• தினமும்…


உனது முகம் பார்க்கும்
கண்ணாடியை தினமும
;நான் பார்கும் திசைக்கு
எடுத்து வருகிறது
கணிபொறி சில்லில்
சூழும் உனது வரையறுக்கப்பட்ட
வார்தைகளில் எப்போதும்
அவமதிக்காத சிறு சலனங்கள்
எனக்குள் தீச்சுடரை மூற்றுகின்றது….

நிறைய பேசுவதற்கு முயன்றும்
இறுதியில்
கருனையற்ற காலத்தை
சபிக்கும் தருணங்களை
சுமந்து வெறுமையை
ஒவ்வொரு நாளும்
எனக்குள் புதைக்கிறேன்…..
 எரியும் உனது
நினைவுகளுடன்…..

Advertisements

Comments are closed.

%d bloggers like this: