தழிழ் சினிமாவும் தழிழ் ரசிகனும்


  •      ரசனை பற்றிய ஒரு அவதானம ; 
       
    ஒரு படத்தின் பண்பாட்டுப் பின்னணி அதன்
    வெளிப்பாட்டுமுறையைப் பெரிதும் தீர்மானிக்கிறது.
    அப்பண்பாட்டுடன் அறிமுகம் ,ல்லாத ஒரு
    ரசிகரின் ரசனை முடிவை அது பாதிக்கக் கூடும்.
                      -புத்ததேவ் தாஸ்குப்தா-
    ஒரு புதிய திரைப்படமொன்று வெளியிடும் நாளில் ஏற்படும் பரபரப்பைபும்,
     பதற்றத்தையும் நாம் தழிழக திரையரங்குகளில் மட்டுமல்ல, ,ன்று உலகெங்கும்
    சகித்தபடிதான் தரிசிக்கின்றோம். ,ந்த பரபரப்பும் விளம்பங்களும் தழிழ் சினிமாவுக்கான
    அங்கீகாரமாக நாம் கொள்ள முடியாது. ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்பது ஆத்மாவின்
    ,ருந்து வர வேண்டும், பாசாங்கு உணர்வுகளிலிருந்தும் புனையப்படும் விளம்பரங்களின்
    வகைகளிலிருந்தும் ஏற்படுவதல்ல. தழிழ் சூழழில் அங்கீகாரம் என்பதெல்லாம் ,ப்படிதான்
    அடையாள அரசியலிலன் பின்னனியில் சாதிய,மேலாதிக்க அடையாளத்துடன் ஒரு தனி மனித
    அங்கீகாரம் தீர்மானம் கொள்கிறது. எப்போதும் தழிழ் சினிமாவுக்கான ,ந்த ரசிகர்களின்
    ரௌடித்தனங்கனை நாம் எப்படிதான் ரசிக்கிறோம் என்பதை விட ,ந்த பரபரப்பை ஏற்படுத்தும்
    சினிமாவை வியாபாரம் செய்யும் முதலாளிகளின் விளம்பர தந்திரம்தான்.

ஒரு நடிகனுக்கு ரசிகர் மன்றம் வைப்பதென்பது அவனுடைய ரசனைக்கான அங்கீகாரம்
என்பதை தாண்டி அவனுடைய பிழைப்புக்கான உத்திதான். கமலஹாசனின் தசவதாரம்
திரைப்பட திரையிடும் முதல் நாளிலன் போது ஏற்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றி படித்த போது
மனதில் ரசிகன் பற்றிய ஒரு வகையான கேலிச்சித்திரம்தான் ஞாபகம் வந்நது.

ஒரு உயர்ந்த கலை படைப்பை ரசிப்பதற்கு உயர்ந்த ரசனை வேண்டுமா?
ரசனை என்பது என்ன? ரசனையை பற்றிய வியாகியானமங்களை குறித்து பேச துணியும்
போது ரசனை என்பது ஒரு மனிதனுக்குள் ஏற்படுகின்ற உணர்வுகளின் வெளிப்பாடுதான்.
குறிப்பிட்ட படைப்போடு தன் ஆன்மாவை லயிக்க வைக்கும் நிமிசங்களையே ரசனை என்கிறோம்.
அதிலும் ரசனை என்பதை வேறு ஒரு கோணத்தில் பார்கும் போது அது மேட்டுக் குடி வாழ்வியலின்
வன்முறையாகதான் சொல்ல தோன்றுகிறது.

ரசனை என்பதை வன்முறையாக மாற்றும் மேற்கத்திய பிரமாண்ட ஊடகங்களின் பின்னணியுடன்
ஒரு சராசரி பார்வையாளனின் வாசக திறன் என்பது சுயத்திலிருந்து வெளிப்படுவதில்லை,
தனக்கு தெரியாமல் தனக்குள் திணிக்கப்படும் தன்னை தீர்மானிக்கும் கண்ணாடியை மேற்கத்திய ஊடங்கள்தான் புனைகிறது. ,ப்படியான சூழலில் தொலைக்காட்சிகளில் மேற்கத்திய சினிமாக்கல்
காட்டப்படும் குரூரமான குருதி கொட்டும் காட்சி வன்முறைகளை நாம் ரசனை என்ற பெயரில்
ரசிக்கும் மனோ நிலையில்தான் நமக்கு முன்பு நம் கண் எதிரே நடக்கும் ஒரு குண்டு வெடிப்பையும்,
உயிர் ,ழப்பையும் நாம் பார்த்து எவ்விதமான சலனமும் ,ல்லாமல் நடக்க முடிவது ,தனால்தான்.
உயிரின் பெறுமதியை மரணம் பற்றிய அதிர்வை நம் காலத்து மனிதர்கள் பெருமளவில் ,ழந்து
வி;;ட்டார்கள். ஊயிரின் பெறுமதி என்பதை ,ன்று மேற்கத்திய ஊடகங்கள் தரும் பிரமாண்டமான
செய்தி அறிகையோடு தீனியாக்கப்படுகின்றது.

