மழை இரவில் ……!


 
அறைகளை குறித்து
நிறைய கவிதைகள்
எழுதியாகி விட்டது…
 மீள முடியாத வாழ்வின்
தரிசிக்க முடியாத
நாடகங்களின் ஒப்பனைகள்
பற்றியும்
நிறைய பேசியாகி விட்டது..
 
தகிக்கின்ற காதலின்
நினைவுகள்
மழை இரவில்
மின்சாரம் போன
எனது வீட்டில்…

 

 

 

நான் மட்டும் தனிமையில்
எண்ணங்களில்
வலை பின்னலில் கைதியாக
சுற்றித் சுற்றித் திரியும்
நினைவுகளின் வண்ணத்திப்
பூச்சிகளின் முன்பு
அவளின் உறவை
முறிக்கும் எத்தனத்துடன்
மீண்டும் மீண்டும்
தோல்வியடைந்து…..
மனம் இன்னும்
அவளின் நினைவுகளின்
பின்னே
ஒரு குட்டி நாயை போல்
ஒடித் திரிவதை குறித்துதான்
எண்ணங்கள்
இந்த மழை இரவில்
மீதமிருக்கின்றன….1
02

எழுதப்படாத கவிதைகளுடன்
தனித்திருக்கும் படுக்கை விரிப்பில்
மெல்ல நெளியும்
பாம்புகளின் புணர்ச்சிகள்
பற்றிய பட வரைதல் போல்
நினைவு தகிப்பில்
மெதுவாக எழுகின்றது
காமம் பற்றிய
மனைவியுடனான குரூர
இரவுகளின் கடைசித் துளிகள்…
மழை இரவில் மனித வாசைன வீசும்
போர்வையில்
இறங்க முடியாத
குளிரில் வீசும் காற்றில்
அவளின் சுருண்ட கேசத்தின்
வாசைன மட்டும்
என்னோடு புணரும்
பெண் தெய்வத்துடனான
கனவு புணர்ச்சியில்
துய்கின்ற இன்பங்கள் மட்டும்
வாழ்வின் ருசியை
தேடச் செய்வதோடு….
எல்லா பெண்களுக்கும்
யாரோ ஒரு ஆணின்
துணை இருக்க
எனக்கு மட்டும்
ஏன்
இந்த தனிமை?
 என்பதாய் மழை இரவுகள
முடிகின்றது……!

Advertisements

Comments are closed.

%d bloggers like this: