பச்சை அறை


தேவதைகள் இல்லாத
இரவில்
நீள் கனவில்
வண்ணங்கள் கொண்டு வந்த
ஆசைகள் பற்றிய கதையை
என்னோடு பருகலாம்….!  

 

 

 

 

 

 

 

 

 

அழைத்த தொலைபேசியில்
யாருமற்ற பதிலாக
நீ வரும் திசைகள் மட்டும்
சலனங்களின் வரைபடத்தை
தினம் தினம் என்
மயிலிறகு கனவில் வந்து
மீதம் வைக்காத
காமத்தின் ஜாஸ்

இசையை போல்
ஒவ்வொரு நாளும்
எனது பச்சை அறையில்
வசிக்கும்
தேவதைகளுடன் புணர்ந்து
முடித்த அயர்வில்
கனவுகள் திடுக்’கென்று
தீர்ந்து….
ஏதுமற்ற அறையில்
தேவதைகளின் வாசைன மட்டும்
மீதம் வைக்கப்பட்ட
உணவாக வீசியெறியப்படுகின்றது…..

நீ என்னை
புரிந்துகொள்ளவில்லை என்றும் நானும்
நான் உன்னைப்
புரிந்துகொள்ளவில்லை என்று நீயும்
ஒருவரை ஒருவர் குற்றங்சாட்டும்
தொலைபேசி அழைப்புகளுடன்
முரண்கள் வளரும்
மனதின் காயங்களுடன்
தினமும் எனது நாழிகை
போகின்றது….!

எத்தனை முறை எழதினாலும்
தீராத பக்கங்கள் மட்டும்
கடல் அலை வரும்
திசையோடு கைபோர்க்கும்
மெல்லிய காற்றின்
ஸ்பரிசம் போல்
வாசலின் விழுந்த உனது
காயங்கள்
நானும் விழுந்து எழுந்து
நடந்தேன்
ஒரு மழை நாளில்…

யாருமற்ற பருவங்களின்
துயரத்தை எப்படி
உனக்கு நான்
எழுதி செல்வது….?
•  01.07.2008

 

Advertisements

Comments are closed.

%d bloggers like this: