாளர்களும், அறிஞர்களும் கருதவேண்டும்.

,ன்று சினிமாவை வைத்துத்தான் ஒவ்வொரு அசைவும் தீர்மானிக்கப்படுகின்றது. மூன்றாம் உலக யுத்தம் என்பது மீடியாவினால்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ,ன்று அமெரிக்க சினிமா, சுதேசிய சினிமாவை டைனோசர் போல் அழித்து விழுங்கிக் கொண்டிருக்கும்போது தமிழக சினிமா தானும் அதற்கு சளைத்தவன் அல்ல என்ற தொனியுடன் நமது அடையாளங்களை, பண்புகளை சிதைக்கின்றது.

யுத்த விளையாட்டு ஊனுக்கள், ரெஸ்லிங், யுத்தம் பற்றிய வீடியோ கேம்கள் எல்லாம் மனித மூளைக்குள் கொன்றொழிப்பது மட்டும் தான் வாழ்க்கை என்ற வன்முறைக் கருத்தாக்கத்தை திணிக்கின்றது. அண்மையில் எனது ஊர்ப் பாடசாலையில் ஒரு 6ம் வகுப்பு மாணவன் , சக மாணவனின் முகத்தில் டின்மீன் என்கிற தகர டப்பாவினால் கீறி முகத்தைப் பிளந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளான். ,து போன்ற வன்முறையை அந்த ,ளம் உள்ளத்தில் திணிப்பது எது? ரெஸ்லிங் என்கிற  சாகச யுத்த விளையாட்டை நமது அரசுகள் சமூக அக்கறையுடன் தடுப்பதற்கு முன் வர வேண்டும் ,ல்லையென்றால் நமது சமூகம் வன்முறைச் சமூகமாக மாறுவதற்கான சூழல் ,இருக்கின்றது.

திரைப்படத்துறையில் ஈடுபடவேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டிற்குப் போயிருந்தீர்கள் தமிழகப் பயணம் உங்களிற்கு எத்தகைய அனுபவத்தைத் தந்தது?

சினிமா என்பது, தமிழக சினிமா மட்டுந்தான் என்ற மாயை எனக்குள் ,ருந்தது. ஏனென்றால் தமிழ் சினிமா பற்றி எனக்குள் திணிக்கப்பட்டிருந்த மாயை என்னைத் தமிழகம் நோக்கிப் போகச் செய்தது. தமிழகத்திற்கு சென்ற போதுதான் நான் முதன்முறையாக சுயநம்பிக்கையை ,ழந்தேன்@ சினிமாவின் உயிர்ப்பை, எனது குறிக்கோளின் வழித்தடத்தைப் பற்றிய சந்தேகங்களை எனக்குள் ஏற்படுத்தியபடி சென்னை வாழ்வு கழியத் தொடங்கியது. வெறும் வர்த்தக நோக்கிலான ஒரு உலகத்தில் நாமும் ஒருவனாக மாறவேண்டுமா, என்ற மனப்போராட்டம் சென்னையில் சினிமா சந்தர்ப்பங்கள் தேடும்போதும் , சினிமா சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் தொடர்ந்தது.

இலங்கையிலிருந்து தீயெனச் சென்ற எனது தமிழகப் பயணம் அங்கே சுக்குநு}றாக உடைந்து, சிதிலமாக நின்றபோதுதான் நாம் நினைத்து வந்தது ஒன்று ஆனால் நாம் வேலை செய்ய வேண்டியது ,ன்னொன்றா எனறு மனம் பேதலித்ததுப் போயிருந்த காலத்திலேதான் நல்ல சினிமா பற்றிய தேடலுடன் உலக சினிமாவைத் தேடி அலையத் தொடங்கினேன். வர்த்தகசினிமாவின் மாயைபற்றிய கருத்தாக்கங்கள் என்னிலிருந்து விலகிச்  சென்றபடி ,ருந்தாலும் நல்லசினிமா குறித்த தேடலுடன் திரைப்படச் சங்கம் பற்றிய தேடுதல் பல மாதங்களாக தொடர்ந்தது. பலருக்கும் திரைப்பட,யக்கம் ,இருப்பதே தெரியாத சூழலிலேதான் நான் ஒரு வழியாகத் திரைப்பட சங்கத்தினரை கண்டறிந்தேன். சென்னை பிலிம் சொசைட்டி மற்றும் தமிழ்நாடு திரைப்பட ,இயக்கம் போன்ற இ,டங்களுக்குச்சென்று திரைப்படங்கள் பார்ப்பது வளர்ந்தது@ மனதில் ஏற்பட்டிருந்த அயர்வு இ,து போன்ற நல்ல படங்களைப் பார்த்தபோது சற்றுத் தீர்ந்தது. அத்தோடு உலகத் திரைப்பட விழாக்களுக்கு போவதற்கான சூழலும் புலப்பட தொடங்கியது. நண்பர் விஸ்வாமித்திரன் உதவியுடன் கேரள சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தொடர்ச்சியாக சென்ற போதுதான் சென்னையில் ,யங்கும் திரைப்படச் சங்கங்களின்; ஜரோப்பிய மாயையும் வெளிப்பட்டது. திரைப்பட விழாக்களில் லத்தீன் அமெரிக்க, ஈரான், ஆப்பிரிக்க, கிழக்கு ஐரோப்பியப் படங்கள் என்ற மற்றொரு தனித்துவமான உலகம் ,யங்குவதை முதற்றடவையாக உணர முடிந்தது.ஈந்தியாவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பார்வையாளராகக் கலந்து கொண்ட உங்களது அனுபவம்?

இந்திய சர்வதேச திரைப்பட விழாக்களிலேயே மிக சிறப்பான வகையில் ஆசிய சினிமாவுக்கும் லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க சினிமாவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடக்கும் கேரள சர்வதேச திரைப்பட விழாவைத்தான் குறிப்பிட வேண்டும். அது ஒவ்வொரு வருடத்திலும் கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெறுகின்றது. ,வ்விழாவுக்கு யார் வேண்டும் என்றாலும் சென்று வரலாம். நுழைவுக் கட்டணம் 200ரூபாய் தான். ஒவ்வொரு வருடமும் 8 தினங்களாக நடக்கும் ,ந்தச் சர்வதேசத் திரைப்பட விழாவில் மறக்க முடியாத பல படங்களைப் பார்த்திருக்கின்றேன். ,தில் ஈரானிய, லத்தின்அமெரிக்க, சீன, யப்பானிய, கொரிய, ,த்தாலியத் திரைப்படங்களை வியப்புடன் பார்த்திருக்கின்றேன். அது குறித்து விரிவாகப் பேச வேண்டும்.

மற்றது, ,ந்தப் படவிழா பல்வேறு வகையில் சிறப்பானது. குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவோர் தமிழகத்திலிருந்து ,த்திரைப்பட விழாவிற்குப் போவதை பார்த்திருக்கின்றேன். திரைப்பட விழாவில்தான் திரைப்படத்தின் மகத்துவத்தை முழுமையாக உணர முடியும். ஏன் என்றால் மிகச் சிறந்த திரைப்படங்களைப் பார்ப்பதன் ஊடாகவும்; பல்வேறு வகையான ஆய்வரங்குகள், கலந்துரையாடல்கள் மூலமும் சினிமாபற்றிய அழமான புரிதலைப் பெறமுடியும். நவீன சினிமாத் தொழிநுட்பங்கள் பற்றிய அறிமுகங்களையும் உலகத்தின் மிகச்சிறந்த கலைமேதைகளையும்; திரைப்பட கலைஞர்களையும் சந்தித்து பேசவும் அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். திரைப்பட விழா என்பது வாழ்வில் என்றும் மறக்க முடியாத வண்ணமயமான நினைவுகளைக் கொண்டது. நல்ல சினிமாமீது காதல் கொண்டவர்கள் ,து போன்ற திரைப்பட விழாக்களைப் பயன்படுத்த வேண்டும். நம்மவர்களுக்கு லண்டன், கனடா, பாரிஸ் என்று ,ருக்கின்ற நகரங்களில் ,த்தகைய விழாக்களைப் பார்க்க வாய்ப்பு உண்டு. ,வை போன்ற விழாக்களில் பார்க்கும் திரைப்படங்களில் படைப்புணர்வின் வேரைத் தரிசிக்க முடியும்.

கலைப்படங்களுக்குரிய நல்ல பல அம்சங்கள் அண்மைக்காலத் தமிழ்திரைப்படங்களில் காணப்படுகின்றது. குறிப்பாக ,சையைச் சொல்லலாம்.
திரைப்படங்களைக் ‘கலைப்படங்கள்’ என்று குறிப்பிடுவதற்கு எனக்குத் தெரியவில்லை. எல்லாம் கலைதான் வர்த்தக சினிமா என்று சொல்கின்ற வெகுசன சினிமாவில் ஒரு வசனமோ ஒரு காட்சியோ ஒரு பாடலோ கலையாகத் தான் ,ருக்கின்றது. குறிப்பாக ,ளையராஜாவின் ,சை கலைத்துவம் மிக்கதே. ஓவ்வொரு ,சையும் தமிழ் மண்ணின் வாழ்வை அப்பட்டமாக தனித்துவத்தடன் அவருக்கேயான மொழியில் து}ய்மையாகச் சொல்கின்றது. “கதைபோல தோணும் ,து கதையும் அல்ல” என்ற ராஜாவின் ,னிய குரலின்; உள்ளர்த்தம் அவரின் ,சையில் அற்புதமாக வெளிப்பட்டுள்ளது. அவருடைய ,சை மட்டும் தமிழ்ச் சமூகத்திற்கு வாய்க்காது போயிருந்தால் நாம் அன்பை, காதலை, நட்பை, வாழ்வை, ஏன் மரணத்தை கூட தொலைந்திருப்போம். நம் தமிழ்ச் சமூகத்தின் ஆணி வேரை அவரது ,சைதான் மீட்டெடுத்து, மீட்டுருவாக்கி தந்திருக்கின்றது. ,ளையராஜாவும் அவரின் ,சையும் ,ல்லாது போயிருந்தல் நம் ,ளைய சமூகம் ஐரோப்பிய சமூகம் போல வன்முறை, மூர்க்கம் கொண்ட சமூகமாக மாறிப்;போயிருக்கும் அன்பின் மொழிகளையும் காதலின் ஈரத்தையும் அவரின் ,சைதான் ,ன்று வரையும் நமக்குள்ளும் எனக்குள்ளும் மீட்டெடுத்திருக்கின்றது. வலியுடனும் துயரத்துடனும் ,ருக்கின்றபோது ,ளையராஜாவின் ,சைதான் மயிலிறகாய் நல்ல நண்பனாய் தடவிக்கொடுத்து ஆறுதற்படுத்தியிருக்கின்றது. ,ளையராஜா என்ற மாபெரும் தமிழ்;கலைஞானி ,ல்லையென்றால் என்போன்றவர்களின் சராசரி மனிதவாழ்வு சூனியமாகியிருக்கும்.
 
தமிழக சினிமாவில் சில நல்ல கலைக்கூறுகளும் தேங்கி ,ருக்கின்றது. ராமராஜனின் திரைப்படங்கள் தமிழர்களின் ,டைநிலை சாதிகளின் வாழ்வை பேசுபவை. அவரின் படங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்த் திரைப்பட விமரிசனச் சூழல்பற்றிய உங்களது கருத்து?

‘கலைசினிமா’ என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது ‘நல்லசினிமா’ ,யக்கம் தமிழகத்தில் வளர்ந்து விடக்கூடாது என்ற பயத்தில் ‘கலைசினிமா’ என்ற பதம் மிகவும் தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் உள்ளபடியே தமிழ்சினிமாவை அசலான விமரிசனத்துடன் அணுகும் போதுதான் நல்லசினிமா வளரும். அஜித் படங்களையும்; விஜய் படங்களையும் ராமநாரயணன் படங்களையும் ப.சேகர் படங்களையும் தனித்தனி அளவு கோலுடன் விமரிசனம் செய்யாது தமிழக சினிமா என்ற பொருளில் , அதற்குள் நிலவும் அதிகார மனப்பாங்கைச் மிகச்சரியாக விமரிசனம் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி மறுகட்டத்தை தாண்டிச் செல்லும். குமுதம், ஆனந்தவிகடன், தினத்தந்தி, தினமலர் போன்ற பிராமண பத்திரிகைகளில் வெளியாகும் திரைப்பட விமரிசனம் என்ற போலி மதிப்பீடுகள் உடைத்தெறியப்பட்டு அசலான தமிழ் வாழ்வுடன் ,ணைந்த திரைப்படமொழி பற்றியும் தமிழ்வாழ்வு, சமூக, அரசியல், கலைப் பிரக்ஞையுடனும் திரைப்பட விமரிசனம் எழுதப்பட வேண்டும்.

பருத்திவீரன், மொழி, வெயில் போன்ற திரைப்படங்களுக்கு காலச்சுவடு, உயிர்மை போன்ற அறிவுஜீவித் தன்மை கொண்ட சிற்றிதழ்களில் எழுதப்படும் விமரிசனங்கள் அனைத்துத் தமிழப்; படங்களுக்கும் எழுதப்பட வேண்டும்@ விஜய்யின் ‘போக்கிரி’ திரைப்படத்திற்கும் தான். அதுவே வெகுமக்கள் மத்தியில் பரவலான கருத்துக்களை, ரசனை பற்றிய புரிதல்களை, மாற்றம் நோக்கிய தேடல்களை ஏற்படுத்தும்.
தமிழ் ஃ தமிழக சினிமா ,ன்று தன்னை புதிய ஒரு தளத்திற்கு நகர்த்தியுள்;ளதாக விமரிசிக்கப்படுகின்றது. அண்மையில் வெளிவந்த பருத்திவீரன், மொழி, வெயில் போன்ற திரைப்படங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றன. எனினும் தமிழ் சினிமாவால் ஏன் ,ன்னும் நல்லசினிமா என்ற தளத்தை எட்ட முடியாமல் ,ருக்கின்றது என்று கருதுகின்றீர்கள்?

தமிழ்சினிமாவின் ,ன்றைய போக்கு வரவேற்கப்பட வேண்டியதொன்று. ,தனை வெறுமனே ‘சினிமாப் போக்கா’ மட்டும் நாம் கணித்;து விடக்கூடாது. ,ன்று உலகமயமாதலின் பிடிக்குள் தமிழ்சினிமா தன்சுயத்தை திருப்பியுள்ளது. தொழி;நுட்ப வளர்ச்சியை வைத்துக்கொண்டு நாம் வெறுமனே தமிழ்சினிமா வளர்ந்துவிட்டது என்று நம்புவோமானால் அது நமது பார்வைக் கோளாறுதான். ஜெமினிகணேசன் காதலித்த அதே காதல் தான் வெயில் திரைப்படத்திலும் வருகின்றது. அதனால் வெறும் தொழிநுட்பவளர்ச்சியை சினிமாக் கலையின் வளர்ச்சியாகவோ அன்றிக் கருத்தியல் மாற்றமாகவோ கொள்ள முடியாது. தொழிநுட்பம் என்பது சினிமாவின் மேலாடைதான், ,ங்கே மேலாடைக்குத்தான் தனி மதிப்பு அது என்ன காரணத்தினால் என்று தெரியவில்லை. ஹொலிவூட் தொழி;நுட்ப சினிமாவை நாம் என்ன மாதிரியான மனநிலையில்  அணுகுகின்றோம் என்பதைப் பொறுத்து தமிழ் சினிமாவின் திருப்பங்களை நாம் வளர்ச்சி என்று கொண்டாட முடியாது@ ஹொலிவூட் சினிமாவின் அதிநவீன தொழிநுட்பத்திற்கு முன்பு தமிழக சினிமாவின் ,ருப்பு ஆட்டம் கண்டதன் விளைவுதான் தமிழக சினிமாவின் ,ன்றைய ,ந்த மேலான மாற்றம். கஜினி, தொட்டி ஜெயா, வெயில், பருத்திவீரன் என்று நீளும் சினிமாவின் பட்டியலில் வன்முறைதானே பிரதானமான வடிவமாக, சினிமாவாக ,ருக்கின்றது. கொப்பளிக்கும் ,ரத்த வாடையை திரையில் பரவச்செய்யும் ,ந்த மனோபாவம் தான் ஆபத்தானது.

வன்முறை பற்றிய எவ்வளவோ சினிமாக்கள் உலகில் உள்ளன. கொரிய சினிமாவான வுhந டீயன புரல வன்முறையின் குரூரத்தை பேசும் சினிமாதான் ஆனால் ,ரத்தம் கொப்பளிக்கும் காட்சிகள் அதில் ,ல்லை. நம்மவர்களுக்கு ,ரத்தத்தை திரையில் காட்டாமல் வன்முறையை பேசத்தெரியாது ,து அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.

தமிழ் சினிமா ஏன் நல்லசினிமா என்ற சட்டத்தை தேடிப்போக முடியாமல் சுருங்கி போனது என்பது மிக முக்கியமானதொரு கேள்வி. ,ந்தக்கேள்வி பல்வேறு வகையான கட்டவிழ்ப்புகளைச் செய்யவல்லது. நல்லசினிமா நம் தமிழகத்தில் உருவாகாமல் போனமைக்கு மூலகாரணம் தமிழகத்தின் அரசியல். சினிமா தமிழக அரசியலோடு ,ரட்டைக் குழல் துப்பாக்கி போல் ,ருப்பதனால் தான் என்பதை நாம் மறக்க கூடாது. ,ங்கு சினிமா என்பது வெறும் பொழுது போக்கு அல்ல@ சினிமா என்பது ஒரு அரசியல் நடவடிக்கைதான். திரையரங்குகளில் நாம் பொழுதுகளைக் கழிப்பதற்காகக் கூடவில்லை@ கருத்தியல்களை, சிந்தனைகளை, எண்ணங்களை மறுபடியும் மறுபடியும் புதுப்பிப்பதற்காகக் கூடுகின்றோம்.

அன்றியும் தமிழக சினிமா என்பது வெறுமனே களியாட்ட நடவடிக்கை அல்ல. அது ஒரு நுட்பமான அரசியல் வேலைப்பாடு@ ,தைக் குறித்து வங்கத்தின் திரைமேதை ரித்விக்கட்டக் மிகவும் அழகாக ,ப்படிக் கூறகின்றார். “ஒரு அகன்ற தளத்தில் வைத்துப் பார்க்கும் போது எல்லாப் படங்களுமே, எல்லாக் கலைகளுமே ,யங்கிக் கொண்டுதான் ,ருக்கின்றன@ கலைஞர்களும் கூட அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு அரசியலுக்குள் ,யங்கிக் கொண்டுதான் ,ருக்கின்றார்கள். சினிமா பல வடிவங்களில், பல்வேறு வகைகளில் தனக்கே உரித்தான ஒரு அரசியலை எப்போதுமே கொண்டுள்ளது.”

ஜான் ஆபிரகாம் கூட எல்லா சினிமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது தான் என்று ஓரிடத்தில் கூறியிருக்கிறன்றார். நாம் ,ங்கு பேசத்துணியும் விடயப்பொருள் தமிழக சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்குமான  ,ணைபிரியாத தொடர்பின் மூலம் தமிழ் சினிமா காயடிக்கப்படுவதன் காரணத்தையே. பெருமளவிலான ,யக்குநர்களும், படத்தயாரிப்பாளர்களும் பிராமணர்களாகவும் உயர் சாதி ,ந்துக்களாகவும் ,ருப்பதன் பின்னணியையும் நாம்குறித்துக் கொண்டு நமது தேடலை தொடர்வோம். ,வர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கதை என்பது தமிழ் சமூகத்தின் வாழ்நிலையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. தமிழ் சினிமாவுக்கென்று தனியான சூத்திரங்கள் ,ருக்கின்றன@ தனி வளையங்கள் ,ருக்கின்;றன. படைப்புணர்வு ,ருப்பது தான் ,ங்கு ஆபத்தானது. வெறும் வியாபாரம் பற்றிய தெளிவு ,ருந்தால் போதும் தமிழ் சினிமாவில் காலந் தள்ளலாம். ,து ஒரு காரணம் என்றால் ,ன்னும் நிறையக் காரணங்கள் ,ருக்கின்றது. ,வ்வளவு காலமாக எத்தனையோ திரைப்படங்கள் வந்தபின்பும்; தமிழர் வாழ்வு என்பது ஏன் ,ன்னும் ஒரு ‘அங்கூர்’ போலக் கூட பதியப்படவில்லை. சேரன், பாலா போன்ற ,யக்குநர்களை நல்ல வியாபாரிகள் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் நல்ல காலைஞர்களாக ஏற்க முடியாது. ஏனென்றால் ஆட்டோகிறாப், சேது போன்ற படங்களில்; பாசாங்குகளும் தமிழ் சினிமாவுக்கான சூத்திரப்பாங்கான தன்மைகளும் அதற்குள் நிறைய புதைந்து போய்க் கிடக்கின்றன.

,த்தனை வருடகால வரலாற்றில் தமிழ் சினிமா தொழி;நுட்ப ,யந்திரத்தால் தனது வளர்ச்சியைக் கோலோச்சியது துரதிஷ்டவசமானது. மகேந்திரன், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, ருத்ரய்யா, சேதுமாதவன், அருண்மொழி, ஹரிஹரன், ஜெயபாரதி, ,வர்களோடு மணிரத்தினம், பாலா, தங்கர்பச்சன், சேரன், வசந்த், பாலன், அமீர் என்று நீளும் பட்டியலில் ஒரு சர்வதேச விமர்சகனின்; தரக்கணிப்பிற்குப் பிறகு ஒரிரு பெயர்களாவது மிஞ்சுமா என்ற செழியனின் கேள்விதான் எனக்கும் ,ருக்கின்றது.

பிறதேசங்களின் கதையாடல்களையும் காட்சிகளையும் திருடி நம்மை ஏமாற்றும் ,ந்தத் திருட்டுக் கூட்டங்களை எப்படிக் கலைஞர்கள் என்பது(எல்லோரும் அல்ல)? எரியும் தணல்போல் தமிழ் கலாசாரத்தில் எத்தனையோ கதைகள் உண்டு. சமரசம் என்ற பெயரில் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை கதைக் களத்தில் துஷ்பிரயோகம் செய்யும் ,வர்களினால் து}ய தமிழ்சினிமா வளர்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவே. ஒரு சத்திய கலைஞன், தமிழ் வாழ்வு தெரிந்த ஒரு மகா ஞானி பிறந்தால்தான் தமிழ் சினிமாவில் உலகத்தரமான சினிமாவை தரிசிக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் தமிழக சினிமாவை நாம் நம்புவதைவிட அவற்றை நம் விருந்தினர் அறையில் வசிக்கவிட்டு நாம் நமக்கான சினிமாவை ,லங்கையில், புலம்பெயர்ந்த மண்ணில் உருவாக்க முயற்சி செய்வோம். (அதில் ஒன்று மட்டும் மறக்காமல்) தமிழக சினிமா மாதிரியான கதையாடலைத் திரும்ப திரும்ப நமது சுயபடைப்பில் கொண்டு வந்து விடாமல், புத்தம் புதிய தனித்துவமான சினிமா மொழியில் நமது வேர்களை பற்றிப் பேசுவோம்: ,து தான் தீர்வாக ,ருக்க முடியும். நல்லசினிமாவை நீங்கள் உளப்பூர்வமாக, ஆத்ம சுத்தியோடு எடுத்தால் அது உலகத்தமிழர்களால் நிச்சயம் போற்றப்படும். கலைப்பிதற்றலுடனும்; தமிழக சினிமாவின் சீழ் வடியும் கதைமாதிரியுடனும் கதைகளை செய்தால் எந்த ‘மண்’ணிலும் உங்கள் சினிமா அங்கீகரிக்கப்படாது@ அங்கீகரிக்கப்படவும் கூடாது.

நாயகன், ,ந்தியன், தேவர்மகன், கண்ணாடிப்பூக்கள் போன்றவை ஓரளவு கவனிக்கத்தக்க, வித்தியாசமான  சினிமாக்களாகக்  கருதப்படுகின்றன.

நாயகன், ,ந்தியன், தேவர்மகன், கண்ணாடிப்பூக்கள் போன்ற படங்களை ஓரளவு கவனிக்கத்தக்க சினிமாவாக யாரும் அங்கீகரிக்கவில்லை@ அது திரைப்பட ஊடகங்கள் புனையும் விளம்பரஉத்தி விளம்பரங்களுக்காக ,ங்கே பல்வேறு வகையிலும் விமர்சனம் என்ற சொல்லாடலுடன் சிலாகித்துச் சொல்லப்படுகின்றன. மேற்சொன்ன அத்தனை படங்களும் பெரிய திரைப்பட வியாபாரிகளினது திரைப்படங்கள். அதில் கமலஹாசனையும் மணிரத்தினத்தையும் தங்கரையும் பாலசந்தரையும் ஆழ்வார் பேட்டை அய்யங்கார்களாக கோடாம்பாக்கத்தில் சொல்வார்கள். ஏனென்றால் ,வர்களின் அலுவலகம் சென்னை வடபழனி சினிமா வட்டத்திற்குள் ,ல்லாமல் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் ஆழ்வார்பேட்டை பகுதியில் ,ருப்பதனால் அப்படி ஒரு பெயர். அதனால் ,வர்களுக்கென்று தனித்துவமான விமர்சன விளம்பரங்கள் சென்னையில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது.

ஆனால் அதே நேரம் சேரனின், பாலாவின், தங்கர்பச்சனின் படங்களும்  ஓரளவுக்கு நல்ல படங்களே என்றாலும் அதைப்பற்றிப் பேசுவதில் பிராமண ஊடகங்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். நீங்கள் ,ந்த சாதி அரசியலை ,ரு வேறு வகையில் ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியும். எனவே தமிழ் சினிமா குறித்த விமர்சன மனப்பாங்கு உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் அதன் அரசியல் பேசப்பட வேண்டும். அப்போது தான் மௌனங்களும், உடையாமல் ,ருக்கும் புனிதங்களும் உடையும்@ வெளிச்சம் பரவும். ,ந்த நேரத்தில் நாசரின் படங்களையும் குறிப்பிட வேண்டும். தனித்துவமான ஒரு கலைஞன் ஆனால் என்ன, எப்படியான ஆளுமையும் தமிழ் சினிமா என்று வந்து விட்டால் எங்கோ ஒரு தமிழ் சினிமாவின் மாய சூத்திரத்தின் பிடிக்குள் சிக்கியவர்களாக மறைந்து போய்விடுகின்றனர். சிங்கள சினிமா கலைஞர்களான விமுக்தி ஜெயசுந்தர, பிரசன்ன ஜெயகொடி, அசோக ஹந்தகம, பிரசன்ன வி;தானகே போல் ஒரே ஒரு சினிமா கலைஞனை கூட தமிழில் சொல்ல முடியவில்லை. எல்லோரிடமும் தமிழ் சினிமாவின் அழுக்கான மலம் அப்பிக்கிடக்கின்றதன் காரணம் என்ன? ,து ஒரு முக்கியமான கேள்வி ,வர்கள் ஏன் ,ந்த வர்த்த உலக ,ருளில் தஙகள்; கலைப் பிரக்ஞையை, சமூகப் பிரக்ஞையை தொலைத்து விடுகிறார்கள் என்பதே ஆய்வுக்குரிய பகுதிதான். ,தைப் பற்றிய விவாதங்கள் எழ வேண்டும்@ ,ந்த விடயம் குறித்தும் பேச வேண்டும்@ அப்போது தான் உண்மை புலப்படத் தொடங்கும்.

தமிழ்நாட்டில் அண்மைய ஆண்டுகளில் அதிக அளவில் குறும்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ,தனை ஒரு ஆரோக்கியமான சூழலாகக் கருதலாம் அல்லவா?

குறும்படங்கள் கூட பெரும்படங்களுக்கான நுழைவுச் சீட்டுக்களாகத்தான் ,ருக்கின்றன. தமிழகக் குறும்படங்களையும் தமிழ்சினிமாவையும் வேறுவேறாகப் பார்ப்பதே தேவையற்றதொன்று. என்றே நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் நான் கண்டதெல்லாம் குறும்படம் எடுப்பதே யாரோ ஒரு பெரிய டைரக்கடரிடம் உதவியாளராக சேர்ந்துகொள்வதற்குத் தான் என்பதை பற்றிய தெளிவுடன் வேலை நடக்கின்றது. அதனால் தமிழகக் குறும்படச் சூழலை ஆரோக்கியமான போக்காகக் கொள்ள முடியாது. குறும்பட முயற்சி என்பதே படைப்புணர்வின் வெளிப்பாடாக, தன்னிச்சையான சினிமாவாக ,ல்லாமல் அதுவும் தமிழ் சினிமாவின் கதையாடல் வலைக்குள் தான் உற்பத்தி செய்யப்டுகின்றது.

,ந்தக் கோபத்தில் தான் நானும் ஒரு குறும்படத்தை எடுத்தேன்@ காலச்சுவடு சிற்றிதழில் எனது நண்பன் ஹவி எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து அப்படம் உருவானது. தீட்டு என்பது அக்கதையின் பெயர். கதையில் தோன்றும் கதாபாத்திரம் அரவாணியைப் போல் தன் அடையாளத்தை தேடுந் தன்மை கொண்டது. ஆனால் அக்கதை எனது தனிமையை, என்னைப் பற்றி ஏதோ ஒரு வகையில் பேசியது போல் உணர்ந்தேன். அதனால் அக்கதையை ‘அறையின் தனிமை’ என்ற தலைப்பில் 20 நிமிடப் படமாக நண்பர்களிடம் (hயனெல உயஅ) கேமராவை ,ரவல் வாங்கி சொந்தக்காரர் வீட்டில் வைத்து படத்தை எடுத்தேன். மொத்தச் செலவு வெறும் ரூபாய்கள் தான். பின்னர் எனது நண்பனின் பழைய கணினியில் வைத்து படக்கோர்வை செய்து படத்தை ஊனு ஆக வெளியிட்டோம். சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அந்த ஊனுயும் விற்பனைக்கு வந்தது. ஆனால் சொல்லப்படாத சினிமா என்ற ஆவணப்பதிவுப் புத்தகத்தில் படம் பற்றி எழுதப்பட்ட விமர்சனம், அதைக் குறும்படம் என்று நினைத்து எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. மேலும் ,ப்படத்திற்கு திருப்பூர் அரிமா சங்கவிருது கிடைத்ததையும் குறிப்பிட வேண்டும். ,து ஒரு வகையான தன்னிச்சையான தனி நபர் சினிமா முயற்சிதான்@ ஒரு வகை அந்தரங்கமான சினிமா வெளிப்பாடு ,து. மற்றப்படி ,து போன்ற முயற்சிகளை சரியான குறும்படம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ,ப்படியான தன்னிச்சையான சினிமாவிலிருந்து தான் படைப்புணர்வு கொண்ட, சமூகப் பிரக்ஞை கொண்ட சினிமா வெளிவர முடியும் , என்பது எனது கணிப்பு.

 

ஹொலிவூட் திரைப்பட ,யக்குநரான ‘ஸ்டீபன் ஸ்பில்பேர்க்’ ,னது திரைப்படங்களை எத்தகைய கண்ணோட்டத்துடன் பார்க்கின்றீர்கள்?

பொதுவாகவே அமெரிக்க சினிமா என்பது மூன்றாம் உலக நாடுகளின் கலை, கலாசார, ஒழுக்கவிழுமியங்களைச் சிதைப்பதற்கான மாபெரும் கூடாரம் தானே. அதிலும் ஹொலிவூட் மணிரத்னமான ஸ்டீபன் ஸ்பில்பேர்க் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே அமெரிக்க மாயையை உலக நாடுகளில் நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்படுகின்றது.

அந்த வகையில், விஞ்ஞானத்தை வைத்து ஏமாற்றுவது என்ற வகையில் நுவு, டீயஉம வழ வாந குரவரசந, துயறள, துரசயளளiஉ pயசம, வுhந டுயளவ றழசடன ஐஐ போன்றவையும் பேய் பிசாசுகள் என்று மூட நம்பிக்கைகளை வைத்து திரிப்பது வகையில் சுனைநசள ழக டுயளவ யுசம, வுhந ஐனெயையெ துழநௌ, வுhந டுயளவ ஊசரளயனந, Pயடவநச புரநளவ போன்ற படங்களுடன் சமகால வரலாற்றை திரிக்கின்ற படங்களான ளுஉடiனெடநச’ள டளைவ, டுய யுஅசைளவநச, ளுயஎiபெ Pசiஎயவந சுலயn போன்ற படங்களும் மிகப் பிரமாண்டமான தொழில் நுட்பங்களினால் மக்களின் வியப்பைப் பகடைக்காயாக்கிப் பயன்படுத்துகின்றன. ,து போன்ற படங்களை எடுக்கும் ,யக்குனர்கள் அமெரிக்காவில் அதிகம். அதுவும் அமெரிக்கமனது என்பது வன்முறையினால் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் குரூரமான கற்பனைகளும் கொலைகளும் வன்முறைகளும் கற்பனைப் படைப்புச் சினிமா என்ற பெயரில் திணிக்கும் ,ந்த மனோபாவத்திற்கு பின்பு ,ருக்கும் அரசியல் என்பது முழுக்க முழுக்க குற்றவுணர்வாகத்தான் ,ருக்க முடியும். மிகவும் மோசமான போதை வஸ்துக்களை பாவித்தவனின் கற்பனை தான் ,து போன்ற விகாரமான திரைக்கதைகளை சிந்திக்கும் என்பது எனது கருத்து. ,ப்படியான திரைப்படங்களோடு ஹெலிவூட் சினிமா என்பது ஒரு வகையான பிளாஸ்டிக் வகை சினிமாதான் அது சரீர வகை சினிமா, அது மனித மனத்தின் அடி ஆழத்தைத் தொட முடியாது. அவ்வப்போது வானவில்லை போல வண்ணம் காட்டி செல்லலாம். ஆனால் ஆத்மீகமான சினிமாவாக அது என்றும் ,ருப்பதிலை. அதேவேளை ஹெலிவூட்டிலிருந்து மிகச் சிறந்த திரைப்படங்கள் வெளிவருகின்றது என்பதையும் நான் மறுக்கவில்லை. மோசமான திரைப்படங்கள் எங்கிருந்து வந்தாலும் நாம் அதை எதிர்க்க வேண்டும். ,து தான் மானுடம் தேடும் நமது தலையாய கடமை.

உலக அளவில் முன்னணியில் திகழ்கின்ற ஈரானியத் திரைப்படங்களின் தனித்துவமாக எதைக் கருதுகின்றீர்கள்?

உலக சினிமாவில் அனைவராலும் மிகவும் நேசிக்கப்படும் சினிமா ஈரானிய சினிமாதான். கதை கூறும் புதுமையான உத்திகளிலும் வாழ்வை அதன் அசல் தன்மையோடு பேசும் கலைபற்றிய புரிதலிலிருந்தும் தொழி நுட்பத்தைக் கலைத்துவமாக பயன்படுத்துவதிலிருந்தும் ஈரானிய சினிமா ஏனையவற்றிலிருந்து தனித்துவமானது@ எந்த சினிமாவோடும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாத சிறப்பு அது. ஈரானிய சினிமா பாரசீகக் கவிதைகளின் மரபிலிருந்தும் பாரசீக மஸ்னவி, கஜல், போன்ற ,சை மரபின் வழயிலும் தன்னுடைய திரைக்கதைப் பிரதியாக்கங்களை எழுதுகின்றது. ஈரானிய சினிமாவில் வாழ்வுதான் மிகப்பெரிய ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.

வாழ்வை மிகநெருக்கமாகக் காட்டுகின்ற சினிமாவாக, உலக சினிமாவிலிருந்து ஈரானிய சினிமா தனித்து நிற்;கின்றது. அனைத்து விதமான சினிமா வகை மாதிரிகளை விடவும் ஈரானிய சினிமாவில் வாழ்வு பனித்துளியைப் போல் பதிவு செய்யப்படுகின்றது. கலக்கார திரைக்கலைஞனான ‘மெக்மல் பஃவ்’ (ஆயமஅரட டீரகக) ,ன் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வௌ;வேறு வகைமாதிரி.

ஈரானி சினிமா வெறுமனே உயிர்பெற வில்லை. அச்சினிமாவிற்குப் பின்னால் ஈரானிய ,ஸ்லாமியப் புரட்சி ஒன்று உள்ளது. ஈரானிய சினிமா தனித்துவமாக விளங்க மூலகாரணம் மிகச் சரியான தணிக்கை விதிகள்தான். பெண்களை மிக உயர்வான கதாபாத்திரங்களாகவும் ஆளுமை கொண்டவர்களாகவும் சித்திரிப்பதோடு மட்டுமல்லாமல் ஈரானிய வாழ்வில் பெண்ணுக்கு அளிக்கப்படும் ,டத்தையும்; அது பிரதிபலிக்கின்றது. ஈரானியப் புரட்சியோடு கொமெய்னியின் சினிமா குறித்த அக்கறை, அது சமூக மாற்றத்திற்கான கல்வி என்கிற கருத்தாக்கம், சுதேசிய சினிமா உயிர்பெற ஹொலிவ10ட் திரைப்படங்களுக்கு எதிராக அவர் கையாண்ட கடுமையான நடவடிக்கைகள் என்ற பின்புலத்திலிருந்துதான் ஈரானிய சினிமாவை நாம் வாசிக்க வேண்டும். மேற்குலகம் சொல்வது போல் ஈரானிய சினிமா கொமெய்னியால் எதிர்க்கப்படவில்லை. கொமேனி கேடுகெட்ட பாலுறவுவக்கிரம், வன்முறை போன்ற சினிமாக்களுக்கு எதிராகத்தான் கலகம் செய்து திரையரங்குகளைத் தீயிட்டார். அதிலும் அமெரிக்க நாசகார சினிமாவான கௌவ்போய் படங்கள் ஓடிய தியேட்டர்களையே அவர் தீயிட்டுக் கொளுத்தினார். அவர் சினிமா என்ற கலையை நேசித்தார். அதனால் தான் ,ன்று ஈரானிய சினிமா உன்னத நிலையில் விளங்குகின்றது.

,இலங்கைத் தமிழ்ச் சூழலில் நல்ல சினிமாபற்றிய விழிப்புணர்வை, நல்ல திரைப்படங்கள் தோன்றுவதற்கான வாய்ப்பை எவ்வாறு ஏற்படுத்தலாம்?

உலக சினிமாவின் வளர்ச்சிக்குப் பின்னணியில் திரைப்படம் குறித்த சிந்தனையைத் து}ண்டும் பத்திரிகை, சஞ்சிகைகளின் பங்கையும் நாம் கவனிக்க வேண்டும். சிங்களசினிமா வளர்வதற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு கால கட்டங்களிலும் வெளியான திரைப்பட ,தழ்களின் பங்களிப்பைக் குறிப்பிட முடியும். அதே போல் பிரெஞ்சு சினிமா புதிய அலையாக மலர்வதற்கு ‘காயேது சினிமா’ என்ற ,தழின் பங்களிப்பை மறுக்க முடியுமா? ட்ரூஃபோவும் கோடார்ட்டும் எரிக்ரோமரும் ‘காயேது சினிமா’ ,தழின் கடுமையான விமர்சன எழுத்துக்களை முன்வைத்து சினிமா புதிய வடிவம் எடுக்க பாடுபட்டார்கள். அதுபோல ஜெர்மனிய சினிமாவின் மாபெரும் ஆளுமையான ‘விம் வெண்டர்ஸ்’, தனது மருத்துவத் துறையை மறந்து சினிமாத் துறைக்கு வரச்செய்ததே ‘பிலிம் கிரிட்டிக்’ என்ற சினிமாச் சஞ்சிகைதான், என்பது எம்மில் பலருக்கு ஆச்சரியத்தைத் தரலாம்;.

நல்ல சினிமாவின் உயிர்ப்பிற்க்கு சினிமா பற்றிய ஆரோக்கியமான விவாதங்களும் திரைப்படம் பற்றிய ,தழ்களும் நிச்சயம் தேவை. அந்த வகையில் நானும் நண்பர்களும் சேர்ந்து ,லங்கையில் நமது சினிமாவை உருவாக்கும் நோக்கில் ‘விழித்தடம்’ என்ற சஞ்சிகை மூலமாகத் தனித்துவம் கொண்ட உலக சினிமாவை தமிழில் அறிமுகம் செய்து வைப்பதோடு தமிழ் சினிமா பற்றிய ஆக்க பூர்வமான உரையாடலுக்கு வழி செய்யும் வகையிலும் வெளியிட எண்ணியுள்ளோம். ,ந்த சினிமா சஞ்சிகைக்கு கனடா, பாரிஸ், லண்டனிலிருக்கும் நம் திரைத்துறை ஆர்வலர்களும், உலக சினிமா பற்றிய முனைப்புக் கொண்டவர்களும் எழுத வேண்டும். ஏனென்றால் நமது சூழலில் போதிய ஆளணிகள் ,ல்லை. அதனால் தயவு செய்து புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் நல்ல சினிமா பற்றிய படைப்புகளை, மொழிபெயர்ப்புக்களை எழுதும் படி வேண்டுகோளை ,ந்நேர்காணல் மூலமாக முன்வைக்கின்றேன். ,தற்கூடாக நமக்கான சினிமா ஒன்றை கட்டியெழுப்ப முடியும் என்பது என்கனவு. ,ந்தக் கனவு உங்களின் ஒத்துழைப்பின் மூலம்தான் சாத்தியமாகும். உங்களின் ஒத்துழைப்பைத் தருவீர்கள் என நம்புகிறேன்.
உங்களை ஆகர்சித்த உலகத் திரைப்படங்கள் சிலவற்றைப் பற்றி?

திரைப்படங்கள் மீதான அந்தரங்க வாசிப்பு என்பது காலத்தால் மறக்க முடியாததொரு காதலின் பிணைப்பு போன்றது. நீண்ட காலமாக திரைப்படம் பார்ப்பவன் என்ற வகையில் எத்தனையோ திரைப்படங்கள் என் உணர்வுகளைத் தாக்கியிருக்கின்றது. என் எண்ணங்களைத் திசை திருப்பி வைத்திருக்கின்றது. ஒரு திரைப்படம் பொழுதுபோக்காக மட்டும் ,ல்லாமல் மனதின் ஞாபகங்களை ஏதோவொரு வகையில் மீழக்கொண்டுவருகின்றது.

சினிமா வெறும் சாசகமாக, களியாட்டமாக நமது சூழலில் சக்கையாக்கப்பட்டிருக்கும் சூழலில் நல்ல சினிமாவை தேடி ஒரு பைத்தியத்தைப் போல அலைந்த காலங்களும் உண்டு. சென்னை, கொழும்பு, மதுரை, போன்ற நகரங்களில் நாசகார சினிமாக்களைப் பார்ப்பதனா