இலங்கை தமிழ் சினமாவுக்கான தேடல்…


                                                                                                               

“எல்லாம் சினமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது”
-ஜோன் ஆபிரகாம்-

சினமாவுக்கு வாழ்க்கைதான் ஆதாரம். வாழ்க்கை என்ற நெருப்பு இல்லாமல் கலை, இலக்கியம், இசை, ஓவியம், சினமா எதுவுமே சாத்தியமில்லை. எல்லா கலை வெளிப்பாடுகளும் வாழ்வை முன் நிறுத்தியே உருவாக்கப் படுகின்றது. வாழ்வு இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை. வாழ்வை சொல்லாத கலை வெளிப்பாடுகள் கலையாக தீர்மானிக்க முடியாதபடிக்கு காலத்தின் பெரும் பள் சக்கரங்களில் கறைந்து போகின்றது.

“தினசரி வரலாற்றை நேரடி நிகழ்வாக மாற்றியமைப்பதற்காகஇ யதார்த்தத்தோடும், உண்மையோடும் உழைக்க வேண்டியது எப்படி அதிமுக்கியமோஇ அதே காரணங்களுக்காக உள்;ளடக்கத்தை குறைத்து மதிப்பீடவோ, ஏமாற்றவோ செய்யாத வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் முக்கியமாகும்”.
என்ற ஜார்ஜ் சான்ஜினோஸின் அறிவிப்புடன் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளும் கலைஞனின் தேடலுக்கான களங்களாக முன் நிற்கின்றது. வாழ்விலிருந்து கண்டறியப்பட வேண்டியது நிறைய உண்டு. நம்முன் நிறைந்திருக்கும் வாழ்வின் நடனங்களில், நளினங்களில், வலிகளில், துயரங்களில், சிரிப்புகளில், கனவுகளிலிருந்து சிலவற்றையாவது நாம் நம் இலங்கை தமிழ் சினமாவின் வெளிகளில் நிரப்புவோம். அப்படி நிரப்பப்படும் ஒவ்வொரு சினமாவின் மொழியிலும் இலங்கை தமிழ்; சினமாவின் சுய அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்வின் அதி அற்புதமான கனவுகளை கண்டறிவோம்.
“சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டுக்கான புதியதொரு கலைவடிவம், சுய-வெளிபாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினமா வடிவமானது சக்தி வாய்ந்த கருவியாக இயங்க வல்லது.” 

திரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த சேர்ஜி ஜஸன்ஸ்hPன் மேற்கண்;;ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவுக்கான களங்களை தேடி கண்டடைவோம்.

சினமாவை குறித்து பேசுவதில் நாம் அனைவரும் சந்தேகமடைவது சினமா என்ற வசீகரிக்கும் அதி அற்புதமான சாதனம் மக்களின் உணர்வுகளை பாதிப்பதினால்தான். சினமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை அவர்களின் நினைவுகளில், மனோபாவங்களில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதுவும் உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் மனித வாழ்வும் அதன் அக்கறையும் பார்வையாளரின் அகத்தை எளிதாக தாக்ககூடியது. உலக சினமா தரும் அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர்வுகள் செலுமைப்படுவதோடு உலகம் பற்றியும், வாழ்வின் ஆன்மீக தடங்கள் பற்றியும் மனிதனின் தேடலை சாத்தியப்படுத்துவதோடு, மனிதன் பற்றிய மர்மங்களை, வாழ்விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும் சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங்களையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தை யும் உலக சினமா பார்வையாளரின் மனத்திரையில் அகலப்பரப்புகின்றது. வாழ்வை புரிந்துக்கொள்வதற்கும், தெளிவடைவதற்கும் உலக சினமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அணுக்கமானதொரு அந்தரங்கப் பிணைப்பை ஏற்படுத்துகின்றது.

More

சினிமாவில் தணிக்கை– ஓர் அரசியல் குறிப்பு


 

 
தமிழ்ச்சினிமாவில் தணிக்கை என்பது கேலிக்குரிய ஒரு விடயமாகதான் இருந்துவருகின்றது. தணிக்கை என்பது கலாசார ஒழுக்க விழுமியங்களைக் காப்பாற்றும் வகையில் மேற்கொள்ளப்படாமல் அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்றும் வகையில் தணிக்கையின் அரசியல் மிக மோசமான ஆளும் நிலைப்பாட்டின் வெளிப்பாடாக செயற்படுகின்றது. என்பதுதான் உண்மை. கலாசார ஒழுக்கம் என்பது கூடசாதி இந்துக்களின் பார்ப்பன கலாச்சாரத்தை முன் வைத்தே தணிக்கையின் செயற்பாடுகள் கையாளப் படுகின்றன. சினிமாவின் தணிக்கை என்பது ஒரு மானுட கண்ணோட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான சூழலில்தான் நல்ல சினிமாவின் உருவாக்கத்திற்கான சூழல் ஒளிந்திருக்கின்றது.

ஒருவகையில் தென்னிந்திய கழிசடை சினிமாவின் மோசமான முகம் இவ்வளவு குரூரமானதாக இருப்பதற்கான மூலக்காரணம் தணிக்கைக்கான கத்தரிக்கோல் ஒருபக்க சார்பானதாக செயல்படுவதனால் தான் – என்ற உறுதியான முடிவுக்கு வரமுடிகின்றது. போலந்து சினிமாவின் மிகவும் போற்றப்படும் திரைப்பட கலைஞன் சொல்கிறார்.

 “தணிக்கை இருக்கும் ஒரு நாட்டில்
 சினிமாவின் ஆன்மா செத்துவிடுகிறதென்று….”

More

லின்டன் சோமகேவுடன் ஒரு உரையாடல்


 

 

 

 

 

இலங்கை சிங்கள சினிமாவின் பிரபல்யமான நடிகன், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர்  இவர் நாடகங்களின் மூலமாக திரைப்படத்துறைக்கு இடம் பெயர்ந்தவர். 1980களில் அவர் நாடக நடிகனாகவும் நடனக்கலைஞனாகவும் பரிணமித்து 1991ம் வருடத்தில் அவர் தயாரித்து இயக்கி மேடையேற்றிய ~பஞ்சாயுத| “PயுNஊர்யுலுருனுயுலுயு” (குஐஏநு றுநுPழுNளு) என்ற மேடை நாடகம் பல்வேறு தேசிய விருதுகளை அவருக்கு பெற்று தந்தது. 1996ம் வருடம் அயோமா என்ற திரைப்படத்திற்கும் ஆநந ர்யசயமய (எருமை மாடு) என்ற சிங்கள சினிமாவுக்கும் சிறந்த நடிகனுக்குமான விருதை பெற்றுத் தந்தது இவர் நடித்த னுநயவா ழn ய குரடட ஆழழn னுயல வுhளை ளை அல ஆழழn என்ற படங்களில் நடித்தமைக்காக இரண்டு முறை சிறந்த நடிககுக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் முதல் முறையாக இயங்கி நடித்த Pயனயனயலய (வுhந ழரவ ஊயளவ) என்ற திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது. டாக்காவில் நடந்த 6வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாகவும், சிறந்த இயக்குனருக்கான விருதுகளை பெற்றது. புஷான் திரைப்பட விழாவில் இப்படம் சிறப்பு ஜுரி விருதையும் பெற்றது. இப்போது இவர் இயக்கி நடித்திருக்கும் Piஉம Pழஉமநவ என்ற திரைப்படம் 7வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது. இப்படத்தை இயக்கி நடித்திருக்கும் லிண்டன் அவர்கள் நமது “நிழல்” பத்திரிகைக்காக சிறப்பு நேர்காணல் ஒன்றை திருவனந்தபுரத்தில் வைத்து தந்தார். இவருடான நேர் காணல் அவருடைய தாய்மொழியான சிங்கள மொழியிலேயே எடுக்கப்பட்டது. More

தமிழ் சினிமாக் குப்பைக்கு மாற்றீடு:திரைப்பட சங்களின் இயக்கம்


திரைப்பட சங்களின் இயக்கம்                       

நல்ல சினிமா பற்றிய பார்வை நம் தமிழ் பார்வையாளனுக்கு மறுக்கப்பட்டே வந்துள்ளது. அதற்கான முழுமையான காரணம், குப்பைக்கூளமாக- தமிழ் சிந்தனைப் பரப்பில் குவிக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் சினிமாவின் தொடர்ச்சியான வருகையும், நல்ல சினிமாவைத் திட்டமிட்டுப் பொதுவான வெளிகளில் மறுப்பதற்கான சூழ்ச்சியைகளை தமிழ் சினிமாவின் வியாபாரிகள் செய்து வருவதாகும். தமிழ்நாட்டின் சூழலை விட்டுவிட்டு நம்மவர்களின் சினிமாபற்றிய புரிதலைப்  பேச முனைந்தாலும் ப10ஜ்யம்தான் மிஞ்சுகின்றது. தமிழ் நாட்டில் கல்வியறிவு, எழுத்தறிவு மிகவும் குறைவு: ஆனால் நம் நாட்டின் கல்வியறிவு, எழுத்தறிவு 90 சதவீதமாக கணிக்கப்பட்டாலும், நல்ல சினிமா அறிவின் சராசரி வீதம் மிகவும் குறைவுதான், நம்மவர்களின் மனது, இந்தத் தமிழ்க் கழிசடை சினிமாதான் சினிமா என்று நம்பவைக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் நல்ல சினிமா கலாச்சாரத்தை நோக்கி இன்னும் நகராமல், இந்தத் தமிழக சினிமாவின் மாயைக்குள் அகப்பட்டு நம் கலாசார அடையாள வேர்களை இழக்கின்றோம்.

உலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்களை நாம் ஏன் நம் தமிழ்ச் சமூகத்திற்கு முன் கொண்டுசெல்லக்கூடாது? பொதுவாக நம்மவர்களின் சினிமா நினைவு என்பது, தமிழக சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் நிலையிலிருந்து இன்னும் வளர்ச்சியடையாமலேயே இருக்கின்றது. தமிழ் சினிமா என்பது சினிமாவே அல்ல: அது களியாட்ட விருந்தின் ஒரு கேளிக்கைப்பொருள் மட்டும் தான். அது முழுக்க முழுக்க வியாபாரச் சூத்திரம் கொண்ட  அபட்டமான பாசாங்குகள் நிரம்பிய  படம் பிடிக்கப்பட்ட நாடகம்தான். உள்ளடக்கம், உருவச் சிறப்புமற்ற வெறும் சக்கையான வடிவம்தான் தமிழ் சினிமா. நாம் உள்ளுணர்வுகளையோ படைப்புணர்வின் ஆற்றுகையையோ, நினைவுப்படுத்தவும் படைப்புணர்வின் ஆனுபவத்திற்கான அந்தரங்க உரையாடலை நிகழ்த்தவும் தகுதிகள் ஏதுமற்ற வெறும் சக்கையான குப்பைகள்தான. வியாபார சூதாடிகளின் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கதையாடல்களினால் நாம் நம்மைத்தான் இழந்து கொண்டிருக்கின்றோம். More

கைவிடப்பட்ட நிலம்- உரையாடல்: விமுக்தி ஜயசுந்தர


 

 

உலக திரைப்பட விழாக்களில் மிக சிறந்த திரைப்பட விழாவான பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவை குறிப்பிட முடியும். கடந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் நமது இலங்கையை சேர்ந்த இளம் சிங்கள திரைப்படக் கலைஞரான விமுக்தி ஜயசுந்தர இயக்கிய ‘சுலங்;;;க எனு பினிஸ’ (வுhந குழச ளுயமநn டுயென) கைவிடப்பட்ட நிலம் என்ற 108 நிமிடங்கள் ஓடக் கூடிய திரைப்படத்திற்கு கேன்ஸின் கேமரா டி ஓர் என்ற உயர் விருது பெற்றதை குறிப்பிட வேண்டும். அத்தோடு பாங்கொக் நகரில் நடைபெற்ற மூன்றாவது உலக திரைப்பட விழாவின் போதும் இத்திரைப்படத்திற்கு சர்வதேச அளவிலான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ‘இரண்டு தசாப்த கால யுத்தத்தின் விளைவுகளையும், போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழலில் மனித வாழ்க்கையில் உள்ள வெறுமையையும் ஆழமாக ஆராயும் படைப்பாக 27 வயது நிரம்பிய விமுக்தியின் திரைப்படத்தைக் குறிப்பிட முடியும்’ வீரகேசரி வார வெளியீட்டில் (25ஃ09ஃ2005) படம் பற்றிய அனுபவத்தை எழுதியிருந்த சதீஷ் கிருஷ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார். விமுக்தி ஏற்கனவே ‘நிகண்ட தேசய’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அவர் இத் திரைப்படம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது ‘எனது தாய் நாட்டில் உள்ள ஏராளமான பிரச்சினைகளையே இத்திரைப்படம் பிரதிபலிக்கின்றது. மேற்கத்திய நாட்டவர்களுக்காக இது உருவாக்கப்பட்டதாக பலர் கருதுகின்றனர். ஆனால் எனது நாட்டவர்களுக்காகவும், ஆசிய நாட்டவர்களுக்காகவுமே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் ஒன்;றான தாய்லாந்திலிருந்து நான் இவ்விருதைப் பெற்றதன் மூலம் ஆசியர்களுக்காகவே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.’ என்று கூறும் விமுத்தி ஜயசுந்தர ‘சித்தரபட்ட’ என்ற சிங்கள திரைப்பட இதழில் தன் திரைப்படம் பற்றி பேசியிருக்கும் உரையாடலை நிறம் சினிமா சங்சிகைக்காக மொழியாக்கம் செய்து தருகின்றோம்.

More

கவிதைகள்


தடுப்புகளுக்கு முன்

 

  உன்னுடைய
எல்லா கதவுகளிலும்
வெளியேறிக்கொண்டிருக்காதே!

கதவுகளுடன் இறுக்க
மூடிய இரும்பு பட்டுக்களுடன்
உன்
அடையாளங்கள் இறுக்கப்பட்டிருக்கின்றன…..
மற்றோருக்கான
கதவுகளிலும் பயணித்து
அதிலிருந்து
சாளரங்களின்
வழித்தடத்தை மேற்கொள்…!

மற்றும் ஒரு
இருண்ட நாளில்
உன் எலலா கதவுகளுமே
அடைக்கப்படலாம்,
நீ வெளியே முடியாமல்
அடைப்பட்டு அடிமையாக
அடையாளத்தை தொலைக்கலாம்…!
ஆனாலும்….
கதவுகளின் முன் உள்ள
தடுப்புகள் விலகும்படி
முயன்றபடி இரு….
எங்காவது
ஒளியின் ஊடுருவில்
தென்படுகிறதா என்று
கவனித்தபடி இரு….

20.09.2005

 

  More

கவிதைகள்


இரவுகள்

கனவுகள்
உருகி வடிகின்ற ஓர்
நாளில் திண்ணும்
அறைகளில்
வெறுமை மீதமாக
என் கவிதைகளை தேடி
எங்கோ திரிகின்றது…

புண்ணியஙகள்
சிதறும் வாழ்வின்
நெரிசலில்
ஆன்மாவின் பாடல்
குரூரத்தின் பின்னணி
இசையுடன்
சதா காலமும் ஒலித்துபடி…

மற்றும்
இடைவிடாத கவிதைகளின்
இருப்பில்
அழிவின் புனைவை
எழுதும் மீதங்களாக
இந்த வெட்கை கவிழும்
இரவின் அறைகளின்
தனிமை….

மனைவியுடன்
புணர முடியாத
வலியுடன்
திரை விரிப்பில்
எனக்காக
தடங்களை அழித்தபடி
விடிகின்றது இரவுகள்……

இன்னொரு
முறையும் தனிமையுடன
நடக்கின்றேன்…..
இப்போது
நான்
அவர்களிடமிருந்து
அநநியப்பட்டுப் போய்
ஒரு உணர்வு
என்னை தேடி தேடி
திரிகின்றது….

  More

Previous Older Entries