ஈராக்கில் தினம் வெடிக்கும் வெடி குண்டுகளுக்கு நாம் எந்தளவுக்கு நமது சுயத்தை அர்பனித்து தியானிக்கின்றம் என்பதை நாம் நம்மிடைமே கேட்போம்.

ரசனையை தீர்மானிக்கும் சக்திகள் நாம் நினைப்பது போல நம்முடைய சுய விறுப்பு வெறுப்பிலிருந்து
உருகொள்வது ,ல்லை. அது தீர்மானிக்கப்படுவதும், முடிவெடுக்கப்படுவதும் தன்னிலிருந்து அல்ல.
தன்னுள் திணிக்கப்பட்டிருக்கும் கருத்தியல் என்பது தான் தேடி சேகரித்த அறிவு ,ல்லை
என்பதை நாம் உணரும் போது நம் அறிவுக்கும் உணர்வுக்குமான ,டைவெளியை பற்றிய வெற்றிடத்தை நாம் நன்கு உணர முடியும்.

ஒரு கலை படைப்பை ரசிப்பதற்கு ,ங்கு தடையாக ,ருப்பவைகள் எவை?
அறிவு பற்றிய நமது ஜரோப்பிய மைய வாத சிந்தனையின் கறைப்பட்ட தன்மையிலிருந்து
நமக்கான சுயமான ரசனையை மீட்டெடுப்பதற்கு நாம் கடினமாக முயல வெண்டும்.
எந்த ஒரு சினிமாவையும் பார்ப்பதற்கனை ரசனை மாற்றத்தை நம்மில் ஏற்படுத்தாத போது நாம்
நல்ல சினிமாவை உள்வாங்குவதற்கான அருகதையை பெறுவதற்கு நம்மி;;டம் ரசனை மாற்றம் நிகழ
வேண்டியதன் தேவையை உணர்வோம்.

உண்மையான ரசனை என்பது சுயமான புரிதலில் ,ருந்தும், தெடலின் மூலமாக வருவது.
அந்த ரசனை மாற்றம் படைப்பையும் தர வல்லது. வெகுஜன சினிமாவில் ,தற்கான வாய்புகள் எப்போதும் ,ருப்பதில்லை. ஏனென்றால் அது ரசனையை வளர்த்தெடுப்பதற்காக உருவாக்கப்படும்
மக்கனின் சினிமா அல்ல. மக்களின் ரசனையை மலினப்படுத்தி அதன் மூலம் வியாபாரத்தை தக்க
வைக்கும் தந்திரம்.

       ஓவியம் என்பது அறிவிலிருந்து வரும் விஷயமல்ல.
       உங்கள் பார்வையிலிருந்தும் அனுபத்திலிருந்தும்
       வருகிற விஷயம். நம் ஊர்க் கலைஞர்கள் 
       ஆளுயர் அய்யனார்களை, அவர்கள் ஓவியத்தையும்
      சிற்பத்தையும் முறைப்படி கற்றுக் கொண்டா செய்கிறார்கள்,
      அவர்கள் பார்த்தார்கள் அனுபவித்தார்கள் உருவக்கினார்கள்.

ஏன்று மறைந்த ஓவியர் கே.எம்.ஆதிமூலம் கூறுவது கூட கலையை ரசிக்கவும்,
தரிசிக்கவும், அதை படைக்கவும் அறிவு சார்ந்த ரசனை தேவையற்றது. அறிவிலிருந்து கலையை
ரசிக்கவும் படைக்கவும் முடியாது. உணர்விலிருந்துதான் நாம் நல்ல கலையை ரசிக்கவும் படைக்கவும்
முடியும். உணர்வு நலைதான் ஆத்மாவை பற்றிய வாசலை திறக்கும் சாவி. அந்த சாவியை தேடி
போகும் கலையும் கலைஞனும் சாகா வரமுள்ள ஆத்மாவாக பரிணமிப்பான்

Comments are closed.