ஒரு கடிதம்


 

  

 

 
 கடிதங்கள் மட்டும்தான் உள்ளாந்த உணர்வுகளோடு உரையாட முடிகின்ற ஒரே ஆத்மார்த ஊடகமாக தோன்றுகின்றது.
     திரைப்படம் பற்றிய கனவுகளுடன் மட்டுN;ம வாழும் எனக்கு வாழ்வின் யதார்த்தம் என்ற குரூரம் தெரியவில்லை.
     என்ன செய்வது எனக்கென்று சில சாபங்களை நானே வைத்துக்கொண்டு அவஸ்தை படுபவனாக இருக்கிறேன்…..

     ஆனால்….!
    என் அக உணர்வுகளுடன் பேசவும், என் வாழவில் மேல் அக்கறை கொண்ட மனிதர் என்ற வகையில் உங்களை மறக்க முடியாது. இன்று தொலை பேசியை துண்டித்த போது மனம் வருத்தமடைந்தது. நான் என்னை நல்லவன், தறமை மிகுந்தவன் என்று எப்போதும் எண்ணியதில்லை…..
     வாழ்கையில் பெரிதாக எனக்கு என்றும் பிடிப்பு இருந்ததில்லை….மரணத்திற்கான ஒத்திகைதானே வாழ்கை!
 ஏன்ன செய்வது வாழ்வு ஒவ்வொரு மனிதனின் மேலும் நிர்பந்திக்கும் விதியை கடக்க முடிவதில்லை…!

சினிமா இதழ் வேலைகளில் தற்சமயம் முழுமையாக மனத்தை
செலுத்த முடியவில்லை. நீங்கள் குறும்படம் வேலை திட்டங்களை
நாட்டு நிலைமை கருதி பின்போட்டது….தீடீர் தீடீரென்று சூழல்
மாற்றம் நம்மை சதா நேரமும் துன்புறுத்துகிறது. நகரத்தின் இருப்பை நினைக்கும் பயமாக இருக்கின்றது…..

     02
  
     முறிந்த மனதுடன்
;           நகரத்தின் சாயலுள்ள மனிதன்…
           நகரத்தின் இசையற்ற பாடல்கள்..!
           மனித முகங்களை இரவுகளில் வெறுப்பதாக
           நீ
           எழுதிய கடிதம் இன்னும்
           படிக்க முடியாமல்
           காலம்  விழுங்கும் நகரத்தை
           எப்படி தொலைப்பது……!
          
           எதிர்படும் மனிதர்களிடம்
           காரணமில்லாமல் சிரித்து வைக்கிறென்….
          
           ஒரு பிச்சைக்காரனாக
           அதுவுமில்லாமல்
           விளிம்பு வாசியாக….
           நடுத்தர வர்கத்து
           ஒப்பனைகளுடன்
           நான்
           சாவுகளுடன் போராடிய படி…..
          
           மிகுதியாக இருக்கும்
           வாழ் நாட்கள்
           ஒரு உலக சினிமாவுக்கான
   கனவுகளுடன்…..!
இரவு:11:00 மணி    2007.2.22

Advertisements

Comments are closed.

%d bloggers like this: